Saturday, May 25, 2019

நன்றி நவில்கிறேன்                                    நன்றி நவில்கிறேன்
                                     -------------------------------

 அது என்னவோ தெரியவில்லை இன்று நான் இப்படி இருக்க யார் யாருக்கெல்லாம்   நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்துப் பார்க்க தோன்றியது சிலருக்கு நன்றியை நினைத்துக் கொண்டாலும் அதை ஆவணப்படுத்த் தோன்றியது

வாழ்வில் முதல் முறையாக ஒர் நேர்காணலுக்கு எச் ஏ எல் பயிற்சிக்கு   சென்னையி நெர்காணல்  நாங்கள் நீலகிரி வெல்லிங்டனில் இருந்தோம்வெல்லிங்டனிலிருந்து சென்னை (மெட்ராஸ் ) செல்ல அப்போதெல்லாம் மூன்றாம் வகுப்புக்கு ரயில் சார்ஜ் ரூ.10  என்று நினைவு மெட்ராஸ் போய்வரவும் அங்கு ஓரிரு நாள் தங்கவும்   ரூ 30 க்கு குறையாமல் ஆகும்  என்னதான் முயற்சித்தும் அப்பாவால்  ரூ 15 க்கு மேல் புரட்ட முடியவில்லை நமக்கு கிடைத்த வாய்ப்பு அவ்வாவுதான்  என்று தோன்றியபோது  அதென்ன அப்பாதான் பணம் ஏற்பாடு செய்ய வேண்டுமா நாமும் ஏன் முயற்சிக்கக் கூடாது  என்று தோன்றவே முதலில் மனக்கண்ணில்  தோன்றியவர் பர்மா ஷெல் இன்ஸ்பெக்டர் திரு சுப்பிரமணியம் அவர்களை அவர் வீட்டில் சந்தித்தேன்அவரை நான் மைசூர் லாட்ஜ்  கூனூரில் பணியிலிருந்த்போது பழக்கம் குழந்தே என்று  அன்புடன் கூப்பிடுவார் . என் நிலைமை எடுத்துக் கூறினேன். அவர் என்னை ஆறுதலாகத் தட்டிக் கொடுத்துநான் இண்டர்வியூவுக்கு மெட்ராஸ் செல்ல உதவுவதாகவும் கூறினார். ஈரோடில் அவருக்கு ஒரு வேலை நிமித்தம் செல்ல வேண்டி இருப்பதாகவும் என்னை அவருடைய காரிலேயே ஈரோடு வரைக் கூட்டிச் சென்று, அங்கிருந்து மெட்ராஸுக்குரெயிலில் டிக்கெட் வாங்கி ஏற்றி விடுவதாகவும் கூறினார். எனக்கு மனதில் கொஞ்சம் தெம்பும் உற்சாகமும் வந்தது. அவர் கேட்டுக் கொண்டபடி அவருடைய வீட்டுக்கு காலை பதினொரு மணி அளவில் சென்றேன். அவருடன் அவருடைய காரில் ஈரோடு வரை பயணித்தேன். போகும் வழியெல்லாம் அவர் என்னை எப்படி நேர்முகத் தேர்வை சந்திக்க வேண்டும் என்று பயிற்சி அளித்தார். என்னை கேள்விகள் கேட்டு, நான் பதில் சொல்வதுகேட்டு, என்னை ஊக்கப் படுத்தி, எனக்கு அந்த தேர்வில் வெற்றி கிடைக்கும் என்றும் வாழ்த்தினார். ஈரோடில் என்னை ரயில் ஏற்றியும் விட்டார். ஆக காலணா செலவில்லாமல்  மெட்ராஸ் சென்று விட்டேன் நான்பயிற்சியில் சேரவும் ஒரு நல்ல நிலைக்கு வரவும்  முக்கியமானவராக இருந்தார் அவரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினேன்  இயலவில்லை அவருக்கு என் முதல் நன்றி  வளர்ந்துமுன்னுக்கு வந்தபின்  முகநூல் மூலம் தொடர்பு கொள்ள முயற்சியும் பலன் தரவில்லை

நான் அந்தபயிற்சிக்கு தேர்வானேன்  1955 மார்ச் மாத இறுதியில்  பெங்களூர் வந்தேன்  சில பல காரணங்களால்  பெங்களூரில் தனியே தங்க வேண்டி இருந்தது பெங்களூர் கண்டோன் மெண்ட் ஏரியா எனக்கு பழக்கப்பட்டதே ரயிலில் வந்ததும் ஒரு ஜட்காவண்டி பிடித்து வண்டிக்காரரிடம் எதாவது ஓட்டலுக்குக் கூட்டிப்போகச்சொன்னேன்அவர் என்னை ஓல்ட் புவ்ர் ஹௌஸ்ரோடில் இருந்த ஹோட்டல் அசோகாவுக்குக் கூட்டிச்சென்றார்  ( இப்போது அந்த இடத்தில் ஹோட்டல் காமத் இருக்கிறது))அங்கு ரூம்வாடகையாக ஒரு நாளைக்கு ரூ 40 என்றும் மாத வாடகைக்கு இடம்தருவதில்லைஎன்றும்  கூறினார்கள் என்னிடம்  இருந்ததோ ரூ 15 மட்டுமே  ஜட்காவண்டிக்காரர் நல்லவர் என் நிலை தெரிந்து  இப்ராஹிம்சாஹிப் தெருவில் இருந்த ராஜா ஹோட்டலுக்கு கூட்டிச் சென்றார்அங்கு ஒரு அறையில் நான்கு கட்டில்கள்  ஒரு கட்டிலுக்குமாதவாடகை ரூ 10 /-ஒரு மாதவாடகையைக் கொடுத்து அறையை ஏற்பாடு செய்து கொண்டேன்  தங்குமிடம் எனக்கு ஏதுவாக அமைய உதவிய ஜட்கா வண்டிக்காரருக்கு என்நன்றி

eஎங்கள் பயிற்சி நேரம்   மதியம் 12மணி முதல்  இரவு 8 மணி வ்ரை  ஸ்ரீ ஜெயச்சாமராஜேந்திரா பாலிடெக்னிக்கில் பயிற்சி   போஸ்ட் மான் வரும்போது நான் அறையில் இருக்கமாட்டேன்   ஆனால் எனக்கு ஒரு ரெஜிஸ்டர் தபால் என் தந்தையிடம்  இருந்து வரவேண்டி இருந்ததுஅவர் நான்  எச் ஏ எல்லுக் கொடுக்க வேண்டிய பாண்ட் பத்திரம் என் அப்பாவின் கையெழுத்திட்டு வர வேண்டும்  நான் அறையில் இருக்க முடியாததால் பெங்களூர் தலைமை  போஸ்ட் ஆஃபிஸ் நான் போகும் வழியில் இருந்ததால் அந்த போஸ்ட் மாஸ்டரிடம் ஒரு விண்ணப்பம் வைத்தேன்   எனக்கு வரும் கடிதங்களை c/o post  master என்னும் முகவரிக்கு வரும் என்றும்  அதை  அவர் வாங்கி வைத்தால் நான் பெற்று கொள்ள முடியுமென்றும் சொன்னேன்  அவரும் பெருந்தன்மையுடன் ஒப்புக் கொண்டார்   அந்த உதவியைச் செய்து உதவிய அவருக்கும்  நன்றி இப்போதெல்லாம் அதுபொல் முடியுமா தெரியவில்லைஅவரது உதவியால் நான் எனக்கு வந்த ரெஜிஸ்தர் கடிதம்பெற்று க் கொள்ள முடிந்தது  அரசு உத்தியோகத்திலும் நல்லவர்கள் இருந்த காலம் அது

 இதெல்லாவற்றையும்   விட நான் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருப்பது என் நண்பன் முத்து சாமிக்குதான்   விஜயவாடாவில் இருந்தபோதுஎன் மாமியாரின் தொந்தரவால் பெங்களூரில்  ஒருஇடம் வாங்கினேன்   அப்போதெல்லாம் என் வேலை இருக்கும் வரை க்ம்பனி  எனக்கு வீடோ அல்லது அதற்குண்டான   வாடகைப்பணமோ தருவார்கள் எதற்காக  வீடு கட்ட வேண்டும் என்னும் எண்ணத்தில் இருந்தேன்சராசரிவயது அறுபதுக்கும் குறைவே என்று எண்ணி  முத்துசாமிதான் என்னைவற்புறுத்தி வீடு கட்ட  வைத்தார்   அந்த செயலே இப்போது எனக்குச்சோறு போடுகிறது  மேல்தள வீட்டு வாடகையே என் வருமானம்   எனக்கும் என் மனைவிக்கும் அதுபோதும் என்று தோன்றுகிறது யார் கையையும் எதிர்பார்க்க வேண்டாம்   ஆகவே என் நண்பன் முத்துசாகிக்கான நன்றியை நான் ஆவணப் படுத்துகிறேன்

 எது இருந்து என்ன உடல் என்றால் கூடவே உபாதையும் கூட வருகிறது அதுவும் வயதானால்  கூடவே வரும்  இன்றைய நிலையில்  வரும் உபாதைகளுக்காக  மருந்து செலவு மருத்துவச் செலவு எல்லாமே  நம்கைக்கு எட்டாமல் போய் விட்டது  நல்ல காலம் நான் பணி புரிந்த  பீ எச் இஎல்  நிறுவனம் என் எல்லா மருத்துவச் செலவுகளையும் ஏற்றுக் கொள்கிறது இது ஒரு மிகப்பெரிய ரிலீஃப்  ஆகவே நான் பணி புரிந்த பீ எச் இ எல் நிறுவனத்துகு என்சிரம் தாழ்த்திய நன்றிகள்
எத்தனையோ பேருக்கு நன்றிக்கடன் பட்டிருந்தாலும்  என் மனைவிக்கு பெற்ற கடனுக்கு ஈடாகாது
 இன்னும் யார்யாருக்கெல்லாம்  நன்றி செலுத்துவது  என்று தெரிய வில்லை நான் எழுதுவதற்கு ஊக்கம் தந்த திருஹரணிக்கு நிச்சயம் நன்றிசொல்ல வேண்டும்
பின் என்ன பாருங்கள் எப்படி ஊக்கமூட்டும்  பின்னூட்டம் என்று
பிரமித்துப்போய் நிற்கிறேன். எனக்குச் சொற்கள் கிடைக்கவில்லை உங்களை வாழ்த்த. நன்றாகத் தேர்ந்த பயிற்சியினால் மட்டுமே இதுசாத்தியம். வசனகவிதையில் இராமாயணம் படித்த நிறைவு. குழந்தைகளுக்கு இது எளிமையானது. குழந்தை இலக்கியத்தில் இதனை வைக்கலாம். அதாவது இப்படிப்பட்ட அணுகுமுறையை. அருமை ஜிஎம்பி ஐயா.

உங்களிடம் இருக்கும் பலவித ஆற்றல்களைக் கண்டு சிலிர்த்து நிற்கிறேன். குழந்தை பாடல்போல இதனை சொல்லலாம் நீங்கள். படிக்கிற போது அலுப்பூட்டாது ஆர்வங்குறையாது மனசு நிறைகிறது. எளிமையாக சொல்லுதல் என்பது எளிதல்ல. நீங்கள் வித்தகர்தான்.

அழகான கதைகோர்ப்பு. கதை சொல்லி நீங்கள். இதன் பின்னே உங்களின் கடுமையான அனுபவமும் பயிற்சி மேலோங்கி நிற்கிறது. உங்களிடம் கற்க நிறைய இருக்கிறது. எல்லா புராணங்களையும் இப்படி சொல்லுங்கள். காத்திருக்கிறோம்.

என்னுடைய மனம்நிறை வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.

அற்புதம். வசீகரம். மாயாஜாலம். மனத்தைக் கட்டிப்போடும் சாதுர்யம். நிறைவு. திருப்தி. மகிழ்ச்சிகள்.

 
                            
   


  

40 comments:

 1. நமக்கு உதவியர்களை நினைவுகூரத்தான் வேண்டும். நீங்கள் சொல்லியிருக்கும் சம்பவங்கள் சிறப்பு, நெகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. எதிர்பாராத உதவிகள் மகிழ்ச்சியை கூட்டும்

   Delete
 2. மகிழ்ந்தேன் நெகிழ்ந்தேன் ஐயா

  ReplyDelete
 3. //அரசு உத்தியோகத்திலும் நல்லவர்கள் இருந்த காலம் அது//

  இன்றைய காலம் வேறு.

  நன்றி எப்பொழுதுமே மறக்ககூடாது இது எனது கொள்கை ஐயா.

  தாங்கள் இன்றுவரை நினைவு கொள்வது கண்டு மகிழ்கின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. சென்ற நாட்களையும் கடந்து வந்தபாதையையும் மறக்க முடியுமா

   Delete
  2. இப்பொழுது நல்லவர்கள் யாரும் இல்லை என்கிறீர்களா?. அல்லது நல்லவர்கள் யாரும் தெரியவில்லை என்கிறீர்களா?. மீசைக்கார நண்பரே...

   Delete
  3. அரசுப் பணிகளில் இருப்பவர்கள் நல்லவர்களாக இருக்கும் வாய்ப்பு இல்லை என்றே நினைக்கிறேன்

   Delete
  4. எங்க வீட்டில் அதாவது புகுந்த வீட்டில் பெரும்பாலானோர் மத்திய அரசுப் பணியே! அதிலும் முக்கியமான துறைகளான ராணுவம், சிபி ஐ, பிரதம மந்திரியின் அலுவலகம், விமானநிலைய ஆணையம், ரா எனப்படும் உளவுத்துறை போன்றவற்றில் பணியாற்றியவர்கள்/சிலர் இன்னமும் பணியில் இருப்பவர்கள்! என் மைத்துனர்களில் ஒருவர் நரசிம்மராவுக்கு முந்தைய பிரதமர் காலத்திலிருந்து சமீபத்திய மோதி ஆட்சி வரை உள்ள பிரதமர்களைப் பார்த்திருக்கிறார். என் கணவரும் ராணுவக் கணக்குத்துறை/மத்திய அரசு! வருமானவரித்துறை அதிகாரிகளும் எங்கள் குடும்பத்தில் உண்டு.

   Delete
  5. இந்த அரசியல் வாதிகளுக்கு நெளிவு சுளுவுகளைக் கற்றுக் கொடுக்கிறவர்களே அரசு அதிகாரிகள்தான் என்பதே என் எண்ணம்

   Delete
  6. நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் கூட இல்லை ஒன்றரைக்கால் என்பவர்களிடம் என்ன பேச முடியும்? ஒரு பக்கப்பார்வை உங்களுக்கு! அதிலிருந்து வெளியே வர மறுக்கிறீர்கள். மனதில் ஓர் முன் முடிவை ஏற்படுத்திக் கொண்டு எல்லாவற்றையும் பார்க்கக் கூடாது!

   Delete
  7. அரசுப் பணிகளில் இருப்பவர்கள் நல்லவர்களாகஇருக்கு வாய்ப்பு இல்லை என்று நினைக்கிறேன் என்னும் மறு மொழிக்கு உங்கள்குடும்பத்தில் அரசுப்பணிகளில் இருந்தவர்களின் பட்டியல் தருகிறீர்கள் என் அனுபவப்படிஅரசு அதிகாரங்களில் இருப்பவர் பற்றிய என்கருத்து அதைச் ச்டொன்னால் முயலுக்கு மூன்றுகால இல்லை ஒன்றரைக்கால் என்கிறேன் என்கிறீர்கள்என்முடிவுகளுக்கு என் அனுபவங்களே காரணம்

   Delete
 4. நன்றி மறப்பவர்களும் அதை மறந்து தீமை செய்பவர்களும் நிறையப் பேர் இருக்கிறார்கள் . நீங்கள் செய்ந்நன்றி மறவாப் பண்புடையவர் . பாராட்டுகிறேன் .

  ReplyDelete
  Replies
  1. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு

   Delete
 5. உதவியவர்களுக்கு நன்றி கூறிய உங்கள் பண்பு சிறந்தது.

  ReplyDelete
 6. காலங்கள் கடந்த பின்னும் ஒருவர் செய்த உதவியை நினைவில் வைத்திருந்துப் போற்றும் தங்கள் பண்பு மிகுந்த பாராட்டுக்குரியது.

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு நன்றி மேம்

   Delete
 7. நன்றி நவின்றது சிறப்பு. அதில் குறிப்பிட்டிருப்பவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். தபால் அலுவலகத்தில் இப்போதும் பொதுமக்கள் சேவையில் முன்னணியில் இருக்கின்றனர். தபால் அனுப்புவதிலும், பெறுவதிலும் எந்தவிதமான உதவி தேவை என்றாலும் செய்து கொடுக்கின்றனர். கட்டணமும் அதிகம் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. கட்டண்ம்அதிகமில்லாமல் செய்வது அவர்கள் கடமை

   Delete
 8. அதோடு எந்தச் சின்னஞ்சிறு தபால் அலுவலகத்திலும் சேவை சரி இல்லை எனில் தலைமைத் தபால் அலுவலகத்துக்கு நாம் கொடுக்கும் புகாரின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்கும்/ எடுத்து வரும் ஒரே துறை தபால் துறை மட்டுமே!

  ReplyDelete
  Replies
  1. எனக்கு உத்விய தபால் நிலைய பொறுப்பாளர் எந்தபுகாரின் அடிப்படையிலும் உதவவில்லை மனிதாபிமானமே காரணம்

   Delete
 9. நன்றி மறவாமை மட்டுமல்ல, ஒளிவுமறைவில்லாமல் உணர்வுகளை வெளிப்படுத்தும் உங்களின் குணமும் எனக்குப் பிடித்திருக்கிறது.

  ReplyDelete
 10. ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்துவது என் சுபாவம் ஆனால் பலரும் தவறாகப்பார்க்கிறார்கள்

  ReplyDelete
 11. வாழ்க்கையின் வசதியான நிலையில் பழைய கஷ்டங்களை நினைத்துப் பார்க்க சிலரால் தான் முடியும். அந்த சிலரில் நீங்களும் ஒருவர் என்பதே உங்களுக்கான பெருமை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி என்பது சரியில்லையோ என்கடமை என்று இருக்க வேண்டுமோ

   Delete
 12. படித்து மிகவும் நெகிழ்ந்தேன் ஐயா...

  ReplyDelete
  Replies
  1. நேரில் பலருக்கும் நன்றி கூற இயலவில்லை அதனால் ஆவணப் படுத்தினேன்

   Delete
 13. நன்றி கூறுவது மிகவும் பண்பான செயல்.
  அத்தனைபேரையும் நினைவு கூர்ந்து சொன்னவிதம் மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கூற விட்டுப் போனவர்களும் இருக்கலம் எழுதிய போதுநினைவுக்கு வந்தவர் மட்டும் அல்ல இன்னும்பலருமுண்டு

   Delete
 14. நன்றி சொல்வதோடு, பழைய நினைவுகளையும் பகிர்ந்தமை ரசிக்க வைக்குது.

  ReplyDelete
  Replies
  1. பழைய நினைவுகள் எல்லா சம்பவங்களையும் அசை போடவைக்கிறது நன்றிகூறுவதையும் சேர்த்து

   Delete
 15. சிறப்பான அழகான பதிவு சார். :)

  ReplyDelete
 16. ஒவ்வொன்றிலும் நாங்கள் உங்களிடம் அதிகம் கற்றுக்கொள்கிறோம் ஐயா. அவ்வாறே நன்றி வெளிப்படுத்தலிலும் உங்களை கடைபிடிப்போம்.

  ReplyDelete
 17. பலருமென்கருத்துகளில் இருந்து மாறுபடுகிறார்கள் என்பதே உண்மை

  ReplyDelete
 18. நம்ம வாழ்வில் தெரிந்து, தெரியாமல் எத்தனையோபேர் உதவியிருப்பார்கள். அவர்களுக்கு நன்றி கூறக்கூட அந்தச் சமயம் நமக்கு நினைவிருக்காது.. அல்லது பிற்காலத்தில் அந்த உதவியினால் நம் வாழ்க்கை எப்படி மாறியது என்று புரிபடும்.

  நன்றி சொல்லியிருப்பது சிறப்பு.

  ReplyDelete
 19. பாராட்டாகச் சொல்லி இருப்பது மகிழ்ச்சி சர்

  ReplyDelete
 20. நன்றி மறப்பது நன்றன்று! உங்கள் நன்றி சொல்லியிருக்கும் இந்தப் பதிவும் அதில் சொல்லப்பட்டிருக்கும் நிகழ்வுகளும் நெகிழ்ச்சியானவை. நன்றி சொல்வது என்பது மிகப் பெரிய விஷயம் சார். சிறப்பு!

  கீதா

  ReplyDelete