Sunday, October 30, 2016

தீபாவளி கொண்டாட்டம்


                                                தீபாவளி எங்கள் வீட்டில்
                                                  ----------------------------------


பண்டிகைகள் கொண்டாடவே; ஆயிரம் காரணங்கள்
புராண ஆதாரங்கள் காரணம் பல காட்டினாலும்
பண்டிகைகள் கொண்டாடவே; மகிழ்வாய் இருக்கவே.
நரகாசுரன் இறக்கும்போது கேட்ட வரமோ, ராமனின்
வனவாசம் முடிந்து திரும்பும் நாளோ, சக்தியின்
கேதாரகௌரி விரதம் பூர்த்தியாகிப் பின்னர்
அர்தநாரீஸ்வரியான (ரரான) தினமோ, ஏதானால் என்ன ?
தீபாவளிப் பண்டிகை நாள் நன்று கொண்டாடுவோம்.
அகில இந்தியாவிலும் , ஏன் உலகின் பிற பாகங்களிலும்கூட
தீபாவளி கொண்டாடப் படுகிறது. சீக்கியர் பொற்கோயில்
கட்டத் துவங்கிய தினமென்றும்,  சமணர் மகாவீரர் நிர்வாணம்
அடைந்த தினமென்றும், கொண்டாட்டம் நன்று கொண்டாடுவோம்
ஆண்டில் ஒரு நாள் உற்றமும் சுற்றமும் கூடி மகிழவும்
அகத்தின் அகந்தை, பொறாமை, அறியாமை, இருள் நீக்கி
தீப ஆவளியில்  ஒளிவரிசையில் வெளிச்சம் பெற
தீபாவளிப் பண்டிகை நன்று ;கொண்டாடுவோம்.
உறவுகள் கூடவும், கோடி உடுத்தி மகிழவும், பெரியோர்
ஆசியில் நனையவும், தீபாவளி நன்று கொண்டாடுவோம்
வேண்டாதன விட்டொழிப்பதை தலை முழுகுதல் எனக் கூறுவர்
கங்கா ஸ்நானமும் ஒரு தலை முழுகலே நம்மில் இருக்கும்
“நான்ஐ பட்டாசு வாணங்களில் கொளுத்தித் தலைமுழுகி
இனிப்பதனைப் பகிர்ந்துண்டு தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவோம் 

நான் 2013-ஆம் ஆண்டு எழுதி இருந்த பதிவு. இப்போது மீள் பதிவாக. இந்த ஆண்டு தீபாவளிக்கு என் மூத்த மகன் மனைவியுடன் சென்னையில் இருந்து வந்திருந்தான்  இளையமகன் அவன் மனைவி மக்களுடன் மாமனார் மாமியாருடனும்  வந்திருந்தான் என்  மூத்த பேரன் என்னுடனேயே இங்கு இருக்கிறான்  இவ்வருடம் தீபாவளி நான் விரும்பியப்சடியே கொண்டாடப்பட்டது இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால சுப்பிரமணியா என்றுஎன்னையே கேட்டுக் கொண்டேன்இன்னும் என்னவெல்லாமோ எழுதிக் கொண்டு போகலாம்  அது சுய தம்பட்டமாய்விடும்  தீபாவளி அன்று  என் வீட்டில் எடுத்த சில புகைப்படங்கள் இங்கே
தீபாவளி அன்று என் வீட்டில்
மருமகள்களுடன்
மகன்களும் பேரன்களும்
 
ன் முமள் பேரன் பத்ி
 
ன்குடன்


தீபாவளிக்கு இனிப்பு இல்லாமலா .? என் மனைவி பேசின் லாடு செய்திருந்தாள் என் மூத்தமகன் லட்டுவும் அதிரசமும் வாங்கி வந்திருந்தான்  இளைய மகன் ஜிலேபி வாங்கி வந்திருந்தான் மிக்ஸ்சர் முருக்கு  போன்றவைகளும்  வாங்கி வரப் பட்டிருந்தன.  பண்டிகைக்காக புத்தாடைகள் நான் வாங்கிக் கொடுத்திருந்தேன்  ஆனால் இந்த ஆண்டு பட்டாசுகளும் வாணங்களும் வாங்கவில்லை. அதில் யாருக்கும் ஈடுபாடு இருக்கவில்லை.  மேலும் அவரவர் வேலை பார்க்க உடன் திரும்பவேண்டிய கட்டாயம்

 நேற்று தீபாவளி ஆனதால் பதிவு பக்கம் வர முடியவில்லை. ஆண்டுதோறும்  இம்மாதிரிக் கூடி இருந்திட  கொடுப்பினை இருக்கிறதோ தெரியவில்லை.  எல்லா பதிவுலலக வாசகர்களுக்கும்  எங்கள் தாமதமான தீபாவளி நல் வாழ்த்துகள்  

...


        

              

41 comments:

 1. அருமையாக சொன்னீர்கள் ஐயா மனிதனின் வேதனைகளை மறந்திடவாவது இப்படி பண்டிகை கொண்டாடலாம்.

  இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலசுப்பிரமணியா ?

  ஹாஹாஹா ஸூப்பர் வசனம்
  இனிய தீபாவளி வாழ்த்துகள் ஐயா

  ReplyDelete
 2. 5 புகைப்படங்கள் தெரிகின்றது கடைசி 2 புகைப்படங்கள் தெரியவில்லை ஐயா.

  ReplyDelete
 3. குடும்பத்தினர் அனைவரும் ஒன்றினைவதில் உள்ள மகிழ்ச்சி
  வேறு எதில் கிட்டும்
  மகிழ்ந்தேன் ஐயா

  ReplyDelete
 4. தாமதமான தீபாவளி வாழ்த்துகள். குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடவென்றே பண்டிகைகள் ஏற்படுத்தப் பட்டன என்பது உண்மையே!

  ReplyDelete
 5. குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடுவது மிக பெரிய பாக்கியமே அந்த வரம் உங்களுக்கு கிடைத்திருப்பது சந்தோசமே இதே சந்தோசம் வரும் ஆண்டுகளிலும் கிடைக்க வாழ்த்துகிறேன்

  ReplyDelete
 6. புகைப்படங்களுக்கு நடுவெ தீபாவளி பற்றி எழுதியிருந்ததை அக்கறையாக ஒரு வரி விடாமல் படித்தேன். நன்றாக இருந்தது.

  என் தீபஒளி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. #பட்டாசுகளும் வாணங்களும் வாங்கவில்லை#
  எல்லோரும் கூடி மகிழ்ந்ததை விடவா, அவைகள் சந்தோசம் தந்து விடப் போகின்றன :)

  ReplyDelete
 8. தீபாவளி போன்ற பண்டிகைகள் அவசியம் கொண்டாடப்பட வேண்டும் எனும் கருத்தை ஆமோதிக்கிறேன் சார். உங்களுக்கும் எந்நாளும் திருநாள் இருக்க. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. "ஆண்டுதோறும் இம்மாதிரிக் கூடி இருந்திட கொடுப்பினை இருக்கிறதோ தெரியவில்லை." இருக்கிறது
  ஆண்டவன் அருளால்
  பதிவர்களின் பலமான உறவால்

  ReplyDelete
 10. ஒரு பதிவிடவும் தீபாவளி உதவியது! கொண்டாடத்தானே பண்டிகைகள்! சந்தோஷம் மலரட்டும், பெருகட்டும்.

  ReplyDelete
 11. பண்டிகைகள் கொண்டாட பல்வேறு புராண காரணங்கள் கூறப்பட்டாலும், எல்லோரும் கூடி இருந்து குளிர்வதுதானே முக்கியம்.

  ReplyDelete
 12. கொண்டாட்டம்.. கோலாகலம்.. என்றென்றும் தழைக்கட்டும்..

  வாழ்க நலம்!..

  ReplyDelete

 13. @ கில்லர்ஜி
  முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஜி அபுதாபியில் தீபாவளி உண்டா

  ReplyDelete

 14. @ கில்லர் ஜி
  ஐந்து படங்களே வெளியிட்டிருக்கிறேன் ஜி

  ReplyDelete

 15. @ கரந்தை ஜெயக்குமார்
  என் மகிழ்ச்சியில் பங்கு கொண்டதற்கு நன்றி சார்

  ReplyDelete

 16. @ கீதா சாம்பசிவம்
  வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி மேம்

  ReplyDelete

 17. @ அவர்கள் உண்மைகள்
  அபூர்வ வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்

  ReplyDelete

 18. @ ஜீவி
  நீங்கள் படித்துக் கருத்து சொன்னதற்கு நன்றி சார்

  ReplyDelete

 19. @பகவான் ஜிவருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஜி

  ReplyDelete

 20. @ மோகன் ஜி
  வருகைக்கு நன்றி சார் நேரில் வரும் நாளை எதிர் நோக்குகிறேன்

  ReplyDelete

 21. @ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
  ஆண்டுதோறும் கூடிக்களித்திடக் கொடுப்பினை இருக்கிறதோ சொல்ல முடியாது. நான் நிகழ்வதை ரசிக்கிறேன் வருகைக்கு நன்றி ஐயா

  ReplyDelete

 22. @ ஸ்ரீராம்
  பத்திரிகைகள் தீபாவளி இதழே வெளியிடும்போது வலைப் பதிவில் ஒரு பதிவு எழுதினேன் அவ்வளவுதான் வருகைக்கு நன்றி ஸ்ரீ

  ReplyDelete

 23. @ பரிவை சே குமார்
  ஆம் சந்தோஷ தருணங்கள்தான் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 24. @பானுமதி வெங்கடேஸ்வரன்
  வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete

 25. @ துரை செல்வராஜு
  கொண்டாட்டம் குதூகலம் என்றும் தழைக்கும் எனும் நம்பிக்கையில் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 26. ji i wish you would have more such frequent get together with your family members...

  ReplyDelete
 27. அபுதாபியில் இன்று தீபாவளி என்று நினைத்துக் கொள்ளலாம் அதுவும் இந்த முறை சனிக்கிழமை வந்ததால் அரசு விடுமுறை கிடைத்து விட்டது அன்று நண்பரே மனசு சே.குமார் ரூமில் சென்று மதியம் சாப்பிட்டேன் ஐயா.

  ReplyDelete
 28. தீபாவளி அன்று குழந்தைகள் குடும்பத்தினரோடு நேரம் செலவிடுவது பெருமகிழ்ச்சி தரக்கூடியது. படங்கள் நன்றாக எடுக்கப்பட்டுள்ளன.

  அது 'பேசின்' லட்டு அல்ல. பேசன் லட்டு! ('Besan' in Hindi for - கடலைமாவு!)
  May be its a typo, not sure.

  ReplyDelete

 29. @ Nat chander
  Yes. We try to meet as often as possible. Thanks for the wishes.

  ReplyDelete

 30. @ கில்லர் ஜி
  வளைகுடா நாடுகளில் வெள்ளியன்றுதானே விடுமுறை. நண்பர்களுடன் நேரம் செலவிட உதவும் பண்டிகைகள் வாழ்க

  ReplyDelete

 31. @ ஏகாந்தன்
  வருகைக்கு நன்றி சார் அது பேசன் என்று இப்போது தெரிந்து கொண்டேன்

  ReplyDelete
 32. இப்பொழுதுதான் தளத்திற்கு வரும் வாய்ப்பு கிடைத்தது. கலகலப்பும், மகிழ்ச்சியும்....அப்பப்பா..அதனை நீங்கள் பகிர்ந்த விதம் இன்னும் அருமை.

  ReplyDelete

 33. @ சோழநாட்டில் பௌத்தம்
  இப்போதாவது வர முடிந்ததில் மகிழ்ச்சி ஐயா வருகைக்கு நன்றி

  ReplyDelete
 34. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.
  படங்கள் பெருமகிழ்ச்சியையும் கொஞ்சம் ஏக்கத்தையும் தந்தன.

  ReplyDelete

 35. @சிவகுமாரன்
  ஏக்கம் ஏன் சிவகுமாரா, என் குடும்பத்தில் உங்களையும் ஒருவராகவே நினைக்கிறேன் வருகைக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. ஏக்கம் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருப்ப்தால்.
   என் தந்தையை நினைவூட்டினீர்கள், நன்றி அய்யா.

   Delete
 36. புகைப்படங்கள் அருமை. இரண்டு நாட்கள் ஊரில் இல்லை.அதனால் வலைப்பக்கம் வர இயலவில்லை.

  ReplyDelete

 37. @ வே நடனசபாபதி
  வருகைக்கு நன்றி ஐயா

  ReplyDelete
 38. பண்டிகைகள் குடும்பத்தினர்களுடன் சேர்ந்து கொண்ட்டாடும் போது உள்ள மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை.

  உங்கள் சந்தோஷத்தை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
  ஆண்டு தோறும் இந்த மகிழ்ச்சி கிடைக்கட்டும்.
  வாழ்க வளமுடன்.

  ReplyDelete