Monday, August 30, 2021

கோர்வை இல்லா எண்ணங்கள்

 



கோர்வை யற்ற  எண்ணங்கள் 



இதுவேஎன் கடை பதிவு  என்று எழுதி இரண்டுஒன்றரை  மாதங்க ளுக்கு  மேல் ஆகி றது  சரி எதையாவது எழுதலாம்  என்றால்தட்டச்சு செய்வதே பெரியபாடாகி இருக்கிறது

என் எழுத்தே பெரும்பாலும்என்அனுபவஙகளாகளாகவே இருக்கும்

தாயின் முகம் கண்டறியாத நான் என் தாரத்தைதான்தாயாக  உண்ர்கிறேன் ஏன் தாயினும் மேலாகவே நினைக்கிறேன்ஆனால் ஒரு   விஷயம்பகிர்ந்தே ஆக வேண்டும்we are poles apart  n our approach to life Perhaps being oppooite poless  attract usநான் உண்மை மட்டுமே  எழுதுபவன் என்பதால்ராண்டம் தாட்ஸ் எழுதலாம்  என்று இருக்கிறேன்

இப்போய் கொரோனா காலம் என்பதால் என்வீட்டு ஃபுட்



 ல்  லில்லி  பூவை கொரோனா பூ என்று அழைக்கலாம் தானே

எங்கும் எதிலும் சந்தேக படுபவன் நான் அதலால் ஆண்களுக்கு எத்தனை  வ்யது வரை ஆண்மை இருக்கும்  சிவ சங்கர் பாபாவுக்கு  ஆண்மை சோதனை  செய்யப்பட்டதாக  செய்திகளில்  பார்த்தேன்  

கனவு காண எனக்கு பிடிக்கும் அப்துல் கலாமெதற்கு  கனாக்காணகூறினாரொ  தெரியாது  ஆனால் நான் கனா காண விழைவது கனவில் நான் என் இயலாமைகள் எதுமிலாது ஒரு சராசரி மனிதன்போல் நடப்பேன் ஓடுவேன்ஏன் பற்க்கவும் செய்வேன்

வாழ்க்கை பாடம்


             
ஆடிவரும் மைந்தன் ஓடிவரக் கண்டு 

              ஓடிவந்தால் வீழ்ந்து விடுவாய் -காயம் படும் 

              கவனம் கவனம் என்றே பதறினாள் 

              ஒன்றே நன்றெனப் பெற்றெடுத்த  தாய்

 

இன்று நான் பள்ளியில் பந்தயத்தில் 

வென்ற நாள் நானே முதல்வன்நானே முதல்வன் 

எனை வெல்ல இங்கு யாருமில்லை என் வேகம் அதிவேகம்.

அப்பாஉன்னையும் நான் வெல்வேன் 

பந்தயத்தில் என்னோடு  ஓட நீ தயாரா.?

என்றே கேட்ட மகனிடம்

 

              ஆறு வயதுச் சிறுவன் நீ ஒன்றும் அறியாத பாலகன் 

 உன்னோடு நான் ஓடினால் நானொன்றும் அறியாதவன் 

              என்றென்னைப் பழிப்பார்கள் நானில்லை ஓடுவதற்கு 

               என்னிடம் நீ தோல்வி காண விருப்பமில்லை எனக்கு 

               என்றே அப்பனும் மழுப்பிட 

 

ஒப்புக்கொள் உன்னால் ஓடமுடியாது

ஓட்டத்தில் என்னை வெல்ல முடியாது என்றே

தன கீர்த்தி நிலை நிறுத்த சவாலுக்கு அழைத்தான் மகன்.

 

              மகனை ஓட்டத்தில் வெல்ல விட மகிழ்ச்சிதான்

              இருந்தாலும் வாழ்க்கைப் பந்தயத்தில் பங்கு பெற

              இதையும் ஒரு பயிற்சியாகக முயற்சிப்போமே

              என்றே மகனைப் பெற்றவனும் முனைந்து வந்தான்.

 

ஒடுகளமும் தூரமும் ஒழுங்காக நிர்ணயிக்கப்பட 

ஓட்டமும் துவங்க இலக்கு நோக்கி முன்னேறினான் தந்தை

அப்பனை முந்தவிட்டால் நாம் தோற்போம் ,அது 

நடக்கக் கூடாது என்றே வேகமெடுத்தான் சின்னவன்

அன்னவனை சற்றே முந்தவிட்டும் பின் தான் முந்தியும்

பந்தய நுணுக்கங்கள் நன்றாய் புரிய விட்டபின்

மகனை வெல்ல விட்டான் ,மகனின் வெற்றியில் 

மனம் மகிழ்ந்து தோற்று நின்றான் தந்தை.

 
             
என்னை வெல்ல இங்கு யாராலும் முடியாது

             நானே முதல்வன், நானே முதல்வன் என்றே 

             முழங்கி ஓடிய மகனைப் பரிவுடன் கண்ட தந்தை 

             தன்னையும் அறியாமல் தன தந்தையை எண்ணினான்

 

இதுபோல் தானே அன்றொரு நாள் என்

இதுபோல் தானே அன்றொரு நாள் என்

 

தந்தை என்னை ஓடவிட்டு தன தோல்வியில்

மகிழ்ந்தபோது நானும் எண்ணினேன்.

தோல்வி கண்டு துவளாது வெற்றியைத் துரத்த

என்னை முந்தவிட்டு ஊக்குவித்த தந்தையின்

அன்பும் நேசமும் அன்று அறிந்திலேன் இன்று 

உணர்கிறேன் என்று எண்ணவும் அவன் இதழ்களில் 

விரிகிறது ஒரு முறுவல்கண்களில் கசிகிறது இரு துளிக் கண்ணீர்




எப்படி இருந்த நான் எப்படி ஆகி விட்டேன் 




============================================  

 

 

 

       

 

 

 

 

16 comments:

  1. வெல்கம் பேக் ஸார்...   உங்களை தன்னம்பிக்கையுடன் பார்க்கவே விருப்பம்.  எப்படி இருந்த நான் வரிகளை எடுத்து விடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு அன் நம்பிக்கை இல்லையா தைர்க்க முடியதவை அனுபவிக்கப்பட வேண்டும் என்படும் தெரிந்தவன் நான்

      Delete
  2. நம்மால் இயலாத விஷயங்களைத்தான் கனவுகளாக காண்கிறோம்.  ஆழ்மன நினைவுகள்தானே கனவுகள்?   எல்லோரும் கனவு காண்பார்கள். 
     
    கவிதை வரிகளை ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆனால் கனவுகள் வேறு படும்

      Delete
  3. கவிதையை ரசித்தேன்....

    வாழ்க்கை, காலம், நம்மை எப்படி எப்படியோ மாற்றுகிறது. முடிந்தபோதெல்லாம் எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. சமாதானம் செய்து கொள்ள லாம்

      Delete
  4. வெல்கம் பேக் சார் வாழ்க வளமுடன்

    ReplyDelete
  5. வணக்கம் வாழ்க வளமுடன்

    கவிதை அருமை.
    குழந்தைகளின் வளர்ச்சி தந்தைக்கு மகிழ்ச்சிதான்.

    முடிந்த போது கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வைத்து கொள்ளுங்கள் . சேர்ந்த மாதிரி தொடர்ந்து டைப் செய்ய கஷ்டமாக இருந்தால்.



    ReplyDelete
    Replies
    1. கற்பனை வளம் குறைகிறதே

      Delete
  6. இதையும் பாருங்கள். வயதாவதை தடுக்க முடியாது. ஆனால் அதை பயனுள்ளதாக ஆக்க முடியும். 

    https://www.pbs.org/wnet/religionandethics/2013/08/16/august-16-2013-buddhist-teachings-on-aging/19708/

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. படித்தேன் தெரியாதவை பயனுள்ளா தாக்க உடல்நலம் வெண்டும்

      Delete
  7. வலையுலகிற்கு மீண்டும் வந்த தங்களை வருக வருக என வரவேற்கிறேன்
    தொடர்ந்து எழுதுங்கள் ஐயா
    எழுத்து தங்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டும்

    ReplyDelete