நான்
இவ்வுலகில் உதித்து 82 ஆண்டுகள் உருண்டோடி விட்டன ஒவ்வொரு ஆண்டு இந்தநாள் எனக்கு ஸ்பெஷல் ஏன் தெரியுமா
திருமண நாளும் பிறந்த நாளும் ஒன்றுதான்
அதெப்படி பிறந்த நாளூம் மண நாளும் ஒன்றாக இருக்கும் நான் சொல்ல வருவது 11 நவம்பர் நான் பிறந்தநாள் ஆனால்
ஆண்டு 1938 நான் மண்ந்தது 11 நவம்பர் ஆனால் ஆண்டு 1964 இந்த நாளை நான் இண்ட்ராஸ் பெக்ட் செய்ய
உபயோகிப்பேன் இந்த முறை என்மனைவிக்கு
அர்ப்பணம்செய்கிறேன் என்னை மாதிரி ஒரு பிரகிருதியோடு 56 ஆண்டுகள் குப்பை
கொட்டுவதென்ன லேசுப்பட்டதா அவளுக்கு நான் சமர்பிக்கும் பாடல் வரிகள் இதோ
ஏதுமறியாப் பாவையாய் இளங்கன்னியாய்
என்
கைப்பிடித்தவளைக் காணும்போதெல்லாம்
என் மனம் ஏனோ அல்லல் படுகிறது
குயவன் கைப் பானையாய் வளைத்துச்
செதுக்கினேன்
எனப்
பெருமைப் படுவாள் பாவம்
அவள்
அறிய மாட்டாள் ஐம்பத்து ஆறு ஆண்டுகள்
என்னுடன்
இருந்தது எத்தனை அரிய செயல் என்று
இன்று
ஓர்க்கிறேன் தாயில்லா என்னைத் சேய் போல் கவனித்தாள்
தாரமும்
ஒரு தாய்தானே
அன்னையவளைத் தேடி நான் அலைந்தபோது,
சுந்தரி இவளைக் கண்டேன் என் சிந்தையுள்ளே -,
நிறுத்தினேன் இவளை என் அகத்தினுள்ளே.,
தொலைந்ததே என் துயரங்கள் என்னை விட்டே.
யாதுமாகி நின்றாள்.. தாய்தன்னைக் காணாதவன்
தாரமாக வந்தவளை நெஞ்சமெலாம்
நிரப்பி ,
சஞ்சலங்கள் நீக்கிய சேயானேன்.
.
பிள்ளையாய்ப் பிறந்து ,பாலனாய் வளர்ந்து,
காளையாய்க் காமுற்று, எனதவளைக் கைப்பிடித்து,
இளமை ஒழிந்து மூப்புறும் நிலையில்
எல்லாம் செத்து, நாளை எண்ணுகையில்
எனக்கு நானே அழாதிருக்க,
காக்கின்ற கண்களால் கருணை வெள்ளம்
கரைபுரள, பூக்கின்ற புன்னகையால் ,
ஆறாத மனப் புண்ணின் அசைவலைகள்
அடங்கவே அளித்தருளி அன்னையாய்
,என்னை ஆட்கொள்ள வந்தவளே எனக்கு நீ
யாதுமாகி நிற்கின்றாய்
வாழி வாழியவே
வெறும் வார்த்தைகள் கூடவே ஒரு டாப்லெட் டும்( மருந்தல்ல) கொடுத்தேன்
