ஞாயிறு, 30 அக்டோபர், 2016

தீபாவளி கொண்டாட்டம்


                                                தீபாவளி எங்கள் வீட்டில்
                                                  ----------------------------------


பண்டிகைகள் கொண்டாடவே; ஆயிரம் காரணங்கள்
புராண ஆதாரங்கள் காரணம் பல காட்டினாலும்
பண்டிகைகள் கொண்டாடவே; மகிழ்வாய் இருக்கவே.
நரகாசுரன் இறக்கும்போது கேட்ட வரமோ, ராமனின்
வனவாசம் முடிந்து திரும்பும் நாளோ, சக்தியின்
கேதாரகௌரி விரதம் பூர்த்தியாகிப் பின்னர்
அர்தநாரீஸ்வரியான (ரரான) தினமோ, ஏதானால் என்ன ?
தீபாவளிப் பண்டிகை நாள் நன்று கொண்டாடுவோம்.
அகில இந்தியாவிலும் , ஏன் உலகின் பிற பாகங்களிலும்கூட
தீபாவளி கொண்டாடப் படுகிறது. சீக்கியர் பொற்கோயில்
கட்டத் துவங்கிய தினமென்றும்,  சமணர் மகாவீரர் நிர்வாணம்
அடைந்த தினமென்றும், கொண்டாட்டம் நன்று கொண்டாடுவோம்
ஆண்டில் ஒரு நாள் உற்றமும் சுற்றமும் கூடி மகிழவும்
அகத்தின் அகந்தை, பொறாமை, அறியாமை, இருள் நீக்கி
தீப ஆவளியில்  ஒளிவரிசையில் வெளிச்சம் பெற
தீபாவளிப் பண்டிகை நன்று ;கொண்டாடுவோம்.
உறவுகள் கூடவும், கோடி உடுத்தி மகிழவும், பெரியோர்
ஆசியில் நனையவும், தீபாவளி நன்று கொண்டாடுவோம்
வேண்டாதன விட்டொழிப்பதை தலை முழுகுதல் எனக் கூறுவர்
கங்கா ஸ்நானமும் ஒரு தலை முழுகலே நம்மில் இருக்கும்
“நான்ஐ பட்டாசு வாணங்களில் கொளுத்தித் தலைமுழுகி
இனிப்பதனைப் பகிர்ந்துண்டு தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவோம் 

நான் 2013-ஆம் ஆண்டு எழுதி இருந்த பதிவு. இப்போது மீள் பதிவாக. இந்த ஆண்டு தீபாவளிக்கு என் மூத்த மகன் மனைவியுடன் சென்னையில் இருந்து வந்திருந்தான்  இளையமகன் அவன் மனைவி மக்களுடன் மாமனார் மாமியாருடனும்  வந்திருந்தான் என்  மூத்த பேரன் என்னுடனேயே இங்கு இருக்கிறான்  இவ்வருடம் தீபாவளி நான் விரும்பியப்சடியே கொண்டாடப்பட்டது இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால சுப்பிரமணியா என்றுஎன்னையே கேட்டுக் கொண்டேன்இன்னும் என்னவெல்லாமோ எழுதிக் கொண்டு போகலாம்  அது சுய தம்பட்டமாய்விடும்  தீபாவளி அன்று  என் வீட்டில் எடுத்த சில புகைப்படங்கள் இங்கே
தீபாவளி அன்று என் வீட்டில்
மருமகள்களுடன்
மகன்களும் பேரன்களும்
 
ன் முமள் பேரன் பத்ி
 
ன்குடன்


தீபாவளிக்கு இனிப்பு இல்லாமலா .? என் மனைவி பேசின் லாடு செய்திருந்தாள் என் மூத்தமகன் லட்டுவும் அதிரசமும் வாங்கி வந்திருந்தான்  இளைய மகன் ஜிலேபி வாங்கி வந்திருந்தான் மிக்ஸ்சர் முருக்கு  போன்றவைகளும்  வாங்கி வரப் பட்டிருந்தன.  பண்டிகைக்காக புத்தாடைகள் நான் வாங்கிக் கொடுத்திருந்தேன்  ஆனால் இந்த ஆண்டு பட்டாசுகளும் வாணங்களும் வாங்கவில்லை. அதில் யாருக்கும் ஈடுபாடு இருக்கவில்லை.  மேலும் அவரவர் வேலை பார்க்க உடன் திரும்பவேண்டிய கட்டாயம்

 நேற்று தீபாவளி ஆனதால் பதிவு பக்கம் வர முடியவில்லை. ஆண்டுதோறும்  இம்மாதிரிக் கூடி இருந்திட  கொடுப்பினை இருக்கிறதோ தெரியவில்லை.  எல்லா பதிவுலலக வாசகர்களுக்கும்  எங்கள் தாமதமான தீபாவளி நல் வாழ்த்துகள்  

























...


        

          







    









வியாழன், 27 அக்டோபர், 2016

கௌரவ ஆணவக் கொலைகளின் வேர்கள் எங்கே ?


                      கௌரவ ஆணவக் கொலைகளின் வேர்கள் எங்கே?
                      ---------------------------------------------------------------------


முதலில் ஒரு சில (கொலைகளை) கதைகளைப் பார்ப்போம்

பாம்பு கடித்து இறந்த ஒரு பிராமணப்பெண்ணுக்கு  தன்  மந்திர சக்தியால் உயிர் கொடுத்து உயிர்ப்பிக்கிறார் தாழ்த்தப்பட்ட சாதிக்காரரான சிதம்பரம்   அந்தப் பெண்விரும்பியதால் அவளையே திருமணம் செய்து கொள்கிறார் இது ஊருக்குள் தெரிய வருகிறது அவர் கொல்லப்படுகிறார் ஊர் நிர்வாகிகளுக்கு இதில் பங்குண்டு

குறுநிலத்தலைவனான சின்னான் ஒரு பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் மாபெரும் வீரர். உறவினர்கள் இவருக்கு பருவமடையாத உறவுக்காரப் பெண்ணை மணம் செய்து வைக்கின்றனர்  இவர் மறுத்தபோது இந்தப்பெண் பருவமடையும்  வரை ஒரு பெண்ணை வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளலாம் இழிகுலம் ஆனாலும் பரவாயில்லை. அதுதான் வழக்கம் என்கின்றனர் சின்னான்  ஒடுக்கப் பட்ட பெண் ஒருத்தியுடன்   தொடர்பு வைத்துக் கொள்கிறார் மனைவி பருவமடைந்த செய்தி வருகிறதுஆனால் வைப்பாட்டியே தன் மனைவி என்னும்  சின்னானை ஊர் கூடிகொல்லத்திட்டமிடுகிறது அரசரும் அனுமதி அளிக்கிறார்உறவினர் உதவியுடன்  சின்னான் கொல்லப்படுகிறார்

முத்துப்பட்டன் ஒரு அந்தணர் ஒடுக்கப்பட்ட பகடை குலப் பெண்ணை மணக்கிறார் தன்  சகோதரர்களிடம் கூறிய போது இவரை பாதாளச்  சிறையில் அடைக்கின்றனர். அங்கிருந்து தப்பிய பட்டன் அந்தப்பெண்ணின் தந்தையிடம் விஷயத்தைச் சொல்ல அவர் அந்தண சாதி அடையாளங்களை ஒதுக்கி விட்டு  பெண்ணின் சாதிக்கு மாறச் சொல்கிறார் சாதியைத்துறந்து அப்பெண்ணை மணந்த முத்துபட்டன் கொல்லப்படுகிறார் முற்படுத்தப்பட்ட சாதியிலிருந்து கிடைக்கும்  சலுகைக்காக சாதி மாறுதல் அன்றே நடந்திருக்கிறது

காத்தவராயன் கதை இதற்கு மாறானது. தாழ்த்தப்பட்ட சாதிக்காரரான் காத்தவராயன் அந்தணக் குலப் பெண்ணான ஆர்யமாலாவைக் காதலிக்கிறார் அதற்காகக் கழுவிலேற்றப்படுகிறார்

 இது போன்றகதைகள் விரவிகிடக்கின்றன கௌரவக் கொலைகள் அண்மைக்காலத்திய நிகழ்வுகள் அல்ல  இவற்றின்  வேர் நூறாண்டுகளுக்கும் முன்பானது
தென்  மாவட்டங்களில் நடக்கும் கணியன் கூத்து  வில்லுப்பாட்டு போன்ற நிகழ்வுகளில் இவை கதையாகசொல்லப்படுகிறதாம் டாக்டர் ஏ. கே பெருமாள் இம்மாதிரிக்  கதைகள் பலவற்றைச் சேகரித்திருக்கிறார்
 இவற்றுள் முக்கியமானவை சிதம்பர நாடார் கதை, தோட்டுக்காரி அம்மன்  கதை, பூலங்கொண்டாளம்மன்  கதை , காத்தவராயன் கதை மதுரை வீரன்  கதை, ஐவர் ராசாக்கள் கதை அனந்தாயி  கதை போன்றவை அச்சிலும்  வந்திருக்கிறதாம்இவற்றுக்கெல்லாம் ஒரே ஒற்றுமை திருமண மறுப்பால் நிகழ்த்தப்பட்ட கொலைகள் என்பதே
எல்லாக்கதைகளிலும் ஒரு பொதுத் தன்மை என்னவென்றால் சாதி மாறித் திருமணம்  செய்தவர்கள் எல்லாம் கொல்லப்பட்டு கயிலாயம்  செல்கின்றனர் சிவனிடம் வரம் வாங்குகின்றனர் பிறகு தன்னைக் கொன்றவர்களை பழி வாங்குகின்றனர் கொலை செய்த சாதியினர் தங்களால் கொல்லப்பட்டவரையே வழிபடுகின்றனர் என்பதும் ஒன்றாகும் கொல்பவர்களைத் தண்டிக்க சிவனே வரம் தருவதாக இருக்கிறது கயிலைச் சிவன்  இடத்தில் இப்போது நீதியும்  காவல்துறையும்  இருக்கின்றன கதைதான் இன்னும் முடிவுக்கு வரவில்லை

 இம்மாதிரிக் கொலை செய்வதை தீட்டுச் சடங்குக் கொலை என்றனர்  இதற்கு அனுமதியுமிருந்திருக்கிறது

இதை எல்லாம் படிக்கும்போது என்னால் நான்  முன்பு படித்திருந்த சில செய்திகளோடு முடிச்சுப் போடாமல் இருக்க முடியவில்லை
வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்  சில நாட்கள் முன்பு வர்ணாசிரம தர்மம்  என்னும்  பதிவை தெய்வத்தின் குரலிலிருந்து எடுத்தாண்ட விஷயங்கள் வைத்து எழுதி இருந்தேன்

”ஆண்டளிக்க முடியாத சமுதாயத்தை யார், எப்படிக் கட்டுப் பாட்டில் வைத்து நிர்வகிப்பது? இதற்காகத்தான் ஒவ்வொரு தொழிலைச் செய்யப் பரம்பரையாக ஒரு ஜாதி என்று பிரித்து தனித் தனிக் கட்டுகளாக வைத்தார்கள். இதிலிருக்கிற கட்டுக் கோப்பை யாரும் புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு வர்ணத்தினரும் சிறு கட்டுகளாக - ஜாதிகளாக - பிரிந்தார்கள். அவரவருக்கும் "ஜாதி நாட்டாண்மை" என்று ஒன்று இருந்தது. அந்தந்த நாட்டாண்மைக்காரக்கள் தங்கள் தங்கள் சமூகத்தினர் ஒழுங்கு தப்பினால் அவர்களைத் தண்டித்தார்கள். இப்போது சர்க்கார்கூடத்தான் ஜெயிலில் போட்டு சிக்ஷிக்கிறது. ஆனால் இது ஒன்றும் குற்றவாளிகள் நெஞ்சில் உறைப்பதில்லை. அதனால் குற்றங்கள் பாட்டுக்கு வளர்ந்துகொண்டேத்தான் இருக்கின்றன. நாட்டாண்மையில் கொடுத்த தண்டனையோ சுரீலென்று உறைத்ததால் ஜனங்கள் தப்புத் தண்டாவில் இறங்காமல், இந்த நூற்றாண்டின் ஆரம்பம் வரையில் கூடிய மட்டும் யோக்கியர்களாகவே இருந்து வந்தார்கள். அதுவரை போலீசுக்கும், மாஜிஸ்டிரேட் கோர்ட்டுக்கும் வேலை ரொம்பக் குறைச்சலாகவே இருந்தது.
 அதென்ன அப்படிப்பட்ட தண்டனையை நாட்டாண்மைக்காரர்கள் கொடுத்தார்கள் என்றால், ஜாதி ப்ரஷ்டம் என்பதுதான் அது. ஒரு சக்கிலியாக இருக்கட்டும், பரியாரி (நாவிதன்)யாக இருக்கட்டும் - எவராகத்தான் இருக்கட்டும் - இப்போது பிற்பட்ட (Backward) தாழ்த்தப்பட்ட (depressed) என்றெல்லாம் சொல்கிற எந்த ஜாதியினவராக இருந்தாலும் கூடத்தான் அவரவருக்கும் தன் ஜாதியை விட்டுத் தள்ளிவிடுவார்கள் என்றால், அதுவே சுரீலென்று மனதில் தைத்தது. அது தாங்க முடியாத பெரிய தண்டனை, மகத்தான அவமானம் என்று தோன்றியது. இதிலிருந்து என்ன தெரிகிறது? எந்த ஜாதியாரும் எந்த ஜாதியினரையும் மட்டம் தட்டி வைக்கவில்லை. அந்தந்த ஜாதியாரும் தங்கள் விவகாரங்களைப் பொருத்த மட்டில் தாங்களே ராஜா என்கிற பூரண திருப்தியோடு இருந்திருக்கிறார்கள் என்றுதானே தெரிகிறது? உசத்தி தாழ்த்தி அபிப்ராயங்கள் இருந்திருந்தால், தானாகவே பலவிதமான தாழ்வு மனப்பான்மைகள் (inferiority complex) உண்டாகித்தான் இருக்கும்”

ஜாதிப்ப்ரஷ்டத்தின் எக்ஸ்டென்ஷன் கொலைதானோ  அதுதான் சாதிகளைக் கட்டுக் கோப்பு குலையாமல் வைத்திருந்ததோ


 கௌரவக் கொலைகள் அல்லது ஆணவக் கொலைகள் என்பதன்  வேர் எங்கே என்று தேடும் போது மேலே குறிப்பிட்டிருந்ததுதான் நினைவுக்கு வந்தது

(த ஹிந்து பெங்களூர் ஆங்கிலப்பதிப்பில் திரு கே கோலப்பன் அவர்கள் எழுதி இருந்த கட்டுரையை வாசித்துத் தேடியபோது  கிடைத்த செய்திகளை வைத்து எழுதியது) 







 

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

என் கேள்விகென்ன பதில்


                             என் கேள்விக்கென்ன பதில்
                            -----------------------------------------


சிறுவயதில்  இருந்தே கேள்விகள் கேட்டுப் பழகி விட்டேன் பலரும் இக்கேள்விகளை பார்த்து அதிகப் பிரசங்கித்தனமாக இருக்கிறது என்றும் எண்ணலாம் இருந்தால் என்ன தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டில் என்பார்கள்நான்  கேள்விகள் கேட்பது தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்ளத்தான் எத்தனை கேள்விகள் எத்தனை முறை கேட்டாலும்  கிடைக்கப்படாத விடைகளும்  தெளிந்து கொள்ள முடியாத சந்தேகங்களும் இன்னும் இருக்கின்றன பல கேள்விகளுக்குப் பதிலாக நம்பிக்கை சார்ந்த விஷயங்களாகவே முன்  வைக்கப்படுகிறதுஎதற்கும் ஒரு சாங்க்டிடி வேண்டும் அல்லவா. நான் யாருடைய நம்பிக்கைகளையும்  கேள்வி கேட்கவில்லை. மனம் ஒப்பும் படியாக யாராவது பதில் தருகிறார்களா  என்பதே என் தேடல்

சர்வக்ஞ எம்பவனு (G)கர்வதி-இந்த ஆதவனே
சர்வரொல்லு ஒந்து ஒந்து நுடி கலிது
வித்யேய பர்வதவே ஆதா சர்வக்ஞா..!

சர்வக்ஞா என்பவ்ன் கர்வம் கொண்டவனே
ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்றாகக் கற்று
அறிவில் மலைபோல் விளங்கினான்

விளக்கம்:-சர்வக்ஞா என்பவன் உன்னைப் போல் ஒருவனே என்றாலும் 
ஒவ்வொருவனின் வார்த்தையிலும் ஞானம் பெற்று மலை போல் விளங்கினான் ( சர்வக்ஞா = எல்லாம் அறிந்தவன் )

 சர்வக்ஞா என்பவர் கன்னட உலகில் திருவள்ளுவர் போன்றவர்
 நான் என்னை சர்வக்ஞா என்று சொல்லிக் கொள்ளவில்லை  இருந்தாலும்  ஒவ்வொருவரிடமும் கற்க விரும்புபவன் 
 
சாஸ்திரங்கள் என்று கூறப்படுபவை யாவை  சில சம்பிரதாயப் பழக்கங்களை சாஸ்திரம்  என்று கூறி முடிவு செய்வது சரியா இவற்றுக்கு ஏதாவது சாங்க்டிடி இருக்கிறதா முன்னோர்கள் சொல்லிப் போனது என்னும் பதில் திருப்தி தருவதாயில்லை சாத்திரம் என்பது சில கொள்கைகளை விளக்கும்  நூல் என்னும்  பொருள் கொள்ளலாம் என்று தெரிகிறது அதன் படி மனு சாஸ்திரம் , சைவ சித்தாந்த சாஸ்திரம் . அர்த்த சாஸ்திரம்  வான சாஸ்திரம்  போன்றவற்றைக் கருத்தில் கொள்ளலாம் மற்றபடி சில பழக்க வழக்கங்களை சாஸ்திரம் எனும் பேரில் திணிக்கலாமா 

   சாத்திரங்கள்  பல தேடினேன் - அங்கு
       
சங்கையில்  லாதன  சங்கையாம் - பழங்
       
கோத்திரங்கள்  சொல்லு  மூடர்தம் - பொய்மைக்
       
கூடையி லுண்மை   கிடைக்குமோ ? -நெஞ்சில்
       
மாத்திர  மெந்த வகையிலும்  - சக
      
மாய  முணர்ந்திடல் வேண்டுமே - என்னும்
      
ஆத்திர  நின்ற  நிதனிடை- நித்தம்
      
ஆயிரம்  தொல்லைகள்  சூழ்ந்தன. (பாரதியார் )


ஆலயங்களில் அந்தக் காலத்தில் மின்சாரம் இல்லாத காலத்தில் விளக்கேற்றி அந்த ஒளியில் இறைவனின்  உருவை மானசீகமாகக் கண்டார்கள் அது காலத்துக்கு ஏற்றது. ஆனால் இன்றும்  கோவில்களில் கர்ப்பக் கிரகத்தை இருட்டில் வைத்து தீப ஒளியில் ஆண்டவனின்  உருவை தரிசிக்கச் சொல்வது சரியா எங்கும் நிறைந்திருப்பதாகக் கூறப்படும் தெய்வங்களுக்கு உருவம் கொடுத்ததே நாம்தான் அப்படி இருக்க எந்த ஒளியில் தரிசித்தால் என்ன என்னும் பதிலும் எனக்குள் எழுகிறது ஆண்டவனை உருவமில்லாமல் வழிபடும் ஞானம் நம்மில் அநேகருக்கு இல்லை. அவர்களுக்காவது அந்த உருவம் சரியாகத் தெரிய வேண்டாமா நான் சுவாமி சின்மயாநந்தாவின்  பிரசங்கங்களைக் கேட்டிருக்கிறேன்  அவர் சொல்வார் எத்தனையோ இடையூறுகளுக்கிடையே திருமலை சென்று வேங்கடவனை வணங்க முற்படும்  பலரும் அவன்  திரு உருவை நெருங்கும் போது கண்களை மூடிக் கொண்டு அவனைப் பார்க்காமல் கோவிந்தா கோவிந்தா  என்றே கூறி கிடைக்கும்  சில விநாடிகளையும்  கோட்டை விடுகிறார்கள்.  இன்னொரு பதில் உள்ளத்தே இருக்கும்  ஆண்டவனைக் காண வெளிச்சம்  எதற்கு. . இருந்தாலும் பல முறை ஆலயங்களுக்குச் சென்று வந்தவனான  எனக்கு அரை குறை வெளிச்சத்தில் அவன் உருவை தரிசித்து உள்ளம் சார்ந்த பக்தியால்  நல்ல தரிசனம் ஆயிற்று என்று கூறுவோரையும்   பார்த்திருக்கிறேன் எப்படி என்றுதான் புரிவதில்லை செயற்கை ஒளியில் இறையுருவை தரிசிக்கும்போது ஒரு தேஜஸ் காண்போம்  செயற்கை ஒளியில் இல்லை என்றும் கருத்து இருக்கிறதுமேலும்  சிலருக்கு அவ்வாறு தரிசிக்கும் போது அந்த உருவம் நம்மைப் பார்த்து புன்னகை புரிவதுபோலும் தெரியலாம்  இதைத்தான் அறிவுக்கும் மனதுக்கும் நிகழும் போராட்டங்களில் அறிவு  தோற்கிறது என்கிறேன் When there is a conflict between the head and the heart most of the times the heart wins,
கருவறையில் அவனுருவை  தரிசிக்க  இயலாமல் இருட்டடிப்பு  செய்வது  ஏன்  என்பதுதான்.புரியவில்லை மேலும்  கர்ப்பக்கிரகத்துக்கு  வெளியே நந்தா விளக்குக்காக எண்ணெய்  கொடுப்பதும், ராகுகால  வழிபாடு  என்று எலுமிச்சையில்  எண்ணெய் ஊற்றி  தீபமேற்றுவது என்பதெல்லாம் அறிவு சார்ந்தவையோ அல்லவோ அவை நம் கலாச்சார  மிச்சங்கள்  என்றுதான்  ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இன்னொரு சமாச்சாரம் இந்த நிவேதனம் பற்றியதுஆண்டவனைப் பிரத்தியேகமாக வழிபாடு செய்ய என்றே பல தினங்கள் வைக்கப் பட்டிருக்கின்றன. கிருஷ்ணனாக விநாயகநாக, சிவனாக  அம்பிகையாக வழிபாட்டுக்கு என்பது போன்றவை நிவேதனம் என்றால் காண்பிப்பது என்னும்  பொருள் உண்டு
பல பண்டிகைகளில் கடவுளுக்கு உகந்தது இன்னது என்று படையல் செய்கிறார்கள்பிள்ளையாருக்கு கொழுக்கட்டையும் கிருஷ்ணனுக்கு முறுக்கு சீடை  என்றெல்லாம் வறையறுத்து இருக்கிறார்க்சள்  அதாவது
நிவேதனங்கள் என்பதை ஸ்டாண்டார்டைஸ்  செய்கிறார்கள் இன்ன கடவுளுக்கு இன்னதுதான் உகந்தது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒருவேளை அடியார்களுக்குப் பிடித்தது ஆண்டவனுக்குப் பிடிக்கும் என்னும் எண்ணமோ என்னவோ தவறில்லை கண்ணப்பன்  சபரி போன்றோர் செய்ததுபோல் . ஆனால் இவை ஆண்டவனின் சுவையை அடக்குவதுபோல் இருக்கிறதே இதற்கும் ஏதாவது சாஸ்திரம்  இருக்கிறதா நம்மால் முடிந்ததை ஆண்டவனுக்கும் காண்பிக்கிறோம்  என்பது புரிகிறது



             வான  சாஸ்திரத்தில் (இந்த  சாஸ்திரம்  அறிவியல் சார்ந்தது) நம்  முன்னோர்   முன்னோடிகள்  என்று நமக்குத்  தெரியும். ஆனால்  நாளின் ஒரு பகுதியை  ராகு  காலம்  என்று குறிப்பிட்டு  அது ஒவ்வொரு நாளும்  ஒவ்வொரு  நேரத்தில்  வரும் என்று கூறுவதன்  விளக்கம்  எனக்குத் தெரியவில்லைஅப்படியே  இருந்தாலும் இடத்துக்கு இடம் இந்த ராகு காலம் மாறவேண்டும்  அல்லவா... ராகு காலம்  ஒரு இடத்தின்  இருப்பை POSITION  சூரியனோடு ஒப்பிடுகையில்  இருப்பதை  பொறுத்துக்  கணிக்கப்  படுவதுதானே.. இந்தியாவில்  ஒரு இடத்தில்  ராகு காலம் இன்னொரு  இடத்தில்  வேறு நேரத்தில் அல்லவா இருக்கவேண்டும்.. இந்தியாவில் ,ஜப்பானில், அமெரிக்காவில்  ராகு காலங்கள்  ஒரே  நேரத்தில்  இருக்க  சாத்தியமில்லையே... இந்தியாவின்  ஸ்டாண்டர்ட்  டைம்  நாக்பூரின்  இருப்பிடத்தை  ஒட்டியே  கணிக்கப்படுகிறது. நாக்பூரின்  நேரமும் குவாஹத்தியின்  நேரமும் ஜம்முவின்  நேரமும்  நியாயப்படி வேறு வேறாக  இருந்தாலும் கணக்குக்காக  ஒன்றாக  ஏற்கப்பட்டுள்ளது. அதுபோல்தான்  ராகு  காலம் என்றால் அதனால் விளையப்படுவதாக   சொல்லப்படும்  நிகழ்வுகள் தவறாக இருக்க  வாய்ப்புகள்  அதிகம்தானே..ஒரு காலண்டர் கண்டேன் அதில் வெவ்வேறு இடங்களுக்கு  வெவ்வேறு  ராகுகாலங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன



விவேகாநந்தர் கடவுளைத்தேடினார்.உண்டா இல்லையா? என்று தெரிந்து.கொள்ள. இறுதியில் அவர் பார்த்தார். கடவுளை அல்ல. ராமகிருஷ்ணர் என்ற மனிதரை. ராமகிருஷ்ணர் வேதத்தில், பைபிளில், குரானில் தேடினார். சாரதாம்பாள் என்ற மனுஷி தான் தெரிந்தாள். இவர்கள் வரலாற்றில் சமீபத்தியவர்கள் என்பதால் குறிப்பிடுகிறேன்.வள்ளலாரும் அப்படியே.
மகரவிளக்கு பற்றிய சமீபத்தியசெய்தி அது தெவஸ்வம் ஊழியர்களால் ஏற்றப்படுகிறது என்ற அறிக்கை ஆனாலும் தேவர்கள் வந்து ஏற்றுவதாக நம்புபவர்கள் கோடியில் உள்ளனர்.
கடைசியாக நம்பிக்கை இருப்பவர்களையும் நான் நேசிக்கிறேன் ஏனென்றால்  LOVE IS GOD என்னும்  கொள்கையில் நம்பிக்கை உடையவன் நான்