ஞான (bh) பானம்
--------------------------
(சில
நாட்களுக்கு முன் அருகில் இருக்கும்ஸ்ரீ ஐயப்பன் கோவிலில்’ஞானப்பான”
என்றொரு நிகழ்ச்சி நடந்தது.மலையாள மொழியில் எழுதப்பட்டிருந்த கிருதிகளுக்கு
விளக்கமும் வியாக்கியானமும் நடந்தன. என் மனைவி ஆர்வமுடன் சென்று கண்டு களித்தாள் “ஞானப்பான”
என்று கூறினாள் அதன் பொருள்
புரியவில்லை. கூடவே கிருதிகளை தமிழில் எழுதியதையும்
கொண்டு வந்தாள் அதைப் படிக்கும் போது அது ஞான பானம் என்று தோன்றியது மொத்தம் 91
கிருதிகள் இருந்தன
எனக்கும்
எழுத விஷயம் இல்லாதிருந்தபோது அதைப்
படித்து நான் புரிந்து கொண்டவரைப் பகிர்கிறேன் முதலில் மலையாளத்தில் இருப்பதை தமிழில்
transliterate செய்கிறேன் அதன் கீழே
பொருளையும் தமிழில் மொழியாக்கம் செய்து எழுதுகிறேன் பத்துகிருதிகள்
எழுதுவதற்குள் சலிப்பு தட்டியது. ஆகவே
எழுதிய வரைப் பதிவிடுகிறேன் வரவேற்பு
இருந்தால் இன்னும் தொடரலாம் என்று எச்சரிக்கிறேன் …1)
க்ருஷ்ண
க்ருஷ்ண முகுந்தா ஜனார்த்தனா
க்ருஷ்ண
கோவிந்த நாராயணா ஹரே
அச்சுதானந்த
கோவிந்த மாதவா
சச்சிதானந்த
நாராயணா ஹரே (1)
குருநாதன்
துணசெய்க ஸந்னதம்
திருநாமங்ஙள்
நாவின் மேல் எப்பொழும்
பிரியாதெயிரிக்கேணம் நம்முடே
நரஜன்மம்
ஸபல மாயிடுவான் (2)
திருநாமங்கள்
நாவிலிருந்து என்றும் எப்போதும் பிரியாமல் இருக்க
நமது
மானிடப் பிறவி சாபல்ய மடைய
குருநாதன்
துணை செய்யட்டும்
இன்னலேயோளம்
எந்தென்னறிஞ்ஞிலா
இனி
நாளேயும் எந்தென்னறிஞ்ஞிலா
இன்னீக்கண்ட
தடிக்கு வினாசவும்
இன்ன
நேரம் என்னேதுமறிஞ்ஞிலா (3)
நேற்று
வரை என்ன நடக்கும் என்றறியவில்லை
இனி
நாளைக்கும் என்னவென்று தெரியவில்லை
இன்றிருக்கும்
இவ்வுடலுக்கு அழிவும் இன்ன
நேரத்தில்
மரணம் என்றும் அறிவதில்லை
கண்டுகண்டங்ஙிருக்கும்
ஜனங்ஙளே
கண்டில்லேன்னு
வருத்துன்னதும் பவான்
ரெண்டு
நாலு தினம் கொண்டொருத்தனே
தண்டிலேற்றி
நடத்துன்னதும் பவான் (4)
பார்த்துக்
கொண்டிருக்கும் ஜனங்களைக்
காண
முடியாமல் செய்வதும் பகவான்
ஓரிரு
தினங்களில் ஒருவனைப் பல்லக்கிலேற்றி
மன்னனாக்குவதும் பகவான்
மாளிக
முகளேறிய மன்னண்டெ தோளில்
மாறாப்பு
கேற்றுன்னதும் பவான்
கண்டால்
ஒட்டறியுன்னு சிலரிது
கண்டாலும்
திரியா சிலர்க்கேதுமே (5)
மாடமாளிகை
மேல் அமர்ந்திருக்கும் மன்னனின்
தோளில்
அழுக்கு மூட்டை ஏற்றுவதும் பகவான்
கண்டறிவோர்
சிலர் கண்டாலும் அறியாதோர் சிலர்
கண்டதொன்னுமே
ஸத்தியமில்லென்னது
மும்பே கண்டங்ஙறியுன்னிது சிலர்
மனுஜாதியில்த்
தன்னெ பலவிதம்
மனஸ்ஸினு
விசேஷமுண்டோர்க்கணம் (6)
காண்பதேதும்
நிஜமல்லஎனக் கண்டறிவோர் சிலர்
மானிட
ஜாதியில் இவ்வாறு பலரும் பலவிதம்
மனசுக்கு ஓரோர் குணம் என்பதும்
அறிந்திருத்தல்
நலமே
பலர்க்கும்
அறியேணமென்னிட்டல்லோ
பலஜாதி
பறயுன்னு சாஸ்த்ரங்ஙள்
கர்மத்தில்
அதிகாரி ஜனங்ஙள்கு
கர்ம
சாஸ்த்ரங்ஙளுண்டு பலவிதம் (7)
பலரும்
அறிய வேண்டும் என்றுதானே
பல
வர்ண தர்மங்களைச் சொல்கின்றன சாத்திரங்கள்
அவரவர்
வர்ண பேதங்கள் அனுசரித்துபாவிக்கும்
மக்களுக்கு
கர்ம சாத்திரங்கள் பலவுண்டு பலவிதம்
ஸாங்க்ய
ஸாஸ்த்ரங்ஙகள் யோகங்ஙளென்னிவ
சங்க்யயில்லது
நில்க்கட்டே ஸர்வவும்
சுழந்நீடுன்ன
ஸம்ஸார சக்ரத்தில்
உழன்னீடும்
நமுக்கறிஞ்ஞீடுவான் (8)
சாங்கிய
சாத்திரங்கள் யோகங்கள் ஆகியவை
கணக்கில்
அடங்காது இருக்கட்டும் ஒரு புறம்
அனைத்தும்சுழன்று
கொண்டிருக்கும் சம்சார சக்கரத்தில்
சுழலும்
நம் போன்றோர் அறிந்து கொள்ள
அறிவுள்ள
மஹத்துக்களுக்குண்டொரு
பரமார்த்தம்
அருள் செய்திரிக்குன்னு
எளிதாயிட்டு
முக்தி லபிப்பானாய்
செவி
தன்னிது கேள்ப்பின் எல்லாவரும் (9)
ஞானிகளான
மகான்கள் பரம் பொருள் ஒன்றே
என்றறிந்து
அருளிச் செய்துள்ளனர்
எளிதாய்
முக்தி கிடைக்க செவி கொடுத்துக்
கேட்பீரே
அனைவரும்
நம்மெ
ஒக்கேயும் பந்திச்ச சாதனம்
கர்மம்
என்னறியேண்டது முன்பினால்
முன்னில்
இக்கண்ட விஸ்வம் அசேஷவும்
ஒன்னாய்
உள்ளொரு ஜோதிஸ்வரூபமாய் (10)
நம்
அனைவரையும் கட்டி இருப்பது
கர்மமே
என்றறிய வேண்டும் முன்னால்
நாம்
காணும் அகிலமெல்லாம் ஒன்றேயான
ஒரு
ஜோதிஸ்வரூபமே
(கிருஷ்ணனும் கிறுஸ்துவும் ஈசனும் ஜீசசும் மேரி அன்னையும் மாரியம்மாவும் ஒரே போல் த்வனிக்கிறது என்று படித்த நினைவு வருகிறது வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறுஸ்துமஸ் வாழ்த்துக்கள்)
(கிருஷ்ணனும் கிறுஸ்துவும் ஈசனும் ஜீசசும் மேரி அன்னையும் மாரியம்மாவும் ஒரே போல் த்வனிக்கிறது என்று படித்த நினைவு வருகிறது வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறுஸ்துமஸ் வாழ்த்துக்கள்)