Saturday, April 6, 2013

மன சாட்சி ( நாடகம் )-7





              மன சாட்சி ( நாடகம் )

காட்சி.:- 8.   இடம்.:- சாலை
பாத்திரங்கள்.:- ரவி, சபாபதி.

(திரை உயரும்போது ரவி சோர்ந்து நடை போட்டுப் போக எதிரில் சபாபதி வருகிறான்.)

சபாபதி.:- என்ன சார்....எங்க “ அம்போன்னு பொறப்பட்டீங்க.....?

ரவி.:- எங்கெ போனா உனக்கென்னப்பா.....உன் வேலையைப் பார்த்துட்டு நீ போயேன்........

சபாபதி.:- வில்லன்னாலும் சரியான வில்லந்தான்யா நீ.......உன்னைத் தனியா நல்லா கவனிச்சுக்கணும்னு நெனச்சேன்...பின்ன   ஏதோ நடந்தது நடந்து போச்சு நல்லாவே இருக்கலாம்னு நெனச்சா ....சும்மா மொரைக்கறியே .....அது சரி.... நம்ம பழைய காதலி..... அதுதான் ...ஷீலா ...எப்படியிருக்கா......?

ரவி.:- உனக்கு சம்பந்தப் படாத விஷயங்களிலெல்லாம்  நீ  அனாவசியமாய்த் தலையிடறே.......அது உன் நல்லதுக்கில்லெ...ஊம்ம்ம். போயிடு இங்கேருந்து......

சபாபதி.:- என்னய்யா.... மெரட்டறியே.....ஷீலாவை நான் கட்டிக்கிட்டா எவ்வளவு சொத்து கிடைக்கும்னு நெனச்சு அவளைக் காதலிக்கத் தொடங்கினேன்....ஆனா நீ என்னடான்னா எப்படியோ அவளை மயக்கி உன்னைத் திருட்டுக் கல்யாணம் செய்ய வெச்சுட்டே....அது சரி........... கல்யாணம் மட்டும் பண்ணினாப் போதாதே...... ஒரு குழந்தையாவது பொறந்தாத்தானே சொத்து........ ஹேங்........ஆமா.... ஏதாவது... இருக்கா.....?

ரவி.:- உன்னை மறுபடியும் எச்சரிக்கிறேன்........நீ அனாவசியமா என் கோபத்தைக் கிளர்றே...! ஜாக்கிரதை......!

சபாபதி.:- இதப் பாருய்யா  ... நானாயிருந்தேன்னா இந்நேரம் ஒண்ணில்லை... ரெண்டோ மூணோ பெத்திட்டிருப்பேன்...ஒண்ணுக்கூட வழியக் காணோம்....ரொம்ப மெரட்டறியே...நீ. ஒரு ஆண்பிள்ளையில்லியா ...

 ரவி.:- ( மிகவும் கோபப்பட்டு )என்ன சொன்னே....! ராஸ்கல்.....! இனிமே சொல்வியாடா.....சொல்வியாடா....( கேட்டுக் கேட்டு அடிக்கிறான் )முதலில் இல்லை இல்லையென்று சொல்லி அலறிய சபாபதி, ரவியின் பிடியிலிருந்து மீண்டதும்)

சபாபதி.:- எதுக்கு இவ்வளவு கோபப்பட்டு உடம்பைப் பிடிச்சு விடறான்....ஹூம்.......ஆண்பிள்ளையான்னு கேட்டதுக்கா....?மறுபடியும் கோபம்வருதான்னு பார்க்கலாமா......? யோவ்.....நீ  ஒரு ஆண்பிள்ளையா.....? ( ரவி மறுபடியும் கோபத்துடன் திரும்பா ....ஓடுகிறான் )...
                        ( திரை )               ( தொடரும் )

          

                        

11 comments:

  1. சண்டை அதிகமாகி விட்டதே...

    சுருக்கமாக முடித்து விட்டீர்களே ஐயா...

    தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. குழந்தை பிறக்காததற்கு ரவி மட்டும் எப்படி காரணமாக இருக்க முடியும் என்பது தெரியவில்லை.

    ReplyDelete

  3. @ திண்டுக்கல் தனபாலன்
    @ ஜீவி
    தொடர்ந்து படித்து வந்தால் ரவி எப்படிக் காரணமாக இருக்கமுடியும் என்று விளங்கும். போன காட்சியில் ஓரளவுக்கு விளக்கமாகவே உரையாடல்களை அமைத்திருந்தேன். ரவி தாம்பத்தியத்தில் ஈடுபாடே கொள்ளவில்லை என்று விளக்கமாகவே எழுதப் பட்டிருந்தது. அதற்கு அவனது இயலாமைகாரணம் என்று கோடி கட்டப் பட்டிருக்கிறது.இது ஒரு சிக்கலான கரு என்று முன்பே கூறி இருக்கிறேன். தொடர்ந்து படித்து வாருங்கள் கதையின் போக்கே புரியும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  4. தொடர்ந்து படித்து வருகிறேன். அதுவும் உன்னிப்பாக.

    ReplyDelete
  5. ரவியின் இயலாமை அவனுக்குள்ளான கற்பனை. ரவியே அதை ஒப்புக் கொள்கிற மாதிரி நாடகாசிரியரின் வசனம் வருகிறது அவ்வளவு தான்.
    ஷீலாவின் பாத்திரப்படைப்பை சரி செய்தால் அந்த தம்பதிகளின் வாழ்வில் சந்தோஷம் பூக்கும்.

    ReplyDelete

  6. @ ஜீவி.--/ ரவியின் இயலாமை அவனுக்குள்ளான கற்பனை/ அவனது இயலாமை அவன் அறிந்த ஒன்று என்ற அனுமானத்திலேயே கதையின் போக்கு பின்னப் பட்டு இருக்கிறது. அந்த தம்பதியரின் வாழ்வில் சந்தோஷம் பூக்கிறது என்று எழுதினால் சொல்ல வந்ததைச் சொல்ல முடியாமல் போகும். கதையின் கரு தீர்மானிக்கப் பட்ட பிறகுதான் பாத்திரப் படைப்புகள் உருவாகின்றன. சில கருத்துக்களுக்கு நாடகம் பூர்த்தியடைந்தபின் விளக்கம் தருகிறேன். தொடர் கருத்துப் பறிமாறலுக்கு நன்றி.

    ReplyDelete

  7. வணக்கம் ஐயா!

    திருமதி ராஜலட்சுமி பரமசிவம் அவர்கள் வலைத்தளத்திலிருந்து வருகிறேன். உங்கள் தளம் எனக்கும் திறக்க வில்லையே!
    நீங்கள் எழுதிய பாமாலை படிக்க நானும் ஆவலாக இருக்கிறேன்.

    ReplyDelete
  8. ஜீவியின் கேள்வி எனக்கும் தோன்றியது.
    then நாடகத்தின் முந்தைய பகுதிகளில் ரவியின் போக்கை ஷீலா குற்றம் சாட்டுவது நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
  9. //YOU ARE IMPOTENT…!ஆண்மை இல்லாத உங்களை ஐ ஹேட் யூ....! உங்களை நான் வெறுக்கறேன்...இங்கேயிருந்து போயிடுங்க....கெட் அவே ஃப்ரம் ஹியர்..... //

    -- இதான் ஷீலா!

    தாம்பத்தியத்தில் கணவன் பாதி - மனைவி பாதி என்பதை ஷீலா உணர வேண்டும். குறை ஷீலாவிடம் தான்.
    அதனால் தான் ரவியிடம் அந்த தொய்தல். முரட்டுத்தனத்தில் அன்பு மலராது. அனுசரணையுடனான அரவணைப்பு வேண்டும் என்பதை தாய் போன்ற யாராவது அவளுக்குத் தெரியப்படுத்தினால் தேவலை.

    ReplyDelete
  10. சண்டை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தொடர்கிறேன் அய்யா.

    ReplyDelete
  11. சிறிய காட்சியானாலும் கதையை வெகுவாக நகர்த்தக்கூடிய காட்சி இது. பொறுமையின் எல்லையை நோக்கி ரவியை நகர்த்தும் மற்றொரு உந்துவிசை இந்நிகழ்வு. தொடர்கிறேன்.

    ReplyDelete