சில சந்தேகங்கள்........
-----------------------------
சிறு வயதிலிருந்தே எனக்கு ஒரு பழக்கம். எதையும் எளிதில் நம்பி விடுவதில்லை. கேள்விகள் கேட்பேன். அதிகப் பிரசங்கி என்ற பெயரும் சில சமயம் எடுத்ததுண்டு. இருந்தாலும் "தொட்டில் பழக்கம் சுடு காடு மட்டும் " என்பார்கள். சுடுகாடு சேருமுன், கிடைக்கப்படாத விடைகள் சில, தெரிந்து கொள்ளாத சங்கதிகள் சில. எது எப்படியாயினும் என் சந்தேகங்கள் சிலவற்றை வலையுலகில் வைக்கிறேன். பதில் தெரிந்தவர்கள் என்னை தெளிவிக்க முனைந்தால் நன்றியுடன் கடமைப்பட்டவனாக இருப்பேன்.
1) சாஸ்திரம் சாஸ்திரம் என்று எதற்கெடுத்தாலும் பலர் பல இடங்களில் கூறக் கேட்கிறேன். இந்த சாஸ்திரங்கள்தான் என்ன.? அனைத்தும் அடங்கிய புத்தகங்கள் ஏதாவது தமிழிலோ ஆங்கிலத்திலோ படிக்கக் கிடைக்குமா.? செவி வழியே கேட்கப்படும் சாஸ்திரங்கள் நம்பிக்கை தருவதாயில்லை. சம்பிரதாயங்கள் வேறு. அவை வழக்கப்படி புழக்கத்தில் இருப்பவை. இடத்துக்கு இடம் மாறும் விஷயங்கள். சாஸ்திரங்களுக்கு SANCTITY உண்டா.? யாரால் ஏற்படுத்தப்பட்டது.? மனு எழுதிய சாஸ்திரம் என்று பலரால் பலவிதமாக விமரிசிக்கப்பட்டு வரும் விஷயங்கள்தான் சாஸ்திரமா.? இது குறித்துக் கேள்விகள் வந்துகொண்டே இருக்கின்றன. ( சக்தி விகடனில் சேஷாத்திரி நாத சாஸ்திரிகளிடம் கேட்க வேண்டியதுதானே என்று ஒதுக்காதீர்கள். )
2) ஆலயங்களில் அந்தக் காலத்தில், மின்சாரம் கண்டுபிடிக்கப் படாத காலத்தில், ஆண்டவனின் திரு உருவை தரிசிக்க, விளக்கொளி வேண்டி, ஆலயத்துக்கு வருபவர் எண்ணெய் கொண்டு வருதல் ஏற்றுக்கொள்ளக் கூடியதே. ஆனால் அதே வழக்கப்படி கர்ப்பக் கிரகத்தில் ஆண்டவனின் திருவுருவை இன்றும் அரைகுறை விளக்கொளியில் தரிசிக்க வேண்டுவது சரியா.? தூரத்தில் நின்று கடவுளின் உருவை யூகிக்க வேண்டியுள்ளது. கோவிலுக்கு எண்ணெய் கொண்டு சென்று தீபம் ஏற்றும் பழக்கம் தேவைக்கான ஒன்றாய் இருந்தது. அன்று. அந்தப் பழக்கம் தொடருதல் தேவையா.? நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் அறிவு சார்ந்த விடை கிடைப்பது கடினம் என்று எனக்குத் தெரியும்.
3) ஆண்டவனைப் பல உருவங்களில் வழிபட பல விசேஷ தினங்கள் நம்மிடையே உண்டு. பிள்ளையார் சதுர்த்தி , கிருஷ்ணஜயந்தி ,சிவராத்திரி போன்ற பல பண்டிகைகள் உண்டு. ஆண்டவனுக்கு உகந்தது என்று பல நிவேதன்கள் செய்யப்படுகின்றன. பிள்ளையாருக்குக் கொழுக்கட்டையும் கிருஷ்ணனுக்கு முறுக்கு சீடையும் போன்றவை உதாரணங்கள் .இவைதான் உகந்தவைகள் என்று எப்படி தெரிந்தார்கள்.? சில நேரங்களில் அடியார்கள் தங்களுக்குப் பிடித்ததை கடவுளுக்கும் பிடிக்கும் என்று அளிப்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இது இவர்களுக்கு உகந்தது என்று ஆண்டவனின் சுவையை அடக்குவது ஏன்.? சில பண்டிகை நாட்களில் இதுதான் நிவேதனம் என்று standardise செய்வது எந்த நம்பிக்கையின்பால் பட்டது ?
4) வான சாஸ்திரத்தில் (இந்த சாஸ்திரம் அறிவியல் சார்ந்தது) நம் முன்னோர் முன்னோடிகள் என்று நமக்குத் தெரியும். ஆனால் நாளின் ஒரு பகுதியை ராகு காலம் என்று குறிப்பிட்டு அது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் வரும் என்று கூறுவதன் விளக்கம் எனக்குத் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் இடத்துக்கு இடம் இந்த ராகு காலம் மாறவேண்டும் அல்லவா... ராகு காலம் ஒரு இடத்தின் இருப்பை POSITION சூரியனோடு ஒப்பிடுகையில் இருப்பதை பொறுத்துக் கணிக்கப் படுவதுதானே.. இந்தியாவில் ஒரு இடத்தில் ராகு காலம் இன்னொரு இடத்தில் வேறு நேரத்தில் அல்லவா இருக்கவேண்டும்.. இந்தியாவில் ,ஜப்பானில், அமெரிக்காவில் ராகு காலங்கள் ஒரே நேரத்தில் இருக்க சாத்தியமில்லையே... இந்தியாவின் ஸ்டாண்டர்ட் டைம் நாக்பூரின் இருப்பிடத்தை ஒட்டியே கணிக்கப்படுகிறது. நாக்பூரின் நேரமும் குவாஹத்தியின் நேரமும் ஜம்முவின் நேரமும் நியாயப்படி வேறு வேறாக இருந்தாலும் கணக்குக்காக ஒன்றாக ஏற்கப்பட்டுள்ளது. அதுபோல்தான் ராகு காலம் என்றால் அதனால் விளையப்படுவதாக சொல்லப்படும் நிகழ்வுகள் தவறாக இருக்க வாய்ப்புகள் அதிகம்தானே..
5) இது சற்றே வித்தியாசமான வேண்டுகோள்.நான் முதன்முதலில் மூன்றாம் வகுப்பில் சேர்ந்தபோது, கற்றுக்கொண்ட பாடல் வரிகள் இப்போது என் மனதில் ரீங்கரமிடுகிறது, நினைவுக்கு வரும் வரிகளை தருகிறேன். யாராவது இதை முழுதும் அறிந்திருந்தால் கூறவும். இல்லையென்றால் இதையே அழகாக முடிக்க முயலுங்கள் .
ஒன்றிரண்டு ஒன்றிரண்டு என்றே ஏகுவோம்
என்றுமென்றும் வெற்றி பெற்று நாங்கள் மீளுவோம்,
கொடிய பகைவர் குலை நடுங்க கொற்றம் வீழ்டுவோம் ,
நெடிய வாள்கள் பளபளவென நெருங்கித் தாக்குவோம்,
வந்தோம் வந்தோம் என்று கூவி வீரம் முழக்குவோம்,
வென்றோம் வென்றோம் என்று சொல்லி முரசு கொட்டுவோம்.....
.............
பதில்களை எதிர் நோக்கி காத்திருக்கிறேன்.
===========================================