புதன், 27 அக்டோபர், 2021

கொலு பொம்மை கள்

நவராத்திரி கொலு வைக்கவேண்டுமென்று என் ஐந்து னைந்து வயது மகன் பிடிவாதம் பிடிக்க சென்னை குறள்க்திலிருந்து நிறைய பொம்மைகள்வாங்கி வந்து ஆரம்பித்த கொலு வைக்கும் வழக்கம்  2014 வரை நிடித்தது  படிக்ட்டுவதுபரணில் இருக்கும்பொம்மைகளை அடுக்கிவைப்பது போன்ற வேலைகள் அடியேனுடையதுவயது ஏற  ஏற் அது பலசிரமங்களைதர படிப்படியாக கொலு வைப்பது நின்றது   கொலு வைக்கும்ஆர்வமுள்ளவர்களுக்கு  பொமமைகளைக் கொடுத்து விட்டாள் என் ம்னைவி      
நாங்கள்விஜயவாடாவில்  இருந்தபோது அருகே இருந்த கொண்டபள்ளி பொமைகளுக்கு  பெயர்போனது விஷய்ம் என்னவென்றால் அவர்கள் தக்கையான் மரங்களில் பொம்மைகள் செய்கிறார்கள் அவற்றில் தசாவதார பொம்மைகளும் கீதாஉபதேச  பொம்மையும் மிஞ்சின இன்னுமிருக்கின்றன

முதலில் மரப்பாச்சி பொம்மைகளும்பிறகு கும்பபொம்மையும் படி ஏறுவர் றூ

 பொம்மைகள்  ஷோகேசில் இருக்கின்றன    

வியாழன், 21 அக்டோபர், 2021

படம் பார்க்கசிபாரிசு

நமது பதிவர்களில் சிலர் தொலைக்காட்சி நிகழ்ச்ச்சிள்பார்ப்பதையே தவிர்ப்பதாக் றுவதில்பெருமை கொள்கின்றனர்  அவர்க்ள் அண்மையில்  வெளிவந்த ஒரு பக்க கதை மற்றும் கமலி FROm நடுகாவிரி பொன்ற் ந்க்ழ்ச்சிகளை வெகுவாகவே மிஸ் செய்தவர்கள்

ஆண்  பெண் சேர்க்கை  இல்லாமலேயே குழந்தை  பிறக்கக் கூடும் என்கின்றனர்அப்படி பிறக்கும்  குழந்தை  ஒருஅவதாரமக் கருதிவளர்க்க்கின்ற்னர்

கதை சில இண்டெ ரெஸ்டிங் கேள்விகளை எழுப்புகிறது ஆண்பெண் சேர்க்கை இல்லாமல் குழநதை பீற்க்ககூடுமா  வெறும்  கற்பனயா

கமலி ஃப ரம் நடுகாவேரி ஒரு நல்ல படம் கதையை நன்கு ட்ரிட்செய்திருகிறர்க்கள்யரும் கதை எழுதலாம் எப்படி ட்ரிட் செய்வது  என்பதே கேள்வி

இரண்டு படமும் பர்க்காதவர்க்ள் தேடிப் பிடித்து பார்க்கலாம்

புதன், 13 அக்டோபர், 2021

முருகனிடம் ஒரு கேள்வி

முருகா நீ அப்பாவியா
 
ஈசானம், தத்புருஷம், வாமனம்,

அகோரம், சத்யோஜாதம், அதோமுகம்-எனும்

ஈசனின் ஆறுமுக நுதல் கண்களீன்

தீப்பொறிகளாய் வெளியான ஆறுமுகனே

எனை ஆளும் ஐயனே, உனைக் குறித்து

எனக்கொரு ஐயம் எழுகிறது.

அஞ்சு முகம் தோறும், ஆறுமுகம் காட்டி,

அஞ்சாதே என வேலுடன் அபயமளிப்பவனே,

கனி கொணர்ந்த நாரதன் ஈசனே ஞாலம் என ஓத

விரும்ப ,அது உணர்ந்த ஆனைமுகன், அம்மை

அப்பனை வலம் வந்து கனி கொண்டான்.

நீயோ மயிலேறி பூவுலகை வலம் வந்து ,

கனிகிட்டாக் கோபத்தில் மலையேறி நின்றனை.

பரமனுக்கே ப்ரணவப் பொருளுரைத்திய

தகப்பன்சாமி நீயென்ன அப்பாவியா.?

ஈசன் சக்தியல்லால் வேறெதாலும் அழிக்கமுடியாத

சூரன், ஆணவம் மிகக் கொண்டு இந்திராதி தேவர்களுடன்

ஈரேழு உலகையும் கட்டுக்குள் வைக்க, அவனை அடக்கி

தேவர்கள் விடுதலை பெற அத்தனின் சக்திகள் அத்தனையும்

பெற்று , அருள் அன்னையின் சக்தி வேலையும் பெற்று,

போரில் அண்டமும் ஆகாசமாய் ஆர்பரித்து மரமாய் நின்ற

சூரனைசக்திவேலால் இரு பிள வாக்கினை.. அழித்தவனை

சேவலாய் மயிலாய் ஆட்கொண்ட நீயென்ன அப்பாவியா.?

மாயை உபதேசம் கொண்டு ஈசனிடம் வரம் பெற்ற சூரனை

ஆட்கொண்ட சரவணா, பரிசிலாக இந்திரன் தன் மகள்

கரம் பிடித்துக் கொடுக்க, அதனை மனமுவந்து ஏற்ற நீ அப்பாவியா

இல்லை சரவணப் பொய்கையில் உன் கரம் பிடிக்கத் தவம்

செய்த அவள்தான் இவள் என்றுணர்ந்து மணந்த மணவாளா,

ஏதுமறியாப் அப்பாவியாக இருக்கும் என் நாவில் வந்தமர்ந்து

ஆட்டுவிக்கும் நீ நிச்சயமாக அப்பாவி  அல்ல

எமக்காக வேஷம் போடுகிறாயோ   அதிகம்பறக்க        இயலாதமயிலேறீஞா லம்   வரத் துணிநத  உன்  செயல் என்னைக்  கேட்க  வை க்க்றது 

வெள்ளி, 8 அக்டோபர், 2021

கேசாதி பாதம் கண்ணன்

 காதலியின் கேசாதி பாதம் வர்ணித்து எழுதிய நான் கண்ணனை கேசதி பாதம் வர்ணித்து  எழுதியது நாராயணியத்துக்கு நன்றி 

 கண்டேன் நான் கண்ணனைகார்மேக வண்ணனைக்

குருவாயூர் கோவில் நடையில்

கருநிறம் சுருட்டைமுடி

ரத்தினம் பதித்த தலையணி

மயில் பீலி செருக

வெண்ணிறப் பிறை நெற்றி ,

மேல்நோக்கி இடப் பெற்ற

குறியுடன் முடியும்

நெற்றியும் கண்ணாரக்

( கண்டேன் நான் கண்ணனை )

விபுவே.!அசைகின்ற புருவங்கள்

அடியில் அருள்தரும் உன் கண்கள்

ஒளிவீசி என் அகம் குளிர்விக்கக்

( கண்டேன் நான் கண்ணனை )

எடுப்பான நாசி கண்ணாடிக் கன்னங்கள்

சுடரிடும் மகர குண்டலங்கள்  அசைந்தாட,

ஒளிவீசும் முத்துப் பற்கள் செவ்விதழ்களின்

நடுவே பளீரிடப் புன்னகைக்கும் உன் முகம்

( கண்டேன் நான் கண்ணனை )

இரத்தினம் பதித்தக் கை வளைக் குலுங்க

செந்தளிர் விரல்கள் மீட்ட

வேணுகானம் காற்றில் தவழ

நாத கீதந்தனில் எனை மறந்து

( கண்டேன் நான் கண்ணனை )

மென் கழுத்தில் மணிமாலைகள்

மலர்மாலைகள் தொங்க

நிற மாலைகளில் வண்டினம் வந்தாடக்

( கண்டேன் நான் கண்ணனை )

சந்தண மணம் பரப்பும் உன்

திருமேனியில் உலகமே  ஒன்றியிருந்தும்

மெல்லிடையோய் பொன்னிறப் பட்டாடையுடன்

கதிர் பரப்பும் மணி அரைஞாணின்

சலங்கைகள் சல சலக்கக் கண்டு

நீலவண்ணக் கண்ணா எனை மறந்து

( கண்டேன் நான் கண்ணனை )

அழகு தொடை இரண்டும் பருத்தவை

அழகுடன் உறுதியும் கலந்தவை

மனம் மயக்கும் கலங்கடிக்கும்

எனவே பட்டாடை மறைத்தனவோ

காணும் கணுக்கால்பிடித்து வணங்கக்

( கண்டேன் நான் கண்ணனை )

உன் கழலடி தொழலே இன்பம்

அறியாமையில் மூழ்கியவர்களை

மந்தார மலையை உயர்த்தும் ஆமைக்கு

ஒப்பாக உள்ளது உன் நுனிக்கால்

அடைக்கல மடைந்த  என் அறியாமை

துன்பங்கள் களைய வேண்டியே

( கண்டேன் நான் கண்ணனை )

குருவாயூரின் தலைவனே அருட்கடலே

கிருஷ்ணா.! உன் உறுப்புகளில் திருவடிகளே

சிறந்தவை மோட்சம் தருபவை தலைவைத்து

பற்றவே வந்த எனைக் காத்தருளக்

( கண்டேன் நான் கண்ணனை.)

ஞாயிறு, 3 அக்டோபர், 2021

நினைக்கத் தெரிந்த மனமே

 என்றோ எழுதியது 2013

வெங்காய சருகு சேலை
தலைப்பு காற்றில் படபடக்க
வெண்சங்குக் கழுத்தில் கருமணியில்
ஒற்றை டாலர் ஒளிவீச பவனிவரும்
நீ நடந்து வரும் அழகில் மதி மயங்கி
உன்னை நான் எதிரே கடந்து செல்கையில்
படபடக்கும் உன் கண் இமைகள் என்ன
பட்டாம் பூச்சிகளா பாவையே சொல் நீயே.
சிறிதே செம்பட்டையான கூந்தல் காற்றில்
புரளஎடுப்பான நாசிஇரு ஓரங்களில்
பெரிய வளையங்களுடன் காதுகள்
 புண்ணியம் செய்தவைசிகையின் முத்தச்
சுருள்கள்(Kiss Curls)இனிதே வருடக் கொடுத்து வைத்தவை.
 உச்சந்தலை தொடங்கி உன் அழகை
ரசிக்க என் கண்கள் உன் உடல் மேய
அநிச்சையாயுன் கைகள் மாராப்பை நாட

எனக்கோ மறைக்க முயல்வதைக் காணத் துடிப்பு
சாயாத கொம்பு இரண்டு தலை நிமிர்ந்து பாயாது
என்றாலும் மங்கை உன் மென்
நடையின் சிறு அதிர்வில் குலுங்கும்
இரு கொங்கைகள் கீழ் இருக்கும் இடுப்பின்
அழகைக் கூட்டிக் காண்பிக்கிறதோ?
துகில் மறைக்கா அந்த இடைப் பகுதியின்
வழுக்கலில் விட்டு விட்டுக் காணும்
தொப்புள் கொடியும் சுண்டி இழுக்குதே மனசை.
அடியொன்று எடுத்து வைக்க பிடியானையின்
மதர்ப்பு, இருந்தாலும் பாதம் நோகுமோ
அந்தப் பூமிக்குத்தான் வலிக்குமோவாலிபத்தில்  எழுதியவற்றை அசை போடும்போது கிடைக்கும் இன்பமே அலாதி. காலம் கடந்தும் காதல் மாறவில்லையடி...!.உன் நடை,குரல், அதரங் கண்டும் தோகை மயிலின் களிநடம் குறைந்திலை, கானக் குயிலின் இன்னிசை குறைந்திலை, கொவ்வைக்கனியதன் செம்மையும் குறைந்திலை; இருந்தாலென்.? நானும் செறுக்கொழிந்திலேன் என்றல்லவோ இறுமாப்புடன் இருந்தேன்.

 எங்கும் நிறைந்தவன் ஈசன் என்றால், என்னுள் நிறைந்தவள் நீயேயன்றோ.? என்னுள் நிறைந்த உன்னை என் கண்ணுள் நிறுத்தி, நீ வரும் வழி நோக்கிப் பித்தனாய் இருந்ததும் நினைவில் மோதுதடி..

யாருனைக் காணினும் நிலம் நோக்கி
என் முன்னே மட்டும் என் கண் நோக்கி
என்னுள் பட்டாம்பூச்சி பறக்கச் செய்யும்
வித்தை அறிந்தவளே .உன் விழி பேசும்
மொழி அறிந்து உனைக் கண்ட நாளே
கணக்கிட்டு விட்டேன் என் கைத்தலம்
பற்றவென்றே பிறந்தவள் நீயென்று.

வாலிபத்தில் காதல் உணர்வில் உடலின் சூடும் இருந்தது..காலம் கடக்கக் கடக்க நீயோ

பொன்காட்டும் நிறங் காட்டி
மொழி பேசும் விழி காட்டி
மின் காட்டும் இடை காட்டி
முகில் காட்டும் குழல் காட்டி,
இசை காட்டும் மொழிகாட்டி
இணைந்தனை என்னுடன்.

ஆனால் நானோ

ஈன்றெடுத்தவள் முகமேனும் நினைவின்றி
தாரமாய் வந்தவள் உனைத் தாயினும்
மேலாக எண்ணி என் நெஞ்ச்மெலாம் நிரப்பி
வாழ் நாளெல்லாம் சேயாய் வாழ்ந்து விட்டேன்.

நான் நினைப்பதை நானே உணருமுன்னர் கூறிவிடுபவள் அல்லவா நீ.?உணர்வுகளுக்கு வார்த்தையால் உருவகம் கொடுக்காவிட்டால்  ஒரு வேளை அந்த உணர்வுகள் வாடிச் சருகாய் மாறக் கூடாதல்லவா. .அதனால்தான் உள்ளம் உன்னுவதை எழுத நினைத்து இதனைத் தீட்டுகிறேன்

பிள்ளையாய்ப் பிறந்து பாலனாய் வளர்ந்து காளையாய்க் காமுற்று உன் கரம் பிடித்தேன். இளமை ஒழிந்து நரைகூடிக் கிழப்பருவம் எய்தி,  எல்லாம் செத்துக் காலன் வரவை எதிர் நோக்கும் வேளை  எனக்கு நானே அழாதிருக்க என் உள்ளம் திறந்து கொட்டி.எழுதும் இது காதல் கடிதமா, கவிதையா ..... எதுவானாலும் உனக்குப்புரிதால் சரி.

இப்படிக்கு என்றும் உன்............

.

30 comments:

வாலிபத்தில்  எழுதியவற்றை அசை போடும்போது கிடைக்கும் இன்பமே அலாதி. காலம் கடந்தும் காதல் மாறவில்லையடி...!.உன் நடை,குரல், அதரங் கண்டும் தோகை மயிலின் களிநடம் குறைந்திலை, கானக் குயிலின் இன்னிசை குறைந்திலை, கொவ்வைக்கனியதன் செம்மையும் குறைதிலை; இருந்தாலென்.? நானும் செறுக்கொழிந்திலேன் என்றல்லவோ இறுமாப்புடன் இருந்தேன்.

 எங்கும் நிறைந்தவன் ஈசன் என்றால், என்னுள் நிறைந்தவள் நீயேயன்றோ.? என்னுள் நிறைந்த உன்னை என் கண்ணுள் நிறுத்தி, நீ வரும் வழி நோக்கிப் பித்தனாய் இருந்ததும் நினைவில் மோதுதடி..

யாருனைக் காணினும் நிலம் நோக்கி
என் முன்னே மட்டும் என் கண் நோக்கி
என்னுள் பட்டாம்பூச்சி பறக்கச் செய்யும்
வித்தை அறிந்தவளே .உன் விழி பேசும்
மொழி அறிந்து உனைக் கண்ட நாளே
கணக்வாலிபத்தில் காதல் உணர்வில் உடலின் சூடும் இருந்தது..காலம் கடக்கக் கடக்க நீயோ

பொன்காட்டும் நிறங் காட்டி
மொழி பேசும் விழி காட்டி
மின் காட்டும் இடை காட்டி
முகில் காட்டும் குழல் காட்டி,
இசை காட்டும் மொழிகாட்டி
இணைந்தனை என்னுடன்.

ஆனால் நானோ

ஈன்றெடுத்தவள் முகமேனும் நினைவின்றி
தாரமாய் வந்தவள் உனைத் தாயினும்
மேலாக எண்ணி என் நெஞ்ச்மெலாம் நிரப்பி
வாழ் நாளெல்லாம் சேயாய் வாழ்ந்து விட்டேன்.

நான் நினைப்பதை நானே உணருமுன்னர் கூறிவிடுபவள் அல்லவா நீ.?உணர்வுகளுக்கு வார்த்தையால் உருவகம் கொடுக்காவிட்டால்  ஒரு வேளை அந்த உணர்வுகள் வாடிச் சருகாய் மாறக் கூடாதல்லவா. .அதனால்தான் உள்ளம் உன்னுவதை எழுத நினைத்து இதனைத் தீட்டுகிறேன்

பிள்ளையாய்ப் பிறந்து பாலனாய் வளர்ந்து காளையாய்க் காமுற்று உன் கரம் பிடித்தேன். இளமை ஒழிந்து நரைகூடிக் கிழப்பருவம் எய்தி,  எல்லாம் செத்துக் காலன் வரவை எதிர் நோக்கும் வேளை  எனக்கு நானே அழாதிருக்க என் உள்ளம் திறந்து கொட்டி.எழுதும் இது காதல் கடிதமா, கவிதையா ..... எதுவானாலும் உனக்குப்புரிதால் சரி.
.........

கிட்டு விட்டேன் என் கைத்தலம்