தோரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தோரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 8 டிசம்பர், 2019

பல்சுவைப்பதிவு


                                                  பல்சுவைப்பதிவு
                                                  --------------------------

சில செடிகள் தொட்டியில் வைப்பதை விட நிலத்தில்  ஊன்றி வைத்தால் நன்கு வளரும்
வீட்டில் இருக்கும்கொஞ்ச இடத்தில் செடிகளை வைக்க முடிவதில்லை  எல்லாம் இந்த எலித் தொல்லை முன்பு திரு வைகோ தன்பதிவு ஒன்றில் எலிகளைப் பிடிப்பதுபற்றி எழுதி இருந்தார்  எலி கூண்டு வைத்து பிடிக்க முடியாது இந்த சமயத்தில் யாரோ சொன்னபடி ஒரு அட்டை ரூ 60 கொடுத்து வாங்கினால் எலி சிக்குமென்றார்கள் எலி அட்டைமேல் வர சில வாச்னைகளுடன் கூடிய அட்டைவாங்கப்பட்டது அதன்  மேல் எலி வந்தால்  சிக்கென்று ஒட்டிக் கொள்ளுமாம்  ஒரு சுப வேளையில் எலி வளைக்காக நோண்டி இருந்த  பள்ளத்துக்கருகே அட்டையை வைத்தேன் மறு நாள்காலையில் எழுந்து எலி  (அவை பெருச்சாளியாகவுமிருக்கலாம்  ) அட்டையில் சிக்கி இருக்கிறதா  என்றுபார்த்தால்  ஏமாற்றமே ஓரிரு நாட்கள் எலி சிக்கினால்  அதை எப்படி அப்புறப்படுத்துவது என்று எண்ணிய படியே உறக்கம் வராமல்விழித்திருந்தது தான் மிச்சம்  அந்த அட்டையில் கை வைத்தால் ஒட்டிக் கொண்டது கண்டுஎலி அட்டையின் மேல் வரவேண்டியதுதான்  தேவை மீதியைஅட்டை பார்த்துக் கொள்ளும்  ஆனால் எலியைஅட்டைமேல் எப்படி வரவைப்பது என்பதுதான்  முக்கியம்நம்மிடம் ஏதும் இல்லை இரண்டு நாட்களுக்குப்பின்  எலி உத்தேசமாய் வரும் வழியில் அட்டை வைக்கப்பட்டது  மூச் எலியாவ்து சிக்குவதாவதுஅதற்கு தெஇயும்போல சிக்குவேனா  என்று சிரிக்கிறதோ     


எலி பிடிக்க அட்டை 


எலிவளை அருகே அட்டை 

                       -----------------------------------------
மச்சினனின்  பேரக்குழந்தைகள்பற்றி எழுதி இருந்தேன்   அவர்களுக்கு ராஜஸ்தானில் இருந்து உடுப்புகள்கொண்டுவந்திருந்தார்கள்  அதி குழந்தைகள்அழகாக இருக்கிறார்கள் ஆடைபாதி என்பதன் விளக்கம் கிடைத்த்தோ 
இரட்டையர் ராஜஸ்தானி உடையில் 
                         --------------------------------- 
 இன்னொன்று சொல்ல வேண்டும் என் வீட்டுக்கு வலைப்பதிவர் ஒருவர் வந்திருந்தார்  வரும்போது பன்னீர் பயசமும்ம்கொண்டு வந்தார் புகைப்படமும்  ஒன்று எடுத்தோம்  ஆனால் பதிவில் வெளியிட வில்லை ராகதேவிக்கு ஒரு வேளை அது  விருப்பமில்லாமல் இருக்கலாம் ஆனால் பதிவர் வந்ததில் இருந்த மகிழ்ச்சியைப் பகிராமல் இருக்கமுடியவில்லை 

பல்சுவை என்று எழுதிவிட்டு இனிப்பு இல்லாமலா பூவையின் எண்ணங்களில் கடைசியாக பதிவிட்டது இனிப்புக்காக இங்கும் 
பேசன்லட்டுவா  பேசின்  ல்ட்டுவா பெய்ராமுக்கியம்  பேரில் என்ன 
 இருக்கிறது  எ ரோஸ் இஸ் எ  ரோஸ் ஸெ ரோஸ்  பெயரா முக்கியம்
தேவையானபொருட்கள் 
கடலை மாவு ஒரு கப்
பொடித்த சர்க்கரை அதே அளவு
 நெய்  தேவைக்கு ஏற்ப
முந்திரி பருப்பு  நறுக்கியது  தேவைக்கேற்ப
செய்முறை 

 கடலை மாவை நெய்யில் வறுத்தெடுக்கவும் நெய் அளவு குறையக் கூடாது மாவு கரியாமல் இருக்க வேண்டும் பொன்னிறமாக  வறுத்து முடியும் நெரம்பொடித்து வைத்தமுந்திரியும்சேர்த்து  வறுக்கவும்   அடுப்பை அணைத்து பொடித்தசர்க்கரையைஅதில் சேர்த்து நன்கு கலக்கவும் சூட்டோடு  லட்டு பிடிக்கவும் சூட்டில் கை பத்திரம் தாங்கும்   சூடோடு  பிடிக்கவும் சிறிது ஆறியதும்சாப்[பிடலாம்  எப்படி இருக்கிறது சொல்லுங்கள்