நினைவடுக்குகளிலிருந்த ஒரு பயணம் -1
---------------------------------------------------------
( பொதுவாக தமிழ் மணத்தில் என் இடுகைகளை நானே இணைத்துக் கொள்வேன்.கடந்த சில பதிவுகளை யாரோ இணைக்கிறார்கள் வேண்டாமே.ப்ளீஸ்...)
நினைவடுக்குகளில்
ஒரு பயணம்
வருடம் 2003. ஆகஸ்ட் கடைசியோ
செப்டெம்பர் முதல் வாரமோ சரியாக
நினைவில்லை “பாலா காசிக்குப் போகலாம் என்று ஒரு திட்டம். நீயும் வருகிறாயா.?” என் சின்ன அண்ணா
கேட்டார். கரும்பு தின்னக் கூலியா.?எனக்குத்தான் பயணிக்கப் பிடிக்குமே. கலந்து
ஆலோசித்தோம். அப்போது ரயில்வேயில் ரௌண்ட் ட்ரிப் செய்தால் டிக்கெட் பணம் டெலஸ்கோப்
ரேட்டில் வசூலிப்பார்கள். அதற்கு ஒரு கண்டிஷன் . போகும் வழி ரூட்டும் வரும் வழி
ரூட்டும் ஒன்றாய் இருக்கக் கூடாது.மொத்த தூரத்துக்குக் கட்டணம் கணக்குப் பண்ணி
வசூலிப்பார்கள்.குறிப்பிட்ட நாட்களுக்குள் பயணத்தை முடிதுக் கொள்ள வேண்டும் என்பது
ஒரு கண்டிஷன்.அந்த வசதி இப்போதும் இருக்கிறதா தெரியவில்லை. எங்களுக்கு எங்கள்
பெரிய அண்ணாவையும் கூட்டிக் கொண்டு போக விருப்பம். ஆனால் அவர் இருந்தது மதுராவில்
அவர் பெண்ணுடன். இந்த மாதிரிப் பயணம் நன்றாக திட்டமிடப் படவேண்டும் போகும் இடங்களுக்கு
ரிசர்வேஷன் இல்லாவிட்டால் பாடு திண்டாட்டமாகும். நாங்கள் பெங்களூருவிலிருந்து
முதலில் ஜெய்பூர் போய், அங்கிருந்து மதுரா, ஆக்ரா வாரணாசி, அலஹாபாத் ஹரித்வார், ரிஷிகேஷ் டெல்லி போய் பிறகு நேராக
பெங்களூரு திரும்புவதாகத் திட்டமிட்டோம். பெரிய அண்ணா எங்களுடன் மதுராவில்
சேர்ந்து டெல்லியில் சின்ன பெண் வீட்டோடு பயணத்தை முடித்துக் கொள்வதாகக் கூறினார்.
ஆனால் கடைசி நேரத்தில் சின்ன
அண்ணாவின் மனைவிக்கு சில அசௌகரியங்கள் காரணமாக பயணத்தை ரத்து செய்யச் சொல்லிக்
கேட்டுக் கொண்டார் ஒரு முறை திட்டமிட்டதை ரத்து செய்ய எனக்கு மனமில்லை. மேலும்
இந்தப் பயண ஆசையைத் தூண்டிவிட்டதே என்
சின்ன அண்ணாதான். திட்டமிட்டபடி நானும் என் மனைவியும் முந்தைய டிக்கெட்டுக்களைக்
கான்சல் செய்து எங்களுக்கு மட்டும் டிக்கெட் வாங்கினோம். பெரிய அண்ணா திட்டமிட்டபடி
டிக்கெட் வாங்கி கொள்வதாகக் கூறினார்.
அப்போது இந்த ஆன் லைன் வசதி
இருந்ததா தெரியாது. எங்கள் யாரிடமும் கணினியும் இருக்கவில்லை. ரயில்வே கைடை வாங்கி
எந்த ட்ரெயின் எங்கிருந்து எங்கு எத்தனை
மணிக்கு என்று இரண்டு மூன்று நாள் பிரயாசைப் பட்டு தீர்மானித்தோம். அதன் பிறகு
ரிசர்வேஷன் நாங்கள் பயணிக்க இருந்த எல்லா ரயில்களுக்கும் குறிப்பிட்ட தேதிகளில்
செய்து கொண்டோம். . முதலில் பெங்களூருவிலிருந்து ஜெய்ப்பூருக்கு அக்டோபர் இரண்டாம்
தேதி புறப்பட்டோம். ஜெய்ப்பூரில் எங்கு தங்குவது என்ன என்ன பார்க்க வேண்டும் என்று
ஒன்றுமே தெரியாது. என் மூத்த மகன் எக்சைட் கம்பனியில் வேலையிலிருந்தான். அவன்
ஜெய்ப்பூர் ஏரியா மானேஜருக்குப் ஃபோன் செய்து எங்களை வரவேற்கவும் ஹோட்டல் வசதி
செய்து தரவும் கேட்டுக் கொண்டான். எங்களை ஜெய்ப்பூர் ரயில் ந்லையத்தில் எங்கள்
பெயர் கொண்ட தட்டியுடன் திரு முகேஷ் பார்கவா என்ற நண்பர் காத்துக் கொண்டிருந்தார்.
ரயில் நிலையத்தில் இருந்து இரண்டு கி.மீ தூரத்துக்குள் ஒரு ஹோட்டலில் எங்களைத்
தங்க ஏற்பாடு செய்தார். ஜெய்ப்பூரில் கோட்டை சேஷ் மஹல் அங்கு பிரசித்திபெற்ற
கோவில்கள் ஹவா மஹல் ஜல் மஹல் ஆல்பெர்ட்
மியூசியம் போன்ற இடங்களுக்குச் சென்று வர டாக்சி ஏற்பாடு செய்து கொடுத்தார். அவ்வளவு
தூரம் சென்றபின் ஷாப்பிங் இல்லாமலா. என் மனைவி டிப் அண்ட் டை வகையறாவில் ஒரு
சாரிவாங்கினாள். ராஜஸ்தான் எம்போரியத்தில் ஒரு சில்க் குயில்ட்டும் வாங்கினோம்.
அங்கு சென்றிருந்த போது எடுத்த புகைப் படங்கள் சில மீட்டெடுத்தது,
ஜெய்ப்பூர் கோட்டை மதிலில் |
ஜெய்ப்பூர் கோவிந்த் தேவ் கோவிலின் முன் முகேஷ் பார்கவாவுடன் |
ஜெய்ப்பூர் பிர்லா மந்திர் வெளியே |
ஜெய்ப்பூர் பிர்லா மந்திர் உள்ளே |
ஜெய்ப்பூர் ஹவாமஹல் உள்ளே |
ஜெய்ப்பூர் ஹவாமஹல் உள்ளிருந்து ஒரு காட்சி |
ஜெய்ப்பூர் ஜல் மஹல்( நீரில் மாளிகை) |
ஆல்பெர்ட் மியூசியம் ஜெய்ப்பூர் |
கமல் பாக்(g) தோட்டம் ஜெய்ப்பூர் |
பெங்களூருவிலிருந்து அக்டோபர் 2-ம்தேதி காலை 11 1/2 மணிக்குப் புறப்பட்டு அக்டோபர் 4-ம் தேதி காலை 6 1/2 மணி அளவில் ஜெய்ப்பூர் சேர்ந்தோம். பிங்க் சிடி என்றழைக்கப் படும் ஜெய்ப்பூர் பார்க்கும் இடங்களெல்லாம் பிங்க் ஆகவே இருக்கிறது ஜெய்ப்பூர் மியூசியத்தில் காணும் சில வாசகங்கள் இந்திய அரசர்கள் ஆங்கிலேயரிடம் மிகவும் விசுவாசமாக இருந்ததைக் குறிப்பிடுவது போல் இருக்கிறது. ஜெய்ப்பூரில் கமல் தோட்டம் என்று பார்க்கவேண்டிய இடம் என்றதனால் பார்க்கப் போனால் மிகவும் ஏமாற்றமளித்தது. பெங்களூரு தோட்டங்கள் முன் அது நிற்க முடியாது.ஜல்மஹல் எனப்படும் நீரில் கட்டப் பட்ட மாளிகை தூரத்தில் இருந்தே பார்வையிட முடிந்தது
நாங்கள் தங்கி இருந்த ஹோட்டலில் மிகவும் அனுசரணையாகவே இருந்தனர்.டீ கேட்டால் நம் கண்முன்னாலேயே பாக்கெட் பால் திறக்கப் பட்டு ஃப்ரெஷாக டீ போட்டுத் தந்தார்கள் சப்பாத்தியும் நம் விருப்பத்துக்கு ஏற்ப மெலிதாக இட்டுக் கொடுத்தார்கள். நாங்கள் ஒன்றரை நாள் தங்கலுக்குப் பின் 5-ம் தேதி மதியம் மதுரா வர ரயில் ஏறினோம்.(மீதி அடுத்தபதிவில்) .
படித்தேன், ரசித்தேன்.
பதிலளிநீக்குஜெய்ப்பூரில் கமல் தோட்டம் என்று பார்க்கவேண்டிய இடம் என்றதனால் பார்க்கப் போனால் மிகவும் ஏமாற்றமளித்தது.
பதிலளிநீக்குஅத்தனை தூரம் சென்று பிரயாசைப்பட்டு பயணம் செய்து பார்த்து நாங்களும் ஏமாற்றமைந்தோம்..
தொடர்கிறேன். தலைப்பு‘நினைவடுக்குகளூடே ஒரு பயணம்’ என்றிருந்தக்கலாமோ
பதிலளிநீக்குமலரும் நினைவுகள் என்றுமே இனிமையானவை
பதிலளிநீக்குஅருமை ஐயா
தொடர்கிறேன்
நன்றி
பதிலளிநீக்குரசித்தேன் வரட்டும் விரைவில் அடுத்த பகுதி...
ஜெய்ப்பூர் உங்களுடன் சென்று வந்துவிட்டோம்.அடுத்த ஊருக்காகக் காத்திருக்கிறோம்.
பதிலளிநீக்குநீரில் மாளிகை உட்பட அனைத்து படங்களும் அருமை...
பதிலளிநீக்குரசித்தேன் ஐயா... தொடர்கிறேன்...
அங்கிருக்கும் சீதோஷ்ண சூழ்நிலைகளுக்கு அந்தத் தோட்டமே பெரிய விஷயம்! :)))) என்றாலும் ஜெய்ப்பூர் பார்க்க வேண்டிய ஊர் தான். நாங்கள் ராஜஸ்தானில் இருந்தபோது இரண்டு முறை ஜெய்ப்பூர் போயிருக்கோம்.
பதிலளிநீக்குதொடர
பதிலளிநீக்குரயில் பயண முன்பதிவு இப்போது வசதியாக இருக்கிறது. நாங்கள் ஒவ்வொருமுறை ராஜஸ்தானிலிருந்து வரும்போதும், போகும்போதும் சிகந்திராபாத் வழியாகத் தான் போகணும், வரணும், ராஜஸ்தான் நசிராபாத்தில் கிளம்பும் ரயிலில் முன்பதிவு செய்துவிட்டு சிகந்திராபாதுக்கு ரெயில்வே மூலமே தந்தி கொடுக்கச் சொல்வோம். மூன்று நாள் பயணம் அப்போதெல்லாம். மூன்றாம் நாள் பிற்பகல் சிகந்திராபாத் போய்ச் சேரும். மாலை சென்னைக்குக் கிளம்பும் வண்டி. எங்கள் வண்டி கொஞ்சம் தாமதம் ஆனாலும் முன்பதிவு செய்தது போய் விடும். பலமுறை அப்படி ஆகி இருக்கிறது. முதல் வகுப்பு டிக்கெட்டை கான்சல் செய்து விட்டு மூன்றாம் வகுப்பில் உட்காரக் கூட இடம் இல்லாமல் மூட்டை முடிச்சுகளுடன் சென்றிருக்கிறோம். :))))
பதிலளிநீக்குஜெய்ப்பூரில் இரண்டு நாட்கள் தங்கி இருந்து அனைத்து இடங்களையும் பார்த்திருக்கிறோம்.....
பதிலளிநீக்குசமீபத்தில் ஹவா மஹல் உள்ளேயும் அனுமதிக்காது இருந்தார்கள்.....
எனது நினைவுகளையும் மீட்டெடுத்தது இப்பதிவு.
ஜெய்ப்பூர் இரண்டு முறை பார்த்தோம்.
பதிலளிநீக்குஉங்கள் பயண அனுபவங்களும், படங்களும் அருமை.
உங்களுடன் நானும் மகிழ்ச்சியுடன் பயணிக்கின்றேன்!..
பதிலளிநீக்குநினைவடுக்குகளில் நாங்களும் பயணம் செய்கிறோம் இலவசமாக.
பதிலளிநீக்குதங்களின் ஞாபக சக்தி வியக்க வைக்கிறது.
பயணம் என்றாலே இனிக்கும். அதுலேயும் நாமும் போய் வந்த இடமுன்னா...கேட்கவே வேணாம். வெல்லம் தின்னாப்போலே:-)))
பதிலளிநீக்குநம்ம ராஜஸ்தான் இங்கே. நேரம் இருக்கும்போது பாருங்கள்.
http://thulasidhalam.blogspot.com/2011/04/2.html
உங்களுடன் நானும் கூடவே சென்று வந்த ஒரு உணர்வு. தொடர்ந்து எழுதுங்கள் ஐயா.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி ஸ்ரீ
பதிலளிநீக்கு@ இராஜராஜேஸ்வரி
to add insult to injury, கட்டணமாக ஆளுக்குப் பத்துரூபாய் வசூலித்ததுதான். வருகைக்கு நன்றி மேடம்
பதிலளிநீக்கு@ வே.நடனசபாபதி
/ தலைப்பு‘நினைவடுக்குகளூடே ஒரு பயணம்’ என்றிருந்தக்கலாமோ/எனக்கென்னவோ நினைவடுக்குகளிலிருந்த தான் apt என்று தோன்றுகிறது.நினைவடுக்குகளில் ஏராளமாக விஷயங்கள். அதில் இருந்த பயணம் பற்றியது மறக்க இயலாதது. வருகைக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ கரந்தை ஜெயக்குமார்
வருகைக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ கில்லர்ஜி
மொத்தம் நான்கு பகுதிகள். அடுத்தடுத்து வெளியாகும். வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ டாக்டர் ஜம்புலிங்கம்
வருகைக்கு நன்றி தொடர்ந்து வாருங்கள்.
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
அப்போது எடுத்த படங்கள் ஃபில்ம் சுருளில் எடுத்து டெவெலப் செய்தது. இப்போது பதிவுக்காக. அவற்றையே மீண்டும் டிஜிடல் செய்து வெளியிடுகிறேன்வருகைக்கு நன்றி டிடி.
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
அன்று சர்குலர் ரூட்டுக்கு டிக்கெட் எடுத்து வெகுவாக திட்டமிட்டு முன் பதிவு செய்ய வேண்டி இருந்தது. எங்கள் பயணம் முழுவதும் இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பரில்தான். ஜெய்ப்பூர் பார்க்க வேண்டிய இடம்தான். அந்தப் பூங்காதான் ஏமாற்றமடையச் செய்தது. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி மேடம்.
பதிலளிநீக்கு@ வெங்கட் நாகராஜ்
உங்களைப் போன்ற புகைப்பட நிபுணர்களுக்கு நிறையவே தீனி போடும் இடம். வருகைக்கு நன்றி சார்.
பதிலளிநீக்கு@ கோமதி அரசு.
நானும் இன்னொரு முறை என் நண்பர் குடும்பத்துடன் போய் வந்திருக்கிறேன். அப்போது என் நண்பர் புகைப்படமில்லாமல் வீடியோவாகஎடுத்துக் கொண்டிருந்தார்.அது வேறு அனுபவம்/
பதிலளிநீக்கு@ துரை செல்வராஜு
தொடர்ந்து வர வெண்டுகிறேன் நன்றி
பதிலளிநீக்கு@ சிவகுமாரன்
அந்த நினைவுகளை இறக்கி வைக்கவே இந்தப் பதிவு.இருந்த புகைப்படங்கள் ஞாபகத்துக்கு துணை நின்றன. வருகைக்கு நன்றி சிவகுமாரா,
பதிலளிநீக்கு@ துளசி கோபால். உங்கள் பதிவையும் பார்க்கிறேன். உங்களுக்குப் பயணக் கட்டுரைகள் கைவந்த கலை யாச்சே. வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ உமேஷ் ஸ்ரீநிவாசன்
உற்சாகமூட்டும் கருத்துக்கு நன்றி உமேஷ்
பயணத்திட்டம் கைவிடப்பட்ட நிலையிலும் முயற்சி செய்து வேறொரு பயணத்திட்டம் தயாரித்து எவர் துணையுமின்றி புதிய இடங்களுக்குச் சென்றுவந்தது வித்தியாசமான அனுபவம்தான். இவ்வளவு வருடங்கள் கழித்தும் நினைவடுக்கில் மங்காத பயண அனுபவங்கள். படங்களும் தகவல்களும் சுவாரசியம்.
பதிலளிநீக்குஉறவுகள் தொடர்பான என் கருத்துகளை என் வலையில் இன்று எழுதிப் பதிவிட்டுள்ளேன் ஐயா. தங்கள் தகவலுக்காக இது. இயலும்போது வருகை தாருங்கள்.
பதிலளிநீக்குநானும் ஜெய்ப்பூர் பார்க்கவேண்டுமென்று ரொம்ப நாளாய் விரும்புகிறேன். ஆண்டவன் எப்போ வழி செய்வானோ, தெரியவில்லை.
பதிலளிநீக்குஎன்னங்க இது, திடீர்னு, பின்னூட்டம் போடறதுக்கு என்னமோ பண்ணியிருக்கீங்க?
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ கீத மஞ்சரி
வருகைக்கு நன்றி, உங்கள் பதிவினைப் படித்தேன். பின்னூட்டமும் எழுதி விட்டேன். ஒரு விவாதத்துக்கு அடிகோலி விட்டேன் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்த சாமி.
ரொம்பநாளாய்ப் போக விரும்பினால் அதற்கான திட்டமிடுதலில் இறங்குங்கள். ஆண்டவன் உங்களை ஜெய்பூரில் கொண்டு விட மாட்டான். வருகைக்கு நன்றி. பின்னூட்டம் போட என்ன பண்ணி இருக்கிறேன் தெரியவில்லையே.
பின்னூட்டம் இட வேர்ட் வெரிபிகேசன் வருகிறது ,அதைதான் கந்தசாமி அய்யா குறிப்பிட்டு இருக்கிறார் ,எடுத்து விடலாமே ?
பதிலளிநீக்குஜெய்ப்பூர் எனக்கும் பிடித்த இடம். சில ஜெய்ப்பூர் நட்புகள் சுவாரசியமானவை.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ பகவான் ஜி
வேர்ட் வெரிஃபிகேஷன் நான் வைத்துக் கொள்ளவில்லை. மீறிக் கேட்டால் just ignore it and see. வருகைக்கு நன்றி
பதிலளிநீக்கு@ துரை.ஏ.
இந்தியாவில் நீங்கள் செல்லாத இடங்களே இருக்காதோ. வருகைக்கு நன்றி சார்
நினைவடுக்குகளிலிருந்து புறப்பட்ட பயணம் சுவாரஸ்யமாகச் செல்கிறது! படங்களும் அழகு!!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ மனோ சாமிநாதன்
முதல்(?) வருகைக்கு நன்றி தொடர்ந்துவாருங்கள்
பல மாதங்களுக்கு முன் உங்கள் வலைத்தளத்திற்கு வந்து பதிவிட்டிருக்கிறேன். இனி தொடர்ந்து வருவேன்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ மனோசாமிநாதன்
நன்றி மேடம். உங்கள் பதிவில் நான் எழுதீ இருந்த எல்லாப்பின்னூட்டங்களும் வந்துவிட்டதே. மக்ழ்ச்சி/
நீர் மாளிகை தவிர அனைத்தையும்
பதிலளிநீக்குபார்த்திருக்கிறேன்
தங்கள் பதிவு அந்த நாட்களை
நினைவூட்டிப்போனது
பதிலளிநீக்கு@ ரமணி.
இந்தப் பதிவு எனக்கும் அந்த நாளைய நினைவுதான். வருகைக்கு நன்றி.
அருமையான பயண அனுபவம் சார்! படித்தோம். மதுரா என்றாலே அங்கு பாலும், பாலில் இருந்து செய்யப்படும் இனிப்பு வகைகளும் நினைவுக்கு வருகின்றது. ஜெய்ப்பூர் சென்றதில்லை. நல்ல வர்ணனையுடன் ஆன பதிவை ரசித்தோம்..
பதிலளிநீக்குமுதல் பாகத்தைப் படிக்காமல், இரண்டாம் பாகத்தை படிக்க முடியாதே. நேற்று இரவுதான் PART . I ஐ படிக்க முடிந்தது. ஆரம்பத்தில் கொஞ்சம் குழ்ப்பமாய் இருந்தாலும், மீள்பதிவு நினைவுகளில் இந்த பயணம் பற்றிய கட்டுரை சுவாரஸ்யம்தான்.
பதிலளிநீக்கு