Monday, June 16, 2014

இன்னொரு கதையல்ல ...நிஜம் .!


                          இன்னொரு கதையல்ல .....நிஜம்...!
                          ----------------------------------------------


சில நேரங்களில் உண்மை நிகழ்வுகள் கற்பனைக் கதைகளையும் விஞ்சி விடுகின்றன. அண்மையில் செய்தித்தாளில் படித்தது எனக்குள் பல கேள்விகளை எழுப்பிச் சென்றது.. இதைப் படித்து முடித்தபிறகு  இதன் காரண காரியங்கள் என்ன என்று வாசகர்கள் பகிர்ந்து கொள்ளலாமே
தன்னுடைய இரு மகள்களைக் கற்பழித்தக் குற்றத்துக்காக நீதி மன்றத்தில் விசாரிக்கப் பட்டவர் விடுவிக்கப் பட்டார்.வழக்கின்போது புகார் கொடுத்த பெண்கள் புகாரை வாபஸ் வாங்கி விட்டனர்.
இரண்டு பெண்களும் அவர்களது தாயும் நீதிபதி முன் கொடுக்கப்பட்ட வாக்கு மூலத்தில் அந்தத் தந்தை தன் பெண்களை கற்பழித்ததாகக் குற்றம் சாட்டி இருந்தனர். ஆனால் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசார்ணைக்கு வந்தபோது அவர்கள் வாக்கு மூலத்தில் தெரிவித்ததை உறுதி செய்யவில்லை. கற்பழிப்புக்காகவும் protection of children from sexual offences (POCSO)சட்டத்தின் கீழும் வழக்கு பதிவாகி இருந்தது.
பெண்களில் இளையவள் 2013-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் அவள் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தபோது தன்னுடைய தந்தை தன்னைக் கற்பழிப்பது உண்டு என்றும்  தன் அக்காவையும் கற்பழித்திருக்கிறார் என்றும் , எப்படியோ தப்பித்து காவல் நிலையத்தை அணுகி புகார் கொடுத்ததாகவும் கூறி இருந்தனர். இரண்டு பெண்களுடையவும் அவர்களது தாயுடையவையுமாக வாக்கு மூலங்கள் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் பதிவாக்கப் பட்டது அதன்படி குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்யப் பட்டது.
வழக்கின் போது பெண்களின் தாய் கொடுக்கப்பட்ட எல்லாப் புகார்களையும் மறுத்தார். மூத்த பெண்ணுக்கும் அவர்களது தந்தைக்கும் சிற்சில சின்ன மனஸ்தாபங்களும் சண்டைகளும் இருந்ததென்றும் கூறினார். வழக்கின் போது இரண்டாவது மகளும் தாய் சொன்னதையே கூறினார். தந்தையிடம் ஏற்பட்ட சண்டை ,மனஸ்தாபத்தில் அக்கா காவல் நிலையத்துக்குப் போனபோது தானும் கூடப் போனதாகவும் அங்கு ஒரு NGO வில் இருந்த ஒரு பெண்மணியைக் கண்டதாகவும் அவர் ஆலோசனைப் படி தந்தைக்கு எதிராகப் புகார் கொடுத்ததாகவும் சொன்னார். தந்தை தன்னைக் கடிந்து கொண்டதாகத் தமக்கையும் கூறினார்.
வழக்கு விசாரணையில் தள்ளி வைக்கப் பட்டது
பத்திரிக்கையில் வந்த ஒரு inocuous செய்தியாக இல்லாமல் தற்காலப் பெண்கள் நினைத்தால் யாரையும் குற்றம் சாட்டலாம் என்றும் தோன்றுகிறது. உண்மையிலேயே தந்தை தவறாக நடந்து கொண்டாரா.? நடந்தது என்ன.?நிஜ நிகழ்ச்சி ஒரு நல்ல கற்பனைக் கதைக்கு வழி வகுக்கலாம் என்றே தோன்றுகிறது. வாசகர்கள் கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன் 
இந்தப் பதிவை வெளியிடும் முன் இன்றைய (16-06-2014) ஆங்கில ஹிந்துவில்(பெங்களூர் பதிப்பு )இன்னுமொரு செய்தி மனசை வெகுவாக பாதித்தது.முன்பொரு முறை இங்கிலாந்தில்  இந்தியர் ஒருவர் தன் பெண்ணையே ( குழந்தையையே ) பலாத்காரம் செய்து , மனைவி போலீசில் புகார் கொடுத்தபோது வழக்குக்காக ரிமாண்டில் வைக்கப் பட்டிருந்தபோது தற்கொலை செய்துகொண்டதை கதையல்ல நிஜம் என்று பதிவெழுதி இருந்தேன் தான் பெற்ற பெண்ணையே பலாத்த்காரம் செய்பவரின் மனம் எத்தனை வக்கிரமாக இருக்கவேண்டும். இன்றைய செய்தியில் தந்தை ஒருவன் தன் 18 வயது பெண்ணை கடந்த மூன்று மாதங்களாகத் தொடர்ந்து பலவந்தப் படுத்திப் புணர்ந்து வந்ததும் அவளை மிரட்டி வெளியே சொல்லாமல் இருக்க வற்புறுத்தியதும் கடைசியில் குடி போதையில் பலர் முன்னே பலாத்காரம் செய்ய முயன்றபோது அகப்பட்டுக் கொண்டதாகவும் செய்தி. 
நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்.? நான் என் முந்தைய பதிவில் முதன்மையாகக் குறிப்பிட்டிருந்த நன்மொழிப் படி நடப்பதில்லை என்பது தெளிவாகிறது .      


32 comments:

 1. வணக்கம்
  ஐயா.

  இந்த தீர்ப்பு மிகவும் சிகலுக்குரியது. முதல் கூறியவை யாவற்றையும் பெண் வாபஸ்பெற்றுள்ளார் இதில் இருந்து என்னுடைய கருத்தாக.

  பெண்கள் நினைத்தால் இப்படியான பிரச்சினைகளில் எதையும் சாதிக்க முடியும் ஐயா.மற்ற உறவுகளின் பதிலை எதிர்பார்க்கிறேன்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. பல பெண்களும் பழிவாங்கவென்றே குற்றம் சுமத்துகிறார்கள் என்று தோன்றினாலும் உண்மையாக நடப்பதும் இருக்கிறது தான். ஆகவே தீர விசாரிக்க வேண்டும். இதற்கெல்லாம் காரணம் நீதி போதனை வகுப்புகளை எடுத்ததும், சினிமா, தொலைக்காட்சித் தொடர்கள், வேகமாய்ப் பரவி வரும் அந்நியக் கலாசாரம், பெரியோரை அவமதித்தல், ஆசிரியர்களை அவமதித்தல் போன்றவையும் காரணம்.

  ReplyDelete
 3. ஆசிரியர்களும் பயத்தினால் மாணவர்களைக் கண்டிப்பதில்லை. மாணவர்களைக் கண்டிப்பது கூடாது என்றிருப்பது மட்டுமில்லை; ஆசிரியர்கள் உயிரைக் கூட நிஜம்மாவே மாணவர்கள் எடுத்துவிடுகின்றனர். சென்னையில் ஆசிரியை ஒருவரும், தூத்துக்குடியில் கல்லூரி பிரின்சிபால் ஒருவரும் மாணவர்களால் கொல்லப்பட்டதை மறக்க முடியுமா? :((((

  ReplyDelete
 4. புகார் கொடுக்கும்போது ஒன்று சொல்வதும், பின்னர் ஒன்று சொல்வதுமாக இருந்தால் என்ன செய்ய முடியும்? ஆனால் இது மாதிரி நடப்பதில்லை என்றும் சொல்ல முடியாது. தினசரி செய்திகளில் அவ்வப்போது பார்க்கும் செய்திதான். இதைவிடக் கொடுமை 2 வயது மூன்று வயதுக் குழந்தைகளை எப்படி வீண் செய்கிறார்கள் என்பது தாங்க முடியாத அதிர்ச்சி. மிருகங்கள் என்றுதான் தோன்றும்.

  ReplyDelete
 5. இதில் என்ன இருக்கிறது?, சுய கட்டுப்பாடு வேண்டும்... மற்ற விஷயங்களில் கெடாததா என்றெல்லாம் பேசினாலும்,வக்கிர கருத்து உள்ள திரைப்படங்கள், பள்ளிகளில் மாரல் வகுப்புகளை நிறுத்தியது... வீட்டு ஹாலுக்கே வரும் டிவி நிகழ்ச்சிகள், இணையம்...

  ReplyDelete
 6. அன்புள்ள ஐயா

  வணககம். இது அடிப்படையிலே விளைந்திருக்கிற அருவருப்பான வக்ரபுத்தி. பாலியல் வன்முறைகள் என்பன தொடர்ந்து செய்தித்தாள்களில் வந்துகொண்டிருந்தாலும் சமீபமாக பெற்ற மகளையே பாலியல் வன்முறைக்கு ஆளாக்கும்( இப்படி எழுதவே மனது கூசுகிறது ஐயா) நிலைமைக்கு அழுத்தமான சொல்லமுடியாத காரணம் இருக்கிறது. தவறான பிறப்பால் பிறந்தவனும் வளர்க்கப்பட்டவனும்தான் இதுபோன்ற காரியஙகளை அம்மாவிறகும் அக்காவிற்கும் மகளுக்கும் பேதம் தெரியாமல் செய்யமுடியும். இதற்குப்பின்னால இருக்கும் உளவியலும் பயங்கரமானவை. பெண்ணைப் பார்க்கிற பார்வையே புணர்தலுக்கு என்கிற ஒரு மனோபாவம் சிலசமயங்களில் காதல் என்கிற தற்காப்பைப் போர்த்திக்கொள்கிறது. உடல் ரீதியான ஒரு நலமான புரிதல் நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கப்படவேண்டும். நிச்சயமாக ஏதோவொரு நெருக்கடியே தன் தந்தையைக் காட்டிக்கொடுக்காமல் செய்ய வைத்திருக்கிறது அந்தப் பெண்களை.
  ஐயா இதனை மேலும் விவாதிப்பதோடு மனத்துக்குள் நெருப்பை விழுங்கியதுபோல வேதனைப்படத்தான் முடியும். இதனைத் தொடர்ந்து விவாதிக்கவே நெஞ்சு நடுங்குகிறது.எப்படி தான் கொஞ்சி சீராட்டி வளர்த்த மகளையே... நம்முடைய பண்பாடு என்னவாயிற்று, நாகரிகம் உலகமயமாக்கல் பரவலான கைப்பேசிகள் ஊடகங்களின் பரவலாக்கங்கள் என இவையாவம என்ன சொல்ல வருகின்றன? தவிரவும் பெட்டிகளை அடைதததுபோல புரவுசிங் மையங்களில் கேம் விளையாடப் பிள்ளைகள் போயிருக்கான். சொன்னா கேக்குறானா? என்கிற ஒரு அலுப்பான கேள்வியோடு கழன்றுவிடும் பெற்றோர்கள் தொடர்ந்து பிள்ளைகளைப் பின்தொடரகிறார்களா அவன் என்ன பார்க்கிறான் என்று? நான் வேலைக்கு செல்லும் அதிகாலையில் ரயில்வே நிலையத்திற்கு அருகில் உள்ள சைக்கிள் ஸ்டாண்ட் அருகே டாஸ்மாக் உள்ளது. சில சமயம் யூனிபார்ம் அணிந்த பள்ளி மாணவர்கள் நிற்கிறார்கள் குடிப்பதற்கு போதாக்குறைக்கு சில திரைப்படஙக்ள் வன்முறையை நியாயமான வேதம்போலக் கற்பித்துக் காட்சிப்படுத்துகின்றன.. அழுது அழுது புரண்டாலும் மாண்டார் மீண்டு வருவரோ என்பதுபோல இதனுடைய வேரைக் கணடுபிடித்து அழிப்பதுதான் ஒரு தீர்விற்கான பாதையைத் திறந்து வைக்கும் ஐயா. சிந்திப்போம் தொடர்ந்து.

  ReplyDelete

 7. அந்த பெண்கள் உண்மையிலே பொய் குற்றச்சாட்டு கொடுத்திருந்தால் ஒருவகையில் மகிழ்ச்சி. மற்றொரு வகையில் வருத்தம். தந்தையே அந்த கொடும்பாதகச் செயலை செய்யவில்லை என்பதால் மகிழ்ச்சி. அதே நேரத்தில் பெற்ற தந்தை மேலேயே இந்த குற்றத்தை சுமத்துகிற அளவுக்கு அந்த பெண்கள் போய்விட்டார்களே என்பதால் வருத்தம். குற்றச்சாட்டு உண்மையாய் இருந்தால் நீங்கள் எழுதியுள்ளபடி நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

  ReplyDelete
 8. இதுபோன்றவற்றை விவாதப் பொருளாக எடுக்குமளவு இன்றைய நாம் வெட்கப்படவேண்டியுள்ளது. ஒரு புறம் தொழில்நுட்பம், உலகமயமாக்கல் என்ற நிலையில் போய்க்கொண்டிருக்கிறோம். மறுபுறம் கற்காலத்தை நோக்கிப் போகிறோமோ என்ற நினைத்துப் பார்க்குமளவுப் போகிறோம். மனதளவில் இன்னும் நாம் முன்னேற வேண்டியுள்ளது. இவை போன்ற அழுக்குகளிலிருந்து நாம் வெளிவர வேண்டியுள்ளது.

  ReplyDelete

 9. @ கீதா சாம்பசிவம்
  செய்திகளில் சொல்வனவற்றை வைத்து எதையும் தீர்மானிக்க முடியவில்லைஒன்று பெண்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சட்ட அனுகூலங்களைத் தவறாய் பயன் படுத்துகின்றனர்.இல்லை ஒரேயடியாக செயலிழந்து நிற்கின்றனர். வால்யூ சிஸ்டெம் அறவே காணாமல் போய்க் கொண்டிருக்கிறது என்பதே நிஜம் வருகைக்கு நன்றி.

  ReplyDelete

 10. @ ஸ்ரீராம்
  காரண காரியங்கள் குறித்து நிறையவே பேசலாம். ஒரே நாளில் மனித குணங்கள் மாறுவதில்லை. ஒரு வேளை காலங்காலமாய் நிகழ்ந்து வரும் நடப்புகள் இப்போது வெளிச்சத்துக்கு கொண்டு வரப் படுகிறதோ.? வருகைக்கு நன்றி

  ReplyDelete

 11. @ ஹரணி
  ஐயா வணக்கம் மனசை கனக்க வைக்கும் இம்மாதிரி செய்திகள் பத்திரிக்கைகளில் தினமும் வருகின்றன, நான் இதைப் பதிவாய் எழுதி இருக்கக் கூடாதோ.? இருந்தாலும் நல்லது கெட்டது பாவம் புண்ணியம் என்றெல்லாம் போதிக்கும் வாழ்வியல்முறைகள் பொய்த்துவிட்டனவா என்றே தோன்றுகிறது. குற்றத்துக்கு தண்டனை அதிகபட்சமாக கொடுக்கப் படுவது தெரிந்தும் நிகழ்வுகள் அதிகமாகிக்கொண்டேதான். போகின்றனவா இல்லை இவை இப்போது வெளிச்சத்துக்கு வருகின்றனவா?சக்தி குறைந்தவர் மீதும் நம்மை எதிர்க்க முடியாதவர் மீதும் பலப்பிரயோகங்கள் காலங்காலமாய் நடந்து வருபவையே. நீங்கள் சொல்வது போல் விவாதிப்பதே நெருப்பை முழுங்குவதுபோல் இருக்கிறதுதான்.காரணங்கள் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்பெரும்பாலான இம்மாதிரியான நிகழ்வுகள் மக்கள் தங்கள் சுய நினைவிழந்து குடிபோதையில் இருக்கும்போதுதான் நடைபெறுகிறது. ஆகவே மக்கள் சக்தி ஒன்று திரண்டு குடியை ஒழிக்கப் போராட வேண்டும். ஆனால் அதுதானே அரசாங்கக் கஜானாவை நிரப்புகிறது. லேசுப்பட்ட காரியம் அல்ல. பண்பாடு நாகரிகம் எல்லாம் போதையில் இருப்பவர் மனசில் இடம் பெறாது.எதையோ எழுதி விட்டேனே தவிர இதை வெளிச்சம் போட்டுக்காட்ட வேண்டுமா என்னும் சந்தேகமும் கூடவே எழுகிறது. பல சிந்தனையைத் தூண்டும் கருத்துப் பகிர்வுக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 12. @ வே.நடனசபாபதி
  ஐயா, பெண்கள் பாதுகாப்பிற்காக இயற்றப்ப்டும் சட்டங்கள் துஷ்பிரயோகத்துக்கும் வாய்ப்பிருக்கிறது என்பது குறித்தே முதல் நிகழ்வு பதியப் பட்டது. ஆனால் மனிதனின் வக்கிர குணங்கள் சட்டத்தால் குறைக்கமுடியாது. வேரைக்கண்டு அழிக்க வேண்டும் வருகைக்கு நன்றி

  ReplyDelete

 13. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  பலருக்கும் உள்ள ஆதங்கமே. வருகைக்கு நன்றி

  ReplyDelete

 14. @ திண்டுக்கல் தனபாலன்
  உங்கள் பின்னூட்டம் உள்ளக் கொந்தளிப்பை வெளிப்படுத்துகிறது வருகைக்கு நன்றி

  ReplyDelete

 15. @ ரூபன்
  சிக்கல்கள் அதிகம் நண்பரே. பண்பாடு நாகரிகம் என்பதெல்லாம்வெறும் ஏட்டளவில்தான் இருக்கிறதோ எனும் ஐயம் எழுகிறது. வருகைக்கு நன்றி பெண்கள் மட்டும் என்ன செய்து விடமுடியும் THEY ARE THE WEAKER SEX.

  ReplyDelete
 16. கலியுகம் என்பார்களே அது வந்துவிட்டதுபோலும். ஆனால் தகப்பனே மகளைக் கற்பழிக்கும் நிகழ்வுகள் உலகம் முழுவதும் நடந்துக்கொண்டுதான் உள்ளன. ஜெஃப்ரி ஆர்ச்சரின் கதைகளில் ஒன்றில் அமெரிக்காவின் பிரபல சர்ஜனாக வரும் ஒரு கதாபாத்திரம் தன் மகளையே நெடுகாலமாக கற்பழித்து வந்திருப்பார். இது ஒரு உண்மையான நபரின் நிழல்தான் என்று அப்போது பேசப்பட்டது.

  ஆனால் தந்தை மீதுள்ள கோபத்தை மனதில் வைத்து எந்த பெண்ணாவது இப்படியொரு புகாரை சொல்வாரா என்பதைத்தான் நம்ப முடியவில்லை.

  ReplyDelete
 17. இப்படிப்பட்ட ஒரு கருப்பொருளை வைத்து எழுதும் நிலைக்கு நம் கலாச்சாரமும், பண்பாடும் மலிந்து விட்டதே!

  ReplyDelete
 18. இப்படிப்பட்ட ஒரு கருப்பொருளை வைத்து எழுதும் நிலைக்கு நம் கலாச்சாரமும், பண்பாடும் மலிந்து விட்டதே!

  ReplyDelete

 19. @ டி.பி.ஆர் ஜோசப்
  இதில் என் கற்பனை ஏதுமில்லை. செய்திகளின் அடிப்படையே பதிவு. நம்பமுடியாததாக இருந்ததால்தான் பதிவாயிற்று.வருகைக்கு நன்றி

  ReplyDelete

 20. @ ராஜி
  இதை எழுதியது பிழை என்கிறீர்களா. கருப்பொருள் என்னுடைய தல்ல. கலாச்சாரம் பண்பாடு எல்லாம் சீரழிவதைக் காணும்போது ஏற்பட்ட ஆதங்கமே பதிவு. வருகைக்கு நன்றி

  ReplyDelete
 21. வாழ்வு விசித்திரமானது.

  ReplyDelete
 22. //அங்கு ஒரு NGO வில் இருந்த ஒரு பெண்மணியைக் கண்டதாகவும் அவர் ஆலோசனைப் படி தந்தைக்கு எதிராகப் புகார் கொடுத்ததாகவும் சொன்னார்.//
  அமெரிக்காவில் இதே போல ஒரு வழக்கைப் பற்றி தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன் விளக்கமாக காட்டினார்கள்.

  ஒரு பெண் சாதாரண பிரச்சினைக்கைக்காக மனவியல் நிபுணரை சந்தித்து வந்திருக்கிறார். இறுதியாக எந்த தொந்தரவும் இல்லை என்று சிகிச்சை முடியவேண்டிய தருணத்தில், நிபுணர் "வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?" என்று கேட்டபோது, தம் பெற்றோர்கள் மீது கற்பனையான பல புகார்களை தர ஆரம்பித்தார்.

  வழக்கு விசாரணைக்கு வந்து ஆய்வில் புகார்களில் சிறிதளவும் உண்மை இல்லை என்று தெரியவந்தது. நீதிபதி இத்தகைய ”சிகிச்சை”களுக்கு கடும் கண்டனம் தெறிவித்தபோதும் குடும்பத்தினர் அதுவரை அடைந்த துன்பத்திற்கு அளவில்லை.
  தேடியதில் இதேப்போல இங்கிலாந்தில் நடந்த வழக்கைப் பற்றி கீழ்கண்ட விவரம் கிடைத்தது.

  ”ஞாபக மீட்பு” சிகிச்சைக்குப்பின் தந்தை வன்புணர்வு செய்ததாக தவறான புகார் அளித்த பெண்ணிற்கு 20,000 பவுண்டுகள் நட்டஈடு:
  http://www.dailymail.co.uk/news/article-488623/20-000-payout-woman-falsely-accused-father-rape-recovered-memory-therapy.html

  இந்த வழக்கும் அதேபோல் இருக்கலாம் என்று மனதைத் தேற்றிக்கொள்ளலாம்.

  ReplyDelete

 23. @ அப்பாதுரை
  @ குலவுசனப்பிரியன்
  திரு குலவுசனப்பிரியன் அவர்களின்பின்னூட்டமும் அவர் கொடுத்திருக்கும் லிங்கின் பதிவும்படித்த பிறகு அப்பாதுரையின் பின்னூட்டமே எனக்கும் தோன்றியது
  முதல் வருகைகும் கருத்துப் பதிவுக்கும் நன்றி குலவுசனப்பிரியன். பெயருக்குக் காரணம் ஏதாவதுண்டா.நன்றி அப்பாதுரை.

  ReplyDelete
 24. தாய் துணிவுடன் இருந்தால் இதுபோன்ற கொடுமைகளை குறைக்க முடியும். இஹ்தகைய வக்கிரக் கணவனை காப்பாற்ற முனைவது அறிவீனம்

  ReplyDelete
 25. வக்கிரங்கள் மலிந்து விட்டன...... :((((((

  ReplyDelete
 26. ஐயா, இந்தச் செய்தி உண்மையா, பொய்யா என்பதை விட, தற்போது பெண்களுக்குச் சாதகமாக சட்டம், புகார் கொடுக்க பெண்கள் காவல் நிலையங்கள் இருப்பதால், பெரும்பான்மையான பெண்கள் அதனைச் சங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதில் ஐயமில்லை!

  கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்ற காலம் எல்லாம் போய் தீர விசாரிப்பதும் பொய் என்று மாறிவிட்ட காலமாகத்தான் தோன்றுகின்றது!

  இதற்கெல்லாம் காரணம் நமது வாழ்வியல் முறை மாறிப் போனதும் ஒரு காரணம்! நீதி போதனைகள் என்பதே இல்லாமல் போய்விட்டதே!

  ஒழுக்கம் கெட்ட, புத்தி கெட்ட, சிந்திக்கும் திறன் இழந்த, முதிர்ந்த வாழ்க்கை தொலை நோக்குப் பார்வை இல்லாத ஒரு சமுதாயமாக மாறி வருகின்றாதோ என்ற சந்தேகமும் அவ்வப்போது எழத்தான் செய்கின்றாது!

  தந்தைகள் இது போன்ற வக்கிரமம் செய்து நிரூபணம் ஆனால் அவர்களைத் தூக்கில்தான் தொங்க விட வேண்டும்!

  ReplyDelete

 27. @ டி.என். முரளிதரன்
  தாய் என்னும் இடத்தில் பெண்கள் என்று இருந்திருக்கலாமோ? வருகைக்கு நன்றி.

  ReplyDelete

 28. @ வெங்கட் நாகராஜ்
  /வக்கிரங்கள் மலிந்து விட்டன/ உண்மை. வருகைக்கு நன்றி சார்..

  ReplyDelete

 29. @ துளசிதரன் தில்லையகத்து.
  வாழ்வியல் முறைகள் மாறிப் போய் விட்டதும் ஒரு காரணம். வாழ்ந்து காட்ட வேண்டிய பெற்றோர்கள் இது காலத்தின் கோலம் என்று விட்டு விடுவதும் ஒரு காரணமோ. வருகைக்கு நன்றி

  ReplyDelete
 30. மனிதன் மனிதனாக் இல்லாமல் இருக்கும் போது ஏற்படும் தவறு.
  நல்ல பழக்கங்கள், இறைநம்பிக்கை, இவை மனிதனை மிருகமாவதிலிருந்து நல்வழி படுத்தும். சமூகம் சீர்கேடுகள் கழையப்பட வேண்டும்.

  ReplyDelete