Tuesday, May 28, 2019

ஒரு சர்வாதிகாரி உருவாகிறாரா



                                     ஒரு சர்வாதிகாரி உருவாகிறாரா
                                     ---------------------------------------------------

இந்தப்பதிவை எழுதுவதா வேண்டாமா  என்னும் பலத்த சிந்தனைக்குப் பின் எழுதுகிறேன்  இதில் காணும்செய்திகள் எல்லாம் ஏதோ பெர்செப்ஷனில் எழுந்ததே  இது முற்றிலும்  என் சிந்தனை ஓட்டமே  வாசகர்கள் தாரளமாக அவர்கள் கருத்தைக் கூறலாம்
 அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் மோடியின்  பா ஜ க   வென்று விட்டது இவ்வெற்றி என்சிந்தனையைத் தூண்டி விட்டது  எனக்கு பயமாக இருக்கிறதுமோடி இன்னொரு ஹிட்லராக உருவெடுப்பாரோ என்பதே  ஹிட்லருக்கு அவர் ஆரிய குலத்தவர்  உயர்ந்தவர் என்றும்   மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் கருத்து இருந்ததாகப் படித்திருக்கிறேன் அதாவது நம்மோடிக்கும்  அவர் சார்ந்து இருக்கும்   ஹிந்துத்வா கொள்கைக்கும்   ஹிட்லரின் நாஜி கொள்கைபோல் இருக்கிறதோ என்னும் ஐயம் இன வெறி கொண்டு லட்சக் கணக்கானவரை ஹிட்லர் அழித்தார்அதுபோல் மோடியும் நினைக்கிறாரோ, இதை அறியாமல் ஜாதிவாரியாககூட்டணி அமைத்து தேர்தலில் தோற்றவர்கள் போல்  சாதிவாரியாக அல்லாமல்  இனவாரியாக காய்களை நகர்த்தி மோடி வெற்றி அடைந்து விட்டார் என்றே தோன்றுகிறது நம்நாட்டில் முஸ்லிம்கள் சுமார்  15 சதவீதம் இருந்தாலும்அவர்கள் இந்தியாவின் பல்வேறு இடங்களில் பிரிந்து இருக்கின்றனர் அவர்களது வாக்குகள்முக்கியம் என்றாலும்   ஒருங்கிணைந்து இருக்கவில்லை உத்தரப் பிரதேசத்தில் யாதவ்களும் மாயவதிகளு கூட்டு சேர்ந்து மோதியை எதிர்த்தார்கள் ஆனால் தோல்வி கண்டார்கள்  மோடி எடுத்த ஆயுதமோ ஹிந்துத்வா கொள்கை இதில் சாதியினரை அடக்கியதுமோடியின்  சாமர்த்தியம் இந்த  சிறுகணக்கை  விட்டு விட்டு ராகுல் காந்தி மக்களுக்குத்தேவையாக நினைத்ததுவேறு தென் இந்தியாவில் மோடியுடைய பாஜகவையோ அதற்கு துணை போனவர்களையோ கண்டுகொள்ளவில்லை  தமிழ்நாட்டில் ஹிந்துத்துவாவை பிராம்மணர்களின்  கட்சி என்று நினைத்தார்கள் அது தலை எடுத்தால்  தங்கள் கொள்கைகள்  அடிபட்டுப்போகும்   என்று நினைத்தார்கள்  
பாஜகஒரு நாஜிக்களின் கொள்கைகளைக் கையில் எடுக்கும் அபாயம் இருக்கிறது இன்னொரு முறை மோடியின்  ஆட்சி  சர்வாதிகாரமாக மாறும் அபாயம்  உள்ளது  நானே ஒரு பெனெவொலெண்ட் சர்வாதிகாரி தேவையாக  இருக்கலாமென்றுஎழுதி இருக்கிறேன் ஆனால் போகிறபோக்கைப்பார்த்தால் மோடி இன்னொரு ஹிட்லராக உருவெடுக்கும்  சாத்தியக் கூறுகளே  அதிகமென்று தோன்றுகிறது அன்புக்கும்  அஹிம்சைக்கும் பெயர் போன இந்தியா அதற்கு நேர்மாறாக செயல் படுவது தெரிகிறது மோடி அவர் காய்களைப் பிறரால் நகர்த்தும் சாமர்த்தியம் கைவரப்பெற்றவர் போபாலில் ஒரு  கொலைக்குற்றம்சாட்டப்பட்ட  சாத்திவினியை தேர்தலில்  நிற்க  வைத்துகாந்தியைக் கொன்றவன்  ஒரு தேசபக்தன் என்றுகூறியதுகேட்டும்  வாளாவிருப்பது  கண்டு  அவரது உண்மை சொரூபம் தெரிகிறது  இல்லை யென்றால்  அவரை தேர்தலிலிருந்து விலக்கி இருக்க வேண்டும் காஷ்மீர் பிரச்சனையை மோடி தீர்க்கமுயல மாட்டார்  அவருக்கு இஸ்லாமியர் மேல் அத்தனை காழ்ப்பு தீர்வுகாணமுயற்சிக்காமல் என் சொல்படித்தான்  நடக்க வேண்டுமென்று நினைப்பது அவரது சர்வாதிகார குணத்தையே காட்டுகிறதொ எனும் சந்தேகம் எழுகிறது
 The BJP is the political wing of Hindu nationalism, a movement that is changing India for the worse. Little wonder, as it stands for the flagrant social dominance of the upper castes of Hindu society, pro-corporate economic growth, cultural conservatism, intensified misogyny, and a firm grip on the instruments of state power. The landslide win for Mr Modi will see India’s soul lost to a dark politics – one that views almost all 195 million Indian Muslims as second-class citizens.
On the campaign trail Muslims were denigrated as “termites” by Mr Modi’s right-hand man. Off it, they were lynched with apparent impunity. Despite their number, Muslims are political orphans, shunned by a political class fearful of losing support from the majority Hindu population
 The BJP has been allowed to be funded anonymously to the tune of 10.3bn rupees (£120m) by big business after Mr Modi legitimised opacity in political donations. The party pays lip service to reducing the yawning inequalities that disfigure India, but political cleavages in India’s party system have grown along the lines of caste and religious conflict. This suits the BJP, with its pro-business and anti-Muslim nationalism. The opposition will need to be able to run a distinctive campaign on an egalitarian platform.
மேலே  த கார்டியன் பத்திரிகையில் வெளியான சில செய்திகள்
கான்ஸ்டிட்யூஷனல் அங்கங்களை தன் இஷ்டத்துக்கு வளைப்பதில் தேர்ந்து விட்டார் மோடி  ரிசர்வ் பேங் எலெக்‌ஷன் கமிஷன்   என்ஃபோர்ஸ்மெண்ட் டைரக்டொரேட்  ஏன்  உச்சநீதி மன்றம்கூட அடங்குமோ   எல்லாவற்றையும்  எந்த மன கட்டுப்பாடும் இல்லாமல் உபயோகிக்கிறார் என்றே தோன்று கிறது 

 எந்தக்கட்சியிலும் மனஸ்தாபம் உள்ளவர்கள் இருக்கலாம்  ஆனால் அவர்களை வலை வீசிப்பிடித்து  அரசியல் லாபம் காண்பது என்ன நியாயம் கர்நாடகத்தில் ஆப்பெரேஷன்  லோடஸ்  பெயர் பெற்றது
 2014 ல் எப்படியும்  ஜம்மு காஷ்மீரில் பதவி பிடிக்க ஆசைப்பட்டு  ஹிந்துக்கள் அதிகம் இருக்கும்  ஜம்முவிலிருந்து பெற்ற வெற்றியுடன்  ஆட்சி அமைக்க மெஹ்பூபா  மஃப்டியுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்ததே பிஜேபியின் தந்திரங்களுக்கு எடுத்துக்காட்டு  பிஜேபியினருக்கு கொள்கை என்று ஏதும் இருந்தால் அது இந்தியாவை ஹிந்துத்வா நாடாகக் கொண்டு  வந்து காவிகளின்  அடியில் சமர்ப்பிப்பதே தேர்தலின்  போது கூறிய  சப்கேசாத் சப்கே விகாஸ் என்பதெல்லாம்  தேர்தல்  வாக்குறுதிகள் மட்டுமே         

               
   வழக்கம்போல் மனதில் பட்டதை எழுதி இருக்கிறேன் ஆனல் பல மோடி ஆதரவாளர்கள்

 ஒப்புக்கொள்ளமாட்டார்களே போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுபவர் தூற்றட்டும்

  நான் எழுதுவேன் வயதாகி விட்டதே யார் எப்படிப்போனால் என்ன என்று இருக்க

முடியவில்லை சிலராவது புரிந்து கொள்வார்கள் என்னும்நம்பிக்கையே காரணம்    


                    
   


  


46 comments:

  1. //எனக்கு பயமாக இருக்கிறது மோடி இன்னொரு ஹிட்லராக உருவெடுப்பாரோ என்பதே//

    ஐயா இந்தக் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன் காரணம் எனக்கும் இதே கருத்து அடிக்கடி தோன்றியது.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு மோடி மேல் தனிப்பட்ட வெறுப்பு கிடையாது ஆனால் அவரது ஹிந்துத்வா கொள்கை எனக்கு ஏற்புடையது அல்ல அதுவே என் பதிவுக்கு மூல காரணம்

      Delete

  2. என் கருத்து என்னவாக இருக்கும் என்று உங்களுக்கு நன்றாக தெரியும்.... மற்றவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்பதற்காக காத்து இருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. யார் எது சொன்னாலும் உங்கள் கருத்து என்று ஒன்று இருக்குமே அதைக் கூறி யிருக்கலாம் என் பதிவு வாசகர்கள் பெரும்பாலும் மோடி பக்தர்களே

      Delete
  3. //மேலே த கார்டியன் பத்திரிகையில் வெளியான சில செய்திகள்//செய்திகள் அல்ல. Opinion Editorial.
    //மெஹ்பூபா மஃப்டியுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்ததே பிஜேபியின் தந்திரங்களுக்கு எடுத்துக்காட்டு// ஏன் அதை ஒரு நல்லிணக்க முயற்சியாக இருக்கலாம் என நினைக்கலாம் அல்லவா? (Just a positive outlook?) UP யில் மாயாவதியும் அகிலேஷும் இணைந்தது "தந்திரம்" தானா அல்லது மதிநுட்பமான திட்டமா ? (Personally I welcome it, as it bridges social differences) எந்த சர்வாதிகாரி தன்னை ஒருவன் திருடன் என்று கூவும் போது அதை ஒதுக்கி தள்ளி பாராட்டாமல் செல்பவன்? கேஜ்ரிவாளிற்கு மோதி என்னை கொல்ல விரும்புகிறார் என்று சொல்ல சுதந்திரம் கொடுத்துள்ளனர். அது சர்வாதிகாரமா? மதம் சார்ந்த எந்த வன்முறையும் தவறே. அதை ஊதி பெரிதாக்குவதும் நன்மை பயக்காது . நாட்டின் அவல நிலைக்கு பெரிதும் பொறுப்பானது நீதி துறைதான். There is no timely dispensation of justice. Risk Reward Ratio is lopsided in favour of criminals and law breakers. -Babu

    ReplyDelete
    Replies
    1. மாயாவடியும் அகிலேஷும் தவறு செய்தார்கள் அதை சாதிவாரியாக அல்லாமல் இனவாரியாக செயல்பட்டு மோடி வென்று விட்டார்

      Delete
  4. துணிவோடு எழுதியதற்க்கு நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. மனசில் பட்டதை எழுதுவது என் இயல்பு

      Delete
  5. //பதவி பிடிக்க ஆசைப்பட்டு ஹிந்துக்கள் அதிகம் இருக்கும் ஜம்முவிலிருந்து பெற்ற வெற்றியுடன் ஆட்சி அமைக்க மெஹ்பூபா மஃப்டியுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்ததே பிஜேபியின் தந்திரங்களுக்கு எடுத்துக்காட்டு // - இனி எக்காரணம் கொண்டும் காங்கிரஸுடன் கூட்டுச் சேரமாட்டேன் என்று சொன்ன ஸ்டாலின், காங்கிரஸ் மற்ற கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்தபோது அது தந்திரமாக தெரியவில்லையா?

    //காந்தியைக் கொன்றவன் ஒரு தேசபக்தன் என்று கூறியது கேட்டும் வாளாவிருப்பது கண்டு அவரது உண்மை சொரூபம் தெரிகிறது // - இந்துக் கடவுள்களையும் இந்துப் பழக்கவழக்கங்களையும் பழித்துப் பேசி, அப்படிப் பேசுபவர்களை ஆதரிக்கின்ற ஸ்டாலினோடு காங்கிரஸ் கூட்டுச் சேர்ந்ததைப் பற்றி உங்களுக்குக் கவலை இல்லை.

    //பிஜேபியினருக்கு கொள்கை என்று ஏதும் இருந்தால் அது இந்தியாவை ஹிந்துத்வா நாடாகக் கொண்டு வந்து // - காங்கிரஸ் மற்றும் திமுக, திருனாமுல் போன்ற கட்சிகள் 'சிறுபான்மையினருக்கு அளவுக்கு அதிகமாக சலுகைகளும், அவர்களது வாக்குகளை வாங்குவதற்காக இந்து மதத்தைத் தூற்றுவதையும் செய்யும்போது', "உச்ச நீதி மன்றம் சொன்ன பல தீர்ப்புகளை நிறைவேற்றாமல், சபரிமலையில் எல்லா வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று சொன்னதை நிறைவேற்ற மாற்று மதப் பெண்களை சபரிமலைக்கு போலீஸ் துணையுடன் கம்யூனிஸ்டு அரசு' அனுப்பி, அதன் மூலம் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெறலாம் என்று செயல்படும்போது, உங்களுக்கு அவை உவப்பாக இருக்கின்றன. அதனால் மனதில் 'தாங்கள் இழிவுபடுத்தப்படுவதாக' நினைக்கும் இந்துக்களை, பாஜக ஆதரித்தால் அது 'இந்துத்துவா' என்று உங்களுக்குப் படுகிறது.

    //தென் இந்தியாவில் மோடியுடைய பாஜகவையோ அதற்கு துணை போனவர்களையோ கண்டுகொள்ளவில்லை// - இதுவும் தவறு. தமிழகத்தில் மட்டும்தான் இது நடந்தது. அதற்கு முக்கியக் காரணம், கிறித்துவர்கள் மற்றும் முஸ்லீம்கள், அவரவர் மத வழிபாட்டுத் தலங்களில் அரசியல் பேசி, திமுக/காங்கிரஸுக்குத்தான் வாக்களிக்கவேண்டும் என்று மத குருக்கள் ஆர்டர் போட்டது. அதற்கேற்றவாறு, இலங்கை தீவிரவாதத்தில் சம்பந்தமுள்ள தவ்ஹீத் ஜமாத்தின் பிரிவைப் பற்றி தமிழகத்தில் பேசப்படவே இல்லை (முஸ்லீம் வாக்குகள் போய்விடும் என்று) இதனால் இப்போது இல்லாவிட்டாலும் தமிழகத்தில் 'பாஜக' இந்துத்துவாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.

    பாஜக, இந்துக்களுக்கு ஆதரவான கட்சி என்ற பிம்பம்தான் அவர்களின் பிரம்மாண்டமான வளர்ச்சிக்குக் காரணம். அதில் தவறொன்றும் இல்லை.

    ராஜீவ் காந்திக்கு அபரிமிதமான எம்.பி. சீட்டுகள் கிடைத்தபோதும், இந்திராவுக்குக் கிடைத்தபோதும் நீங்கள் இவ்வாறு சிந்தித்திருக்க மாட்டீர்கள். அதைப்பற்றி எப்போதும் குறிப்பிட்டிருக்கவில்லை. உங்களுக்கு பாஜக பிடிக்காது என்பதால், 'வேண்டாத மருமகள் கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்' என்று குற்றம் கண்டுபிடிக்க முனைகிறீர்கள்.

    பாஜக, நீங்களோ நானோ தேர்ந்தெடுத்த அரசு அல்ல. மோடியை நீங்களோ நானோ தேர்ந்தெடுக்கவில்லை. இந்திய மக்கள் அபரிமிதமான நம்பிக்கையில் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். பாஜக விசுவாசிகள் கவலைப்படுவதில் அர்த்தம் இருக்கிறது. கட்சியைப் பற்றி, கடவுளைப் பற்றி பயாஸ்டு ஒபினியன் உள்ள உங்களைப் போன்றவர்கள் கருத்தப் பற்றி யார் கண்டுகொள்வார் ஜி.எம்.பி சார்?

    ReplyDelete
    Replies
    1. பாஜக ஹிந்துக்களுக்கு ஆதரவான கட்சி என்பது தெரிந்ததே அதையே பூதாகாரமாக சபரிமலைத்ட்க்ஹீர்ப்புக்கு எதிராக எழுந்து போர்கொடி எழுப்பிக் காட்டினார்களே கங்கிரசும்
      அதில் இருந்ததால் கேரள அறுவடை சரியாக வில்லை அதென்ன நான் பாஜகவை விமரிசித்தால் நீங்கள்திமுகவை இணைக்கிறீர்கள்கடவுள் பற்றிய என் ஒபினியன் இருக்கட்டும் கடவுள் பெயராலும் மடத்தின் பெயராலும் ஏற்படும் ஏற்றதழ்வுகளை கட்டிக்காக்கும் ஆட்சியாளர் பற்றியஎன் எண்ணங்களைபகிர்கிறேன் உண்மையில் நாடு பற்றிய அக்கரை இருப்போரும் இருக்கிறார்கள் நெல்லை அவர்களே

      Delete
    2. ஜி.எம்.பி. சார்... 'நாடு பற்றிய அக்கறை' என்று சொல்லிக்கொண்டு காங்கிரஸ், திமுகவை ஆதரிப்பதால்தான் நான் பின்னூட்டம் போடறேன். "கடவுள் பெயராலும் மதத்தின் பெயராலும்' இல்லை 'கடவுள் இல்லை சாதிகள் இல்லை என்று சொல்லிக்கொண்டும்" ஏற்றத் தாழ்வுகளை கட்டிக்காக்காதவர்கள் யாரென்று சொல்லுங்கள் பார்க்கலாம். சோனியா அதிகாரத்தில் இருந்தபோது யாருக்கு தலைபீடம் கொடுத்தார் என்பது உங்களுக்குத் தெரியுமே..வீரமணி, கருணாநிதி போன்றோரும் யாருக்கு தங்கள் சாம்ராஜ்யத்தைக் கொடுத்தார்கள் என்று தெரியுமே.. ஏன் அவங்க, ஒரு 'தலித்'துக்கு தலைமைப் பதவி கொடுக்கலை? பாஜகவில் தலைவராக இருக்கும் மோடி உயர் சாதியினர் கிடையாது. ஒருவேளை அவர் உயர் சாதி இல்லை என்பதால்தான் நீங்கள் ஆதரிக்கவில்லையோ?

      Delete
    3. இப்போது இருக்கும் நிலையில் மோடி சர்வதிகாரியாக உருவெடுக்கிறாரோ என்னும் எண்ணமே என் பதிவு மற்றவர்களைப் பற்றி விமரிசிக்கும்நிலை வந்தால் ஒரு வேளை உங்கள் கருத்துகளுக்கு பதிலாக இருக்கலாம்

      Delete
  6. இந்திரா காந்தியைக் கூட இப்படி சர்வாதிகாரி என்று வர்ணித்துத் தான் ஓரம் கட்ட நினைத்தார்கள்!..

    ReplyDelete
    Replies
    1. இந்திராகாந்தி கொலை செய்யப்பட்டிருக்காவிட்டல் யார் கண்டார்கள் அவருமொரு சர்வாதிகாரியாக ஆகியிருக்கலாம்

      Delete
    2. ஜி.எம்.பி சார்... நான் 77லிருந்து அரசியலைக் கவனித்துவருகிறேன். (ஆர்வத்தால்). இந்திரா அப்போதே சர்வாதிகாரி. அவருக்கு எதிராக யார் எழுதினாலும் பேசினாலும் அவர்கள் ஒழித்துக்கட்டப்பட்டனர். அவருடைய தேர்தல் ஸ்லோகன் 'இந்திராதான் இந்தியா..இந்தியாதான் இந்திரா'. அவர் காலத்தில்தான், 'தன்னை மதுரையில் கொலை செய்ய முயற்சித்ததால்", மிசா பெயரில் ஸ்டாலினை சிறையில் தள்ளி வெளுத்துவாங்கினார். தன் பாலிசிகளைக் குறை சொன்னதால் காமராசரை ஒதுக்கி கட்சியைவிட்டே விலகும்படிச் செய்தார் (தன்னை அவர்தான் பிரதமராக ஆக்கியிருந்த போதும்).

      Delete
    3. ஜிஎம்பீ சார்! இந்திரா காந்தியை அவர் வாழும் காலத்தில் தான் சர்வாதிகாரி என்றார்கள். அப்படிச் சொன்னவர்களே அவருடன் கூட்டுச் சேர்ந்து நல்ல அறுவடையும் ஆயிற்று.
      அதே கூட்டின் தொடர்ச்சி தான் இன்றைய கூட்டும்.

      Delete
    4. @நெத உங்கள் பின்னூட்டம் பதிவைத்தாண்டி இருக்கிறது எல்லாவற்றுக்கும் மறு மொழி கொடுக்க முடியுமா

      Delete
    5. @ஜீவி ஒருவேளை இந்தைரா காந்தி ஒரு பெனெவொலெண்ட் சர்வாதிகாரியாக இருந்திருக்கலாம்

      Delete
    6. ஜிஎம்பீ சார்.. நீங்களே இந்திய அரசியல் பற்றிய விவரங்களைத் தெரிந்திருந்தால், பின்னூட்டம் போடுகிறவர்களுக்கு ஒவ்வொன்றையும் விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. அவர்களும் பதிவுகள் எழுத வேண்டும், தங்களுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற ஏகப்பட்ட பணிகளுக்கு இடையே தான் இங்கு வந்து உங்கள் பதிவுக்கும் பின்னூட்டம் போடுகிறார்கள். இந்திராவினால் அரசியல் ரீதியாக பாதிக்கப் பட்ட திமுகழகத்தினரால் அவர் சர்வாதிகாரியாக வர்ணிக்கப்பட்டார். தமிழகத்து காமராஜரை தனிமைப் படுத்துவதற்காக பிறகு இந்திரா காங்கிரஸுடன் கூட்டுச் சேர்ந்து பெருத்த வெற்றியையும் பெற்றனர். திமுகழகம் பெற்ற மிஸா விழுப்புண்கள் பற்றி கூட உங்களுக்குத் தெரியாதா?

      Delete
    7. 'மாஸ்கோவில் மழைபெய்தால் மதராஸில் குடை பிடிப்பவர்கள்' என்று கம்யூனிஸ்டுகளைப் பற்றி அண்ணாவே சொன்னது தான். இப்பொழுது ரஷ்யாவே மோடியின் உலக அரசியல் செய்ல்பாட்டைப் பாராட்டி விருது வழங்கும் போது இந்திய கம்யூனிஸ்டுகளுக்கு மட்டும் என்ன வந்து விட்டதாம்? பொதுவுடமைவாதிகள் தாம் சர்வதேசிய அரசியல் வாதிகளாயிற்றே? உலக அரசியலை விட உள்நாட்டு அரசியல் அவர்களுக்கு முக்கியமாக போய்விட்டதா?

      இன்றைய அரசியல் எந்த சட்டதிட்டங்களுக்கும் உட்படாமல் அவியலாகப் போய் விட்டது. நியாய அநியாயங்களை காரண காரியங்களோடு விமர்சிக்கும் போக்கு போயே போய்விட்டது.
      சொந்த அரசியல் முக்கியமாக போயிருக்கும் காலம் இது.

      'அரசியல்லே இதெல்லாம் சகஜம்ப்பா' என்ற சால்ஜாப்பே பொன் மொழியாய் போயிருக்கும் காலம் ஐயா இது!


      Delete
  7. சர்வாதிகாரிகள் என்றுமே நிலைத்ததில்லை. ஹிட்லர் முசோலினி இந்திரா காந்தி போல் பாட் இடி அமின் உட்பட. ஆனால் தந்திரத்தில் வல்லவர்கள். எனக்கும் தான் இன்னும் பயமாக இருக்கிறது.

    மாட்டுக்கறி வைத்திருக்கிறான் என்று சந்தேகத்தின் பெயரில் முஸ்லிம்களை அடிக்கும் செய்திகள் தொடங்கி விட்டன. 2017 இல் மாட்டுக்கறி சாப்பிடுவது உரிமை என்று முகநூலில் பதிவிட்டவர் மீது இன்று மதத்துவேசத்தை தூண்டுகிறார் என்று போலீஸ் கேஸ்.

    நல்ல வேளை. பாகிஸ்தான் பிரிவினையின் போதும் தென் இந்தியா அமைதியாக இருந்ததது. தற்போது வரப்போகும் பிரிவினையின் போதும் தென் இந்தியா அமைதியாகத்தான் இருக்கும். அந்த வரையில் ஒரு ஆசுவாசம்.

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. சரித்திரம்சொல்லும் பல்வேறு ஆட்சிகளின்போதும் தென் இந்தியா அமைதியாகத்தான் இருந்தது

      Delete
  8. உங்களிடமிருந்து சற்று நான் வேறுபடுகிறேன் ஐயா. இருப்பினும் உங்கள் கருத்தினை உறுதியாகக் கூறியமைக்குப் பாராட்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பதிவின் ஆரம்பத்திலேயே கூறி இருந்தேன் இது முற்றிலும் என்பெர்செப்ஷன் என்று

      Delete
  9. மோடி ஒரு சர்வாதிகாரியாக மாறி வலிமை மிக்க இந்துமதக் காப்பாளராக[பிற மதத்தவரால் இந்து மதத்துக்கு ஆபத்து என்பது உண்மையானால்] ஆவதில் நம் போன்றவர்களுக்கு ஆட்சேபணை ஏதுமில்லை. ஆனால்.....

    மூடநம்பிக்கைகளில் ஊறித் திளைப்பவர்களால், [இந்தச் சர்வாதிகாரியின் ஆதரவுடன்] மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்கள் கடுமையாகத் தாக்கப்படும் போக்கு அதிகரிக்கக்கூடும் என்பது நம் கவலை.

    இஸ்லாம், கிறித்துவம் போன்றவற்றோடு ஒப்பிடும்போது இந்துமதத்தில் மூடநம்பிக்கைகள் மிக மிக அதிகம். அதைக் கண்டித்துப் பரப்புரை செய்வது[இது இந்துமதத்தை அழிக்கும் முயற்சி அல்ல] தவறல்ல என்பது குறித்து இந்துமதக் காப்பாளர்கள் சிந்திப்பதே இல்லை.

    மனிதர்கள் மன அமைதியுடன் வாழ்வதற்கு மனிதநேயம் போதும் என்னும் நிலையில், மதவாதிகள் தத்தம் மதம் பரப்பும் முயற்சியில் வெறித்தனமாய் மோதிக்கொள்வதும் கொலைபாதகச் செயல்களில் ஈடுபடுவதும் மனிதகுலத்தை மிகக் குறுகிய காலத்தில் பூண்டோடு அழித்தொழிக்கும் என்பது 100% உண்மை.

    ReplyDelete
    Replies
    1. மத நலிணக்கம் தேவைப்படும்போது மதவாதங்களால் பிரித்தாள
      நினைப்பது ஏன் என்னும் கேள்விக்கு பதில் கிடைக்கிறதா ஆ நண்பரே

      Delete
    2. வேறென்ன, மதவாதங்களால் பிரித்தாள நினைப்பதற்குக் காரணம் ஆதிக்க வெறிதாங்க.

      Delete
  10. அமெரிக்காவில் வெள்ளயர்கள்தான் மெஜாரிட்டி. ப்ளூக் காலர் வெள்ளயர்கள் அனைவர் ஓட்டையும் ட்ரம்ப் பெற்றார். அதாவது மற்றவர்கள் எண்ணீக்கை கூடிக்கொண்டே போகிறது என்கிற நிலையில் வைட்தான் மெஜாரிட்டி இருக்காங்க என்பதை உணர்ந்து வொர்க்கிங் க்ளாஸ் வைட் ஓட்டுக்கள் பெற்றூ வென்றார். இன்றக்கும் அவர்கள் அனைவரும் ட்ரம்ப்க்கு ஓட்டுப்போட தயாராக உள்ளனர்.

    அதேபோல் மோடி இந்துக்கள ஒண்ணூ சேர்த்து அவர்கள் ஓட்டை பெற்றதுபோல் இருக்கிறது.

    மைனாரிட்டி நிலைமை அமெரிக்காவிலும் இதேபோல்தான் இருக்கிறது. ட்ரம்ப் ஹிடலராகிவிடுவாரா? என்றூ இங்குள்ள இந்தியர்கள், யூதர்கள், முஸ்ளீம்கள் அனைவரும் பயப்படுகிறார்கள்.

    அதேபோல் ஒரு பய உணர்வைத்தான் நீங்களூம் சொல்லி இருக்கீங்க.

    பொதுவாக மீடியா, படித்தவர்கள் அனைவரும் ட்ரம்ப்க்கு எதிரிகள். அதேபோல் ஹிட்லருக்கும் எதிரிகள் படித்தவர்கள்தான்.

    மோடி டிக்டேட்டரானால், உலகம் முழுவதும் உள்ள இசுலாமிய நாடுகள், கிருத்தவ நாடுகள் ஒன்னு சேர்ந்து உலகளவில் மோடியைப் பிச்சு எடுத்துவிடுவார்கள்> மோடிக்கு அழிவு நிச்சயம் என்றூ நினைக்கிறேன்.

    மோடி புத்திசாலியாக இருந்தால் மைனாரிட்டியை பாதுகாப்பது அவசியம்.

    பார்க்கலாம் என்ன செய்கிறார் என்றூ. உலகமே அவரை கவனித்து வரும் இனிமேல்.

    ReplyDelete
    Replies
    1. வருண் , அரபு நாடுகள் பக்கா பிசினஸ் பார்ட்டிகள். இந்தியாவில் இவர் மைனாரிட்டிகளின் உயிர் பாதுகாப்பை பட்டி கிஞ்சிற்றும் அக்கறையற்றவர் என தெரிந்தும் சமீபத்தில் அவார்ட் கொடுத்தார்கள். அமெரிக்கா கூட விசா மறுத்தது. ஆனால் இவர்கள் ஓன்றும் செய்யவில்லை. அவர்களை பொறுத்த்வரை எல்லாரும் இந்தியர்கள்தான். நம்மால்தான் நாங்கெல்லாம் பாகிஸ்தான் போக வேண்டும் என நினைக்கிறார் போல.

      Delete
    2. @வருண் மோடிய்ன் புத்திசாலித்தனம் மாயாவாதிகளும்அகிலேஷ்களும்சாதிவாரியாக கூட்டணி அமைத்தபோது இவர் நாட்டின் பெரும்பான்மையினரான ஹிந்துக்களை ஒருங்கிணைத்து வெற்றி கண்டார்

      Delete
    3. மோடிக்கு மைனாரிடிகளுடன் நல்லெண்ணம் வளர்க்க ஒருவாய்ப்பு இருக்கும்போது அண்டைய நாடான பாகிஸ்தான் பிரதமருக்கு இவரது பதவி ஏற்புக்கு அழைப்பு விடுக்கவில்லை இத்தனைக்கும் அவர் இவரை வாழ்த்தி இருக்கிறார்

      Delete
  11. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    கெடுப்பார் இலானும் கெடும்...

    ReplyDelete
    Replies
    1. இன்னும் விளக்கி எழுதி இருக்கலாமோ

      Delete
  12. நெல்லைத் தமிழன் எப்படி ஹிந்துப் பற்றூ கட்சியில் தவறீல்லை என்றூ வாதிடுவதுபோல்தான் அமெரிக்காவிலும் ட்ரம்ப் அனுகுமுறயில் தவறீல்லை என்கிறார்கள் இங்குள்ள ரைட் விங் ஆதரவாலர்கள்.

    மோடியின் அனுகுமுறயை ரசிக்கும் இந்துமதப் பற்றாளர்கள் (முக்கியமாக அமெரிக்க வாழ் பார்ப்ப்னர்கல்) ஏன் ட்ரம்ப் அனுகுமுறயை ஏற்றூக் கொள்ளாமல் எதிர்க்கிறார்கள்? ஹிந்துக்களீடமும் 'ஹிப்பாக்ரசி"னும் வடிகட்டிய சுயநலமும்தான் தெரிகிறது.

    எனக்குத் தெரிய ஒரு பார்ப்பன நண்பன், இலஙயில் உள்ள ஈழத்மிழரெல்லாம் தமிழ்நாடு வந்து விட்னும் என்றான். ஆனால் இன்றூ அமெரிக்காவில்தான் வாழ்கிறான் குடும்ப சகிதமாக. போக வேண்டியதுதானே இந்தியாவுக்கு? இவன் இங்கே வாழனும்னு எவனும் கெஞ்ச வில்லை. இவன் வசதிக்காக அமெரிக்கர்கள் வேலையை பறீத்து இங்கே வாழ்கிறான். தன்க்கென்றால் ஒரு நியாயம், ஈழத்தமிழர் என்றால் இன்னொரு நியாயம் என மூள மழுங்கியவர்களாக தான் இருக்கிறார்

    ReplyDelete
    Replies
    1. //ஏன் ட்ரம்ப் அனுகுமுறயை ஏற்றூக் கொள்ளாமல் எதிர்க்கிறார்கள்?// - வருண் - இந்த நிலைப்பாடு தவறுதான். டிரம்ப், தங்கள் நாட்டுக்கு எது நல்லது என்று பார்த்து அதைச் செய்வதுபோலத்தான் எனக்குப்படுகிறது. அதைக் கொஞ்சம் பாலிஷ்டா செய்யலாம், ஆனால் அங்கும் வாக்கு முக்கியம் இல்லையா?

      தங்கள் நாட்டுக்காரனுக்கு வேலை வாய்ப்பில்லாமல், 'புத்திசாலிகள்' என்று சொல்லிக்கொண்டு பிற நாட்டினரை ஊக்குவிப்பது எப்படி சரியாகும்? அவனவன், தன் மனைவியை (அல்லது கணவனை) கூட்டிக்கொண்டு வந்து அவங்களுக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி-ஏன்னா எந்த சம்பளம் கொடுத்தாலும் இந்தியர்களுக்குப் பெரிசுதான், அங்க உள்ளவங்க வேலைல கைவைப்பது எப்படி ஏற்றுக்கொள்ளப்படும்?

      தமிழகத்திலேயே, மத்திய அரசு வேலைகள் குறைந்தது 85% தமிழர்களுக்குத்தான் (அதுபோல ஒவ்வொரு மாநிலத்திலும்) கொடுக்கணும். இந்த மாதிரி நியாயத்தைத்தான் டிரம்ப் செய்வதாக எனக்குத் தோன்றுகிறது.

      இப்போவே தமிழகத்தில் குறைந்த சம்பளம், அதிக மணி நேரம் பணி செய்வார்கள், லீவு போடமாட்டார்கள், கொடி பிடிக்க மாட்டார்கள் என்பதால் நிறைய நிறுவனங்கள் வட நாட்டினருக்கு வேலை கொடுக்கின்றன (கார்பெண்டர், பிளம்பர் என்று எல்லா வேலைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றனர்). ஒரு காலத்தில் பால் தாக்ரே செய்த மாதிரி, தமிழகத்திலும் எதிர்காலத்தில் அந்த மாதிரி நிலைமை வரும் எனத் தோன்றுகிறது. (இவங்களை வேலைக்கு வைத்திருப்பதே 'டமிளுக்கு பாடுபடும்' அரசியல்வாதிகள் நடத்தும் நிறுவனங்கள்தாம்)

      Delete
    2. @வருண் வாதங்கள் தொடர்ந்தால் விதண்டா வாதங்களே உருவாகும் பின்னூட்டமொருஅரின் கருத்தறிய மட்டுமே என்றே நான் நினைக்கிறேன்

      Delete
    3. நட்டின் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு போய் சம்பாதிப்பது தவறா

      Delete
    4. ***நாட்டின் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு போய் சம்பாதிப்பது தவறா***

      இல்லை, தமிழர்கள் ஈழத்தில் போயி குடியேறலாம், அமெரிக்கா, கனடா மலேசியா சிங்கப்பூர் மற்றூம் ஆஸ்ஹிரேலியா ஜெர்மனி, ஃப்ரான்ஸ்ணு போயி குடியேறீனால் தப்பில்லை. அதேபோல் மும்பை, பங்களூர்னு போயி பிழைப்பு நடத்தலாம், அதே நேரம் பீகார் போன்ற மாநிலங்களீல் இருந்து கூலி வேலை செய்ய் தமிழ்நாடு வந்தால் தப்புனு சொல்றாங்க.

      இன, மொழி, மத உணர்வு அதிகமானாலே, இவர்களால் சிந்திக்க முடிவதில்லை. தனக்கென்றால் ஒரு நியாயம், ஊருக்கு இன்னொரு நியாயம்!



      Delete
  13. ***இப்போவே தமிழகத்தில் குறைந்த சம்பளம், அதிக மணி நேரம் பணி செய்வார்கள், லீவு போடமாட்டார்கள், கொடி பிடிக்க மாட்டார்கள் என்பதால் நிறைய நிறுவனங்கள் வட நாட்டினருக்கு வேலை கொடுக்கின்றன (கார்பெண்டர், பிளம்பர் என்று எல்லா வேலைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றனர்). ***


    அவர்களும் இந்தியர்கள்தானே? இதையெல்லாம் தப்புனு சொல்ல முடியாது. நம்ம மக்கள் போய் மும்பையில் தாராவியில் வாழவில்லையா என்ன?

    சீமான் மாதிரி முட்டாள்கள், மும்பை வாழ் தமிழர்கள். பங்களூர் வாழ் தமிழர்கள முதலில் இங்கே தமிழ்நாட்டுக்கு இறக்குமதி செய்துவிட்டு "நாம் தமிழர்"னு உளறனும்!

    ***//ஏன் ட்ரம்ப் அனுகுமுறயை ஏற்றூக் கொள்ளாமல் எதிர்க்கிறார்கள்?// - வருண் - இந்த நிலைப்பாடு தவறுதான். டிரம்ப், தங்கள் நாட்டுக்கு எது நல்லது என்று பார்த்து அதைச் செய்வதுபோலத்தான் எனக்குப்படுகிறது. அதைக் கொஞ்சம் பாலிஷ்டா செய்யலாம், ஆனால் அங்கும் வாக்கு முக்கியம் இல்லையா?

    தங்கள் நாட்டுக்காரனுக்கு வேலை வாய்ப்பில்லாமல், 'புத்திசாலிகள்' என்று சொல்லிக்கொண்டு பிற நாட்டினரை ஊக்குவிப்பது எப்படி சரியாகும்? அவனவன், தன் மனைவியை (அல்லது கணவனை) கூட்டிக்கொண்டு வந்து அவங்களுக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி-ஏன்னா எந்த சம்பளம் கொடுத்தாலும் இந்தியர்களுக்குப் பெரிசுதான், அங்க உள்ளவங்க வேலைல கைவைப்பது எப்படி ஏற்றுக்கொள்ளப்படும்?

    தமிழகத்திலேயே, மத்திய அரசு வேலைகள் குறைந்தது 85% தமிழர்களுக்குத்தான் (அதுபோல ஒவ்வொரு மாநிலத்திலும்) கொடுக்கணும். இந்த மாதிரி நியாயத்தைத்தான் டிரம்ப் செய்வதாக எனக்குத் தோன்றுகிறது.***

    US media and educated white people are completely against Trump's approach! They do not like dividing or polarizing the people! That's not the case in INDIA!

    ReplyDelete
    Replies
    1. இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றல்ல என்பதே என்எண்ணம்

      Delete
  14. ****அவர்களை பொறுத்த்வரை எல்லாரும் இந்தியர்கள்தான்.****

    தனிமனித உறவுகளாவது பரவாயில்லை நண்பர் ரஹீம், நாடுகளூக்கு இடையே நடக்கும் அரசியல் மிகவும் மோசம். தங்கள் உறவு பலப்படனும்னா யாரை வேணா பலிகொடுப்பார்கள். பொதுவாக நாடுகளூக்கு இடையில் இருக்கும் உறவில் வியாபார நோக்கம்தான் அதிகம்.





    ReplyDelete
  15. உங்களின் பெரும்பாலான கருத்துகளை ஆதரிக்கிறேன் .ஜனநாயகம் நன்கு செயல்பட பலம் வாய்ந்த எதிர்க்கட்சி வேண்டும் .இப்போது அந்த நிலைமை இல்லை மக்கள் தான் ஒரு கட்சிக்கு அபரிமிதமாக வாக்களித்து சர்வாதிகாரத்துக்கு வழ்ஹி வகுக்கிறார்கள் .மோடி சர்வாதிகாரி ஆவதற்கு சாத்தியம் உண்டு ; அப்படி நேர்ந்தால் எதிர் கருத்தாளர்களும் சிறுபான்மையினரும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் .ஆனால் அதைத் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும் .
    யாரையும் முட்டாள்கள் என்பதுபோல் இழித்துரைக்காமல் கருத்து தெரிவிக்கும்படி அன்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பதிவை கவனித்துப்படிக்காமல் எழுதிய வற்றின் சாராம்சம் தெரியாமல் கருத்திடுகிறர்கமோடி சர்வாதிகாரியாக மாறுகிறாஆரோ என்றுதான் எழுதி இருக்கிறேன்இதில் இப்படியும் பின்னூட்டம் /ஜிஎம்பீ சார்.. நீங்களே இந்திய அரசியல் பற்றிய விவரங்களைத் தெரிந்திருந்தால், பின்னூட்டம் போடுகிறவர்களுக்கு ஒவ்வொன்றையும் விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது\ பதிவின் கருத்துபுரியாமல் என்னுடன்நிழல் சண்டைபோடுகிறார்கள் முடிந்தவரை விளக்கு கிறேன் .

      Delete
  16. ராஜீவ் காந்திக்கு அபரிமிதமான எம்.பி. சீட்டுகள் கிடைத்தபோதும், இந்திராவுக்குக் கிடைத்தபோதும் இவ்வாறு சிந்தித்திருக்க மாட்டீர்கள்.உங்களுக்கு பாஜக பிடிக்காது என்பதால், 'வேண்டாத மருமகள் கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்' என்று குற்றம் கண்டுபிடிக்க முனைகிறீர்கள்.இந்த பிரச்சனை உங்களுக்கு மட்டுமல்ல பலபேருக்கு இருக்கிறது. இது ஒருவிதமான மனநோயாகவும் இருக்கலாம் .... சிகிச்சை அவசியம் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பெயரைஉறுதி செய்கிறீர்கள்தீர்ப்பு சொல்கிறீர்கள்

      Delete
    2. ஹா ..ஹா .. நான் பெரியவர்களின் உணர்வுகளை மதிப்பவன் .. அதே வேளையில் எனக்கு சரி எனப்படுவதை எந்தன் அன்பு தாத்தாவிடம் ஒரு பேரனுக்கு உள்ள உரிபையோடு நியாயம் கேட்க உரிமை இல்லையா? ... எனவே என்னுடைய கமெண்ட்கள் எதையும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் .... ப்ளீஸ் ...

      Delete