புதன், 31 டிசம்பர், 2014

புத்தாண்டே வருக வருக.


                                        புத்தாண்டே வருக வருக.
                                        -----------------------------------
 
    ஆண்டொன்று   போக  அகவை ஒன்று  கூட
         
நடந்ததை  எண்ணி  அசை போட
        
நன்கே  வாய்த்த  புத்தாண்டே
        
உன்  வரவு  நல்வரவாகுக..

வேண்டத்தான்  முடியும்எண்ணியபடி
மாற்றத்தான்  முடியுமா.?
நடைபயிலும்  அருணோதயத்தில்
வந்துதித்த   ஞானோதயமா .?

         
வேடிக்கை மனிதர்போல் வீழ்வேனென்று
         
நினைத்தாயோ   என்றவனே
         
வாடிக்கை மனிதர்போல்தானே மாண்டுபட்டான்.
         
அவன் பாட்டின் தாக்கம் அது இது
         
என்றே கூறி பலன் பல பெறுவதே
         
பலரது நோக்கம் என்றானபின்
         
அவன் இருந்தபோது இல்லாத பெயரும்  புகழும்
          
இறந்தபின்  வந்தார்க்கென்ன  லாபம்.?


எனக்கொரு  நூறு  இளைஞர்கள்  தாரீர்
மாற்றிக்காட்டுகிறேன்   இவ்வுலகை, -உள்ளப்
பிணியிலிருந்து அதை மீட்டுத்தருகிரேன்
என்றே சூளுரைத்த விவேகானந்தன்
கேட்டதனைப்   பெற்றானா, இல்லை
சொன்னததனை செய்தானா.?

         
அக்கினிக் குஞ்சான  அவர்தம் வார்த்தைகள்
         
வையத்து   மாந்தரின்  உள்ளத்தே
         
ஆங்காங்கே  கணப்பேற்றி இருக்கலாம்
          
சில  கணங்கள்  உள்ளத்து  உணர்வுகளை
          
உசுப்பேற்றி  இருக்கலாம் - என்றாவது
         
அவனிதன்னை  சுட்டுத்தான்  எரித்ததா.?  

நன்மையையும்  தீமையும், இரவும் பகலும்,
நாளும்  நடக்கும் நிகழ்வுகள்  எல்லாம்
இயற்கையின்  நியதி.
கூடிப் புலம்பலாம்ஒப்பாரி  வைக்கலாம்,
நடப்பதென்னவோ  நடந்தே  தீரும்.
நீயும்  நானும்  மாற்றவா  முடியும்.?
எண்ணி மருகினும் இயலாத  ஒன்று.


    புத்தாண்டுப்   பிரமாணம் ஏற்க
         
எண்ணித் துணிந்து விட்டேன்.
         
நாமென்ன  செய்ய  என்றே
         
துவண்டாலும்- நலந்தரும்
         
சிந்தனைகள்  நம்மில்  வளர்க்க
         
செய்யும் செயல்கள் நலமாய்  இருக்கும்
.
         
ஊரைத்  திருத்த  உன்னால் முடியாது,
         
முடியும்  உன்னை  நீயே  மாற்ற
          (நீ  ஏமாற்ற  அல்ல.)
         
எண்ணில்  சொல்லில் செயலில்
            
நான்வேண்டுவதெல்லாம்-என் பேச்சைஅடக்
 
எங்கும் எதிலும் என்னை வெளிப்படுத்த விரும்பும்
என் எண்ணங்களுக்குக் கடிவாளம் இ


மற்றோரின் குறைகளுக்கு தீர்வு கண்டு அதை
நீக்க முயலும் என் முனைப்புகளை உடைக்க.

எல்லாவற்றையும் அடிமுதல் நுனி வரை ஆராய
நினைக்கும் என் மேதாவித்தனத்தை மாற்றிவிட.

வட்டமாய் சிறகடித்து மேலிருந்து கீழே நேராய்
இரையை நாடும் பறவையைப் போல் சொல்ல
நினைக்கும் புள்ளியை நானடையக் கற்றுக்கொள்ள.

நான் படும் வேதனைகளை, வலிகளை
அடுத்தவன் முன் கொட்டித் தீர்க்க நான் வாய்
திறந்தால் அதனை அக்கணமே மூடிவிட
அடுத்தவனுக்கு உதவிட என்றும் நினைக்க வைக்க கூடவே
 
நானும் தவறிழைக்கலாம் என என்னையும் எண்ண வைக்க
புத்தாண்டுப் பிரமாணம் எடுக்கிறேன்.

நாம் பட்ட அனுபவங்கள் ஏராளம் இருக்கலாம்.
படிப்பினைகள் ஆங்காங்கே கிடைத்தாலும் கிடைக்கலாம்.
அவரவர் வாழ்க்கை அவரவரே வாழ வேண்டும்.

இவ்வையகம் விட்டு நாம் அகலும்போது நம்மை
நண்பனாய், நல்லவனாய் நினைக்க நால்வர் வேண்டும்.அல்லவா?.



கடந்த செப்டம்பரில் மயிலாடுதுறையில் அரசு தம்பதியினருடன் மயூரநாதர் கோவிலில் ஒரு படம் வாங்கினேன். அதை கண்ணாடியில் ஓவியமாக்கினேன்.முதலில் அவுட்லைனும். பின் கண்ணாடிஓவியமும் 



கோவிலில்வாங்கிய படமும்  என் ஓவியமும்

( வலையுலக வாசக நண்பர்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..!)



 
.


செவ்வாய், 30 டிசம்பர், 2014

நினைவடுக்குகளிலிருந்த பயணம்-4


                          நினைவடுக்குகளிலிருந்த  பயணம் -4
                          --------------------------------------------------------
(சில நாட்கள் கணினியிலிருந்து விடுபட்டிருப்பேன் என்று சென்றபதிவில் எழுதி இருந்தேன்.After a hectic two weeks  I am back. டிராஃப்டாக எழுதி இருந்த நினைவடுக்குகளில் இருந்த பயணம் -4 ஐ இப்போது பதிவிடுகிறேன் )

எங்களுக்கும் அண்ணா அண்ணிக்கும் கொடுக்கப் பட்ட இடங்கள் இரண்டு தளங்களில் இருந்தது என்று சென்ற பதிவில் முடித்திருந்தேன்
 இனி
அப்போது எங்களிடம் கைபேசிகள் இருக்கவில்லை. தினமும் எங்கள் நலன் குறித்து std பூத்துக்குப் போய் எங்கள் மக்களுக்கு ஃபோன் செய்து அறிவிப்போம். அன்று நாங்கள் அறையில் செட்டில் ஆனவுடன் விவரங்களுக்குஃபோன் செய்ய அருகில் இருந்த ஒர் std பூத்துக்குப் போனோம்  முதலில் நான் தொலை பேசிவிட்டு பிறகு அண்ணாவும் அண்ணியும் பூத்துக்குள் போய்ப் பேசினார்கள். பிறகு அறைக்குத் திரும்பினோம். அறையில் நுழையும்போது அண்ணா தன்னுடைய பர்ஸையும் சிறு பையையும் பூத்திலேயே விட்டு வந்ததாய்க் கூறினார். பயணக் களைப்புடன் அவருக்குக் கொஞ்சம் ஜுரமும் இருந்தது. பூத்தை விட்டு வெளியே வந்து கால் மணிநேரத்துக்கும் மேல் ஆகியிருக்கலாம். இப்போது போல் atm வசதி ஏதுமில்லை. பர்ஸ் நிறையப் பணம் வைத்திருந்தார். எங்கே போய் தொலை பேசினோம் என்பதே நிச்சயமாகத் தெரியவில்லை. புது இடம். பதறிப் போய்த் தேடினோம். நல்ல காலம் பூத்தில் அவரது பர்ஸும் பையும் பத்திரமாக இருந்தது. இந்தக் களேபரத்தில் அண்ணி அறைச் சாவியை எங்கள் அறையில் விட்டிருந்ததாகச் சாதிக்க ஆரம்பித்தார். மறதி நோயின் வெளிப்பாடு சிறிது சிறிதாகத் தெரிய ஆரம்பித்திருந்தது. கடைசியில் அண்ணாவின் பையில் சாவி இருந்தது கண்டு பிடிக்கப் பட்டது

அருகில் இருந்த எந்த ஹோட்டலிலும் காப்பியோ நம்மூர் உணவோ கிடைக்கவில்லை. அண்ணி அடிக்கடி காப்பி குடிக்கும் பழக்கமுள்ளவர்.எப்படியோஅன்றைய பொழுது கழிந்தது. 


 மறு நாள் பொழுதை ஹரித்வார் நகரைச் சுற்றிப் பார்பதிலும் அங்கு பார்க்க வேண்டிய இடங்கள் குறித்துத் தகவல் சேகரிப்பதிலும் கழித்தோம் அங்கே  சண்டிதேவி கோவில் மற்றும் மானசா தேவிக்கோவில் ஆகியவை குன்றுகளின் மேல் இருந்தன. அங்கே போய்வர கேபிள் கார் வசதி இருந்தது. முதன் முதலில் கேபிள் காரில் பயணம் த்ரில்லிங்காக இருந்தது. சண்டிதேவி கோவிலில் குரங்குகளின் தொல்லை அதிகம். அவை நம்மைத் தொந்தரவு செய்யாமப் இருக்க போகும் பாதையில்சுற்றிலும் கம்பி வலைகள் வேயப் பட்டிருந்தது. மாலையில் ஹரித்வார் கங்கைக் கரைக்குச் சென்றோம். அடுத்து வர இருந்த அர்த் கும்பாபிஷேகத்துக்கு தயாராக சில கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருந்தது. அருகில் இருக்கும் கோவில்களுக்குச் சென்றோம். கங்கைக்கு எடுக்கும் அஹா ஆரத்தியைக் கண்டோம். அருகில் கடைகளுக்குச் சென்று ஸ்படிக மாலைகளும் ருத்திராட்ச மாலைகளும் வாங்கினோம். அருகே இருந்த ஒரு ருத்திராட்ச மரத்தையும் கண்டோம். என்னதான் சுற்றினாலும் வயிற்றுக்குத் திருப்தியாக உணவு கிடைக்கவில்லை. ஹரித்வார் சாலைகளில்குதிரை வண்டி மற்றும் சைக்கிள் ரிக்‌ஷா பிரயாணம் வித்தியாசமாக இருந்தது. அங்கு இருந்ததை விட chaotic  ட்ராஃபிக் எங்காவது இருக்குமா தெரியவில்லை.மறு நாள் ரிஷிகேஷ் சென்றுவர பஸ்ஸுக்கு முன் பதிவு செய்து கொண்டோம். சில புகைப் படங்களை இணைக்கிறேன்.
ஹரித்வாரில் அர்த் கும்பமேளாவுக்காக சில கட்டுமானப் பணிகள்
  
ஹர்த்வார் சண்டி கோவிலில் இருந்து ஒரு காட்சி.
 
சண்டி தேவி கோவிலில் ஒரு பக்த குடும்பம்
 
கேபிள் காரில்

ஹரி-கி பௌடி ஒரு தோற்றம்.
 
ஹர்த்வார் ஹரி-கி-பௌடி
 
எல்லாவற்றையும் நினைவிலிருந்தே எழுதுவதால் அவை கோர்வையாக வருவதில்லை. அப்போது இதுபற்றி எல்லாம் எழுதுவேன் என்று நினைத்திருந்தால் ஒவ்வொரு நிகழ்வையும் இடத்தையும் பதிவு செய்து வைத்திருப்பேன்.

ஹர்த்வாரிலிருந்து பஸ்ஸில் புறப்பட்டோம். இமைய மலையின் அடிவாரத்துக்குப் போகிறோம் என்னும் நினைப்பே த்ரில் ஆக இருந்தது. இரு பெரிய பாலங்கள்  கட்டி இருக்கிறார்கள் அவற்றை லக்க்ஷ்மண் ஜூலா என்றும் ராம் ஜூலா என்றும் கூறுகிறார்கள் நிறையவே யாத்ரிகர்கள் வருகிறார்கள் எங்கு சென்றாலும் இந்த உணவு விஷயம் படுத்துகிறது. இருந்தாலும் அங்கு நான் ஓரளவுக்கு நன்கு சாப்பிட்டேன். கோவில்கள் எல்லாமே வடக்கில் அமைப்பில் வேறு பட்டுஇருக்கிறது. ஒரு வேளை அவர்களுக்குஆகம விதிகள் என்று ஏதுமில்லையோ.? எப்போது பேரூந்து புறப்பட்டு விடுமோ என்னும் கவலை இருந்து கொண்டே இருந்தது. அங்கு ஆற்றில் கை வைத்தால் சில்லென்றிருக்கிறது. பொதுவாக ஆறுகள் என்றால் எனக்கு அங்கு குளிக்கும் ஆசை வரும். எவ்வளவுதான் நினைவு படுத்த முயன்றாலும் அங்கு நான் குளித்தேனா என்பது நினைவுக்கு வருவதில்லை. அங்கு பெரும்பாலும் ஷாப்பிங் என்பது மாலைகளும் மணிகளும் மட்டுமே. நாங்களும் சிலவற்றை வாங்கிக் கொண்டொம் சில நினைவுகளைப் புகைப் படங்கள் மூலம் புதுப்பிக்க வேண்டி உள்ளது. ரிஷிகேஷிலிருந்து திரும்பி வரும் போது ஹர்த்வாரில் சில கோவில்களுக்குக் கூட்டிச் சென்றார்கள். அங்கு அளவில் பெரிய கோவில் ஒன்றைக்கண்டோம். வைஷ்ணவி கொவிலுக்குள் செல்வது போல் ஒரு குகைப் பாதை மாதிரி அமைத்திருக்கிறார்கள். அங்கு தவழ்ந்து சென்றே கோவிலின் தேவியை தரிசிக்க வேண்டி இருந்தது.மாதா லால் தேவி என்று புகைப் படத்தின் பின்னே எழுதி வைத்திருக்கிறேன் ராமாயணக் கதை மாந்தர்களின் சிலைகள் கலர் கலராக இருக்கின்றன

ஹர்த்வாரிலிருந்து ரிஷிகேஷ்  ஓடும் பஸ்ஸிலிருந்து
, .                                  .                                    
  
ராம் ஜூலா
.
லக்ஷ்மண் ஜூலாவில்
.
லக்ஷ்மண் ஜூலாவில் என் மனைவி.

. 
மாதா லால் தேவி கோவில்

கோவிலின் ஒரு தோற்றம்.


அடுத்தநாள் ஹர்த்வாரிலிருந்து புது டெல்லி. அங்கு என் அண்ணாவின் இரண்டாவது மகள்  இருந்தாள். அவரது மாப்பிள்ளை எங்களை டெல்லியில் மெட்ரோ ரயிலில் கூட்டிச் சென்றார் அங்கே இந்திரா காந்தி சுடப்பட்ட இடத்துக்கும் கூட்டிச் சென்றார்.  ஒரு நாள் ஓய்வுக்குப் பின் பெங்களூர் போகும் ரயிலில் திரும்பினோம். இந்த வட இந்திய யாத்திரையின் போது ஏறத்தாழ எல்லாவித ட்ரான்ஸ்போர்ட் மோடிலும் பயணித்தோம். அக்டோபர்
2-ம் தேதி துவங்கி 22-ம் தேதிவரை பயணித்தது அடிக்கடி நினைவில் வரும் இப்போது அதைப்பதிவாக்கி விட்டேன்                                  .                                    
சுடப் படும் முன் இந்திரா காந்தி நடந்து வந்த பாதை பின்னணியில்
  .                                                                             
இந்திரா காந்தி சுடப் பட்ட இடம் அருகே     (பயண நினைவுகள் முற்றும்)