Friday, December 25, 2015

ஞான பானம்.......


                                          ஞான (bh) பானம்
                                          --------------------------(சில நாட்களுக்கு முன் அருகில் இருக்கும்ஸ்ரீ ஐயப்பன் கோவிலில்’ஞானப்பான”

என்றொரு நிகழ்ச்சி நடந்தது.மலையாள மொழியில் எழுதப்பட்டிருந்த கிருதிகளுக்கு விளக்கமும் வியாக்கியானமும் நடந்தன. என் மனைவி ஆர்வமுடன் சென்று கண்டு களித்தாள் “ஞானப்பான” என்று கூறினாள்  அதன் பொருள் புரியவில்லை.  கூடவே கிருதிகளை தமிழில் எழுதியதையும் கொண்டு வந்தாள் அதைப் படிக்கும் போது அது ஞான பானம் என்று தோன்றியது மொத்தம் 91 கிருதிகள் இருந்தன

எனக்கும் எழுத விஷயம் இல்லாதிருந்தபோது  அதைப் படித்து நான் புரிந்து கொண்டவரைப் பகிர்கிறேன் முதலில் மலையாளத்தில் இருப்பதை தமிழில் transliterate செய்கிறேன்  அதன் கீழே பொருளையும் தமிழில் மொழியாக்கம் செய்து எழுதுகிறேன் பத்துகிருதிகள் எழுதுவதற்குள்  சலிப்பு தட்டியது. ஆகவே எழுதிய வரைப் பதிவிடுகிறேன்  வரவேற்பு இருந்தால் இன்னும் தொடரலாம் என்று எச்சரிக்கிறேன் …1)

க்ருஷ்ண க்ருஷ்ண முகுந்தா ஜனார்த்தனா

க்ருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே

அச்சுதானந்த கோவிந்த மாதவா

சச்சிதானந்த நாராயணா ஹரே       (1)குருநாதன் துணசெய்க ஸந்னதம்

திருநாமங்ஙள் நாவின் மேல் எப்பொழும்

பிரியாதெயிரிக்கேணம்  நம்முடே

நரஜன்மம் ஸபல மாயிடுவான்      (2) 

திருநாமங்கள் நாவிலிருந்து என்றும் எப்போதும் பிரியாமல் இருக்க
நமது மானிடப் பிறவி சாபல்ய மடைய
குருநாதன் துணை செய்யட்டும்

இன்னலேயோளம் எந்தென்னறிஞ்ஞிலா

இனி நாளேயும்  எந்தென்னறிஞ்ஞிலா

இன்னீக்கண்ட தடிக்கு  வினாசவும்

இன்ன நேரம் என்னேதுமறிஞ்ஞிலா     (3)


நேற்று வரை என்ன நடக்கும் என்றறியவில்லை
இனி நாளைக்கும் என்னவென்று தெரியவில்லை
இன்றிருக்கும் இவ்வுடலுக்கு அழிவும் இன்ன
நேரத்தில் மரணம் என்றும் அறிவதில்லை

கண்டுகண்டங்ஙிருக்கும் ஜனங்ஙளே

கண்டில்லேன்னு வருத்துன்னதும் பவான்

ரெண்டு நாலு தினம் கொண்டொருத்தனே

தண்டிலேற்றி நடத்துன்னதும் பவான்     (4)


பார்த்துக் கொண்டிருக்கும் ஜனங்களைக்
காண முடியாமல் செய்வதும் பகவான்
ஓரிரு தினங்களில் ஒருவனைப் பல்லக்கிலேற்றி
மன்னனாக்குவதும்  பகவான்

மாளிக முகளேறிய மன்னண்டெ தோளில்

மாறாப்பு கேற்றுன்னதும் பவான்

கண்டால் ஒட்டறியுன்னு சிலரிது

கண்டாலும் திரியா சிலர்க்கேதுமே      (5) 

மாடமாளிகை மேல் அமர்ந்திருக்கும்  மன்னனின்
தோளில் அழுக்கு மூட்டை ஏற்றுவதும் பகவான்
கண்டறிவோர் சிலர் கண்டாலும் அறியாதோர் சிலர்

கண்டதொன்னுமே ஸத்தியமில்லென்னது

மும்பே கண்டங்ஙறியுன்னிது சிலர்

மனுஜாதியில்த் தன்னெ பலவிதம்

மனஸ்ஸினு விசேஷமுண்டோர்க்கணம்   (6)


காண்பதேதும் நிஜமல்லஎனக் கண்டறிவோர் சிலர்
மானிட ஜாதியில்  இவ்வாறு பலரும் பலவிதம்
மனசுக்கு  ஓரோர் குணம் என்பதும்
அறிந்திருத்தல் நலமே

பலர்க்கும் அறியேணமென்னிட்டல்லோ

பலஜாதி பறயுன்னு சாஸ்த்ரங்ஙள்

கர்மத்தில் அதிகாரி ஜனங்ஙள்கு

கர்ம சாஸ்த்ரங்ஙளுண்டு பலவிதம்       (7)


பலரும் அறிய வேண்டும் என்றுதானே
பல வர்ண தர்மங்களைச் சொல்கின்றன சாத்திரங்கள்
அவரவர் வர்ண பேதங்கள்  அனுசரித்துபாவிக்கும்
மக்களுக்கு கர்ம சாத்திரங்கள் பலவுண்டு பலவிதம்

ஸாங்க்ய ஸாஸ்த்ரங்ஙகள் யோகங்ஙளென்னிவ

சங்க்யயில்லது நில்க்கட்டே ஸர்வவும்

சுழந்நீடுன்ன ஸம்ஸார சக்ரத்தில்

உழன்னீடும் நமுக்கறிஞ்ஞீடுவான்          (8)

சாங்கிய சாத்திரங்கள் யோகங்கள் ஆகியவை
கணக்கில் அடங்காது இருக்கட்டும் ஒரு புறம்
அனைத்தும்சுழன்று கொண்டிருக்கும் சம்சார சக்கரத்தில்
சுழலும் நம் போன்றோர்  அறிந்து கொள்ள

அறிவுள்ள மஹத்துக்களுக்குண்டொரு

பரமார்த்தம் அருள் செய்திரிக்குன்னு

எளிதாயிட்டு முக்தி  லபிப்பானாய்

செவி தன்னிது கேள்ப்பின் எல்லாவரும்         (9)


ஞானிகளான மகான்கள்  பரம் பொருள் ஒன்றே
என்றறிந்து அருளிச் செய்துள்ளனர்
எளிதாய் முக்தி கிடைக்க செவி கொடுத்துக்
கேட்பீரே அனைவரும்

நம்மெ ஒக்கேயும்  பந்திச்ச  சாதனம்

கர்மம் என்னறியேண்டது முன்பினால்

முன்னில் இக்கண்ட  விஸ்வம்  அசேஷவும்

ஒன்னாய் உள்ளொரு ஜோதிஸ்வரூபமாய்       (10)


நம் அனைவரையும் கட்டி இருப்பது
கர்மமே என்றறிய வேண்டும் முன்னால்
நாம் காணும் அகிலமெல்லாம் ஒன்றேயான
ஒரு ஜோதிஸ்வரூபமே  

(கிருஷ்ணனும் கிறுஸ்துவும்  ஈசனும்  ஜீசசும் மேரி அன்னையும் மாரியம்மாவும்   ஒரே போல் த்வனிக்கிறது என்று படித்த நினைவு வருகிறது வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறுஸ்துமஸ் வாழ்த்துக்கள்)   
   


 

34 comments:

 1. நல்ல இசை செறிந்த பாடல். உங்களுக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. சின்ன வயசில் பஜனையின் போது இந்தப் பாடல்களைக் கேட்ட நினைவு அரைகுறையாக நினைவில் இருக்கிறது. முதல் இரு பத்திகளும் நிறையக் கேட்டிருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 3. தமிழ்ப் பொருள் மட்டும் படித்து ரசித்தேன்.

  ReplyDelete
 4. அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்!

  ஞான பானம் பருக உதவியமைக்கு நன்றி! இரசித்து ருசித்தேன்!

  ReplyDelete

 5. தமிழ் விளக்கம் மட்டும் படித்தேன்

  ReplyDelete
 6. பாடல்களில் வடமொழி நிறைய கலந்துள்ளது. மலையாள மொழியே தமிழும் வடமொழியும் கலந்ததுதானே.

  ReplyDelete
 7. தமிழ் விளக்கம் மட்டும் படித்தேன் ஐயா
  நன்றி

  ReplyDelete
 8. கௌசல்யா என்பவர் கோவையில் அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில் ஞானப்பானை பாடல்களைப்பாடி புத்தகமாக வெளியிட்டார்..

  இனிய பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

  ReplyDelete

 9. @ மோகன் ஜி
  முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்

  ReplyDelete
 10. தங்களின் பல்துறை ஆர்வம் வியக்க வைக்கிறது. ஞான பானம் ருசிக்க முயற்சி செய்தேன்.

  ReplyDelete

 11. @ கீதா சாம்பசிவம்
  எனக்கும் கேட்ட நினைவு இருந்ததால்தானோ இதை எழுத முற்பட்டேன் வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete

 12. @ ஸ்ரீராம்
  தமிழ்ப் பொருளைப்படித்து ரசித்ததற்கு நன்றி ஸ்ரீ

  ReplyDelete

 13. @ வே நடனசபாபதி
  வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி ஐயா

  ReplyDelete

 14. @ புலவர் இராமாநுசம்
  நன்றி ஐயா

  ReplyDelete

 15. @ டாக்டர் கந்தசாமி
  சற்று ஊன்றிப் படித்தால் மலையாளத்தில் எழுதி இருப்பதன் பொருள் புரிந்து கொள்ளலாம் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 16. @ கரந்தை ஜெயக்குமார்
  நன்றி ஐயா

  ReplyDelete

 17. @ இராஜராஜேஸ்வரி
  அது ஞானப் பானையா ஞானப்பானமா இன்னும் புரியவில்லை. ஞானப்பான என்றால் என்ன அர்த்தம் கோவையில் புத்தக வெளியீட்டில் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்று தோன்றுகிறது

  ReplyDelete

 18. @ டி என் முரளிதரன்
  என்னாலும் ரசிக்கவும் ருசிக்கவும் முயற்சி செய்ய மட்டும்தான் முடிந்தது பாராட்டுக்கு நன்றி சார்

  ReplyDelete
 19. நானும் சில விடயம் அறிந்து கொண்டேன் ஐயா

  ReplyDelete

 20. @ கில்லர்ஜி
  வருகைக்கு நன்றி ஜி

  ReplyDelete
 21. ரசிக்கவும் ருசிக்கவும் முடிந்தது ஐயா...

  ReplyDelete
 22. விளக்கம் இல்லாவிட்டால் சிரமப்பட்டிருப்போம். தங்கள் பாணியில் விளக்கம் அருமை.

  ReplyDelete
 23. //அது ஞானப் பானையா ஞானப்பானமா இன்னும் புரியவில்லை. ஞானப்பான என்றால் என்ன அர்த்தம் //

  ஒரு விஷயத்தைப் பற்றிய சரிவர புரிதல் இல்லாமல், அது பற்றி எழுத எப்படித் துணிகிறீர்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.


  ReplyDelete
 24. அது (bh)பானமாக இருப்பின் ஆசையாகப் பருகுவோம். (p)பானையாயின் பானையிலிருந்து வருவதை குவளையில் வாங்கி வாயில் ஊற்றிக்கொள்வோம்.
  இந்த மாதிரி பக்தி/தத்துவப் பாடல்களிலிருந்து மொழியாக்கம் செய்கையில், மொழிவல்லமையோடு, வார்த்தைத் தேர்வில் அதிகவனமாகவும் இருக்கவேண்டும். சிறு தவறு தத்துவக் குழப்பத்தைத் தந்துவிடும். Anyway, GMB at work!

  ReplyDelete

 25. @ பரிவை சே குமார்
  வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 26. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  விளக்கம் ஏதும் தரவில்லை. கிருதிகளின் பொருளைத்தான் கொடுத்திருக்கிறேன் . வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 27. @ ஜீவி
  /ஒரு விஷயத்தைப் பற்றிய சரிவர புரிதல் இல்லாமல், அது பற்றி எழுத எப்படித் துணிகிறீர்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது/அது பற்றிநான் ஏதும் எழுதவில்லை. அதில் இருப்பதைத்தான் எழுதினேன் பின்னூட்டத்தில் ஜீவியின் டச்...!.


  /

  ReplyDelete

 28. @ ஏகாந்தன்
  பக்தி தத்துவப் பாடல்களை மொழியாக்கம் செய்யும்போது நான் எதையும் கூட்டவோ குறைக்கவோ செய்ய வில்லை. எனக்குப் புரியாததைப் புரியவில்லை என்றும் சொல்லி இருக்கிறேன் மலையாள மொழி தெரிந்த நண்பர்கள் உதவுவார்கள் என்று எண்ணினேன் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 29. ஞானபான சிடியை போட்டுக் கேட்பதே ஒரு சுகம். அந்த நேரத்திலாவது பெருமாளை ஒரு கணம் அனுபவிப்பதில் மனசு நிறைஞ்சுதான் போகுது!

  ReplyDelete

 30. @ துளசி கோபால்
  நீங்களாவது அது ஞான பானையா ஞான பானமா என்று தெளிவு படுத்தி இருக்கலாம் இதைப்பார்த்தால் தெரிவிப்பீர்கள் என்று நம்புகிறேன்

  ReplyDelete
 31. ஞானப்பான என்றுதான் மலையாளத்தில் எழுதறாங்க.

  ReplyDelete
 32. ஞானப்பான என்றுதான் மலையாளத்தில் எழுதறாங்க.

  ReplyDelete

 33. @ துளசி கோபால்
  Have I become any wiser?என் சந்தேகமே அது ஞான paana வா ஞான bhana வா.( p)பான என்றால் என்ன அர்த்தம் ?

  ReplyDelete
 34. ஐயா,

  என்னால் புரிந்துகொள்ள முடிந்ததெல்லாம் இது ஞான ஊற்று என்பதுதான். ஊற்று என்பதால் இது பானம் என்றுதான் நினைக்கிறேன். அள்ளிப் பருக வேண்டிய பானம்.Paanam.

  எளிய சொற்களால் ஸ்ரீ குருவாயூரப்பன் மேல் பாடப்பட்ட இந்த பான(க)த்தை இயற்றியவர் பூந்தானம் நம்பூதிரி. தன்னுடைய மகன் மரணத்தின் சோகத்தைத் தாங்கமுடியாமல் குருவாயூரப்பனையே தன் மகனாக நினைச்சுப் பாடியதுதான் இந்த ஞானப்பானம்.


  கேட்கக்கேட்க சுகமா இருக்கு இந்த பாடல் என்பது இன்னும் விசேஷம்தான்.

  எல்லா விஷுப் பண்டிகைக்கும் பாடும் கணி காணும் நேரம் கமலநேத்ரண்டே பாட்டும் இவர் இயற்றியதே.

  ReplyDelete