Friday, December 11, 2015

பொழிந்தாய் வாழி பேய்மாரி.....


                                              பொழிந்தாய் வாழி பேய்மாரி......
                                              ---------------------------------------------


இது என்ன.. வாழ்த்தா வசைமாரியா?
 ஒரு நாயைக் கொல்வதானாலும்  அதன் பக்கம் இருக்கும் நியாயத்தை சட்டப்படி சந்தர்ப்பம் அளித்துக் கேட்டுதான் கொல்வோம்என்னும் கொள்கை உடையவர்கள் நாங்கள் வெள்ளமே உன் தரப்பு நியாயங்களை கூறு கேட்போம்  
”சிங்காரச் சென்னை சீர்மிகு சென்னை விசித்திரம் நிறைந்த பல மழைகளைச் சந்தித்திருக்கிறது புதுமையான பல வெள்ளங்களைக் கண்டிருக்கிறது
ஆகவே நான் புதுமையான மழையும் அல்ல. அடித்துவிட்டோடும்  சர்வ சாதாரண மழையுமல்ல.
இயற்கையோடு இயற்கையாக சராசரியாக வந்து போகின்ற இயற்கையின் வரப்பிரசாதம் நான்
சென்னையிலே கன மழை பொழிந்தேன்  வெள்ளத்தை விளைவித்தேன்  குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன்  இப்படியெல்லாம்
நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் இதை எல்லாம் மறுக்கப் போகிறேன் என்று.
இல்லை நிச்சயமாக இல்லை.
கனமழை பொழிந்தேன்  .உங்களைவெள்ளத்தில்  மிதக்க விட வேண்டும் என்பதற்காக அல்ல.
ஏரிகள் குளங்கள் யுனிவர்சிடிகளாகவும்  அபார்ட்மெண்டுகளாகவும் மாறிவிட்டது என்பதற்காக /

வெள்ளத்தில் மிதக்க விட்டேன்

நீங்கள் எல்லாம் படகில் ஒய்யாரமாகப் பயணம் செய்து செல்ஃபி எடுக்க வேண்டும் என்பதற்காக அல்ல

நான் செல்ல வேண்டிய இடங்களை எல்லாம் நயவஞ்சகர்கள் ஆக்கிரமித்து விட்டார்கள் என்பதற்காக
உனக்கேன் இவ்வளவு அக்கறை. இயற்கையில் யாருக்குமே இல்லாத அக்றை என்று கேட்பீர்கள்/

நானே பாதிக்கப் பட்டேன்
சுயநலம் என்பீர்கள் என் சுய நலத்தில் பொது நலம் கலந்திருக்கிறது
உங்களிடம் எல்லாம் திட்டு வாங்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் பொழிந்து கொண்டிருக்கின்றேனே என்னைப் போய் குற்றவாளி குற்றவாளி என்கிறீர்களே  இந்தக் குற்ற வாளியின்  வாழ்க்கைப் பாதையில் சற்றுப்பின்  நோக்கி பார்த்தால்தெரியும்
நான் ஓடி வந்த சென்னையில் ஏரி குளங்கள் எவ்வளவு என்று கணக்குப் பார்க்க முடியும்
ஓடி வரப் பாதைகள் இல்லை எங்கும் ஃப்லாட்டுகள் நிறைந்திருக்கின்றன. ஏரிகளை விட்டு வெளியேறியதில்லை நான் இப்போது ஃப்லாட்டுகளை விட்டு வெளியேறி இருக்கிறேன் , சென்னை மக்களே என்னைத் திட்டுவதற்கு முன்னால் நான் கூறுவதைக் கேளுங்கள் மடிப்பாக்கம் பள்ளிக்கரணை வேளச்சேரி போன்ற இத்திரு விடங்களில்  இருந்தவன் நான்   இருக்க ஒரு ஏரியா இப்போது இருப்பது ஒரு ஏரியா இயற்கையின் தலை எழுத்துக்கு நான்  என்ன விதி விலக்கா.”
”யார் செய்த தவறுக்காக நீ கனமழை பொழிந்து விட்டு நீயே வக்கீலாக வாதாடுகிறாய்?”
”இல்லை யார் வழக்கும் இல்லை இதுவும்என் வழக்குத்தான் ஒரு பொது நலவழக்குத்தான்
ஏரியைக் குளங்களை தூர்த்து யுனிவர்சிடியும் ஃப்லாட்டுகளும் கட்டிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு
நான் புத்தியைப் புகட்ட கன மழை பொழிந்ததில் என்ன தவறு நான் கனமழை பொழிந்தது ஒரு குற்றம் -மக்களை வெள்ளத்தில் மிதக்க விட்டதும்  ஒரு குறறம்-  இப்படி எத்தனைக் குற்றம் காண்பீர்கள்
இதற்கு யார் காரணம் என்னைச்சென்னையைச் சுற்றித் திரிய விட்டது யார் காரணம்  இயற்கையின்  குற்றமா?
இல்லை இயற்கையை ஓரம் கட்டி ஓராயிரம்  ஏரிகளை தூர்த்துவிட்டுக்  ஏரிகள் குளங்களிலெல்லாம்  யுனிவர்சிடி ஃப்லாட்டுகளாகக் கட்டியது என் குற்றமா?
அல்லது நான் வரவே மாட்டேன் என்று தூற்றிய கயவர்கள் குற்றமா?
இக்குற்றங்கள் களையப்படும் வரை மழைகளும் ரமணர்களும் குறையப் போவதில்லை. பயணத்தில் எந்தப்பக்கம் புரட்டிப் பார்த்தாலும் காணும்  பாடம் பகுத்தறிவு பயனுள்ள
இயற்கை தத்துவம் 
 

25 comments:

 1. இதன் பின்னராவது மக்கள் மனம் மாற வேண்டும். ஆனால் கட்டிடங்களை இடிப்பதில் மாபெரும் சிக்கல் இருக்கிறது! என்ன நடக்கப் போகிறது என்று புரியவில்லை. எனினும் இருக்கும் ஏரிகளையும், குளங்களையும் மழை வடிகால் வாய்க்கால்களையும் ஒழுங்காகத் தூர் வாரிப் பாதுகாத்தால் போதுமானது.

  ReplyDelete
 2. ஒரு காலத்தில் அந்த அந்தப் பகுதியில் பொது மராமத்து என்னும் பெயரில் அனைவரும் கூடி இதை எல்லாம் ஒழுங்காகச் செய்து வந்தனர். அந்தப் பகுதியின் கணக்குப் பிள்ளை கண்காணிப்பில் எல்லாம் ஒழுங்காக நடக்கும். இந்தப் பரம்பரை முறையை ஒழித்த பின்னர் வந்திருக்கும் இப்போது இருக்கும் விஏஓக்களுக்கு எங்கே ஏரி, எங்கே கண்மாய், குளம் என்பதே தெரியாது! பரம்பரைக் கணக்குப் பிள்ளை எனில் கண்ணை மூடிக் கொண்டு விபரங்களைத் தருவார். மேலும் தன் ஊர் என்னும் பாசமும் இருக்கும். இதை ஒழித்ததும் அரசு செய்த மாபெரும் தவறு! :( இப்போது கிராமத்தில் பொது மராமத்து என்பதே இல்லை என்பதோடு எல்லாவற்றையும் அரசு தான் வந்து செய்யணும் என்னும் மனப்பான்மையும் நிறைய இருக்கிறது. நூறு நாள் வேலைத் திட்டங்களில் இதையும் திட்டமிட்டுச் செய்ய வைத்திருந்தால் இவ்வளவு பாதிப்பு வந்திருக்குமா? :(

  ReplyDelete
 3. தற்போது பராசக்தி உரையாடல் நடையில் WhatsAPP இல் வந்துகொண்டிருக்கும் காணொளியுடன் கூடிய சுவாரஸ்யமான பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 4. கீழே யுள்ள வலையகத்தை க்ளிக் செய்தால் ,வைரஸ் அலெர்ட் வருதே !
  காணொளி எங்கே,காணவில்லையே :)

  ReplyDelete
 5. வாட்சப்பில் எனக்கும் வந்திருந்தது.

  அடையாற்றின் வழியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அனகாபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் உடைத்து வருகிறார்கள் இப்போது! இதில் இன்றைய செய்தியில் ஃபிப்ரவரி மாதம் வரை தென் தமிழகத்தில் மழை ஆபத்து இருக்கும் என்று ஐ நா சொல்லி இருப்பதாக புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில் காட்டினார்கள்.

  ReplyDelete
 6. வாட்ஸ்அப்பில் இவ்வுரையாடலைக் கண்டேன் கேட்டேன் ஐயா
  நன்றி

  ReplyDelete
 7. நாம் நம்மை திருத்திக்கொள்ள சரியான நேரம். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 8. சீர் செய்ய சரியான வாய்ப்பு... பயன்படுத்திக் கொள்வார்கள் என நம்புவோம்....

  வாட்ஸ் அப் பயன்படுத்தாத என் போன்றவர்களுக்கு வசதியாக இங்கே தந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 9. நானும் பார்த்தேன் ஐயா மக்கள் புரிந்து கொண்டு உணர நல்லதொரு வாய்ப்பு இந்த மழை என்றே கருதுவோம்

  ReplyDelete
 10. @ கீதாசாம்பசிவம்
  நீர் போகும் பாதையைச் சீராக வைக்கலாம் குப்பைக்கழிவுகளைப் போடாமல்.

  ReplyDelete

 11. @ கீதா சாம்பசிவம்
  இந்த நூறு நாள் வேலைத் திட்டம் நன்றாகச் செயல் படுத்தப் பட்டிருந்தால்.......! அதிலும் கொள்ளை அல்லவா அடிக்கப்பட்டது. திட்டங்கள் பலதும் நன்றே. இப்போதைய ஸ்வச் திட்டமும் தான் எல்லாம் நம் குறையே.

  ReplyDelete

 12. @ வே நடனசபாபதி.
  எனக்குக் கிடைத்த ஒலி வடிவை வரிவடிவாக்கினேன் வருகைக்கு நன்றி.

  ReplyDelete

 13. @ பகவான் ஜி. என் பதிவைப் படிக்க ஏன் வலையகத்தை அழுத்தினீர்கள் மேலும் நான் காணொளி ஏதும் இடவில்லையே. வருகைக்கு நன்றி. ஜி

  ReplyDelete

 14. @ ஸ்ரீராம்
  வாட்ஸப்பில் ஒலி வடிவில் வந்ததை வரிவடிவாக்கினேன் வருகைக்கு நன்றி. உஷாராய் இருங்கள் அனாவசிய பீதி வேண்டாம்

  ReplyDelete

 15. @ கரந்தை ஜெயக்குமார்
  வாட்ஸப்பில் ஒலி வடிவில் மட்டும்தான் வந்தது. வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete

 16. @ சோழ நாட்டில் பௌத்தம்
  வருகைக்கு நன்றிஐயா

  ReplyDelete

 17. @ வெங்கட் நாகராஜ்
  நானும் வாட்ஸப் பயனாளி அல்ல. என் மகன் வந்திருந்தான் எனக்குக் காட்டினான் அதை வரிவடிவில் பகிர்ந்தேன் நன்றி சார்.

  ReplyDelete

 18. @ கில்லர் ஜி
  நிறையவே பாடங்கள் கற்றுத்தந்த மழை. வருகைக்கு நன்றி ஜி

  ReplyDelete

 19. @ எஸ் பி செந்தில்குமார்
  மழையின் விளைவுகளுக்கு யாரை எல்லாமோ குற்றம் சொல்கிறோம் இது மழையின் பார்வையில் இருந்ததால் பதிவிட்டேன் வருகைக்கு நன்றி குமார்

  ReplyDelete
 20. இயற்கையின் பாடம் தத்துவம் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதே. அதன் பார்வையில் அனைத்தும் சரியே. மனிதன் தோற்றுப் போய் வெட்கித் தலை குனிந்து நிற்கவேண்டிய சமயம் சார். இந்தக் கோணத்தில்தான் நான் பக்கிங்ஹேம் கால்வாய் பேசுவதைப் போல எழுதுகின்றேன். மூன்றாவது பகுதியில் எத்தனை கோடிகள் விழுங்கப்பட்டுள்ளன என்று தெரியவரும் சார்...இனியும் திருந்தவில்லை என்றால் இயற்கை நிச்சயமாகத் தன் சாட்டையைக் கையில் எடுக்கும் மால்துஸ் சொன்னது போல்...

  கீதா

  கீதா என்று பெயரிடாமல் கருத்துப் போட்டுவிட்டேன் சார் அதனால் டெலிட் செய்து மீண்டும் இட்டேன்.

  ReplyDelete
 21. மழை
  கற்றுக்கொடுத்த பாடங்கள்
  எத்தனையோ...

  சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  ReplyDelete

 22. @ துளசிதரன் தில்லையகத்து
  ஒரே மூச்சில் பல பதிவுகளையும் படித்து விட்டீர்கள் போல் இருக்கிறதே. கீதா என்று பெயரிடப்படாவிட்டால் அது துளசியின் கருத்து என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளலாமா. உங்கள் பக்கிங்காம் கால்வாய் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் வருகைக்கு நன்றி மேம்

  ReplyDelete

 23. @ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
  இயற்கை நிறையவே பாடங்கள் கற்பிக்கிறது. நாம் கற்றுக் கொள்வதில்தான் வெகு நிதானம் வருகைக்கு நன்றி சார்.

  ReplyDelete