பொங்கல்வாழ்த்துகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொங்கல்வாழ்த்துகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

தையலே தைப் பெண்ணே

 



               பொங்கல் வாழ்த்துக்கள்.
               ----------------------------------

          மார்கழிப் பனி விலக
          பாவையர் நோன்பு முற்ற,
          தையலே தைப் பெண்ணே
          உன் வரவால் வழி பிறக்க

          முற்றிய கன்னலுடன் சூல் முற்றிக்
          கதிர் சாய்ந்த செந்நெல் குத்திய
          புத்தரிசி கொண்டு புதுப் பானையதனில்
          பொங்கலாக்கிப் படைத்திடவே

          பகலவனும் பாதை மாறிப்
          பயணம் செய்யத் துவங்கும்
          இந்நாளில் பொங்கும் மங்களம்
          எங்கும் தங்க வணங்குகிறோம்

அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்