அறிய துடிக்கும் மனச லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிய துடிக்கும் மனச லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 ஜனவரி, 2021

என்ன என்று சொல்லலாமே

 


செய்ய வேண்டியவற்றை  வகைப்படுத்தி இருக்கிறார்கள்ஆனால் எதெது என்பது நினைவில்லை  தினம்  இரு முறை   வாரத்துக்கு இரு முறை  மாதமிரு முறை   ஆண்டுக்கு  இரு முறை  செய்வதாக கடைப்பிடித்தால்நல்லது என்பார்கள் எந்தெசெயல்கள்  என்று அறிந்தவர் கூறலாமே ஆனால் ஆண்டுக்கு இரு முறை பேதி கொடுப்பது  ஒன்று என்பது  நினைவுக்கு வருகிற்து அந்தக்காலத்தில் அண்டுக்கு இரு முறை  ஆமணக்கு  எண்ணை என் தந்தை தருவார் குடிக்க முடியாதபடி பெரட்டும்  ’           உனக்கு பிடித்த இனிப்பை நினைத்துக் கொள் ஒரே மடக்கில் விழுங்கி விடு மேசை மேல் ஏறு  குதிவயிறு நல்லா இள்கும்  க்ளீன்  ஆகும்” என்னவெல்லாமோ சொல்லி குடிக்க வைப்பார் இந்த அனுபவம்  ப்லருக்கு ம் இருக்கும்  சில வீடுகளில்  ஆமணக்குக்கு  பதில் கடுக்காய் தருவார்கள் அது எவ்வளவோ மேல் போல் தோன்றுகிறது

நான்  என்பிள்ளைகளுக்கு  எதையும்  கொடுத்ததில்லை

இப்போது அது அல்ல பிரச்சனை  செய்ய வெண்டியதை  வகைப்படுத்தி இருந்தார்கள் என்றேனே அவை என்ன என்னவென்று மண்டை குடைகிற்து

வயதாகும் போதுவயிறு இறுகிவிடுகிறதோ அப்படி நேரும்போதெல்லாம்  அப்பாவின்

 நினைவும்  ஆமண்க்கும்    நினைவுக்கு வருகிறது