ஒரு நவீன பாட்டி
--------------------------
நவீன
பாட்டி
பிற
மொழியாளர்களைப்பற்றியே நினைத்துக்
கொண்டிருந்தத்யால் அதன் தாக்கம் அண்மைய பதிவுகளில் தெரிய்லாம் டி பி கைலாசம் என்பவர்பிறப்பால் ஒரு
தமிழர் கன்னட நாடக உலகில்பெயர் பெற்றவர்
முதலில் அவரைப் பற்றி கேள்விப்பட்ட ஒரு anecdot இவருக்கு ஒரு நண்பர் பெயர் கோபால சுந்தரமையர்
அவர் இவரை டிபிகல் ஆஸ் typical ass
என்று கூப்பிடுவாராம் அதகு இவர்
மறுபடியாக பால்ஸ் அண்டெர் மயிர்
என்பாராம்
“நான்
பால் குடிப்பதில்லை. அது நீர் மாமிசம். நான் ஒரு வெஜிடேரியன். ஆகவே ஒரு பெக் மது
அருந்துவேன் “ என்று கன்னட எழுத்தாளர் டி.பி. கைலாசம் அவர்கள் கூறுவாராம். . அதை
ஒட்டி எழுந்த கதை இது படித்துப் பாருங்களேன்
.” பாட்டி இவ்வளவு அருகில்
பேப்பரை வைத்துக் கொண்டு படித்தால் கண்ணுக்குக் கேடு” என்று கூறி பாட்டியின்
கையிலிருந்த “ ப்ரஜாவாணி “ பேப்பரை சற்றே இழுத்தேன்.. பேப்பரை தரையில் வீசி எறிந்தாள்
பாட்டி ” என்ன பாட்டி, படித்தது
பிடிக்கலையா, இழுத்தது பிடிக்கலையா “ என்று
கேட்டேன்.
” படித்ததுதான்
“ என்ற பாட்டி, “ பாலா....!, குழந்தைகள் முட்டை சாப்பிடுவது அவர்கள்
ஆரோக்கியத்துக்கும் , உடல் வலுவுக்கும் நல்லதுதானே”
” நடத்திய ஆராய்ச்சிகள்
அப்படித்தான் சொல்கிறது.. பள்ளிக் கூடங்களில் குழந்தைகளுக்கு முட்டை கொடுத்தால்
எல்லா தரப்புக் குழந்தைகளுக்கும் சமமான உணவு, என்பதும் நல்லதுதானே.” என்றேன்.
” சீருடையில்
மாத்திரம் சமமென்பதைவிட, உணவிலும் சமம் என்றால் மாணவர்களின் ஆரோக்கியத்துக்கும்
நல்லது அல்லவா. ஏழைக் குழந்தைகளுக்கு வீட்டில் முட்டை சாப்பிடுவது முடியாத
காரியமாகும். “
“ பாட்டி, பள்ளியில் முட்டை போடாததன் காரணம் மத
சம்பந்தப் பட்டது ஆனதால்தான் இருக்கும்..அதுதான் பள்ளிகளில் முட்டை கொடுக்காததன்
காரணம்
என்கிறார்கள்
“ மதமாவது கிதமாவது.....! அதெல்லாம் வீட்டுக்குள்
மட்டும்தான் இருக்க வேண்டும். நாளொரு முட்டை உடலுக்கு நல்லது என்று இந்த முட்டைத்
தலையர்களுக்குத் தெரியாதா. மக்களுக்கு நல்லது செய்வதில் இந்த மாதிரி எண்ணங்கள்
கூடாது. இதே ரீதியில் போனால் வெள்ளிக்கிழமைகளில் காலை 11- மணிக்கு புறப்படும்
ரயில்களை “ராகு காலம் “ என்று சொல்லி தாமதப் படுத்துவார்கள் ”என்று போட்டாளே பாட்டி.”.இதையெல்லாம் தடுக்கும் ஜனங்கள் தங்கள்
குழந்தைகளுக்குக் கிடைக்கும் புஷ்டியான முந்திரி, பாதாம் , பேரீச்சை போன்ற உலர்ந்த
பழங்களை கோயில்களில் பிரசாதமாக ஏழைகளுக்குக் கொடுத்தால் குறைந்தா போவார்கள்.” பாட்டி சரியான ஃபார்மில்
இருந்தாள்.
” பாட்டி உங்கள் சளி எப்படியிருக்கிறது..? இப்போது தேவலாமா.?”
. “ சளி பிடித்ததோ, சனி பிடித்ததோ என்று இரண்டு
மூன்று வாரங்கள் ரொம்பக் கஷ்டப்பட்டேன். என்னவெல்லாமோ கஷாயங்கள் மருந்துகள்னு
போதும் போதும் என்றாகி விட்டது. நீ கொடுத்த மருந்து சாப்பிட்டவுடன் அநேகமாக சரியாகி
விட்டது.”
“எனக்கும் முதலில் கொஞ்சம் பயமாக இருந்தது
பாட்டி. இருந்தாலும் பார்க்கலாம் என்றுதான் அந்த வெளி நாட்டுக் கஷாயம் கொடுத்தேன்.
“
“ இரண்டே நாளில் பலன் தந்தது உன் கஷாயம். சரி ....அது என்ன
மருந்தப்பா...”
“ வெளிநாட்டுக் கஷாயம் பாட்டி. இரண்டு ஸ்பூன் ப்ராண்டி....”
” அடப் பாவி மனுஷா.... !
எனக்கு ப்ராண்டியா கொடுத்தே. ?”
“ பாட்டி என்னென்னவோ மருந்தெல்லாம் சாப்பிட்டும் குணமாகாத
உன் சளியும் இருமலும் இரண்டு ஸ்பூன் ப்ராண்டியில் குணமாயிற்று. .சின்னச் சின்ன
விஷயங்களில் பிரச்சனை பண்ணக்கூடாது பாட்டி. குழந்தைகளுக்கு நாளொரு முட்டை
தராதவர்கள் முட்டைத் தலையர்கள் என்றாயே. நல்லது என்று தெரிந்தும் ஏற்றுக் கொள்ளாத
முட்டைத் தலை இல்லையே உனக்கு...!”
அந்த வெளிநாட்டுக்கு கஷாயத்தில் மிளகு தட்டிப்போட்டல்லவா கொடுக்கச் சொல்வார்கள்? மிளகு போடவில்லையா?
பதிலளிநீக்குஎஸ் எல் பைரப்பா படித்திருக்கிறீர்களா?
எதற்கு மிளகு தட்டிப்போட வேண்டும் எஸ் எல் பைரப்பா ஒரு கன்னட எழுத்தாளர் என்பது தெரியும் எனக்கு கன்னடம் தெரியாததால் படித்ததில்லை மொழிபெயர்ப்புகள் ஏதாவது வலையில் கிடைக்குமா
நீக்குகேள்வி ஸூப்பர் பாட்டி பட்டம்மாவால் பதில் சொல்ல முடியாதே...
பதிலளிநீக்குபாட்டியின் எந்தக் கேள்வி என்று சொல்லவில்லையே
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி சார்
நீக்குகொஞ்சம் புரியலை. இத்தனைக்கும் காலையில் வந்து படித்துவிட்டுப் போனேன். :(
பதிலளிநீக்குபுரியாதது ஏதுமில்லை மேடம் இல்லாத ஒன்றை தேடவேண்டாம் வழக்கம் போல் எனக்கு ஒவ்வாத சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறேன்
பதிலளிநீக்குபாட்டியின் கேள்விகள் அருமை...
பதிலளிநீக்குஎன்னதான் கேட்டார் புரியலையே
நீக்குஇங்கு தொழிலாளர்கள் இந்த மருந்தைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
பதிலளிநீக்குநம் மக்களுக்கு எதையும் அளவோடு பயன்படுத்த தெரியாதே
நீக்குஅந்தக் கஷாயம் ஒரு தடவை 'சிப்' பண்ணிப் பார்த்ததுடன் விட்டால் பரவாயில்லை.. அதான் இல்லையே!
பதிலளிநீக்குஅமெரிக்க இந்துக் கோயில்களில் பாதாம், திராட்சை, முந்திரி இதையெல்லாம் தான் பிரசாதமாகத் தருகிறார்கள்!
மருந்தாகத்தானே கொடுக்கப்பட்டது இந்தியா அமெரிக்கா ஆக முடியாதே
நீக்குஒவ்வொருவரது பார்வையைச் சொல்லும் கதை. அதில் வரும் கேள்விகளும் நியாயமாக இருந்தாலும் அந்த கஷாயம் மருந்து என்று சொல்லப்படுவது மருந்தாக இருந்தால் பரவாயில்லை ஆனால் அதுவே இப்போது பலரது வாழ்வையும் கெடுக்கிறதே.
பதிலளிநீக்குசில இருமல் மருந்துகளில் ஆல்கஹால் கொஞ்சம் இருக்கும் என்பது அதிலேயே போட்டிருக்கும்.
கீதா
மருந்தாகத்தான் சொல்லப்பட்டு இருக்கிறது குடியாக அல்ல
நீக்குபடித்து விட்டேன்ன்ன்... எதுவும் கொமெண்ட்ஸ் சொல்ல வருகுதில்லை இப்போ...
பதிலளிநீக்குமனம்புண்படுத்தாதவரை எந்தக் கமெண்டும் ஓக்கேதான்
பதிலளிநீக்கு//மதமாவது கிதமாவது.....! அதெல்லாம் வீட்டுக்குள் மட்டும்தான் இருக்க வேண்டும். நாளொரு முட்டை உடலுக்கு நல்லது என்று இந்த முட்டைத் தலையர்களுக்குத் தெரியாதா. மக்களுக்கு நல்லது செய்வதில் இந்த மாதிரி எண்ணங்கள் கூடாது. இதே ரீதியில் போனால் வெள்ளிக்கிழமைகளில் காலை 11- மணிக்கு புறப்படும் ரயில்களை “ராகு காலம் “ என்று சொல்லி தாமதப் படுத்துவார்கள் ”என்று போட்டாளே பாட்டி.”.//
பதிலளிநீக்குசக்கை போடு போட்டு விட்டார் பாட்டி. ஆனாலும் தான் நடைமுறை படுத்த வேண்டும் என்னும்பொழுது மனதில் பதிந்து விட்டவைகளை மாற்றிக்கொள்ள முடியவில்லையே?
இதைத்தான் ப்ரெயின் வாஷ் என்கிறோமோ
பதிலளிநீக்குஉண்மையிலேயே நவீன பாட்டிதான்.
பதிலளிநீக்கு