ஞாயிறு, 15 ஜனவரி, 2023

தையலே தைப் பெண்ணே

 



               பொங்கல் வாழ்த்துக்கள்.
               ----------------------------------

          மார்கழிப் பனி விலக
          பாவையர் நோன்பு முற்ற,
          தையலே தைப் பெண்ணே
          உன் வரவால் வழி பிறக்க

          முற்றிய கன்னலுடன் சூல் முற்றிக்
          கதிர் சாய்ந்த செந்நெல் குத்திய
          புத்தரிசி கொண்டு புதுப் பானையதனில்
          பொங்கலாக்கிப் படைத்திடவே

          பகலவனும் பாதை மாறிப்
          பயணம் செய்யத் துவங்கும்
          இந்நாளில் பொங்கும் மங்களம்
          எங்கும் தங்க வணங்குகிறோம்

அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்



11 கருத்துகள்:

  1. நன்றி.  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. தையலே தைப் பெண் மிக அழகாக வந்திருக்கிறாள் உங்கள் எழுத்தில்!!!

    தைத்திருநாள் வாழ்த்துகள் சார். உங்கள் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கு நன்றி. இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு