Saturday, October 12, 2019

என்னைப்போல் ஒருவன்

    இவரைத்தெரிகிறதா
     ---------------------------------
 வாழ்வில் பல பிரகிருதிகளைச் சந்திக்கிறோம் என்னைப்போல் ஒருவனை சந்தித்தால் என்னும் எண்ணம் வந்தது எழுதினேன்

பதிவெல்லாம் எழுதுகிறாயாமே

 “வயதாகிவிட்டதல்லவா.நேரம் போக வேண்டுமே. ஏதாவது

செய்துகொண்டு இருந்தால்பொழுது போகும்தானே.”

 “ கம்ப்யூட்டர் எல்லாம் உபயொகிக்கத் தெரியுமா.?”


 “ எங்கே தெரிகிறது. ...பேரன் புண்ணியத்தில் ஒரு ப்ளாக்

துவங்கி இருக்கிறேன்.அதில் மனதில் தோன்றுவதை எழுதுவேன்

 “ நீ எழுதுவதைபடிக்க வாசகர்கள் இருக்கிறார்களா என்ன.?”


 “ஏதோ பலர் படிப்பார்கள்;சிலர் கருத்தும் எழுதுவார்கள்.”


 “எந்த மொழியில் எழுதுகிறாய்.?”


  “ஏன், தமிழில்தான். “


 “அதுதானே பார்த்தேன்.  ஆங்கிலத்தில் எல்லாம் எழுதத் தனித்


திறமை வேண்டுமே. இல்லாவிட்டாலும் பேரன் சொல்லிக்

கொடுக்கலாமே.உனக்கென்னப்பா...பேரன் சொல்லிக்கொடுத்து

கம்ப்யூட்டர் உபயோகிக்கிறாய். பொழுது போக்குக்காக எழுது

கிறேன் என்கிறாய்.அதைப் படிக்கவும் ஜனங்கள் இருக்கிறார்கள்

என்கிறாய். ஹூம்.!கொடுத்துவெச்சவன் தான்  “
 

   
 “   

33 comments:

 1. இன்னும் நிறைய கேள்விகள் உங்களைக் கேட்டுக்கொண்டு எழுதியிருக்கலாமே...

  உங்கள் எழுத்து ஆர்வம் பாராட்டத் தக்கது.

  ReplyDelete
  Replies
  1. வித்தியாசமாக எழுத முனைகிறேன் பாராட்டுக்கு நன்றி சார்

   Delete
 2. நண்பர்களை சந்திப்பது தனி உவகைதான்.   அதுவும் நாம் இருக்கும் இடத்திலேயே எதோ ஒரு வகையில் நம்மோடு உரையாடுகிறார்கள் என்பது தனிமையைக் கொல்லும் அல்லவா...

  ReplyDelete
  Replies
  1. நண்பர் என்று சொன்னேனா ஏதொ ஒரு கற்பனை

   Delete
 3. புரியலை. உங்களோடு நீங்களே பேசிக்கொண்டதா?

  ReplyDelete
  Replies
  1. என்னைப்பொல் ஒருவன்பேசியதுபோல் கற்பனை

   Delete
 4. ஐயாவின் மனமும், மனமும் பேசியது மணக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. எப்படியோ அர்த்ட செய்து கொள்ளலாம்

   Delete
 5. ரொம்ப ஷார்ட்டா மூடிச்சிட்டீங்களே? இன்னும் கொஞ்சம் தீட்டியிருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. இன்னும் நீட்டினால் அலுத்து விடலாம்

   Delete
 6. பாதிப் பகுதி உங்களை அறியாமலேயே டெலிட் ஆகி அது தெரியாமல் பிரசுரித்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

  ஏற்கனவே வாசித்த நினைவும் மங்கலாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. எடையும் டெலீட் செய்ய வில்லை அறிந்தோ அறியாமலோ

   Delete
 7. பிரகிருதி என்றால் என்ன? எந்த மொழி வார்த்தை அது?..

  ReplyDelete
  Replies
  1. எங்கள் பிறந்த வீட்டிலும் இந்த வார்த்தை அடிக்கடிப் பயன்படுத்துவாங்க...என்ன பிரகருதி இவ...என்றும் பெரிய ப்ரகருதி...இப்படி எல்லாம் பயன்படுத்துவாங்க..

   கீதா

   Delete
  2. प्रुक्रुती = nature = இயற்கை என்னும் பொருளில் வரும். ஹிந்தி, வடமொழி இரண்டிலும் ப்ரக்ருதி தான் இயற்கைக்கு.

   Delete
  3. प्र्क्रुती என வந்திருக்கணும். தப்பு வந்திருக்கு ப்ருக்ருதி என எழுதிட்டேன். :))))

   Delete
  4. ஹிந்தியில் இயற்கைக்கு ‘குத்ரத்’ (kudrat) என்றொரு வார்த்தையும் உண்டு. புழக்கத்தில் இருப்பதுதான். உதா: குத்ரத் கி கமால் ஹை! -என்பார்கள். இயற்கை செய்யும் விந்தை என்கிற பொருளில்.

   Delete
  5. கேள்வியே பிரகிருதி பற்றியது பரவாயில்லை ஒரு ஹிந்தி வார்த்தை தெரியக் கிடைத்தது நன்றி

   Delete
 8. பிரகிருதி அநேகமாக தமிழ் பழகு மொழியாய் இருக்க வேண்டும் அங்கிலத்தில் காரக்டர் என்னும் அர்த்தத்தில் வரலாம்

  ReplyDelete
  Replies
  1. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் நம்மாழ்வார் பாடிய (பத்தாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 10) பாடலில்

   மங்க ஒட்டு உன் மா மாயை திருமாலிருஞ்சோலை மேய
   நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
   பொங்கு ஐம்புலனும் பொறி ஐந்தும் கருமேந்திரியம் ஐம்பூதம்
   இங்கு இ உயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே

   பிரகிருதி என்ற சொல் வருகிறது. பிரகிருதி என்பதற்கு மூலம்/இயற்கை என்று பொருள். ஆனால் பேச்சு மொழியில் ஒருவரைக் குறிப்பிடும்போது பிரகிருதி என்று சொல்வதுண்டு

   Delete
  2. ஜிஎம்பீ சார்!

   சரியான ப்ரகிருதி என்றால்?..

   Delete
  3. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்

   Delete
 9. சார் நாமே நமக்கு நல்ல நண்பர்தான் அந்த ரீதியில் உங்களுடனேயே நீங்கள் கேள்வி கேட்டு பதில் சொல்லி என்று நல்லாருக்கு சார். பாதியிலேயே நிறுத்தியது போன்றும் இருக்கு

  உற்சாகத்துடன் எழுதுவதே ஒரு நல்ல விஷயம் தானே சார்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. கேள்வி கேட்பவர் கேட்கும் தோரணையில் ஏதோ பொறாமை உணர்ச்சி தெரிகிறது இல்லையா பலரும் இருக்கிறர்கள் இது போல் அனால் பின்னூட்டம் எழுதியவர்கள் பலருமெனக்குள் நடக்கும் சம்பாஷணை என்றே கருதி விட்டார்கள்

   Delete
 10. ஐயா, நீங்கள் கொடுத்துவைத்தவர்தான். உங்கள் எழுத்துகளைப் படிக்கும் நாங்களும் கொடுத்துவைத்தவர்கள்தான். பல அனுபவங்களை உங்கள் எழுத்தின்மூலமாகப் பெறுகிறோம்.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக நான் கொடுத்து வத்தவந்தான்

   Delete
 11. தங்கள் கேள்வி - பதில்
  எம்மைச் சிந்திக்க வைக்கிறது, ஐயா!

  ReplyDelete
  Replies
  1. கேட்கும் முறையில் வித்தியாசம்தெரியவில்லையா

   Delete
 12. மெய்தான் ; எத்தனை முதியோருக்கு இந்த மாதிரி பொழுதுபோக்கு வசதி இருக்கிறது ?

  ReplyDelete
 13. பொழுது போக்கு வசதி மட்டும் போதுமா அள்ள அள்ள எழுத விஷயங்கள் தோன்றவேண்டுமே

  ReplyDelete
 14. இப்படித்தா நா ந் ஏதோ எழுத யர்யருக்கோ பல வித சந்தேகங்கள் நான் என் கதை ஒன்றில் எழுதி இருந்த ஆரொகணித்து என்னும்வார்த்தை வேறு ஒரு நண்பருக்கு ஒரு எழுது பொருளாகி விட்டது

  ReplyDelete
 15. //..ஏதாவது செய்துகொண்டு இருந்தால் பொழுது போகும்தானே.//

  எதுவுமே செய்யாவிட்டாலும் பொழுது போகுமே .. அது நிற்காதே !

  ReplyDelete
 16. ஓ அப்படிச் சொல்கிறீர்களா

  ReplyDelete