திங்கள், 23 டிசம்பர், 2019

கதம்பம்


                                                 கதம்பம்
                                                 ----------- --





படித்ததில் ரசித்தது
Can you answer all seven of the following questions
With the same word?

1. The word has seven letters....
2. Preceded God...
3. Greater than God...
4. More Evil than the devil...
5. All poor people have it...
6. Wealthy people need it....
7. If you eat it, you will eventually
 die
0
இரண்டு சுட்டிப் பையன்கள்.குறும்பும் துடுக்கும் நிறைந்தவர்கள். அவர்கள்மேல் வரும் புகார்கள் அவர்களது தாயைக் கவலைப்பட வைத்தது. ஊரிலொரு பெரிய மனிதர்.கம்பீரமான உருவம் கணீர்க் குரல். அவரிடம் தாய் சென்று முறையிட்டாள். அவரும் குழந்தைகளைத் திருத்த ஒப்புக்கொண்டார். ஒருவருக்குப் பின் ஒருவரை அனுப்பச் சொன்னார். முதலில் இளையவனை அனுப்பினாள். பெரிய மனிதர் அந்தச் சிறுவனை நல் வழிப்படுத்த வேண்டி அவனிடம் “கடவுள் எங்கே இருக்கிறார் தெரியுமா.?என்று கேட்டார். சிறுவன் மிரள மிரள விழித்தான். . அவர் சற்றே குரலை உயர்த்தி “ கடவுள் எங்கே.?” என்று கேட்டார். சிறுவன் முகம் வெளிறி பதில் ஏதும் கூறாமல் விழித்தான்.ஊர்ப் பெரிய மனிதருக்குக் கோபம் வந்தது. பதில் ஏதும் தராத சிறுவனை நோக்கி “கடவுள் எங்கே சொல்.? ” என்று சத்தம் போட்டார். சிறுவன் பயந்து போய் ஓடி தன் வீட்டுக்குள் நுழைந்தான். அவனது அண்ணன் அவனிடம் வந்து நடந்தது என்ன என்று கேட்டான் அதற்கு அவன் “கடவுளைக் காணோமாம். நாம்தான் அவரை எடுத்து மறைத்து வைத்து விளையாடுகிறோம் என்று சந்தேகப் படுகிறார்கள் என்றான்....
!

புது மண ஜோடி ஒன்று குடி இருப்பு ஒன்றுக்கு குடி பெயர்கிறார்கள். ஒரு நாள் அந்த வீட்டு மனையாள் அடுத்து இருக்கும் வீடு ஒன்றில் அந்த வீட்டுப் பெண்மணி துணி துவைத்துக் காயப் போடுவதைப் பார்க்கிறாள். இந்த இளம் மனைவி “ என்னதான் துணி துவைத்திருக்கிறாளோ, ச்சே அழுக்கே போகாமல்..... அவளுக்கு ஒரு நல்ல சோப் அறிமுகம் செய்ய வேண்டும் “ என்று கூறிக் கொண்டே தன் கணவனின் முகத்தைப் பார்த்தாள். கணவன் ஏதும் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான். ஒவ்வொரு முறையும் அடுத்த வீட்டுப் பெண் துணி துவைத்துக் காயப் போடும்போதும் , இவள் ஏதாவது கமெண்ட் சொல்வதும், கணவன் ஏதும் பேசாமல் தலை திருப்பிக் கொள்வதும் தொடர்ந்தது. ஒரு மாதம் கழிந்தது. ஒரு நாள் அந்தப்பெண் துவைத்துப்போட்டிருந்த துணிகளைப் பார்த்ததும் இவள் “ அதோ பாருங்கள். இந்தமுறை துணிகள் எல்லாம் பளீரென்று இருக்கிறது. அவளுக்கு துணி துவைக்க யாரோ சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும் “ என்று சொல்லி வழக்கம் போல் தன் கணவனைப் பார்த்தாள்,இந்த முறை கணவன் வாய் திறந்தான்.
” இன்று காலையில் சீக்கிரமாகவே எழுந்து நம் வீட்டுச் சன்னல் கண்ணாடியை நன்றாகத் துடைத்தேன்” என்றான்.
வாழ்க்கையும் இதுபோல்தான். பிறரை நாம் நோக்கும்போது எந்தப் பலகணி ஊடே பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து அமைகிறது



ஒவ்வொரு முறையும் ஹெலிகாப்டரைப் பார்க்கும் போதும் கணவன் “எனக்கு அதில் பயணம் செய்ய ஆசையாய் இருக்கிறது “ என்பான் .மனைவி “ எனக்குப் புரியுதுங்க. இருந்தாலும் அதில் ஏறிச் சுற்றிப் பார்க்க ரூபாய் ஐநூறு கேட்கிறார்கள். ஐநூறு ரூபாய் என்றால் ஐநூறு ரூபாய் அல்லவா “ என்று கூறி அவன் வாயை அடைப்பாள். ஒருமுறை ஒரு திருவிழாத்திடலில் ஹெலிகாப்டர் பயணத்துக்கு ஏற்றிக் கொண்டு போவதும் மீண்டும் வந்து வேறு சிலரை ஏற்றிக் கொண்டு போவதுமாய் இருந்தது. கணவன் மனைவியிடம் “ எனக்கு எண்பது வயதாகிறது. இப்போது என்னால் பயணம் செய்ய முடியாமல் போனால் ஒருவேளை எப்போதும் முடியாமல் போகலாம்
” என்று குறைபட்டுக்கொண்டான். அப்போதும் மனைவி “ஹெலிகாப்டரில் ஏறிச் சுற்றிப்பார்க்க ரூபாய் ஐநூறு கேட்கிறார்கள். ஐநூறு என்றால் ஐநூறு ரூபாய் அல்லவா.?என்றாள். இவர்களுடைய சம்பாஷணையை ஹெலிகாப்டர் பைலட் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் இவர்களிடம் “ நான் உங்கள் இருவரையும் ஹெலிகாப்டரில் ஏற்றி சுற்றிக் காட்டுகிறேன்.ஒரு பைசா தரவேண்டாம்.  ஆனால் ஒரு கண்டிஷன். பறக்கும்போது இருவரும் ஏதும் பேசக் கூடாது. மீறி ஏதாவது பேசினால் ஆளுக்கு  ஐநூறு ரூபாய். ஐநூறு என்றால் ஐநூறு ரூபாய் அல்லவா.” என்றார். கணவனும் மனைவியும் ஒப்புக்கொண்டு ஹெலிகாப்டரில் ஏறினார்கள். பைலட் ஹெலிகாப்டரை செலுத்தும்போது மிக வேகமாகவும்
திடீரென்று மேலே ஏறியும் அதேபோல் திடீரென்று கீழே இறக்கியும் பல சாகசங்களை நிகழ்த்தினார். கணவன் மனைவி இருவரும் ” மூச் “ ஒரு வார்த்தை பேசவில்லை. பைலட் கீழே ஹெலிகாப்டரை இறக்கியதும் கணவனிடம் நான் என்னென்னவோ சாகசங்கள் செய்தும் நீங்கள் அலறி சப்தம் செய்வீர்கள் என்று நினைத்தேன். ஆனால் நீங்களோ.... I AM IMPRESSED ஒரு சப்தமும் எழுப்பவில்லை” என்றார். கணவன் “ உண்மையைச் சொல்வதென்றால் என் மனைவி கீழே விழுந்ததும் நான் உரக்கக் கூச்சல் போட நினைத்தேன்.ஆனால்.... ஐநூறு என்றால் ஐநூறு ரூபாய் அல்லவா.என்றார்

புதிருக்கு  விடை 

 NOTHING has 7 letters.
NOTHING preceded God.
NOTHING is greater than God.
NOTHING is more Evil than the devil.
All poor people have NOTHING.
Wealthy people need NOTHING.
If you eat NOTHING, you will die.




திருப்பாவை  திருவெம்பாவை  பாடல்கள் காணொளி மார்கழி ஒன்றாம் நாள் எழுதியது  பதிவிடுவதில்  தாமத மானதால் தொடரவில்லை





24 கருத்துகள்:

  1. அனைத்தையும் மீண்டும் படித்து ரசித்தேன்.   புதிருக்கான விடையையும் நீங்களே சொல்லி விட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடை தேட விரும்புபவர்கள் கடைசியில் பர்க்க வேண்டாமே

      நீக்கு
  2. நல்ல கதம்பம். ஆனால் நகைச்சுவை எல்லாம் ஏற்கெனவே படித்தவை! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலரும் படித்திருக்க மாடார்களென்னும் அனுமானம் தவறோ

      நீக்கு
  3. புதிர் கொஞ்சம் கடினம் தான். ஜோக்குகள் மீள்பதிவோ?
     Jayakumar

    பதிலளிநீக்கு
  4. சுவையான பதிவு!. எல்லோருக்கும் கை கொடுக்கும் திருப்பாவையும், திருவெம்பாவையும் உங்களுக்கும் கை கொடுத்திருக்கிறது. குறும்பு பையன்கள் புன்னகைக்க வைத்தார்கள். மற்ற இரண்டும் ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் படிக்கும் பொழுதும் ரசிக்கவைத்தன.    


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்து ரசித்ததற்கு நன்றி எழுத பொருளில்லமல் தவிக்கும்போது கைகொடுப்பவை புராண இதிகாச கடைகளும் நல்லதமிழும்தானே

      நீக்கு
  5. அனைத்தையும் ரசித்து படித்தேன்.

    பதிலளிநீக்கு
  6. புதிருக்கு விடை சொல்லாமல் இருந்திருக்கலாம். மூளைக்கு சிறிது நேரம் வேலை கிடைத்திருக்கும்.

    துணுக்குகள் ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டவை என்று நினைக்கிறேன். சரிதானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிருக்கு விடை கடைக்கண்கொண்டுபார்க்காமல் இருந்தால் தெரியாதே how does that matter sir

      நீக்கு
  7. புதிருக்கு விடை தெரியும் - எல்லாவற்றையும் படித்துவிட்டு, கடைசியில் சொல்லலாம் என்று வந்தேன். கடவுள் எங்கே ஜோக் மட்டும் இதற்கு முன்பு படித்த ஞாபகம் இல்லை.

    பதிலளிநீக்கு
  8. புதிருக்க விடை தெரியும் என்பது மகிழ்ச்சி அத்திபூத்தாபோல் வருகை நன்றி

    பதிலளிநீக்கு
  9. கொஞ்ச நாட்கள்கப்பார்க்கவேஇல்லையே என்று நினத்து கடிதம் எழுதலாமா என்று நினைத்திருந்தேன் நலம்தானே ஐயா வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  10. நலந்தான் ; உசாவியதற்கு நன்றி. என் மடிக்கணினி மடிந்துவிட்டது. புதியதொன்றை வாங்கத் தாமதம்.

    பதிலளிநீக்கு
  11. புதிருக்கு விடை தந்து எங்களை விடாமல் செய்துவிட்டீர்கள். பதிவை இரசித்தேன். பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  12. பல நேரங்களில் புதிர்களை யாருமே முயன்று கூட பார்ப்பதில்லை அட்டெம்ப்ட் செய்வதில்லை என்பதே என் அனுபவம்

    பதிலளிநீக்கு