Wednesday, October 5, 2016

கவிதை எழுதலாமே


                                                 கவிதை எழுதலாமே
                                                 ----------------------------------

மயில் என்றதும் அழகும் கம்பீரமும் நினைவுக்கு வருகிறது. சில அற்புதமான படங்கள் கிடைத்ததும் மயில்வாகனனின் நினைப்பும், சூரனின் நினைப்பும் வந்தது கூடவே ஏதாவது பாடல் புனையலாமா  என்று நினைக்கவும் தோன்றியது. நான் எழுதுவதை விட தமிழில் புலமை கொண்ட நம் பதிவர்கள் எழுதினால் நன்றாக இருக்கும் என்ற எண்ணமும் ஓடியது
இதையே முன்பொரு பதிவில் வேண்டி இருந்தேன்   அப்போது வாசகர்களுக்கு  நான் பதிவிட்டிருந்த படங்கள் தெரியவில்லை என்று பின்னூட்டமிருந்தது அதே புகைப்படங்களை மீண்டும் வெளியிட்டு என் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டிக்கொள்கிறேன் மயிலின் தோகை அழகு விரிந்து இருப்பதில் கண்டிருக்கிறோம். ஞாலம் வலம் வந்த ஷண்முகன் பறக்கும் மயிலில்தானே ஆரோகணித்து இருக்க வேண்டும்.? பறக்கும்  மயிலின் படங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டி விடட்டும். பதிவர்களுக்கு நல்ல கவிதை கிடைக்கட்டும். சரிதானே நண்பர்களே. போட்டி என்று சொல்ல மாட்டேன். படைப்பு என்று கூறி ஆவலுடன் எதிர்பார்ப்போம்.   


.

37 comments:

 1. ஐயா, எனக்கு கவிதை எழுதுவதைவிட ரசிப்பதில்தான் ஆர்வம். (தப்பித்துக்கொண்டேன் என நினைக்கிறேன்.)

  ReplyDelete
 2. "அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்... ஆனால் முருகா.. உன்னைச் சுமந்து பறக்கும் ஆவலில் நான் காத்திருக்க, நீ ஏன் என்னை அழைப்பதே இல்லை?"

  ReplyDelete
 3. "அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்... ஆனால் முருகா.. உன்னைச் சுமந்து பறக்கும் ஆவலில் நான் காத்திருக்க, நீ ஏன் என்னை அழைப்பதே இல்லை?"

  ReplyDelete

 4. @ ஸ்ரீராம்
  உடன் வருகைக்கும் அழகிய சிறு ஆதங்கக் கவிதைக்கும் நன்றி ஸ்ரீ

  ReplyDelete
 5. பெண்ணே அழகென்று பேசும்
  இந்த மானிடரிடம்
  ஆணே அழகென்று
  ஆர்ப்பரிக்கும் ஆண் மயிலே!
  இருந்தும் என்ன பயன்?
  தோகை மயிலாள் என்று
  இன்னும் நாங்கள்
  பெண்ணுக்கு உவமை
  காட்டுவது உன்னைத்தான்

  (படங்களைப் பார்த்ததும் எனக்குள் உதித்த கவிதை இது; பொதுவாக மானிட இனத்தைத் தவிர்த்து, மற்ற பறவை, விலங்கு இனங்களில் ஆணே கவர்ச்சி )

  ReplyDelete
 6. மயில்வாகனன் உலகைச் சுற்றி வரை
  மயில் தான் துணை நின்றாலும்
  மாம்பழமோ பிள்ளையாருக்கே!

  ReplyDelete
 7. மயிலேறும் வடிவேலனே!

  ReplyDelete

 8. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  வருகைக்கு நன்றி ஐயா உங்கள் திறன் உங்களுக்குத் தெரியவில்லை என்றே நினைக்கிறேன்

  ReplyDelete

 9. @தி தமிழ் இளங்கோ
  எண்ணியதை எண்ணியவாறே எழுதி மகிழ்வித்த உங்களுக்கு வருகைக்கும் கவிதைக்கும் நன்றி சார்

  ReplyDelete

 10. @ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
  முருகன் ஏமாந்த கதை ரத்தினச் சுருக்கமாக. வருகைக்கு நன்றி ஐயா

  ReplyDelete

 11. @ கீதா சாம்பசிவம்
  வருகைக்கும் முயற்சிக்கும் நன்றி மேம் வனைக் கூப்பிடுவதே கவிதைதானே

  ReplyDelete
 12. அழகு முருகனைச் சுமந்துகொண்டு
  அதோ மயில் பறக்கிறது,

  அதைக் கண்டு ஆனந்தித்த என்னுள்
  ஆகா, கவிதை பிறக்கிறது

  அப்படியே அதைத் தட்டச்சிட்டு அனுப்ப
  கூகுள் துணை நிற்கிறது.

  அனுப்பியதைத் தாங்கள் பாராட்டினால்,
  அச்சோ, மனம் மகிழ்கிறது

  ReplyDelete

 13. ஆறுமுகன் புள்ளிகள் இட
  மாறிலாத வள்ளியிட்ட கோலம் -உன்
  விசிறித் தோகையில் துலங்கும்.
  முருகனை சுமந்ததென்னவோ நீ தான்.
  பறந்தது அவன் செயலே அன்றோ ?

  அகவும் உன் குரலை ஆர் கேட்பார்?
  மிகவும் அழகுநீ ! பாடாத வரை !
  தெரிந்ததை செய்! உன் வலிமையில் நில்!
  விரிதோகை பிரித்தாடு! திசைதொறும் சுழன்றாடு!

  அழகும் ஒரு சுமை அன்பு மயிலே!
  எழுந்து உயரப் பறக்க வொட்டாதே!
  ஒன்றிருந்தால் ஒன்றில்லை மயிலே!
  கன்றிருக்கப் பால்மிகுமோ மயிலே!

  ஆடிவா கலாப மயிலே!
  அசைந்தசைந்தே ஆடி வா!
  கூடிவா பேடுடன் எழிலே!
  குடுகுடுவென்றே ஓடி வா!

  நீயாட அமைத்தேன் இதயமேடை !
  ஓயாத ஆட்டங்கள் ஆடுமயிலே !

  ReplyDelete

 14. @ விஸ்வநாத்
  மயில் என்றாலேயே முருகனும் நினைவில் வருவான் அவன் நினைவைத் தாங்கி கூகிள் மூலம் தெரிவித்த உங்களுக்குப் பாராட்டுகள் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 15. @ மோகன் ஜி
  இதை இதைத்தான் எதிர்பார்த்தேன் மயிலின் நிறை குறைகளைப் பட்டியலிட்டுப் புனைந்த கவிதை அருமை என்றால் மிகையாகாது வருகைக்கும் கவிதைக்கும் நன்றி ஜி

  ReplyDelete
 16. அழகு மயிலின் வண்ணப்படங்களும் அவற்றுக்கேற்ற கவிதைகளுமாக - பதிவு கலகலப்பாக இருக்கின்றது..

  வாழ்க நலம்..

  ReplyDelete
 17. புகைப்படங்கள் அனைத்தும் அருமை ஐயா நானும் மு....ய....ல்...கி...றே...ன்...

  ReplyDelete

 18. @துரை செல்வராஜு
  சீட்டாட்டத்தில் ஒரு கை குறைகிறது என்பார்கள் அது போல் ஒரு குறை உங்களிடம் இருந்து கவிதை இல்லாததால் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 19. @ கில்லர்ஜி
  முயற்சி திருவினையாக்கும் . வருகைக்கு நன்றி மீள் வரவை எதிர் நோக்குகிறேன்

  ReplyDelete
 20. ஐயா வணக்கம்.

  தயவு செய்து நம்புங்கள்.

  தங்கள் தளத்தில் பின்னூட்டம் இட்டுப் போனேன்.

  கான மயிலாடக்

  கண்டிருந்த வான்கோழி நான்....

  என்பதாகத் தொடங்கி...

  நேரடியாகத் தட்டச்சுச் செய்வதால் சேமிக்கவும் இல்லை.

  உங்கள் பின்னூட்டம் கண்டதும் ஓடி வருகிறேன்.

  நிச்சயமாய்த் தங்கள் தளத்தில் பின்னூட்டம் இட்டிருந்தேன்.

  என்னாயிற்றெனத் தெரியவில்லை.

  பொறுத்தாற்றுங்கள்.

  ReplyDelete

 21. @ ஊமைக்கனவுகள்
  ஐயா வணக்கம் நீங்கள் பார்த்திருப்பீர்கள் ந்நன் என் தளத்தில் எந்த பின்னூட்டத்தையும் மட்டறுப்பு செய்வதில்லை. பின்னூட்டம் எழுதியவருக்குத் தெரிந்து விடும் உங்கள் பின்னூட்டம் என்னாயிற்றோ வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete
 22. ஐயா வணக்கம்.

  தங்களுக்காக.....

  அப்பனோ பாம்பைக் கொண்டான்!
    அவனுக்கு வேதம் சொன்ன
  சுப்பனோ உன்னைக் கொண்டான்!
    சிக்கனாய் ஜி.எம் பால
  சுப்பிர மணியார் கண்ணில்!
    சுந்தர! உன்னை வைத்தே
  ஒப்பிலாக் கவிதை ஒன்றை
    எழுதிடக் கேடடார்! நீயும்
  தப்பிடப் பார்க்கில் போர்வை
    தந்திடப் பேகன் இல்லை!

  பொறுப்புத் துறப்பு - இது கவிதை இல்லை.

  ReplyDelete

 23. @ ஊமைக்கனவுகள்
  எனக்காக மயில் கவிதை எழுதியதற்கு நன்றி ஐயாகடைசியில்பொறுப்பு துறப்பு விளங்கவில்லை.

  ReplyDelete
 24. ஐயா மீண்டும் வணக்கம்.

  சிக்கினாய் என்று இருக்க வேண்டியது சிக்கனாய் என்று வந்துவிட்டது.

  கேட்டார் என்று இருக்க வேண்டியது கேடடார் என்று வந்துவிட்டது.

  பிழை பொறுக்கவும் திருத்திப் படிக்கவும் வேண்டுகிறேன்.

  பொறுப்புத் துறப்பு என்பது நீங்கள் கவிதை எழுதுமாறு கேட்டிருந்தீர்கள். நானெழுதியது கவிதை இல்லை என்பதற்காகவே...!

  நன்றி.

  ReplyDelete
 25. ஆஹா... அழகு....
  இங்கு கவிதைகளும் அருமை...

  ReplyDelete

 26. @ ஊமைக் கனவுகள்
  மீண்டும் வருகைக்கு நன்றி. வணக்கம் .
  தட்டச்சு செய்யும்போது பிழைகள் வரலாம் வேண்டுமென்றே பிழை தட்டச்சு செய்வதல்லவே நீங்களெழுதியது உங்களுக்குக் கவிதை மாதிரித் தெரியாதிருக்கலாம் இருந்தாலும் நீங்கள் எழுதியதுதானே எப்படி பொறுப்பு துறக்க முடியும் . மன்னிக்கவும் நான் இப்படித்தான் தோன்றியதைச் சொல்லி விடுகிறேன் எனக்கு விளங்காததைச் சொல்லி இருந்தேன்

  ReplyDelete

 27. @ பரிவை சே குமார்
  வந்து ரசித்ததோடு ஒரு கவிதையும் தந்திருக்கலாமே வருகைக்கு நன்றி

  ReplyDelete
 28. மயிலின் மாசிலா அழகை மனதாரப் பருகியே
  குயிலாய் உடன்மாறிக் கூவிடுவார் பலர்
  முருகா! குமரா! கந்தா! கடம்பா! என்றெல்லாம்
  முடுக்கிடுவார் தங்கள் கவிதை விசைகளை
  பார்வதிகுமாரன் மீது பக்திப் பிரவாகமாகி
  பலவாறு ஆடிப்பாடிடுவார்
  பரவசமாய்க் குதித்திடுவார்
  கவிதை என்ன கவிதை - புதுக்
  காப்பியம்கூட இயற்றிடுவார்
  ஒன்றும் தெரியாமலே ஓடித்திரியும் நானும்
  ஓரத்தில் நின்று பார்த்திருப்பேன்

  -ஏகாந்தன்

  ReplyDelete
 29. மயிலின் அழகு ...ஆண்களை சப்பாணி ஆக்கி விடுகிறது !
  (சிலருக்கு புரியும் இது ,புரிந்தவர்கள் சொல்லலாம் புரியாதவர்களுக்கு:)

  ReplyDelete

 30. @ஏகாந்தன்
  மயில் படங்கள் ஏற்படுத்திய பக்திப் பிரவாகம் ரசிக்க வைக்கிறது வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 31. @ பகவான் ஜி
  மயில்களின் படங்கள் உங்களுக்கு அந்த மயிலை நினைவு படுத்தியதோ வாசகர்களுக்கு மூன்றாம் பிறை மயிலும் சப்பாணியும் இப்படங்களைப் பார்த்து வரும் என்று நினைக்கிறீர்களா வருகைக்கு நன்றி ஜி

  ReplyDelete
 32. படங்களும் அருமை. படங்களுக்கு வந்த கவிதைகளும் அருமை. அந்த கவிதைகள் பிறக்கக் காரணமாக இருந்த உங்களுக்கு பாராட்டுகள்!

  பொறுப்புத் துறப்பு என்பதை Disclaimer என்று சொல்வார்கள்.கவிதை அருமையாய் இருந்தும் இறுதியில் பொறுப்புத் துறப்பு என சொல்லிவிட்டார் திரு ஜோசப் விஜூ அவர்கள்.

  ReplyDelete
 33. @ வே நடன சபாபதி
  பாராட்டுகளுக்கு நன்றி ஐயா அருமையாக் கவிதை இருந்தும் பொறுப்புத் துறப்பு என்றது விளங்கவில்லை எனக்கெல்லாம் நான் எழுதுவது எழுதியது என் பொறுப்பு என்பதே தெரியும்

  ReplyDelete
 34. அது மூன்றாம் பிறை மயில் அல்ல ,பதினாறு வயதினிலே மயில் :)

  ReplyDelete
 35. @ பகவான் ஜி
  சாரி. தவறாகச் சொல்லி விட்டேன் திருத்தியதற்கு நன்றி ஜி

  ReplyDelete
 36. அழகிய படங்கள்....

  கவிதைகள் களைகட்டுகின்றனவே..... அனைவருக்கும் பாராட்டுகள்.

  கவிதை.... எனக்கு ரசிக்க மட்டும் தான் தெரியும்!

  ReplyDelete
 37. @ வெங்கட் நாகராஜ்
  படங்கள் அழகாய் இருந்ததே நான் கவிதை கேட்க முக்கிய காரணம் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete