மறதி போற்றுவோம்
-----------------------------
(மறதி என்பது ஒரு உடற்கூறின் குறைபாடு என்று கூறுகிறார்கள்( ALZEIMER வியாதி) ஆனால் மறதி என்பது பெரும்பாலும் வரம் என்றே தோன்றுகிறது. அதன் விளைவே இப்பதிவு)
அங்கிங்கெனாதபடி
எங்கும் அவலங்கள்
ஆனால் நமக்கோ அவை -- வெறும் நிகழ்வுகள் செய்திகள்
அண்டை வீட்டுக்காரன் மண்டையைப போட்டால்
நமக்கென்ன பாதிப்பு ?
ஊரில் உலகில் ஆயிரம் சாவுகள்
வெள்ளத்தால் மழையால் மண்சரிவால்
பூகம்பத்தால் சுனாமியால் கொடிய நோய்களால்
ஒரே நொடியில் கோடீஸ்வரன் ஒட்டாண்டியாகிறான்
மாடு மனை வாசல் எல்லாம் துறக்கிறான்
எண்ணவே இயலாத அவலங்கள்
அரை நொடியில் மண்ணில் நிகழ்வது நிஜம் .
எங்கோ குண்டு வெடிக்கிறது
மரண ஓலங்களும் வலியின் வேதனைகளும்
நமக்கென்ன தெரியும் ? அவை வெறும் செய்திகள்தானே .
மூக்கறுந்த பெண்ணும் ஈ மொய்க்கும் குழந்தைகளும்
பத்திரிகையில் செய்திகள் தொலைக்காட்சிப் படங்கள்
என்ன செய்வது,எல்லாம் தலை எழுத்து
நாம் என்ன செய்ய ,--ஐயோபாவம் என்று
" ஊச் " கொட்டுவோம் .
இழப்பு நமக்கு நேர்ந்தால் தெரியும்
வலியும் வேதனையும்
ஊர் கூட்டிக் கதறி ஒப்பாரி ஓலமிட்டு
காட்டுவோம் உலகிற்கு
நமக்கு நேரும் இழப்பும் வலியுமே
ஆனால் நமக்கோ அவை -- வெறும் நிகழ்வுகள் செய்திகள்
அண்டை வீட்டுக்காரன் மண்டையைப போட்டால்
நமக்கென்ன பாதிப்பு ?
ஊரில் உலகில் ஆயிரம் சாவுகள்
வெள்ளத்தால் மழையால் மண்சரிவால்
பூகம்பத்தால் சுனாமியால் கொடிய நோய்களால்
ஒரே நொடியில் கோடீஸ்வரன் ஒட்டாண்டியாகிறான்
மாடு மனை வாசல் எல்லாம் துறக்கிறான்
எண்ணவே இயலாத அவலங்கள்
அரை நொடியில் மண்ணில் நிகழ்வது நிஜம் .
எங்கோ குண்டு வெடிக்கிறது
மரண ஓலங்களும் வலியின் வேதனைகளும்
நமக்கென்ன தெரியும் ? அவை வெறும் செய்திகள்தானே .
மூக்கறுந்த பெண்ணும் ஈ மொய்க்கும் குழந்தைகளும்
பத்திரிகையில் செய்திகள் தொலைக்காட்சிப் படங்கள்
என்ன செய்வது,எல்லாம் தலை எழுத்து
நாம் என்ன செய்ய ,--ஐயோபாவம் என்று
" ஊச் " கொட்டுவோம் .
இழப்பு நமக்கு நேர்ந்தால் தெரியும்
வலியும் வேதனையும்
ஊர் கூட்டிக் கதறி ஒப்பாரி ஓலமிட்டு
காட்டுவோம் உலகிற்கு
நமக்கு நேரும் இழப்பும் வலியுமே
காலத்தின்
போக்கில் மறக்கும் நமக்கு
மாற்றானின் வலியும் வேதனையும்
வெறும் நிகழ்வுதானே செய்திதானே
மறப்பது மனசுக்குள்ள மருந்து
காலம் நமக்கு கொடுத்த வரம்
எதுவும் கடந்து போகும்
மறதி போற்றுவோம் !
மாற்றானின் வலியும் வேதனையும்
வெறும் நிகழ்வுதானே செய்திதானே
மறப்பது மனசுக்குள்ள மருந்து
காலம் நமக்கு கொடுத்த வரம்
எதுவும் கடந்து போகும்
மறதி போற்றுவோம் !
//நமக்கு நேரும் இழப்பும் வலியுமே காலத்தின் போக்கில் மறக்கும் நமக்கு மாற்றானின் வலியும் வேதனையும்
பதிலளிநீக்குவெறும் நிகழ்வுதானே செய்திதானே! மறப்பது மனசுக்குள்ள மருந்து.
காலம் நமக்கு கொடுத்த வரம்.
எதுவும் கடந்து போகும்
மறதி போற்றுவோம் !//
ஆம் ஐயா, நிஜம் தான்.
நெருங்கிய உறவு ஒருவர் இறந்து போன அன்று நமக்குள்ள வருத்தம் + துயரம் நாளடைவில் அவ்வளவாக இருப்பது இல்லை.
மறதி நல்லதொரு மாமருந்து தான்.
மறதியை மறக்காமல் போற்றுவோமாக !
/// மறப்பது மனசுக்குள்ள மருந்து
பதிலளிநீக்குகாலம் நமக்கு கொடுத்த வரம் ///
உண்மை உண்மை ஐயா...
கொஞ்சம் யோசித்தால் நிறைய வசதினு தான் தோணுது.
பதிலளிநீக்குமறப்பது மனசுக்குள்ள மருந்து
பதிலளிநீக்குகாலம் நமக்கு கொடுத்த வரம்
எதுவும் கடந்து போகும்
உப்பும் தண்ணீரும் செல்லச்செல்ல
உணரும் துயரம் குறையும்,மறையும்!
மறதி ஒரு மிகப் பெரிய வரமே !
பதிலளிநீக்குஇல்லையென்றால் யாரால் நிம்மதியாக உறங்க முடியும் சொல்லுங்கள்.
நீங்கள் சொல்லிய அத்தனை சங்கடங்களும் மறதி இல்லையென்றால்
முள்ளாய் உறுத்தாதோ?
ஆகையால் மறதி போற்றப்பட வேண்டியதே!
மறதி என்பது மனிதனுக்கு கடவுள் கொடுத்த கொடை என நினைக்கிறேன். மறதி மட்டும் இல்லாவிடில் உலகில் யாருமே மகிழ்ச்சியாய் இருக்க முடியாது. எனவே தாங்கள் சொன்னதுபோலவே மறதியை போற்றுவோம்! மறதியை போற்றுவோம்!!
பதிலளிநீக்குஉண்மைதான். மறதி ஒரு வரம்தான்.
பதிலளிநீக்குதுன்பங்களையும் துயரங்களையும் காலம் மாற்றும்.
பதிலளிநீக்குஅந்த வகையில் - மறதி மட்டும் இல்லை என்றால் மனிதனின் கதி என்ன ஆவது!..
பதிலளிநீக்கு@ கோபு சார்
@ திண்டுக்கல் தனபாலன்
@ அப்பாதுரை
@ இராஜராஜேஸ்வரி
@ ராஜலக்ஷ்மி பரமசிவம்
@ வே. நடன சபாபதி
@ ஸ்ரீராம்
@ துரை செல்வராஜு
மறதி என்பது ஒரு நோய் என்றில்லாத வகையில் அது நல்லதே. ஆனால் பிறர் நமக்கிழைத்த தீங்குகள் மறக்காமலும் . நன்மைகளை மறந்தும் இருப்பதை என்ன சொல்ல.? அனைவரது வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி.
மறதி ஒரு வரம்.....
பதிலளிநீக்குஉண்மை தான்...
நிச்சயம் மறதி ஒரு வரமே
பதிலளிநீக்குமறக்காமல் அவலங்களையெல்லாம்
பட்டியலிட்டு பின் இதைச் சொன்னதை
மிகவும் ராசித்தேன்
நீங்கள் சொன்னது போல் மறதி ஒரு வரம்தான். மறதி மட்டும் இல்லையேல் மனிதர்களுக்கு எப்போதும் புலம்பலும், பழிவாங்கும் குணமுமே மிஞ்சும்.
பதிலளிநீக்குமறதி நல்லதொரு மருந்து.
பதிலளிநீக்குமறதி மனிதனின் அருமருந்துதான் ஐயா.
பதிலளிநீக்குமறதி மட்டும் இல்லையேல், அனைத்தையும் சுமந்து
மனிதன் பைத்தியமாக திரிந்து கொண்டிருக்க வேண்டியதுதான்.
நன்றி ஐயா.
இந்த மறதி மட்டும் இல்லையென்றால் உலகம் எப்போதோ அழிந்துபோயிருக்கும். அத்தனை அற்புதமான அருமருந்து இந்த மறதி. அதை பற்றி சொல்ல வேண்டுமானால் நாட்கள் போதாது.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ வெங்கட்
@ ரமணி
@ தமிழ் இளங்கோ
@ மாதேவி
@ கரந்தை ஜெயக் குமார்
@ டி.பி.ஆர் ஜோசப்
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.நினைக்க வேண்டியதை நினைத்து மறக்க வேண்டியதை மறத்தல் சரி என்று தோன்றுகிறது.
தாங்கள் கூறுவது எவ்வளவுக்கு உண்மையென்று இங்கே காணுங்கள்.
பதிலளிநீக்குhttp://www.dailymail.co.uk/news/article-564948/The-woman-forget-ANYTHING-Widow-ability--curse--perfectly-remember-single-day-life.html
பதிலளிநீக்கு@ Packirisamy
It is astonishing.Thank God, it is an exceptional case. Thank you.