Sunday, December 15, 2019

பிள்ளை வளர்ப்பு
                                 பிள்ளை  வளர்ப்பு
                                 ----------------------------
*திரு. இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி அவர்களின் ஆங்கிலப் பதிவின் தமிழாக்கம் இது.*வாட்ஸாப்பில் வந்தது

அவர் தனது அண்டை வீட்டுக்காரர் தன்னுடன் மன வருத்தத்தோடு பகிர்ந்து கொண்ட விஷயத்தை நமக்குப் பதிவு செய்கிறார்....

*
பணி முடிந்து வெகு தொலைவு பயணம் செய்து களைப்புடன் திரும்பிய நான் என் மனைவியை கடும் காய்ச்சலுடன் படுக்கையில் படுத்திருக்கக் கண்டேன்.*

*
எனக்காக அந்த ஜுரத்திலும் சமையல் செய்து உணவை ட்ரேயில் வைத்து மூடி வைத்திருந்தாள். நான் வழக்கமாக உண்ணும் எல்லாவற்றையும் சமைத்து வைத்திருந்தாள்.*

*
அவளுக்கு தான் என் மேல் எவ்வளவு கரிசனம். உடல் நலம் சரியில்லாத நேரத்தில் கூட எனக்காக சமைத்து வைத்திருக்கிறாளே.*

*
சாப்பிட அமர்ந்த பின் தான் ஏதோ குறைவதை உணர்ந்தேன். டிவி பார்த்துக் கொண்டிருந்த என் வளர்ந்த மகளிடம், "செல்லம்..! என் மாத்திரையையும் தண்ணீரும் எடுத்துக் கொண்டு வா!" என்று கூறினேன்.*

*
அவளை நான் தொந்தரவு செய்ததை விரும்பாமல் கண்ணை உருட்டி அவள் அதிருப்தியைத் தெரிவித்து விட்டு நான் கேட்டதைக் கொண்டு வந்து கொடுத்தாள்.*

*
ஒரு நிமிடம் கழித்து சாம்பாரில் உப்பு குறைவாக இருந்ததால் அவளை எடுத்துக் கொண்டு வரப் பணித்தேன்.*

*
அவள் 'சை...' என்று கூறிக் கொண்டே காலை அழுத்தமாக வைத்து நடந்து போய்க் கொண்டு வந்து கொடுத்தாள்.*

*
அவ்வாறு அவள் செய்தது நிச்சயம் நான் அவளைத் தொந்தரவு செய்ததை அவள் விரும்பவில்லை என்று எனக்குத் தெரிந்தது.*

*
நான் சில நிமிடம் கழித்து மீண்டும் 'செல்லம்...!' என்று அழைத்தபோது அவள் கையில் இருந்த டிவி ரிமோட்டை பட்டென்று மேஜையில் வைத்து விட்டு...*

*"
அப்பா உங்களுக்கு இப்போது என்ன வேண்டும்? எத்தனை முறை தான் என்னை எழுப்புவீர்கள்? நானும் தான் நாள் முழுதும் வேலை பார்த்து விட்டு வந்திருக்கிறேன். எனக்கும் களைப்பாக தான் இருக்கிறது" என்று கூறினாள்.*

*
நான் "ஸாரிமா" என்று சொல்லிவிட்டு சாப்பிட்ட பாத்திரங்களை எடுத்து சமையலறை சிங்கில் போட்டுவிட்டு என் கண்களில் இருந்து உருண்டோடிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன்.*

*
என் இதயம் அழுதது. நான் அவ்வப்போது எனக்குள் கேட்டுக் கொள்ளும் கேள்வி இது தான்...*

*
இந்தக் கால இளைய தலைமுறையினர் ஏன் இது போல் நடந்து கொள்கிறார்கள்? நாம் அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக சுதந்திரம்கொடுத்தது தவறோ?*
*அவர்களுக்கு நல்லொழுக்கத்தையும் பண்பாட்டையும் கற்றுக் கொடுக்கத் தவறி விட்டோமோ?*

*
நாம் அவர்களை நண்பர்கள் போல் நடத்தியது தவறோ?*

*
அவர்களுக்கு வாழ்க்கையில் ஆயிரம் நண்பர்கள் கிடைப்பார்கள். ஆனால் பெற்றோர்கள் நாம் மட்டும் தானே. பெற்றோருக்கான கடமையை நாம் செய்யாவிட்டால் வேறு யார் செய்யப் போகிறார்கள்?*

*
இன்று... பிறந்த குழந்தைக்குக் கூட சுயமரியாதை இருப்பது குறித்து கவலைப்படுகிறது இந்த உலகம்.*

*
ஆனால் பெற்றோர்களுக்கு மட்டும் சுயமரியாதை இல்லையா?*

*
அவர்கள் தங்கள் குழந்தைகளின் ஈகோக்களை வளர்த்து விட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா?*

*
இன்றைய பெரும்பாலான பெற்றோர்கள் கூறுவது இதைத்தான்...*

*
இந்தக் காலத்தில் எந்தக் குழந்தைகள் பெற்றோருக்குக் கீழ்படிகிறார்கள்? இதற்குக் காரணம் என்ன?*

*
இதேபோல் தான் அன்று ஒரு பார்ட்டியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது என் 50 வயது நண்பர் தன் கார் சாவியை மறந்து போய்க் காரிலேயே விட்டு விட்டு வந்து விட்டதால் தன் டீன் ஏஜ் பெண்ணை எடுத்துக் கொண்டு வரப் பணித்தார்.*

*
அவள், "நா...என்ன உனக்கு வேலைக்காரியா? நீயே போய் எடுத்துக் கொள்!" என்றாள்.*

*
அவரும் சிரித்துக் கொண்டே "இல்லை...மா! நான் தான் உனக்கு வாழ் நாள் முழுவதும் சேவகன்!" - என்று கூறிக் கொண்டே போய் கார் சாவியை எடுத்துக் கொண்டு வந்தார். இதுவே இன்று சமுதாயத்தில் நடக்கிறது. இதற்குக் காரணம் என்ன?*

*
நாம் நமது குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையைப் பற்றியும் சுயமரியாதையைப் பற்றியும் கற்றுக் கொடுக்க விரும்பினால் முதலில் இதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு பணக்காரர்களாகவும் புகழ்பெற்றவர்களாகவும் இருந்தாலும் அவர்களுடைய பெற்றோர்கள் என்றும் பெற்றோர்கள் தான்.*

*
பிள்ளைகள் என்றுமே அவர்கள் பெற்றோருக்கு சமமாக மாட்டார்கள்.*

*
பெற்றோருக்கு நான் சொல்ல விரும்புவது இது தான். நீங்கள் உங்கள் குழந்தைகளை நண்பர்களாக நடத்தாதீர்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் ஆயிரம் நண்பர்கள் கிடைக்கலாம். ஆனால் பெற்றோர்கள் நீங்கள் மட்டுமே....*

*
அதனால் அவர்களை நீங்கள் வளர்ப்பதற்கு விதிமுறைகளை வகுப்பதற்கும், அந்த விதிமுறைகளை அவர்கள் மதிப்பதற்கு அவர்களைக் கட்டாயப் படுத்துவதற்கும் ஒரு போதும் அஞ்சாதீர்கள்.*


 
 பிள்ளை வளர்ப்பு
இப்போதெல்லாம்  ஏதாவது தவறுகள் நடந்தால்  செய்தவர்கள் சரியாக வளர்க்கப்படவில்லை என்று சொல்லக் கேட்கிறோம்  பொய் பேசாமை திருடாமை  போன்றவை வேண்டுமானால்  வளர்ப்பின்  பற்றாக்குறையால் வரலாம் அண்மையில் இன்ஃபோசிஸ்  நாராயண மூர்த்தியும் இது பற்றி அங்கலாய்த்திருந்தார் பிள்ளைக;ள் பிறரால் புகழப்படும்போது வளர்ப்பு நன்றாக இருப்பதாகவும்பிறரால் ஏசப்படும்போது தவறான வளர்ப்பாகவும் சொல்லப்படுகிறது  மேலும் வயதன பெற்றோரை முத்யோர் இல்லத்தில் சேர்த்தால்  பிள்ளிக ளைக் குறை சொல்லவும் கேள்விப்படுகிறோம் இதுதான்   சரியான வளர்ப்பு என்று எதுவாவது உண்டா
இந்தக்காலத்தில் பிள்ளைகளுக்கு சுதந்திரம் அதிகம் தரப்படுகிறது இது தவறா? பிள்ளைகளை பயமுறுத்தி அடிமைகள் போல் வளர்க்க வேண்டுமா
எதிர்பர்ப்புகள் தகரும்போது யாரைக் குறை கூற முடியும் இக்காலத்துப் பிள்ளைகள் எல்லோருக்கும் சரி எது தவறுஎது என்று தெரியும்
சுயமாய் சிந்திக்கிறார்கள் இப்படிச்செய் இல்லாவிட்டால் உம்மாச்சி கண்ணைக் குத்துமென்றெல்லாம் சொல்ல முடியாது என்ன நிகழ்ந்தாலும் எதிர்கொள்ளும் பக்குவம்  இருக்கிறது
நாம் என்ன சொன்னாலும் எதிர்ப்பு காட்டாதபிள்ளைகளையே  நாம்விரும்புகிறோம்அவர்களுக்கான இடத்தை தர விரும்புவதில்லை ஏன் என்றால் நாமெது சொன்னாலும் அதை அப்படியே சிரமேற்கொண்டு செய்தால் நல்லவர்கள்  இல்லாவிட்டால் வளர்ப்பு சரியில்லையா  எனக்கு தோன்றுவதுஇதுதான் இப்படிச் செய் அப்படிச் செய் என்பதை விட எப்படிசெய்யவேண்டுமென்று வாழ்ந்து காட்ட வேண்டும்
சாக்ரடீஸ் காலம் முதலெ தொடங்கியதுதான் இது வருங்கால சந்ததியினர் சரியில்லைஎன்பதே  நாமென்ன விதைக்கிறோமோ அதுவே விளையும்    


31 comments:

  1. சிக்கலான டாபிக்.  யாராலாவது வரையறுத்துச் சொல்லமுடியுமா?  தெரியவில்லை.  அந்தக் குழந்தைகளே பெற்றோர் ஆகும்போது அவர்கள் பணியாளர்கள் ஆகிவிடுவார்கள்!

    ReplyDelete
    Replies
    1. பொதுவாக நான் இந்த வாட்ஸாப் செய்திகளை நம்புவதில்லை ஆனல் ஒரு எழுது பொருளுக்கு வித்திட்டதால் பதிவிட்டென் நாராயண மூர்த்தியின் க்ருத்துகளுக்கு ஒட்டியோ வெட்டியோ கருத்துகள் காரண காரியங்களுடன் பின்னூட்டம் எதிர்பார்த்தேன்

      Delete
  2. இந்த கட்டுப்பாட்டை முதலில் கை விட்டது ஆசிரியர்களே...

    அதற்கு காரணம் பெற்றோர்களே.... ஐயா

    என்னைக்கேட்டால் பிள்ளைகள் பெறாமலே கணவனும் மனைவியும் கடைசிவரை எந்த தொந்தரவும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து இறக்கலாம் இதற்கு இருவருமே தங்களை குழந்தைகளாக பாவித்து வாழப் பழகணும்.

    உலகம் நம்மை ஆண்மை இல்லாதவன் என்றும், மலடி என்றும் சொல்லலாம் அதனால் என்ன ? இனி வரும் காலங்களில் எல்லோருக்கும் இயற்கையாக குழந்தை உண்டாகாது.

    அல்லது அனாதை குழந்தையை தத்து எடுத்து வளர்க்கலாம் அது நம்மை கை விட்டு போனாலும் யாருக்கோ பிறந்ததுதானே என்று மனம் நம்மை ஆற்றுப் படுத்திக் கொள்ளும்.

    ஆனால் 90% இப்படி குழந்தைகள் நன்றி மறவாது சொந்தக் குழந்தைகளே இப்பொழுது நன்றி மறக்கிறது.

    இப்படி நான் எழுதியது பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கலாம் ???
    எனது அனுபவம் என்னை இப்படி எழுத வைத்து உள்ளது.

    இன்றளவும் ஓர் குழந்தையை தத்து எடுக்கும் திட்டம் என்னுள் உள்ளது ஆனால் என்னை பராமரிக்கவே ஓர் துணையின்றி தவிக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. நம் எண்ணப்படிகுழந்தைகள் இல்லாவிட்டால் குழந்தைகளே கூடாது என்பதுதீர்வல்ல குறை எங்கேஎன்று ஆய்வதே சரி

      Delete
  3. குழந்தைகளின் பழக்க, வழக்கங்கள், குணாதிசயங்கள் பற்றி இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் கூற்றை நூற்றுக்கு நூறு சதம் ஆதரிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இந்த வாட்ஸாப் செய்தி உண்மையானால் பெரிய நிறுவன முதலாளிக்கு தன் குடும்பத்தினரைசரியாக புரிந்து கொள்ளவோ பராமரிக்க தெரிய வில்லை என்பதே சங்கதி

      Delete
  4. ஆனால் இந்தக் காலத்து குழந்தைகள் பெற்றோரை ஒரு ATM ஆக சேவகன் ஆக அல்லவோ இருக்க ஆசைப் படுகிறார்கள். பெற்றோரோ ஆசிரியரோ கடிந்து கொண்டால் சற்றும் ஆலோசியாமல் தற்கொலை வரை செல்பவர்களும் உண்டே. மேலை நாகரீகத்தாக்கம் பெற்றோர் பிள்ளைகள், ஆசிரியர் மாணவர் பந்தங்களை குருகுல முறையில் இருந்து அடியோடு மாற்றி பெற்றோர் ஆசிரியர் என்பவர் ஒரு கடமை செய்பவர்கள் ஆகவே காணப்படுகிறார்கள். மரியாதை இல்லை.

     Jayakumar

    ReplyDelete
    Replies
    1. ஜெய்குமர் சார் எந்தகாலத்தில் இருக்கிறீர்கள் as you sow so you reap கடிந்துகொள்வதிலும் ஒரு நியாயமிருப்பதுபோல் இருக்க வேண்டும்

      Delete
  5. இது ஒரு யுனிவர்சல் பிரச்சனை. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வீட்டிலும் இப்போது என்றில்லாமல் எல்லா தலைமுறைகளையும் இருந்துவந்த மிகமிக சாதாரணமான பிரச்சினை. இதை பூதாகரமாக எடுத்துக்கொள்வது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.

    இந்த பதிவிற்கு வருவோம் முதலில் இது நாராயணசாமி அவர்கள் தான் வெளிய நாட்களா என்பதிலேயே சந்தேகம் இருக்கிறது. ஏனெனில் மனிதவள மேம்பாடு விஷயங்களில் அவருடைய இன்போசிஸ் நிறுவனம் ஒரு மிகச்சிறந்த உதாரணமாக திகழ்ந்து வந்துள்ளது அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தின் தலைவர் யாரோ ஒரு நண்பர் தன்னுடைய அனுபவத்தை கூறினார் என்பதை ஒட்டுமொத்த பிள்ளைகள் வளர்ப்பையும் குறித்து குறைவாக எழுதி இருப்பது என்னால் நம்ப முடியாத விஷயம்

    இந்த பதவியில் உள்ளவர் தான் இட்ட கட்டளையை மகள் நிறைவேற்றவில்லை என்பதை இத்தனை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டுமா என்பதுதான் என் கேள்வி. மகளை எதிர்பாராமல் அவரை ஒவ்வொரு முறையும் எழுந்து சென்று அவருக்கு வேண்டியது எடுத்திருந்தால் என்னப்பா அடிக்கடி எழுந்து போறீங்க என்ன கேட்டா நான் எடுத்து தர மாட்டேனா என்ன என்று கேட்டிருப்பார் பிறகு அவரே சென்று தந்தைக்கு தேவையானதை எல்லாவற்றையும் ஒரே தவணையில் எடுத்து கொண்டு வந்து கொடுத்து இருப்பார்

    அதேபோன்று கார் சாவியை மறந்து வைத்துவிட்டு வந்த தந்தை அவர் எழுந்து சென்று எடுத்து வந்து இருக்கலா தன் மகள் அல்லது மகன் என்பதற்காக அவர்களையே எல்லாவற்றையும் செய்யச் சொல்வது என்னை பொருத்தவரை சரியல்ல நமக்கு உடல் நலமில்லாத போது தள்ளாத வயதிலும் பிறருடைய உதவி தேவைப்படும்போது மட்டும் தான் மற்றவர்கள் உதவியை நாடவேண்டும் என்பது என் கருத்து நானும் இன்றுவரை அப்படித்தான் இருக்கிறேன் நான் இட்ட ஒருவேளை என் பிள்ளை என் மகள் செய்யவில்லை என்றால் அதற்காகவே இப்படி ஒரு மகள் எனக்குத் தேவைதானா என்றால் நாம் நினைப்பது நல்ல மனப்பான்மை அல்ல என்பதும் என் கருத்து. இப்போதும் சொல்கிறேன் நம் பிள்ளைகளை நாம் நண்பர்களாக தான் கருத வேண்டும் அவர்கள் செய்வதில் ஏதேனும் தவறு இருந்தால் நாம் வளர்த்த வளர்ப்பில் தான் தவறு இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

    இப்போது நண்பர் ஜி அவர்கள் சொன்ன கருத்தைப் பற்றி சில வார்த்தைகள். அவர் கூறியது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது எந்த ஒரு தந்தையும் அல்லது தாயும் கூறத் தகாத வார்த்தைகள்தான் அப்படிப்பட்ட ஒரு அனுபவம் ஏற்பட்டதை நினைத்து வருந்துகிறேன்.    ReplyDelete
    Replies
    1. ஓரளவுக்கு சரியாக கருத்திட்டிருக்கிறீர்கள் நன்றி

      Delete
  6. இந்த முழு கருத்துரையும் குரல் வழியாக பதிவு செய்யப்பட்டது ஆகவே ஆங்காங்கே சில சில எழுத்துப்பிழைகள் சொற்கள் ஏற்பட வாய்ப்புள்ளது ஏற்பட்டுள்ளது அது என்னுடைய உச்சரிப்பின் மென்பொருள் புரிந்து கொண்டதால் ஏற்பட்ட பிழைகள் பொருத்தருள்க.

    நாம் குழந்தைகளைப் பெறுவது நம்முடைய சந்தோஷத்திற்காக அவர்களை வளர்த்து ஆளாக்கி முடிவது நம் கடமையாக மட்டும்தான் நாம் கருதிக் கொள்ள வேண்டும் நான் இப்படி படுக்க வைத்தாள் எனக்கு பின்னால் அவன் பொருள் உதவி செய்வான் அல்லது எனக்கு ஒத்தாசை செய்வான் என்றெல்லாம் கருதி எந்த தகப்பனும் தாயும் தன் பிள்ளைக்கு வேண்டியதை செய்வதில்லை ஆகவே அதை அவர்கள் செய்யாத போது அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பெற்றோர் என்று பெருந்தன்மையுடன் அவர்களை மன்னிப்பது தான் நல்லது. உதவி செய்தாலும் செய்யாவிட்டாலும் நாம அலுவல்களை அவர்கள் செய்தாலும் செய்யாவிட்டாலும் நாம் கூறும் அறிவுரைகளை அவர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் அவர்கள் நம்மை மதித்தாலும் அதிக விட்டாலும் அவர்கள் நம் பிள்ளைகள் நாம் வளர்த்த குழந்தைகள் என்பதை ஒரு நாளும் மறக்கலாகாது என்பதும் என் கருத்து என் கருத்து என் நண்பர்கள் அனைவரும் ஒத்துப் போகவேண்டும் என்று நான் எதிர் பார்ப்பதில்லை ஆனால் எதிர்பார்ப்பு எதுவும் இல்லாவிட்டால் ஏமாற்றமும் வேதனையும் இல்லை என்பது என் கருத்து.

    இதுவரை எந்த பதிவிலும் சென்று இத்தனை பெரிய கருத்துரையை நான் விட்டதில்லை ஆனால் இந்த பதிவு என்னை மிகவும் பாதித்துவிட்டது. ஆகவேதான் என் மனதில் உள்ள அனைத்தையும் கொட்டித் தீர்த்து விட்டேன் நான் கூறியவற்றில் ஏதேனும் தவறு இருந்தால் நண்பர்கள் என்னை மன்னித்து விட வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்திலும் நாராயணமூர்த்தியின் கருத்திற்கே பதில் பதிவே பிள்ளைகள்வளர்ப்பு பற்றியது நம் கருத்துக்கு யாரிடமும்மன்னிப்பு கோரத்தேவைஇல்லை பிள்ளைகள்டம் சரி எது தவறு எது என்பதை நம்வாழ்ந்து காட்டுவதன் மூலம் தெரிவிக்க முடியும்

      Delete
  7. வெளிய நாட்களா=எழுதினாரா

    படுக்கவைத்து=படிக்க வைத்து

    இன்னும் சில சொற்பொழிகள் உள்ளன. தேடிப்பிடித்து திருத்துவதற்கு சோம்பல். படிப்பவர்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் :)))

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் தட்டச்சு பிழைகள் நிறையவே வருகிறதுசரிபார்க்கவே இன்னும்பல முறைதட்டச்ச வேண்டி இருக்கிறது கீ போர்டில் ஏறி உட்காராத குறைதான்

      Delete
  8. சொற்பொழிகள்=சொற் பிழைகள்!

    ReplyDelete
  9. சொல்வது யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.

    அவர் வீட்டுலேயே என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும், திருமணம் உட்பட.

    ReplyDelete
    Replies
    1. அவர் வீட்டில் நடந்தது என்ன எனக்குதெரிய வில்லையே

      Delete
  10. திரு நெல்லைத் தமிழன் அவர்களின் கருத்தை நானும் வழிமொழிகின்றேன். சொல்வது எளிது. அதன்படி பின்பற்றுவது கடினம்.

    ReplyDelete
    Replies
    1. என்ன சொல்லி இருக்கிறார் தன் ஆற்றமையை வெளிப்படுத்தி இருக்கிறார் சொல்வது போல் தான் நடந்து காட்டலாமே

      Delete
  11. //*திரு. இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி //

    பெயருக்கு முன்னால் தான் திரு. போடுவது வழக்கம். இன்ஃபோசிஸ் திரு. நாராயண மூர்த்தி என்று இருந்திருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. வாசகர்களில் நக்கீரர்களும் உ ந்டு என்பதே நினைவுக்கு வரவில்லை எனக்கு வந்த வாட்ஸாப்பில் இருந்ததை அப்படியே காப்பி பேஸ்ட்செய்து விட் டேன் தவறுபொறுத்து அருள வேண்டுகிறேன்

      Delete
  12. கொழுப்பை குறைப்பதும் நம் கையில் தான் - மனதில்...,!

    ReplyDelete
    Replies
    1. இங்கு கொழுப்பு புரியவில்லை சார்

      Delete
  13. குழந்தைகள் வளர ஆரம்பிக்கும்போதிலிருந்தே அவர்களுடன் அணுக்கமாக இருந்து நாம் இவ்வாறான அறிவுரைகளைக் கூறினால் அவர்கள் புரிந்துகொள்ள வாய்ப்புள்ளது. தற்போது குழந்தைகள் அறிவுரை என்றாலே பயப்படுகின்றார்கள், காதுகொடுத்து கேட்பதில்லை, அலட்சியமாக நடந்துகொள்கின்றார்கள் என்று சொல்வதை விடுத்து நாம் அணுகும் விதத்தில் அணுகினால் சரியாக இருக்கும் என்பது என் எண்ணம். பிறருடன் சற்று மாறுபட்டு நடக்கின்ற பல குழந்தைகள் என்னிடம் பேசும்போது, அல்லது நான் பேச்சுக் கொடுக்கும்போது காணும் நடவடிக்கைகளில் அதனை உணர்கிறேன். காலம் கடந்து விட்டால் எதுவும் செய்ய முடியாது.

    ReplyDelete
  14. இது ஒரு நல்ல அணுகுமுறை நன்றி சார்

    ReplyDelete
  15. பெற்றோரின் தவறா ? சூழ்நிலை சரியில்லையா ? காலக் கோளாறா ?

    ReplyDelete
  16. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  17. இப்பதிவு பலரும் வாசிக்கும் இடம் தேவை யற்ற படங்கள்

    ReplyDelete