Sunday, December 8, 2019

பல்சுவைப்பதிவு


                                                  பல்சுவைப்பதிவு
                                                  --------------------------

சில செடிகள் தொட்டியில் வைப்பதை விட நிலத்தில்  ஊன்றி வைத்தால் நன்கு வளரும்
வீட்டில் இருக்கும்கொஞ்ச இடத்தில் செடிகளை வைக்க முடிவதில்லை  எல்லாம் இந்த எலித் தொல்லை முன்பு திரு வைகோ தன்பதிவு ஒன்றில் எலிகளைப் பிடிப்பதுபற்றி எழுதி இருந்தார்  எலி கூண்டு வைத்து பிடிக்க முடியாது இந்த சமயத்தில் யாரோ சொன்னபடி ஒரு அட்டை ரூ 60 கொடுத்து வாங்கினால் எலி சிக்குமென்றார்கள் எலி அட்டைமேல் வர சில வாச்னைகளுடன் கூடிய அட்டைவாங்கப்பட்டது அதன்  மேல் எலி வந்தால்  சிக்கென்று ஒட்டிக் கொள்ளுமாம்  ஒரு சுப வேளையில் எலி வளைக்காக நோண்டி இருந்த  பள்ளத்துக்கருகே அட்டையை வைத்தேன் மறு நாள்காலையில் எழுந்து எலி  (அவை பெருச்சாளியாகவுமிருக்கலாம்  ) அட்டையில் சிக்கி இருக்கிறதா  என்றுபார்த்தால்  ஏமாற்றமே ஓரிரு நாட்கள் எலி சிக்கினால்  அதை எப்படி அப்புறப்படுத்துவது என்று எண்ணிய படியே உறக்கம் வராமல்விழித்திருந்தது தான் மிச்சம்  அந்த அட்டையில் கை வைத்தால் ஒட்டிக் கொண்டது கண்டுஎலி அட்டையின் மேல் வரவேண்டியதுதான்  தேவை மீதியைஅட்டை பார்த்துக் கொள்ளும்  ஆனால் எலியைஅட்டைமேல் எப்படி வரவைப்பது என்பதுதான்  முக்கியம்நம்மிடம் ஏதும் இல்லை இரண்டு நாட்களுக்குப்பின்  எலி உத்தேசமாய் வரும் வழியில் அட்டை வைக்கப்பட்டது  மூச் எலியாவ்து சிக்குவதாவதுஅதற்கு தெஇயும்போல சிக்குவேனா  என்று சிரிக்கிறதோ     


எலி பிடிக்க அட்டை 


எலிவளை அருகே அட்டை 

                       -----------------------------------------
மச்சினனின்  பேரக்குழந்தைகள்பற்றி எழுதி இருந்தேன்   அவர்களுக்கு ராஜஸ்தானில் இருந்து உடுப்புகள்கொண்டுவந்திருந்தார்கள்  அதி குழந்தைகள்அழகாக இருக்கிறார்கள் ஆடைபாதி என்பதன் விளக்கம் கிடைத்த்தோ 
இரட்டையர் ராஜஸ்தானி உடையில் 
                         --------------------------------- 
 இன்னொன்று சொல்ல வேண்டும் என் வீட்டுக்கு வலைப்பதிவர் ஒருவர் வந்திருந்தார்  வரும்போது பன்னீர் பயசமும்ம்கொண்டு வந்தார் புகைப்படமும்  ஒன்று எடுத்தோம்  ஆனால் பதிவில் வெளியிட வில்லை ராகதேவிக்கு ஒரு வேளை அது  விருப்பமில்லாமல் இருக்கலாம் ஆனால் பதிவர் வந்ததில் இருந்த மகிழ்ச்சியைப் பகிராமல் இருக்கமுடியவில்லை 

பல்சுவை என்று எழுதிவிட்டு இனிப்பு இல்லாமலா பூவையின் எண்ணங்களில் கடைசியாக பதிவிட்டது இனிப்புக்காக இங்கும் 
பேசன்லட்டுவா  பேசின்  ல்ட்டுவா பெய்ராமுக்கியம்  பேரில் என்ன 
 இருக்கிறது  எ ரோஸ் இஸ் எ  ரோஸ் ஸெ ரோஸ்  பெயரா முக்கியம்
தேவையானபொருட்கள் 
கடலை மாவு ஒரு கப்
பொடித்த சர்க்கரை அதே அளவு
 நெய்  தேவைக்கு ஏற்ப
முந்திரி பருப்பு  நறுக்கியது  தேவைக்கேற்ப
செய்முறை 

 கடலை மாவை நெய்யில் வறுத்தெடுக்கவும் நெய் அளவு குறையக் கூடாது மாவு கரியாமல் இருக்க வேண்டும் பொன்னிறமாக  வறுத்து முடியும் நெரம்பொடித்து வைத்தமுந்திரியும்சேர்த்து  வறுக்கவும்   அடுப்பை அணைத்து பொடித்தசர்க்கரையைஅதில் சேர்த்து நன்கு கலக்கவும் சூட்டோடு  லட்டு பிடிக்கவும் சூட்டில் கை பத்திரம் தாங்கும்   சூடோடு  பிடிக்கவும் சிறிது ஆறியதும்சாப்[பிடலாம்  எப்படி இருக்கிறது சொல்லுங்கள்   


                                       


16 comments:

 1. அந்த ஒட்டும் அட்டையை வைத்து நானும் எலி பிடித்துஇருக்கிறேன்.  வெறும் அட்டையை வைக்காமல் அதில் அமுல் பட்டர் துண்டுஒன்றை வைக்கலாம்.    அல்லது தேங்காய் எண்ணெயில் சுட்ட தேங்காய்த்துண்டு ஒன்று.   

  குழந்தைகள் அழகு.

  ReplyDelete
  Replies
  1. ஒரு வேளை நன் வாங்கிய அட்டையில்பெருச்சாளிகள் சிக்காதோ என்ன்மவோ

   Delete
 2. அட்டையுடன் ஒட்டிக் கொண்டே சில தூரம் சென்று விடுகிறது...!

  ReplyDelete
  Replies
  1. அட்டையில் ஒட்டினால் ஓட முடியுமா

   Delete
 3. எலிகள் புத்திசாலிகளாகி விட்டன

  ReplyDelete
  Replies
  1. எலிகள் என்பதே என் விஷயத்தில் சரியில்லையோ என்னவோ

   Delete
 4. பதிவு ரசிக்க வைத்தது குழந்தைகள் படம் ஸூப்பர்

  ReplyDelete
  Replies
  1. குழந்தைகள் எப்பவும் ரசிக்கவைப்பர்கள்

   Delete
 5. எங்கள் வீட்டில் ஒரு முறை பால்கனியில் அட்டை வைத்து ஒரு எலி மறுநாளே சிக்கிக்கொண்டது. நான் அந்த அட்டையோடு தூரப்போட்டு வந்தேன்...ஆனால் மனதில் மிகுந்த சோகம் வந்துவிட்டது. (உயிரோடு இருக்கும் எலியை அட்டையில் மாட்டிக்கொண்டதை குப்பைத் தொட்டியில் எறிந்தது).

  ReplyDelete
  Replies
  1. எலிமாட்டினால் எப்படி அகற்றுவதுஎன்றே நான் கவலைப்பட்டதுண்டு

   Delete
 6. பன்னீர் பாயசம் - எ.பி. திங்கக் கிழமை பதிவில் வருகிறதா என்று பார்க்கவேண்டியதுதான்.

  ReplyDelete
  Replies
  1. பதிவர் எழுதவேண்டுமே

   Delete
 7. குழந்தைகள் அழகு. எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி இந்த அட்டையை தன் வீட்டு கிச்சன் கப்போர்ட் மேல் வைக்க வேண்டும் என்று விரும்பி, அதை குறி பார்த்து தூக்கி எறிந்திருக்கிறார். குறி தவறி அட்டை அவர் தலையிலேயே விழுந்து நன்றாக ஒட்டிக் கொண்டு விட்டது. பல வகைகளிலும் முயற்சி செய்து எடுக்க முடியாமல் கடைசியில் தலை முடியை கத்தரித்து எடுத்தார்கள். அம்மாவும் அப்பாவும் அட்டையை பிய்த்து எடுப்பதில் ஈடுபட்டிருக்க, குழந்தை அப்பாவின் பர்ஸிலிருந்து ரூபாய் நோட்டை எடுத்து கத்தரிக்கோலால் தூள் தூளாக கத்தரித்து விட்டது. சோதனை மேல் சோதனை!
  ReplyDelete
  Replies
  1. இந்தமாதிரி அனுபவப் பகிர்வுகள் பின்னூட்டங்களை எதிர் பார்க்க வைக்கிறது நன்றி

   Delete
 8. உங்கள் வீட்டில் உள்ள எலியன் மகா குசும்பன் போல ... அதனாலதான் அட்டையை சட்டை செய்யாமல் அசட்டையாகவே இருந்துள்ளான்... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  ReplyDelete
 9. அதற்கு அதன் உயிர் முக்கியமல்லவா ஏதோ என் பாக்கியம் எலி அல்ல பெருச்சாளி விட்டுக்குள் வந்ததில்லை

  ReplyDelete