இவரைப்போல் பார்த்ததுண்டா
-------------------------------------------------
நம் வாழ்க்கையில் பலதரப்பட்ட
மனிதர்களைக் காண்கிறோம் எடுத்துகாட்டாக சில உதாரண புருஷர்கள் பற்றி பதிவிட்டு வருகிறேன்அண்டப்புளுகன் ஆகாசப் புளுகன் என்றெல்லாம் கேட்டிருக்கிறோம் without batting an eye lid சிலர் புளுகுவார்கள் இவர்கள் செய்வது யாருக்கும் தெரியாது என்றும் எண்ணுவார்கள்
பதிவுலகிலும் சிலரது விசேஷக் குணங்கள் தெரியவரும்
புரிந்ததை ஒன்றுமே புரியாததுபோல் நினைப்பது தெரிய வராது என்று எண்ணுவார்கள் ஏனோ சிலருக்கு மற்றவரின் எண்ணங்களுக்கு க்ரெடிட் கொடுக்க வேண்டும் என்றே தோன்றாது இன்னும் இது பற்றிஎழுதினால்
மற்றவர்கள் நினைப்பது தெரிந்து விடும். நமக்கேன் பொல்லாப்பு இப்போதைக்கு புளுகர் பற்றிய ஒரு பதிவு இடம்பொருள்
ஏவல் கருதி ஐடெண்டிடி மறைக்கப்பட்டு இருக்கிறது
“நான் போனவாரம் FRANKFURT-ல் இருந்து LONDON-க்கு FLIGHT-ல்
வரும்போது டாக்டர் கிருஸ்டியன் பார்னார்ட் அவர்களை
சந்தித்தேன்.”
“யாரு..? உலகிலேயே முதன் முதலில் இருதய மாற்றுச் சிகிச்சை
செய்தாரே அவரா.?”
“ஆம் .அவரேதான். நான் BHEL-ல் வால்வ் டிவிஷனில் முதன்மைப்
பொறுப்பில் பதவியிலிருக்கிறேன் என்று சொன்ன போது
அவருக்கு இருதய சிகிச்சைக்கு வால்வ் தயாரித்துக் கொடுக்க
முடியுமா என்று கேட்டார். நானும் இப்போது BUSY SCHEDULE-ல்
இருப்பதால் கொஞ்சம் அவகாசம் கேட்டிருக்கிறேன் “
“நான் போனவாரம் FRANKFURT-ல் இருந்து LONDON-க்கு FLIGHT-ல்
வரும்போது டாக்டர் கிருஸ்டியன் பார்னார்ட் அவர்களை
சந்தித்தேன்.”
“யாரு..? உலகிலேயே முதன் முதலில் இருதய மாற்றுச் சிகிச்சை
செய்தாரே அவரா.?”
“ஆம் .அவரேதான். நான் BHEL-ல் வால்வ் டிவிஷனில் முதன்மைப்
பொறுப்பில் பதவியிலிருக்கிறேன் என்று சொன்ன போது
அவருக்கு இருதய சிகிச்சைக்கு வால்வ் தயாரித்துக் கொடுக்க
முடியுமா என்று கேட்டார். நானும் இப்போது BUSY SCHEDULE-ல்
இருப்பதால் கொஞ்சம் அவகாசம் கேட்டிருக்கிறேன் “
இப்படிச் சொல்லியிருப்பவர் யார் என்று யோசிக்கிறேன்! பி ஹெச் இ எல் என்பதால் சுஜாதாவோ.. அவர் நடை இப்படி இருக்காதே...
பதிலளிநீக்குதலைப்பை பார்க்கவில்லையா ஸ்ரீ ஐடெண்டிடி மறைக்கப்பட்டிருக்கிறது என்றவுடன் அதுபற்றிய அனுமானங்கள்
நீக்குசுஜாதா இருந்தது BHEL இல்லைனு நினைக்கிறேன். அவர் இருந்தது ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் என நினைக்கிறேன். அவர் படிச்சதே விமானம் பற்றித் தானே.
பதிலளிநீக்குஸ்ரீராம் ஒரு அனுமானத்தில் எழுதினார் என்றால் நீங்களுமா
நீக்குஇது என்ன சார் புதிரா? அப்படின்னா விடை தெரியல :((
பதிலளிநீக்குநம் வாழ்க்கையில் இது மாதிரியான மனிதகளை சந்தித்து இருக்கிறீர்களா என்று தானே கேட்டிருக்க்றேன் புதிர் எங்கே வந்தது
நீக்குசுஜாதா இருந்தது BEL என்று நினைக்கிறேன். Bharat Electronics Limited.
பதிலளிநீக்குசுஜாதா பற்றிய அனுமானங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி கௌதமன் சார் அதிசயமாக என்பதிவுக்கு வந்திருக்கிறார் சுஜாதா பாரத் எலெக்ட்ரனிக்சில் டி ஜி எம் ஆக பணிபுரிந்தவர் ஒஉழக்கத்தில் இருக்கும் எலெக்ட்ரானிக் வோடிங் மெஷினை வடிவமைத்தவர்களில் ஒருவர்பதிவில் கண்ட நபர் ஒரு கற்பனை பாத்திரம் அதே மாதிரி குணங்களிருப்ப்வர் சிலரைத்தெரியும் வருகைக்கு நன்றி
பதிலளிநீக்குநன்றி சார்!
நீக்குநானல்லவா நன்றி சொல்ல வேண்டும்
நீக்குஎவ்வளவோ யோசித்தேன். கண்டுபிடிக்கமுடியவில்லை.
பதிலளிநீக்குஎதையும் கண்டு பிடிக்கக் கேட்கவில்லையே பதிவில் கண்டவர் போல் பார்த்திருக்க வில்லை என்கிறீர்களா
பதிலளிநீக்குபுரூடா விட்டுக்கொண்டே வாழ்பவர்கள் பலரும் உண்டு ஐயா.
பதிலளிநீக்குஇவர்கள்புளுகு எத்தனை நாட்களுக்கு என்றுநினைக்கிறீர்கள்
நீக்குஇப்படிக்கூடப் பொய் சொல்வார்களா ? கெட்டிக்காரன் புளுகாய்த் தெரியவில்லையே ?
பதிலளிநீக்குஇவை பதவியிலிருந்தால் என்ன வேண்டுமானாலுசொல்லலாம் என்னு நினைப்பு
பதிலளிநீக்குஇவர்களை என்ன என்று சொல்வது.
பதிலளிநீக்குஇவர்கள் சொல்வது பொய் புளுகு புருடா என்று தெரிந்துகொண்டால் சரி
பதிலளிநீக்குஇதைப் போன்ற மனிதர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன். இதில் வேடிக்கை என்னவென்றால் பொய் சொல்லி, சொல்லி, அவர்கள் சொல்லும் பொய்யை அவர்களே நம்ப ஆரம்ப ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் மற்றவர்களுக்கு தெரியும் இவர்கள் சொல்வது பொய் என்பது.
பதிலளிநீக்குஅவர்களைப் பேசவிட்டால் நிறையகேட்கலாம்
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குஇவர் போன்ற பலரை பணியில் இருக்கும்போது சந்தித்திருக்கிறேன். இப்படிப்பட்டவர்கள் தங்களுக்கு எதிரே இருப்பவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்றும் தான் சொல்வதை நம்பிவிடுவார்கள் என்றும் நினைத்துக்கொண்டு புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிடுவார்கள்.
பதிலளிநீக்குவங்கியில் மேலாளராக பணியாற்றும்போது வங்கியில் கடன் பெற்று மாதாந்திரத் தவணை கட்டாத வாடிக்கையாளர் ஒருவரை சந்தித்து ஏன் தவணைத் தொகையைக் கட்டவில்லை என்று கேட்டபோது அவர் தனக்கு வங்கியின் தலைவர் மேலாண்மை இயக்குனரைத் தெரியும் எனக் காட்டிக்கொள்ள, நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் ‘நேற்றுதான் உங்கள் வங்கியின் தலைவரை பெங்களூர் விமான நிலையத்தில் சந்தித்து சந்தித்து நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தேன்.’ என்றார்.
உடனே நான் ‘எங்கே சந்தித்தீர்கள்? சொர்க்கத்திலா இல்லை நரகத்திலா?’ என்று கேட்டபோது விழித்தார். ‘நீங்கள் குறிப்பிட்ட தலைவர் இறந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. என படிக்கவும் அதனால் தான் கேட்டேன்.’ என்று நான் சொன்னதும் அவர் முகம் போன போக்கைப் பார்க்கவேண்டுமே!
சரியான மூக்குடைப்பு எதிர்பார்திருக்க மாட்டார்
பதிலளிநீக்கு