கல்வி கொள்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி கொள்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 5 ஆகஸ்ட், 2020

அடிமேல் அடி அடித்தால் ------

   

                                       அடி மேல் அடி அடித்தால்
                                      -------------------------------------------


கடந்த சில நாட்களாகதேசிய கல்விக்கொள்கை பற்றிய செய்தியாகவேஇருக்கிறது பார்க்கப் போனால் எல்லாம் வெறும்   டிங்கரிங் தான்  படிக்கும்  ஆண்டுகளுக்குஏதோ சிலமாற்றம் காட்டுகிறார்கள் கல்வி கொள்கையில் ஏதும்  மாற்றம் இல்லை நாங்கள்படிக்கும்போது ஐந்து வயதில் பள்ளியில் சேர்ந்து  ஐந்து ஆண்டுகள் எலிமெண்டரி கல்வியும் அடுத்த மூன்று ஆண்டுகள் ஹையர் எலிமெண்டரி  ஸ்கூலென்றும்   அடுத்த மூன்று ஆண்டுகள் செகண்டரி   ஸ்கூல் என்றும்  கூறப்பட்டது  பின் இரண்டு ஆண்டுகள் ப்ளஸ்  டூ என்றும் அடுத்த  மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்பு  அல்லது  க்ராஜுவேஷன் என்றும்கூறப்பட்டது இன்னும் சில ஆண்டுகள்முன்பு ப்ளஸ் டூவை  எஃப் ஏ( ஃபேகல்டி ஆஃப் ஆர்ட்ஸ்)  என்றுகூறினர் நான்  சொல்லும் டிங்கெரின்   என்பதன் பொருள் விள்ங்கி இருக்குமென்று  நம்புகிறேன்  பாடங்களிலோசொல்லிக் கொடுக்கும்மு றையிலோ எந்தமாற்றமும்  இருக்காதுகல்வி ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்நாட்டில் நிலவும் ஏற்ற தாழ்வுகளைப் போக்க வேண்டும் நான் ஆரம்ப முதலே எழுதிக்கொண்டு வருகிறேன்   ஏற்ற தாழ்வுகள் மனிதனின்  ஜாதி என்று ஆகிவிட்டது
5+ 3 + 3 என்கிறார்கள்  மூன்று வயது முதல் கல்வியாம் மூன்று வயதில் குழந்தைகளை எழுத சொல்வார்கள்  சுமார் ஐந்து வயது ஆனபிறகே எழுத வைக்கலாம் என்னவோ சரியாகப் படவில்லை

ஏற்ற தாழ்வு பற்றி ஓரளவுக்கு நிறையவே எழுதிவிட்டேன். ஏற்றத்தாழ்வுகளால் சமுதாயதில் ஏற்படும் பல பிரச்சனைகளையும் கூறி இருக்கிறேன் சமுதாய சீர்கேட்டுச் சித்தாந்தங்களால் இழி குலத்தோர்  என்று பல்லாண்டுகள் முத்திரை குத்தப்பட்டு வாழ்வின் அடிமட்டத்திலேயே உழன்றவர்களின் சந்ததிகளும் அதே நிலையில் இருக்கவேண்டுமா.?காலங்கள் மாற வேண்டாமா.? மாற்றக் கூடிய சக்தி எது என்று சிந்தித்தால் கல்வி ஒன்றுதான் என்று பதில் வருகிறது. இது எனக்கு மட்டும் உதித்த ஞானம் அல்ல. EDUCATION  IS A GREAT LEVELER என்று தெரிந்துதான் கல்வி கிடைக்கப் பெற முடியாதவர்களுக்கு ( ஏன் கல்வி கிடைக்கப் பெறமுடியாதவர்கள் ஆனார்கள் என்று ஆராயப் போனால் பலருக்கும் வருத்தம் ஏற்படும் விஷயங்களைக் கூற வேண்டி இருக்கும்) இட ஒதுக்கீடு என்று கொண்டு வந்தார்கள். அப்படிக் கொண்டுவந்த ஒதுக்கீடுகளினால் வாழ்வின் ஏற்ற தாழ்வுகளைச் சமன் செய்யவில்லை. ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துகள் கூறப் பட்டு இருக்கும் நிலையில் மாற்றம் ஏதுமில்லை. இன்னும் சொல்லப் போனால் சலுகைகளுக்காக தவறான அணுகுமுறைகளையும் சிந்திக்கத் தொடங்கி விட்டனர். இது போதாதென்று நாட்டில் ஏற்ற தாழ்வுகளை நிர்ணயிப்பது பணம் ஒன்றுதான் என்று அநேகமாக எல்லோரும் நம்புகின்றனர். கல்வி ஒன்றுதான் சமன் செய்யும் என்று எண்ணினால் அதுவும் வியாபாரிகளிடம் சிக்கி இருக்கிறது. கல்வி அமைப்புகளிலும் சமம் இல்லை. ஏழைக் கல்வி பணக்காரன் கல்வி என்றாகி விட்டது. இதையும் அறிந்துதான். ஓரளவுக்காவது சரிகட்ட எல்லாக் கல்வி நிலையங்களிலும் குறைந்தது 25% ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்துள்ளனர். இப்போதுள்ள கல்வி வியாபாரிகள் இந்த சட்டத்தை மதிப்பதாகவே தெரியவில்லை. ஒரு குழந்தையை ஆரம்பக் கல்விக்காக பள்ளியில் சேர்க்க வேண்டுமானால் அவர்கள் கேட்கும் தொகை மயக்கம் வர வைக்கிறது. பள்ளிக் கூடங்களின் பிரக்யாதியைப் பொருத்து ரூபாய் 50,000/ முதல் ஒரு லட்சம் வரைக் கேட்கிறார்கள். இந்த நிலையில் 25% ஏழைக்குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்றால் அதனால் ஏற்படப் போகும் நஷ்டத்தை அரசாங்கம் ஈடு செய்ய முடியுமா.?ஆகவேதான் எனக்கொரு எண்ணம் எழுகிறது. அரசாங்கம் ஏதேதோ செய்தாலும் அவை எல்லாம் அரை வேக்காடாய்ப் போகிறது. கல்வி கற்பிப்பதை அரசாங்கம் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். வங்கிகளை அரசுடைமை ஆக்கியது போல் கல்வியும் அரசுடைமை ஆக்கப் பட வேண்டும். இப்படி அரசுடைமை ஆக்கினாலும் ஏற்ற தாழ்வுகள் குறைந்து போகுமா.? ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு மாறுமா.? அதையும் மாற்ற கல்வி பயிலும் அனைவருக்கும் மதிய உண்வு சீருடை சமச் சீர் கல்வி என்பது கட்டாயமாக்கப்பட்டு  எல்லாம் அரசாங்கமே பொறுப்பு ஏற்றுக்கொண்டு நடைமுறை படுத்தினால் . இப்போதில்லாவிட்டாலும் வருங்காலச் சந்ததியினராவது பேதங்கள் தெரியாமல் வளர்ந்திருப்பர். பசித்திருப்பவனுக்கு மீன் கொடுப்பதைவிடமீன் பிடிக்ககற்று கொடுப்பதே  சிறந்தது பேதமற்ற கல்வி அறிவு அவர்கள் சிந்தனைகளில் மாற்றம் கொண்டு வரும்.

இதை எழுதுமுன் வள்ளுவர் கூறிய பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” என்னும் குறள நினைவுக்கு வந்தது. சரி, இணையத்தில் இது பற்றி என்னென்ன கருத்துக்கள் நிலவுகின்றன என்று பார்க்கப் போனால் வள்ளுவர் அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த நிலைமைகளையே சொல்லிச் செல்கிறார் என்று தெரிகிறது. கீழே சில குறள்களைத் தருகிறேன். அவற்றின் பொருள் குறித்து பல எண்ணங்கள் கொள்ளலாம் என்று தெரிகிறது. நான் படித்ததை இங்கு எடுத்துக் கூறினால் காப்பி பேஸ்ட் செய்கிறேன் எனும் குற்றச் சாட்டு எழலாம். இருந்தாலும் வெவ்வேறு முறையில் அர்த்தம் செய்து கொள்ளலாம் என்று தெரிகிறது. நான் ஒரு முறை எழுதி இருக்கிறேன். எனக்குத் தமிழ் தெரியாது. தெரிந்தவர்கள் விமரிசிக்கலாமே.

 உலகத்தோடு ஒட்ட ஒழுகல்  பலகற்றும்
கல்லார் அறிவிலாதார் 

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப் பொழுக்கம் குன்றக் கெடும்.

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய்விடும்.

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார் வாய்ச்சொல்.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவா னெனின்

சிலர் எழுதும் பதிவுகளில் இந்த சாதி குல வேறுபாடுகள் பண்டைக் காலத்தில் இருக்க வில்லை என்றும் இவை எல்லாவற்றுக்கும் ஆங்கிலேயர்களே காரணம் என்பதுபோலவும் எழுதுகின்றனர். இருந்துவந்த வேறுபாடுகளை ஆங்கிலேயர்கள் உபயோகித்துக் கொண்டனர் என்பதும் அப்போது கல்வி கற்க அனுமதிக்கப் பட்டவர்கள் அவர்களுக்குத் துணை போனார்கள் என்பதுமே என் கட்சி. யார் காரணம் என்று ஆராய்வதில் குணமில்லை என்று கருதியே என் சிற்ற றிவுக்குப் பட்ட தீர்வைக் கூறி உள்ளேன்     
             



 -