Friday, December 20, 2013

கடந்து வந்த பாதை -திரும்பிப் பார்க்கிறேன்


                 கடந்து வந்த பாதை-திரும்பிப் பார்க்கிறேன்.
                 ----------------------------------------------------------


சில நாட்களாக நான் எழுதிய பதிவுகளையே திரும்பிப் பார்க்கிறேன் ஆகஸ்ட் மாதம் 2010-ல் தொடங்கிய என் பதிவுலகப் பிரவேசம்இன்று வரை தடையேதுமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.என்றால் அதற்கு முக்கிய காரணம் என் எழுத்துக்கு மதிப்பு கொடுத்து வந்து என்னை உற்சாகப் படுத்தியவர்களின் பங்கும் அதிகம் உண்டு என்று தெரிகிறது. புதுத் துடைப்பம் நன்கு சுத்தம் செய்யும் என்பது போல என் ஆரம்பகால எழுத்தும் சுமாராக இருந்திருக்கிறது. மேன் மேலும் அப்படி எழுதுவதற்கு ஊக்கம் அளித்த பதிவுலக வாசக நண்பர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வந்தனம். நானும் எழுத முடியும் என்று நம்பவைத்து ஊக்கப் படுத்திய நண்பர்களை நன்றியுடன் திரும்பிப் பார்க்கிறேன் உங்களிடமும் பகிர்கிறேன் ( என் எழுத்துக்கான பின்னூட்டங்கள்--எனக்கானது அல்ல.) பதிவுக்குத் தலைப்பைச் சொடுக்கவும்.பதிவுகளைத் தேடிச் செல்ல வேண்டாம் உ-ம்
தலைப்பு -சில சந்தேகங்கள். இது அண்மையில் என் பதிவுகளைப் படிக்கத் தொடங்கி இருக்கும் நண்பர்களுக்கு உதவும். எனக்கும் உதவும்...! 

"அவர்கள் மனம் ஏற்கும் விஷயங்கள் முதலில் காரணம் கேட்பதில்லை.காரணம் காணத் துவங்குகையில் விரும்பிய பொருளிலோ கருத்திலோ முரண்படத் துவங்குகிறோம் என நினைக்கிறேன்"
"தூரத்தில் நின்று கடவுளின் உருவை யூகிக்க வேண்டியுள்ளது"....

I can't help but smile! :) light or no light-- aren't we all doing the same?

.

எண்ணத் தறியில் எட்டு மணி நேரம் 

மகிழ்ச்சி..வியப்பு..எண்ணங்களின் அதிர்வுகள் என உறைந்துபோய் நிற்கிறேன். ஒரு கைதேர்ந்த சிற்பியின் கைவண்ணத்தில் உருவாகும் கலைநயம் மிளிரும் சிலையைப்போல இந்தக் கட்டுரையைக் காண்கிறேன். உங்களின் அபாரமான எழுத்தாற்றலை உங்கள் பணி விழுங்கி செரித்திருக்கிறது பல்லாண்டுகளாக என்று உணர்ந்துகொள்கிறேன். எரிமலைபோல மனதுக்குள்ளே கனன்றுகனன்று இன்று வெடித்து பரவுகிறது. அருமையான சுய அனுபவத்தில் அனுபவித்த பொருண்மையை அல்லது அருகிருந்து பார்த்த பொருண்மையை இத்தனை சுவாரஸ்யமாக சொல்லியிருப்பது அருமை. நல்ல கலைநயத்தோடு உண்மை பொறுப்புணர்ச்சியோடும் அலசப்பட்ட கட்டுரை இது.


எழுத்தை எழுத்தாகக் கொண்டு படித்தால் மனம் புண்படாது படிக்கலாம் என்பது என் எண்ணம். முகந்தெரியாதவரை காரணமில்லாமல் தாக்குவதில் எழுதுகிறவருக்கும் motive இல்லை என்பதை நம்புகிறவன் நான். எழுத்தின் வெளிப்பாடு பலசமயம் பலவித புரிதல்களை ஏற்படுத்தக்கூடியதால் படிப்பவரும் திறந்த மனதோடு, அடிப்படை நம்பிக்கையோடு படித்தால், இணையத்தில் அருமையான கலந்தெழுத்தாடல்களில் கலந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.



வயோதிகம் குற்றமும் இல்லை. தண்டனையும் இல்லை. என் போன்ற சிறியவர்களுக்கு முன் ஏர் பிடித்துச் செல்லும் உங்களின் அனுபவம் கொடையும் வேண்டாத போது கிடைத்த வரமும்.

>>>கிளிக்கு ஒரு நெல்
ஆகா!
 
வாழ்வின் விளிம்பில் 

இருத்தலையும் இல்லாதிருத்தலையும் இவ்விரண்டையும் மனமெனும் குறளி பார்ர்க்கும் பார்வையையும் எத்தனை அற்புதமாகச் சொல்லியிருக்கிறீர்கள் பாலு சார்?

இறுதியாக ஒன்று சொல்ல வேண்டும். இதெல்லாம் படிக்கிற நேரத்துப் பார்வையில் பட்ட கருத்துக்களே தவிர, இப்படித் தான் இந்தக் கதையைப் பார்க்க வேண்டும் என்றில்லை.
இன்னொரு நேரத்துப் படிக்கும் பொழுது வேறு வகையான எண்ணங்கள் தோன்றலாம். இப்படியெல்லாம் சிந்திக்க வைப்பதே நல்ல கதைகளுக்கு அடையாளம். வெறும் பொழுது போக்கு கதைகளுக்கில்லாத சிறப்பும் கூட. அதனால் தான் எழுதுகிற எழுத்தின் மூலம் ஏதாவது ஒரு செய்தியைக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்ற நினைப்புகளே எக்காலத்தும் போற்றுதலுக்குள்ளாகிறது.






அறிவியலையும், ஆன்மீகத்தையும் கேள்வி கேட்டு, அந்த இரண்டையும் குழைத்து கொடுத்திருக்கிறீர்கள். விடை தெரியா வினாக்களை எழுப்பியிருக்கிறீர்கள்.

இதெல்லாம் கேள்வி கேட்டு பதில் சொல்வதில்லை, ஜிஎம்பீ சார்! அது இதுவோ என்று சலனமாக உணரப் படுவது.. உணர்ந்ததும் போக்குக் காட்டி இதுவில்லையோ என்று மயங்க வைப்பது. வார்த்தைகளால் விவரித்து இன்னொருத்தருக்குச் சொல்லமுடியாது, வியக்க வைப்பது. தானே தன்னுள் தோண்டி தானின் தரிசனம் காண்பது.

கேள்விக்குள் பதிலை மறைத்து பதிலுக்குள் கேள்வியை விதைத்துச் செல்லும் உங்கள் பதிவு அருமை

தன்னுள் தோண்டி தானிiன் தரிசனம் காண விழையும்போது, தன்னுள் ஒரு தான் இருப்பதாக எண்ணிக்கொண்டே தேடுகிறோமோ?இதுவோ அதுவோ என்று போக்கு காட்டும் ஒன்றை தன்னுள் தேடுதல், இந்த வாழ்வில் இயலாதது. மனிதாலயத்தில் அரனாயிருந்த எனும்போது, ஏதோ ஒன்றை முடிவாய் நினைத்து தேடுதல் போலாகும் . என் கூற்றை சற்றே கவனமாய்ப் பாருங்கள் அண்டமே ஒன்றின் , இருட்டின் வியாபிப்பு என்ற மெய்ஞானப்படி தேடுவதும், உயிரென்பதும் ஆன்மா என்பதும் எண்ணிக்கையில் மாற்றமில்லாதிருக்க வேண்டும் என விஞ்ஞானப்படி அறிவதும், வரைந்து முடித்த வட்டத்தின் துவக்கப் புள்ளியை தேடுவது போன்ற பலன் தராத ஒன்று. ஆகவே இருளில் இருப்பதே சுகம், நம்பிக்கையே ஞாயிறின் ஒளி என்று கூறி என்னை நானே தேற்றிக் கொண்டு அந்த விடியலுக்காக காத்திருக்கிறேன் என்றே கூறியுள்ளேன்.
 
தேடலின் நிழல் நீண்டு செல்கிறது ஒளி தேடி.பின் ஒளி மங்கி நிழல் மடிந்து ம்ற்றொரு விடியலுக்காய்க் காத்திருக்கிறது.

அது எதுவென நினைக்கிறோமோ அது அதுவில்லை.

புதிரும் விடையும் ஒன்றில் ஒன்றெனப் பிணைந்து படரும் இவ்வாழ்க்கையின் சக்கரத்தை நான் என் மகனிடம் கொடுத்துச் செல்வேன்.அவன் கேள்விகள் மேலும் தொடர அவன் மகனிடம் கொடுத்துச் செல்ல மெல்ல உருளும் நில்லாச் சக்கரம்.
 

மற்றெல்லா உணர்ச்சிகளையும் போலத்தான் காதலும்.

காத்திருத்தல்-விட்டுக்கொடுத்தல்-பரஸ்பர நம்பிக்கை-வெளிப்படையான தன்மை-மரியாதையாய் நடத்துதல்-இவையெல்லாம் இருந்தால் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் மட்டுமல்ல,எல்லா இரு பந்தக்களுக்குமிடையில் சொர்க்கம் பிறக்கும்.

இந்த மாதிரியான குணங்கள் கொண்ட இருவரில் ஒருவர் பேசினால்-ஒருவர் சிந்தித்தால்-போதும் என்ற அளவில் ஒத்த சிந்தனை நிலவும்.

ஆதலினால் மானிடரே எல்லாவற்ரையும் காதல் செய்வீர்.காதல் என்ற வார்த்தைக்குள் அடைபடாத காதல் செய்வீர்.

நல்ல பதிவு. "காதல்" என்ற வார்த்தையைக் கண்டதும் உங்கள் பதிவின் பக்கம் வராமல் இருக்க முடியவில்லை..காதல் என்ற வார்த்தைக்கே அத்தனை வலிமை இருக்காக்கும் :))
 
//குறைகளையும் அரவணைத்து விட்டுக்கொடுக்கும் சுபாவம்தான் காதல் வாழ்வில் வெற்றிக்கு வழி வகுக்கும்.//

இது உண்மை ஐயா...ஜெமினி கணேஷன் முதல் மனைவி பாப்ஜி அவர்கள் கிட்டே அவங்க பெரிய பொண்ணு கமலா கேட்டு இருக்காங்க..."எப்படியம்மா ...இந்த அப்பாகிட்டே சகிச்சுட்டு குடும்பம் நடத்தின...உன் காதலை துச்சமாக்கிட்டு எத்தனை பொண்ணுங்களை கட்டிக்கிட்டு வரார் னு"...அதுக்கு பாப்ஜியம்மா சொல்லி இருக்காங்க..." நான் அவரை மிகவும் காதலிக்கிறேன்...காதல் என்பது குறைகளையும் தாண்டி நேசிப்பது தான்....பெண்களிடம் சபலப்படுவது அவர் குறை...ஆனால் அந்த குறையவும் தாண்டி அவரை காதலிக்கிறேன்..." அப்படி னு சொல்லி இருக்காங்க...(இதை நான் ஒரு புத்தகத்தில் படிச்சேன் பாலு ஐயா...நீங்க அந்த வரிகளை சொல்லும்போது இந்த சம்பவம் தான் மனதில்.

ஐயா... கொட்டியிருக்கிறீர்கள். அன்பின் வழியது உயர்நிலை என்பார்கள் ஆன்றோர்கள். அன்புதான் அழியாக் காதல். அது மனதின் ஊடாட்டத்தால் வருவது. யாயும் யாயும் யாராகியரோ...குறுந்தொகைப் பாடல் அற்புதமாய் காதலுக்கு விளக்கம் கூறும். இப்போது அதிக விழுக்காடு மெய்யின் புணர்ச்சிக்காகவே அலைபாய்கிறது காதல் எனும் பெயர் சூட்டி. இதுதான் இப்போது காணும் மெய். பள்ளிக்கூடம் செல்லும் சிறு பெண் பிள்ளைகளை ரவுடிகள் காதல் கொள்வதுபோல பல படங்கள் இந்த மண்ணில் காதலைக் குழிதோண்டிப் புதைக்க வழி செய்துகொண்டிருக்கின்றன. திரைப்படங்கள் எனும் பெயரால் அவை சீரழிவைத் தொடங்கி வைத்துவிட்டன கேவலமாய் பணத்தை ஈட்டிக்கொண்டு.
 
அன்பே சிவம் என்று திருமூலர் இன்னும் உயர்வாக உயர்த்தி வைத்தார். 47 வருட உங்கள் காதல்வாழ்விற்கு என்னுடைய பெருமைமிகு பணிவான வணக்கங்கள் வாழ்த்துக்கள். காதல் இல்லாமல் காதலின் பொருண்மை புரியாமல் காதலை பெருமைப்படுத்தாமல் கௌரவப்படுத்தால் உயர்த்திப் பிடிக்காமல் அந்தப் பெயரை பலிபீடமாக வைத்துக்கொண்டு பல உயிர்கள் வதைபடுகின்றன நாள்தோறும். வருத்தம். மிக வருத்தம். சரியான நேரத்தில் சரியான பதிவு. இளையவர்கள் படிக்கவேண்டும். அனுபவம் நல்ல இலக்கைக் காட்டும் பாதையாகும்.
---------------------------------------------------------

..


 



 


 



 

17 comments:

  1. நல்ல தொகுப்பு ஐயா... அதைப் பற்றிய விமர்சனமும் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. முகந்தெரியாதவரை காரணமில்லாமல் தாக்குவதில் எழுதுகிறவருக்கும் motive இல்லை /

    கிளிக்குக் கொடுத்த நெல்லாய்
    அருமையான தொகுப்புகள் ..!

    ReplyDelete
  3. அருமையானத் தொகுப்பு ஐயா நன்றி

    ReplyDelete
  4. அருமையான தொகுப்பு சார். நல்ல விமரிசனம் .

    ReplyDelete
  5. காத்திருத்தல்-விட்டுக்கொடுத்தல்-பரஸ்பர நம்பிக்கை-வெளிப்படையான தன்மை-மரியாதையாய் நடத்துதல்-இவையெல்லாம் இருந்தால் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் மட்டுமல்ல,எல்லா இரு பந்தக்களுக்குமிடையில் சொர்க்கம் பிறக்கும்.//

    உண்மைதான் சார். அழகாய் சொன்னீர்கள்.
    நல்ல தொகுப்பு.

    ReplyDelete
  6. நல்ல தொகுப்புகள் ஐயா!
    உங்கள் பதிவுகளை ஒவ்வொன்ன்றாகப் படிக்கவேண்டுமென ஆவலாய் உள்ளேன்.

    நேரம் அமையும்போது படித்துக் கருத்திடுவேன்.

    பகிர்விற்கு நன்றி ஐயா!வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  7. @ திண்டுக்கல் தனபாலன்
    @ இராஜராஜேஸ்வரி
    @ கரந்தை ஜெயக்குமார்.
    @ ராலலக்ஷ்மி பரமசிவம்
    @ கோமதி அரசு
    @ இளமதி
    @ அப்பாதுரை
    அனைவரது வருகைக்கும் கருத்தளிப்புக்கும் நன்றி.இப்பதிவை வெளியிட்டதன் நோக்கமே என் பதிவுகளை வாசிக்கத் தொடங்கி இருக்கும் பல புதிய பதிவர்களும் என் பழைய பதிவுகளைப் படிக்க வேண்டும் என்னும் ஆவலும் அப்போது வந்த கருத்துப் பதிவுகளை ஒரு நோட்டம் விடுவதற்கும்தான்.
    மீண்டும் நன்றி.

    ReplyDelete
  8. அருமையான தொகுப்பு... ஒவ்வொன்றாக படிக்கிறேன்.

    ReplyDelete
  9. பிரமாதமான தொகுப்பு ஜி.எம்.பி. சார்.

    ReplyDelete
  10. அருமையான தொகுப்பு ஐயா!

    ReplyDelete


  11. கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்த்து அருமையான அனுபவங்களை
    பதிவில் பலபட விளக்கியுள்ளீர்!!!

    அருமை!கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்த்து வாழ்ந்தால்தான், எதிர் வரும் வாழ்வு விரும்புவதாக அமையும்! நன்றி!

    ReplyDelete
  12. சிறப்பான தொகுப்பு... பொறுமையாக படிக்கிறேன்..

    நானும் ஆகஸ்டு 2010ல் தான் என் வலைப்பூவை தொடங்கினேன்...

    ReplyDelete

  13. @ வெங்கட் நாகராஜ்
    @ எக்ஸ்பாட்குரு
    @ தனிமரம்
    @ புலவர் ராமாநுசம்
    @ ஆதிவெங்கட்
    அனைவரது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தொகுத்து வெளியிட்டதன் பலன் பலரது வாசிப்பில் இருக்கிறது.மீண்டும் நன்றி.

    ReplyDelete
  14. திரும்பிப் பார்ப்பதும் நல்லதற்குத்தான் என்று தோன்றுகிறது. இல்லையென்றால் உங்களைப் பற்றி இவ்வளவு செய்திகளை நாங்கள் அறிந்துகொண்டிருக்கமுடியுமா?

    ReplyDelete
  15. வெளியிலிருந்து பார்ப்பது போல் ஒரு பிரமை உண்டாகிறது இல்லையா? முன்பே படித்திருந்தாலும் மீள்பார்வை நீள்பார்வையாவதன் ஆச்சரியம் எனக்கும் பிடிக்கும். பழைய பதிவுகள் பின்னூட்டங்கள் ஒரு ஊஞ்சல்.

    ReplyDelete

  16. @ செல்லப்பா யக்ஞசுவாமி
    என்னைப் பற்றிட் தெரிந்து கொள்வதை விட என் எழுத்துக்கள் பற்றித் தெரிந்துகொள்வதையே நான் விரும்புகிறேன். வருகைக்குநன்றி சார்.

    @ அப்பாதுரை.
    இப்போதெல்லாம் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்கள் மூலம் எதையும் தெரிந்து கொள்ள முடிவதில்லை. அதனால்தானோ பழைய பின்னூட்ட ஊஞ்சலில் ஆட விழைந்தேன். நன்றி அப்பாதுரை சார்.

    ReplyDelete