செவ்வாய், 21 மே, 2019

கடவுளி டம் ஒரு வரம்


                                              கடவுளிடம் ஒரு வரம்
                                              -----------------------------------

ஒரு பதிவில் பொழுது புலர்ந்தது  மெல்லென எழுவீர் என்று  துவங்கி இருந்தேன் 
ஆனல் இந்த அனுபவம் சற்றே  வித்தியாசபட்டது
 கடவுளுடன்  ஒரு உரையாடல் என்று ஒரு பதிவு எழுதி  இருந்தேன்  கடவுளை ஒரு ஓசை வடிவில்தான்  சந்தித்த நினைவு  ஆனால் இம்முறை க்டவுளை நேரில் கண்டேன்
 என்னது கடவுளை  நேரில் சந்தித்தாயா  எப்படி இருந்தார் என்றெல்லாம்   கேட்காதீர்கள் எங்கும் நிறைந்தவன்   ஒரு உருவமில்லாதவன் அவனை ச்ந்திப்பது எளிதா என்ன சிறுவயதிலிருந்தே  கடவுளுக்கு ஒரு உருவம் கற்பித்து அதையே  கடவுளாக பாவிப்பது என்பது நம் ரத்தத்தில் ஊறிய  ஒன்று 
முதலில் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்வதை நிறுத்து.
 
வாழ்க்கையை வாழ். அதை ஆராய்ச்சிசெய்வதே அதை
 
சிக்கலாக்கும்.என்று  அப்போது கடவுள் சொல்லி இருந்தார்
இருந்தாலும் ஆராய்ச்சி செய்வதே பழகி விட்டது அதனால் எந்தபாதகமும்  இதுவரை இல்லை ஒருவரை எப்படி நினைத்துப் பார்ப்பது  இருக்கும் போது இருக்கும் அடையாளங்கள்  இறந்தபின்  என்னவாகும்
 சரி ஐ ஆம்  டைக்ரெஸ்ஸுங் .
கடவுளைக்  கண்டேன் என்று எழுதி இருந்தேன்    எப்படி இருந்தார்  என்னும் கேள்வியும் கூடவே வருமே அதைத்தான் சிறுவயதிலிருந்தே இண்டாக்ட்ரினேட்  செய்யப்பட்ட உருவங்களிருக்கின்றனவே
 அங்க அடையாளங்கள் மனிதர்களுக்கு மட்டுமல்ல கடவுளர்களுக்கும் உண்டு. குழல் வைத்துக் கொண்டிருப்பவன் கண்ணன், முருகனுக்கு வேல், லக்ஷ்மிக்கு தாமரை, சரஸ்வதிக்கு வீணை, பெருவிழிகளுடன் நாக்கைத் துருத்திக் கொண்டிருந்தால் காளி சிவனுக்கு பாம்பு சூலம், கொண்டையில் அரை நிலா இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் படுத்துக் கொண்டிருந்தால் அரங்கன் , நின்று கொண்டிருந்தால் பெருமாள், தவழ்ந்து கொண்டிருந்தால் கண்ணன், கோவணத்துடன் இருந்தால் குமரன். நமக்கு இருக்கும் அங்க லட்சணங்களை கடவுளுக்கும் வைத்து நம்மைப் போல் அவருக்கும் உருவம் கொடுத்து நம்மில் அவரைக் காணும்( அல்லது அவரில் நம்மைக் காணும்) பாங்கு வியக்க வைக்கிறது. உருவமே இல்லாதவன் என்று சொல்லும்போதும் படைப்பின் உருவகமாக லிங்கம் ஆவுடையார் என்று உருவகப் படுத்தி இருப்பார்களோ என்னும் ஐயம் எழுவதுண்டு. இப்படி நினைப்பதே தவறு என்று கூறி அடிக்க வந்தாலும் வருவர். 
 ஆனால் என் முன்  வந்தது நானே  என்னது நீயா  ஆம்  சிறுவயதில் நாராயண குருவின்  புத்தகம் வாசித்திருக்கிறேன் அதில் அவர்
 Every idol in fact is meant to represent  oneself  and in offering a flower fruit or any form of sacrifice, the symbolism is meant to reveal the fact that the subject and the object are one and the same in the act of worship The idol in reality is to be looked upon as a subtle form of  mental equation between the self within and self without.If this worship is understood to be an equation between the two aspects of the self , the seeker and the sought , the subjective and the objective,  one can sit in front of the mirror and say ,"thou art that" and ones own image on the mirror can well serve  as the necessary idol

அப்படி நோக்கும்போது என்னுள் இருக்கும் இறைவனும்  நானே பல உருவங்களில்  வணங்கப்படுபவனும்    நானே என்று என்  இருக்கக்கூடாது கனவில் அப்படித்தான் கடவுளைக்கண்டேன்
வழக்கப்படி அவரும்  “பக்தா உன்பக்திக்கு நான் மெச்சினேன்  என்ன வரம்வேண்டும் கேள் என்றார்
எனக்குத் தோன்றியதெல்லாம் நானே கடவுள் ஆனதால்  எனக்கிருக்கும்  உபாதையைப் போக்க வேண்டும் என்பதே  என்னால் நார்மலாக நடக்க முடியாமல் இருப்பதே குறை அதை நீக்க வேண்டி வரம் கேட்டேன்   கிடைக்குமா தெரியவில்லை  எல்லாம் நம்பிக்கைதானே                          
   


  




24 கருத்துகள்:

  1. நல்லதொரு உரத்த சிந்தனை.

    கடவுள் வரம் தருகிறாரோ இல்லையோ... நம் பாஸிட்டிவ் எண்ணங்களின் சக்தி அந்த வரத்தை அருளலாம்... அதுதான் கடவுள்!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் கடவுளோ என்றிருக்கணுமோ?!

      நீக்கு
    2. நம்பிக்கை உபாதையை நீக்கி விடும்.

      நீக்கு
    3. பாசிடிவ் எண்ணங்கள் என்னை நானே தட்டிக்கொடுக்க உதவும் நன்றி

      நீக்கு
    4. கடவுள் என்பதே ஒரு கான்செப்ட் என்று நினைப்பவன் நான் எப்படியனாலும் கடவுள் நம்பிக்கை பலருக்கும் கஷ்டங்களைத் தாண்டி வர உதவலாம்

      நீக்கு
    5. @மாதேவி நம்பிக்கை எப்போதும் உதவுவதில்லையே மேம்

      நீக்கு
  2. நம்பிக்கையே வாழ்க்கை ஐயா
    நலம் வாழ்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பிக்கை வாழ்வின் ஒருஅங்கம்வருகைக்கு நன்றி

      நீக்கு
  3. உபாதை எல்லாம் தங்களின் நம்பிக்கை மூலம் போகட்டும் ஐயா...

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் கோரிய வரம் கிடைக்கட்டும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்தக் குறையும் மனதை அவ்வளவு வருத்தியதில்லை வருகை மகிழ்ச்சி ஐயா

      நீக்கு
  5. //நானே கடவுள் ஆனதால்...//
    நீங்களே கடவுள் என்பதால் வரம் எல்லாம் கேட்க வேண்டாம்; ''எழுந்து நட...நட...நட'' என்று அவ்வப்போது உங்களுக்கு நீங்களே உத்தரவு பிறப்பித்துக்கொண்டே இருங்கள். நிச்சயம் நடப்பீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதைத்தான் செய்து கொண்டு நாட்களைக் கழிக்கிறேன்

      நீக்கு
  6. உங்கள் நம்பிக்கை உங்களை நடக்க வைக்கும்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதும் நடக்கிறேன் ஆனால் மிகுந்த பிரயாசையுடன்

      நீக்கு
  7. எந்த விஷயமும் இந்த மாதிரி உள ஆராய்ச்சிகளுக்குப் பிறகு அந்த நேரத்தில் காணும் முடிவுகள் மனத்திற்கு நிறைவாக இருக்கும். ஒரு நாள் ஒரு பொழுதில் முடிந்து விடுவது இல்லை இது. இன்னொரு சமயம் சிந்தனைகள் வேறு மாதிரி இட்டுச் செல்லும்.

    ஆனால் கடவுளின் இருப்பைப் பற்றி இப்படி தொடர்ந்து யோசித்து ஆழமான சிந்தனையில் ஆழ்வது என்பது இயலாத காரியம். எதுவும்
    நாம் எடுத்துக் கொள்ளும் பொருளின் நம் சிந்தனை வளர்ச்சிக்கு (அறிவு) ஏற்ப என்று அமைவதால் நிறைவான அடி ஆழத்தைத் தொட்டு விட முடியாது. இது தான் இதில் உள்ளா சிரமம். இந்த சிரமத்தை நம்மை விட அடி ஆழத்திற்குப் போனவர்கள் அஞ்ஞானம் என்பர்.

    கடைசியில் அப்படி ஆராய்ந்தவர்களும் இறைவனின் இருப்பு பற்றிய சிந்தனை நஎன்பது ஒரு நிலைக்கு மேல் ஆழத்திற்குப் போக முடியாமல் 'ஒன்றுமில்லை' (பூஜ்யம்) என்ற நிலையை அடைந்து விடுவதால் இறைவனின் இருப்பு எனபது ஆராய்தலுக்கு அப்பாற்பட்ட விஷயம் என்ற முடிவுகளுக்கு வந்து விட்டனர்.

    அந்த ஒன்றுமில்லை என்பதை நாத்திக வாதத்தின் ஆணி வேராகவும் எடுத்துக் கொண்டு வெறுமையடையும் அஞ்ஞானமும் ஏற்படலாம்.

    ஒன்றுமில்லை என்பதனை எல்லையில்லா பெருவெளியை நிறைத்த ஞானமாகவும் தரிசித்து பேருவகை கொள்ளலாம்.

    வெறுமையடைவதா, பேருவகை கொள்வதா என்பது நீங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டிய விஷயம்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறைவன் இருக்கிறானா இல்லையா என்னும் ஆராய்ச்சி அல்ல நடப்பதில் உள்ள சிரமம் எண்ணங்களை எங்கேயோ இழுத்துச் சென்று விட்டது

      நீக்கு
    2. ஏன் இவ்வளவு அலட்டிக் கொண்டு பின்னூட்டம் போட்டேன் என்றிருக்கிறது. உங்கள் நேரமும் என் நேரமும் இரண்டுமே வேஸ்ட்.

      நீக்கு
  8. "நீங்களே கடவுள்" உண்மையான வார்த்தை! நம்முள் காண வேண்டும் என்பதற்காகவே அவர் பெயர் "கட" "உள்" என்கிறோம். நிச்சயம் உங்கள் கோரிக்கை நிறைவேறும். பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதையே த கிங்டம் ஆஃப் ஹெவென் இஸ் விதின் யூ என்பார்கள் எனக்கு வேண்டி பிரார்த்திக்கும் உங்களுக்கு நன்றி கள்

      நீக்கு
  9. நல்ல சிந்தனை சார். நேர்மறை எண்ணம் கண்டிப்பாக நம்மை வழி நடத்தும். நமக்குள்ளேதான் நல்லதும் கெட்டதும். மனிதன் பாதி மிருகம் பாதி...என்பது போல் எனவே நல்லதை நினைக்க நினைக்க நம் மனமும் நல்லதாகும்...அதைத்தான் கட உள் என்று சொல்ல்லுகிறோம் ...

    கண்டிப்பாக நீங்கள் சொல்லுவதை ஏற்கிறேன் கடவுள் நம்முள் தான். ஸோ உங்கள் வேண்டிய வரம் கண்டிப்பாக நிறைவேறும் சார். நாங்கள் எல்லோரும் உங்களுக்காக பிரார்த்திக்கிறேம்.

    கீதா

    பதிலளிநீக்கு