ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

மறு பக்கம், இரு பக்கம்....


                                      மறு பக்கம், இரு பக்கம்.
                                      --------------------------------

சில நாட்களுக்கு முன் “ பேசாமல் பெண்ணாய்ப் பிற்ந்து
இருக்கலாம் “ என்று ஒரு பதிவு இட்டிருந்தேன். அதன்
மறு பக்கமாக ஆண்கள் பற்றியும்  பின் ஆண், பெண் இருவர்
பற்றியும் ஆங்காங்கே கேட்டது. படித்தது என சிலவற்றை
ஒருங்கிணைத்து பதிவாய் இடுகிறேன். இதில் எதுவுமே என்
கற்பனை அல்ல.

ஆண்கள் சங்கட மற்றவர்கள்.
அவர்களது பெயர்கள் மாறுவதில்லை.(திருமணத்துக்கு முன் பின்)
அவர்கள் கர்ப்பம் தரிப்பதில்லை.
வெள்ளைச் சட்டை அணிந்து தோட்டத்துக்கு நீர் பாய்ச்சலாம்.எந்த
சட்டையும் அணியாமலும் நீர் பாய்ச்சலாம்.
பேசும்போது யாரும் அவர்கள் மார்பைப் முறைப்பதில்லை.
தொலை பேசியில் 30 செகண்டுகளில் பேசி முடிப்பார்கள்.
ஐந்து நாள் விடுமுறைக்கு ஒரு சிறு கைப்பெட்டிபோதும்.
எந்த நிகழ்ச்சிக்கு அழைக்காவிட்டாலும் நண்பர்களாகத்
தொடர்வார்கள்.
இரண்டு மூன்று ஜோடி காலணிகளே அவர்களுக்கு அதிகம்.
அவர்கள் அணியும் ஆடையில் சுருக்கம் தெரிவதில்லை.
அவர்களது முகத்தின் நிறம் அசலானது.
ஆண்டு முழுவதும், ஏன் ஆயுள் முழுவதும் ஒரெ ஹேர் ஸ்டைல்.
முகத்திலும் கழுத்திலும் முடி நீக்கினால் போதும்.
கால்கள் எப்படி இருந்தாலும் அரை நிஜாரில் அலையலாம்.
நகம் வெட்ட ஒரு பேனாக்கத்தி போதும்.
பண்டிகைக்கு முதல் நாள் பத்து பேருக்கு அரை மணியில்
உடைகள் வாங்குவார்கள்.

                                                        இரு பக்கம்.
                                                        ----------------

ஆண்களும் பெண்களும்.
---------------------------------

ஆண் சிநேகிதர்கள் உரையாடும் போது செல்லப் பெயர்களில்
அழைத்துக் கொள்வார்கள். ( மச்சி, மோட்டு, சோடாபுட்டி )

பெண் சிநேகிதிகளுடன் உரையாடும்போது அவர்களது
பெயர்களிலேயே அழைக்கப் படுவார்கள். (காமினி,ரூபா, சந்தியா )

நான்கு ஆண்கள் வெளியில் சாப்பிடப் போனால் மொத்த பில்
ரூ.200-/ க்கு ஆளுக்கு ரூ.100-/ கொடுத்து பாக்கி பற்றிக் கவலைப்
பட மாட்டார்கள்.

நான்கு பெண்கள் வெளியில் சாப்பிடப்போனால் கால்குலேட்டரில்
கணக்குப் பார்ப் பார்கள்

ஆண் ஒன்றுக்கு இரண்டு விலை கொடுத்தாலும் தேவைப்
பட்டதை மட்டும் வாங்குவான்.

பெண் இரண்டுக்கு ஒன்று கொடுத்து தேவைப் படாததை
தள்ளுபடியில் வாங்குவாள்.

ஆண் குளியலறையில் டூத் ப்ரஷ்,பேஸ்ட், ரேசர், ஷேவிங் க்ரீம்,
சோப், டவல் ஆகியவை இருக்கும்.

பெண் குளியலறையில் நூற்றுக்கும் மேற்பட்ட சாதனங்கள்
இருக்கும். அதில் ஆணுக்கு அநேக பொருளின் பெயர் கூடத்
தெரியாது.

ஒரு வாக்கு வாதத்தில் பெண்ணின் பேச்சே கடைசி. அதன் பின்
ஆண் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இன்னுமொரு வாக்கு
வாதத்தின் துவக்கம்.

ஆண் திருமணம் ஆகும் வரை எதிர்காலம் பற்றிக் கவலைப்
படுவதில்லை.

பெண் திருமண்ம் ஆகும் வரைதான் எதிர்காலம் பற்றிக்
கவலைப் படுவாள்.

பெண் மாறமாட்டாள் என்று நினைத்து ஆண் மணக்கிறான்.
ஆனால் பெண் மாறிவிடுகிறாள்.

ஆண் மாறுவான் என்று நினைத்து பெண் மணக்கிறாள். ஆனால்
அவன் மாறுவதில்லை.

பெண் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் பிரத்தியேக உடை அணிவாள்

ஆண் திருமணம் சாவு இதற்கு மட்டும் பிரத்தியேகமாய்
உடை அணிவான்.

ஆண் தூங்கி எழும்போது அழகாய்த் தெரிவான்.

பெண் தூங்கி எழும்போது அழகைத் தொலைத்திருப்பாள்.

பெண்களுக்கு குழந்தைகள் பற்றி எல்லாமே தெரியும்.

ஆண்களுக்கு குழந்தைகள் வீட்டில் உலவும் சிறு உருவங்கள்.

( ஒரு திருமணமான ஆண் அவனுடைய தவறுகளை மறக்க
 வேண்டும். இருவரும் அதை நினைத்திருப்பதில் யாருக்கும்
எந்த பலனும் இல்லை. ).  

.

8 கருத்துகள்:

  1. மறு பக்கம், இரு பக்கம்...."அருமையான ஆராய்ச்சிப் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. இக்கரைக்கு அக்கரை எப்போதுமே பச்சைதான். சில சமயங்களில் அக்கரையில் உண்மையாகவே பசுமை தழைத்திருக்க வாய்ப்புமிருக்கிறது. நகைச்சுவை என்று வகைப்படுத்தியிருந்தாலும் நிறைய உண்மைகள் உள்ளன, இருதரப்பிலும். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. அருமை அருமை
    தாங்கள் சொல்லியுள்ளவைகளை
    அதன் அதன் குணங்களாக தன்மைகளாக
    எடுத்துக்கொண்டால் வாழ்வே சொர்க்கம்தான்
    இல்லையேல் கஷ்டம்தான்
    சுவாரஸ்யமான பதிவு
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. @இராஜராஜேஸ்வரி,
    @கீதமஞ்சரி,
    @டாக்டர் கந்தசாமி,
    @ரமணி,
    @சமுத்ரா,
    இதில் என் ஆராய்ச்சியோ எண்ணங்களோ ஏதுமில்லை. வெறும் பகிர்வுதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. ஐயா,எல்லாம் சரி ஆனால் குழந்தைகள்பற்றிய ஆணின் கருத்து ஏற்க முடியாதது.

    பதிலளிநீக்கு
  6. திரு. உமேஷ், இதில் கூறப் பட்டுள்ளவை எல்லாம் சத்தியமாக என் கற்பனை அல்ல.ஆராய்ச்சியும் அல்ல. எங்கோ படித்ததைப் பகிர்ந்து கொண்டேன். அவ்வளவுதான். வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு