காக்கக் காக்க ( ஒரு சிறு கவிதை.)
--________________________________________________
பட்டாம் பூச்சிப் பிடிக்கப்
பதுங்கிப் பதுங்கி முன்னேறும்
பத்து வயசுச் சிறுமி.
அவளிடமிருந்து அதைக் காக்க
எம்பி எம்பித் துரத்தும்
ஐந்தே வயசுப் பாலகன்.
எப்படியும் பிடிக்க வேண்டும்
என்ற முனைப்பில்
தடுக்க வந்த தம்பியை
அடித்து விடுகிறாள் அக்கா.
அவனும் ஆற்றாமையால் கூவுகிறான்,
அன்று தும்பியைக் கல் தூக்க வைத்தாள்
இன்று இதன் இறகைப் பிய்ப்பாளோ.?
பாவம் பட்டாம் பூச்சி !
கடவுளே, நீ அதைக் காப்பாற்று.
பிறிதொரு நாள், குறும்பு செய்த பிள்ளையை
கூடத்தின் ஓரத்தில் நிற்க வைக்க,
நில்லாமல் ஓடிப்போனவனைப் பிடித்து
ஓரடி அடித்தாள் அவன் தாய்.
சிறிது நேரம் அழுது ஓய்ந்தவன்
மாடியின் மேலேறி வானம் பார்த்து
வேண்டிக்கொண்டான்,
" பட்டாம் பூச்சியைக் காத்த கடவுளே,
என்னையும் இவர்களிடமிருந்து காப்பாற்று.!"
_________________________________________________
நல்லா வந்திருக்குங்க...
பதிலளிநீக்குநன்றி திரு.ராமமூர்த்தி அவர்களே.
பதிலளிநீக்குசிறுகதை மாதிரி அழகா இருக்குதுங்க கவிதை
பதிலளிநீக்குநன்றி திரு.சிவகுமாரன் அவர்களே
பதிலளிநீக்குlovely poem. reminds me TO ANTHEA by Robert Herrick
பதிலளிநீக்குAnthea, I am going hence
With some small stock of innocence;
But yet those blessed gates I see
Withstanding entrance unto me;
To pray for me do thou begin;--
The porter then will let me in.
kannan
அழகான அருமையான கவிதை...
பதிலளிநீக்குபொதுவாய்ப் பையன்கள்தான் பட்டாம்பூச்சியைப் பிடிப்பதும் இறக்கைகளைப் பிய்த்து மகிழ்வதுமாய் இருப்பார்கள். பெண்பிள்ளைகள் அவற்றைப் பார்த்து உச் கொட்டுவார்கள். இங்கே நேர்மாற்றம். சின்னப்பையனின் வேண்டுகோளுக்கு கடவுள் செவிசாய்த்தே ஆகவேண்டும். சுட்டிப் பேரனைப் பற்றிய கவிதையை ரசித்து மகிழ்ந்தேன்.
பதிலளிநீக்கு