கதை கூறும் படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கதை கூறும் படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 10 ஜூன், 2016

சுவடுகளைத் தேடி

                                                    சுவடுகளைத் தேட
                                 சிந்தனையைக் கிளரும் புகைப்படங்கள்
                                 --------------------------------------------------------------
சிம்ஸ் பார்க் முகௌப்பு 

13 சர்க்கிள் குவார்டெர்ஸ் 





படம் -4 மைசூர் லாட்ஜ் அனெக்ஸ் சிதிலம் 
வீட்டின் முன் இருந்த சாம்பிராணி மரமும்  முனீஸ்வரனும்






படம் நம் 1-- அப்பர் கூனூரில் இருக்கும் சிம்ஸ் பார்க்கின் முகப்பு

 நாங்கள் 1952- ம் ஆண்டு முதல் 1956-ம்  ஆண்டு வரை நீலகிரியில்  அப்பர் கூனூர் மற்றும்  வெல்லிங்டன் பாரக்ஸ்  அருகே இருந்த  சர்க்கிள் குவார்ட்டர்ஸிலும்   வசித்தோம்
1998-ம் ஆண்டு என் மகன் கோவையில் இருந்தபோது  என் தம்பியுடன் நாங்கள் வசித்த இடங்களையும்  பள்ளியையும் நான் முதலில் வேலை பார்த்த மைசூர் லாட்ஜ் அனெக்ஸையும்  பார்க்க நினைத்தோம்  அந்த நாள் நினைவுகளைத் தாங்கிக் கொண்டு பயணித்தோம்  அந்த நாள் கோவையில் குண்டு வெடிப்பு நிகழ்வதற்கு முந்தைய நாள் அப்பர் கூனூரில் நாங்கள் வசித்த வீட்டை காணச் சென்றோம் சிம்ஸ் பார்க் அருகே பாஸ்டியர்  இன்ஸ்டி ட்யூடுக்குக் கீழே ஒரு பேரிக்காய்த் தோப்பு இருந்தது. அதன்  நடுவே நாங்கள் குடி இருந்த வீடு அந்த அடையாளங்களுடன்  தேடிப்போனோம்  ஆனால் பேரிக்காய்த் தோப்பு இருந்த சுவடே இருக்க வில்லைஅது பற்றி விசாரித்தால் எங்களை மேலும் கீழும் பார்த்தார்கள்  42 ஆண்டு இடைவெளியில் வீடு தோப்பு எதுவுமே காணவில்லை.  இது இப்படி இருக்கும்  போது  ஆண்டுகளுக்கு முந்தைய சரித்திர நிகழ்வுகளை இருக்கும் மிச்சங்கள் கொண்டு அறிவது முக்காலும் கற்பனையாய் இருக்க வாய்ப்புண்டு. வீட்டின்  முன் இருந்த மலை முகடு நன்றாய் நினைவுக்கு வந்தது ஏமாற்றத்துடன் மீண்டும் சிம்ஸ் பார்க் அருகே வந்தோம்  அங்கிருந்து புனித அந்தோனியார் உயர் நிலைப் பள்ளிக்கு  வந்தோம் பள்ளி இன்னும் அதிகப் பொலிவுடன் இருக்கிறது.  தலைமை ஆசிரியரைச் சந்தித்து அவருடன் புகைப்படமெடுக்க வேண்டி காமிராவை என் தம்பியிடம் கொடுத்தேன் அவனுக்கு படம் எடுத்துப் பழக்கம் இல்லாததால் எங்களைத் தவிர்த்து அனைத்தையும் படம் பிடித்தான் டிஜிடல் காமிரா அல்லாததால் தவறு உடன் தெரியவில்லை. தேர்வு நாட்களில் இடை வேளையின் போது அருகில் இருந்த சிம்ஸ் பார்க் வந்து ஏதாவது மரக்கிளையில் ஏறி அமர்ந்து தொந்தரவு இல்லாமல் படித்தது நினைவில் ஓடியது
அங்கிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரமிருந்த நாங்கள் முன்பு குடியிருந்த சர்க்கிள் குவார்ட்டர்ஸுக்குப் போக விரும்பினோம்  முன்பெல்லாம் நடந்தே கடந்த தூரத்தை ஆட்டோவில் போய்க் கடந்தோம்

படம்  2-எங்கள் வீடு
---------------------------------

 பாரக்ஸிலிருந்து ஒரு பள்ளம் இறங்கி பின்  மேடு ஏறினால் குவார்டர்ஸ் வரும் மேடு ஏறியதும் பாபு வில்லேஜ் வரும் அங்கிருக்கும்  குரிசடியிலிருந்து எங்கள் வீடு அருகாமையில் இருக்கும்  எங்கள் வீட்டிலிருந்து நேர் மேல் சர்க்கிள் குவார்டர்ஸ் . அது ராணுவ பயிற்சி அதிகாரிகளுக்கு ஒதுக்கப் பட்டது  அதை ஒட்டியே இருந்ததால் எங்கள்  வீடும் 13 சர்க்கிள் குவார்டர்ஸ் என்றே  அறியப் பட்டது.
அலுவலக ரெகார்ட் படி அது ஒரு குதிரை லாயம் எனப் பெயரில் இருந்தது ஒரு பெரிய வீடும்(மூன்று பெரிய அறைகளும் மூன்று சிறிய அறைகளும்  ) அதைச் சுற்றி இருந்த இடமும்  எங்கள் உபயோகத்தில் இருந்தது.அதற்காக எங்கள் அப்பாவின் சம்பளத்தில் இருந்து ரூபாய் மூன்றரை வாடகையாகப் பிடிக்கப்படும்  சுற்றி இருந்த இடத்தைக் குத்தகைக்கு எடுத்து உருளைக் கிழங்கும் காபேஜும் அங்கிருந்த படகர்கள் பயிரிடுவார்கள் எங்கள் வீட்டின் ஒரு அறையில் உருளைகிழங்குகள் குவிக்கப் பட்டிருக்கும்

படம் -3 சாம்பிராணி மரமும்  முனீஸ்வரனும்
-----------------------------------------------------------------------
 வீட்டின் முன்னால் ஒரு சாம்பிராணி மரம்  அதன் அடியில் முனீஸ்வரன் பிரதிஷ்டைஆகியிருக்கும் . தினம் விளக்கு வைக்கும் நேரம் முனீஸ்வரனுக்கும்  விளக்கேற்ற வேண்டும்  எனக்கு இருட்டினால் அந்த மரம் அருகே போக பயம்  ஆதலால் முக்காலும்  என் தம்பியே விளக்கேற்றுவான்

படம் -4  மைசூர் லாட்ஜ் சிதிலம்
-------------------------------------------------
 நான் பள்ளி இறுதி படிப்பு முடித்தபோது சிறிது காலத்துக்கு  மைசூர்லாட்ஜ் அனெக்ஸில்  பொறுப்பாளனாக இருந்தேன்  அந்த இடம் கூனூர் ரயில்வே  நிலையத்துக்கு மேல் இருந்த மேட்டில் இருந்தது  நாங்கள் போய்ப் பார்த்தபோது அந்தக் கட்டிடமே  சிதிலமடைந்து ஓட்டல் இருந்த அடையாளமே இல்லாமல் இருந்தது என்  பணிக்கால அனுபவங்கள் குறித்து முன்பே பதிவிட்டிருக்கிறேன் பார்க்க வேலை தேடும் படலம் 

இதே இடங்களை 2011-ல்  என்னுடைய இன்னொரு தம்பியின் குடும்பத்துடன் சென்று பார்த்தபோது  நாங்கள் குடியிருந்த வீடு உண்மையிலேயே குதிரை லாயமாக மாற்றப்பட்டு இருந்தது  மைசூர் லாட்ஜ் இருந்த இடத்தில் ஒரு ஒரு கோர்ட் வந்திருக்கிறது  அதன் படங்களும் கீழே
மைசூர் லாட்ஜ் இருந்த இடத்திலிருந்து கூனூர் ரயில் நிலையம் 

மைசூர் லாட்ஜ் இருந்த இடத்தில்  நீதி வளாகம் 

நாங்கள் இருந்த வீட்டின் அருகே

குதிரைலாயத்துக்குப் போகும்  பாதை


எல்லா இடங்களையும் பார்த்துத் திரும்பும்போது மனதில் ஒரு வெறுமை இருந்ததென்னவோ உண்மை