நிலந்திருத்தி விதைக்கும் விதை ,கிளர்ந்தெழு மரமாகிக்
கனி கொடுக்கும் என்பது நம்பிக்கை.
மெய் சோர்ந்து உழைத்து உறங்கி எழும் புலரியில்
உயிர்த்து எழுவோம் என்பது நம்பிக்கை.
பயணச் சீட்டெடுத்து பஸ்ஸோ ரயிலோ ஏறிச் சேருமிடம்
சேதமின்றி சேருவோம் என்பது நம்பிக்கை.
பாலூட்டிச் சீராட்டிப் பெற்றெடுத்த பிள்ளைகள் பிற்காலத்தில்
நம்மைப் பேணுவர் என்பது நம்பிக்கை.
நோயுற்ற உடல் நலம் பேண நாடும் மருத்துவர்
பிணி தீர்ப்பார் என்பது நம்பிக்கை.
நல்ல படிப்பும் கடின உழைப்பும் வாழ்க்கையில் வெற்றி
பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை
.
நாளும் வணங்கும் ஆண்டவன் நம்மை என்றும்
கைவிடமாட்டான் என்பது நம்பிக்கை
.
வாழ்வின் ஆதாரம் நம்பிக்கை.
நம்பிக்கைகள் பலவிதம்;இருப்பினும்
நம்பிகை குறித்து எழுதும்போது
தொற்றிலிருந்து தடுப்பூசி காக்கும்
என்பது நம்பிக்கைஎல்லாம் அவன்பார்த்து
கொள்வான் என்று அவன் மீது பாரம் போடுவ்தும் நம்பிக்க்கையின் பால்ஏதும் செய்யாமல்இருக்கிறோமா
புரியாத புதிர் இந்த நம்பிக்கை
----