வியாழன், 27 மே, 2021

நம்பிக்கை பலவிதம்



 


நிலந்திருத்தி விதைக்கும் விதை ,கிளர்ந்தெழு மரமாகிக்
கனி கொடுக்கும் என்பது நம்பிக்கை.
 
      மெய் சோர்ந்து உழைத்து உறங்கி எழும் புலரியில்

      உயிர்த்து எழுவோம் என்பது நம்பிக்கை.


பயணச் சீட்டெடுத்து பஸ்ஸோ ரயிலோ ஏறிச் சேருமிடம்
சேதமின்றி சேருவோம் என்பது நம்பிக்கை.

        பாலூட்டிச் சீராட்டிப் பெற்றெடுத்த பிள்ளைகள் பிற்காலத்தில்

        நம்மைப் பேணுவர் என்பது நம்பிக்கை.


நோயுற்ற உடல் நலம் பேண நாடும் மருத்துவர்
பிணி தீர்ப்பார் என்பது நம்பிக்கை.

         நல்ல படிப்பும் கடின உழைப்பும் வாழ்க்கையில் வெற்றி

         பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை

.
நாளும் வணங்கும் ஆண்டவன் நம்மை என்றும்
கைவிடமாட்டான் என்பது நம்பிக்கை
.
         வாழ்வின் ஆதாரம் நம்பிக்கை.

         நம்பிக்கைகள் பலவிதம்;இருப்பினும்

நம்பிகை குறித்து எழுதும்போது

தொற்றிலிருந்து  தடுப்பூசி காக்கும் என்பது நம்பிக்கைஎல்லாம் அவன்பார்த்து

கொள்வான் என்று அவன் மீது பாரம் போடுவ்தும்  நம்பிக்க்கையின் பால்ஏதும் செய்யாமல்இருக்கிறோமா

புரியாத புதிர் இந்த நம்பிக்கை    

 

 

 

 

 




       

 

 

          

.
----

13 கருத்துகள்:

  1. ஆண்டவனே அருகில் வரும்போது அரைமூட்டை சிமெண்ட் வரமாகக் கேட்டதுபோல அத்தனையும் விட்டு இப்போதும் தடுப்பூசி நம்பிக்கை மட்டுமே பிரச்னை!  :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தடுப்பூசிஅல்ல மாய்ந்து மாய்ந்து பேசுவது நம்பிக்கை இல்லாமலா இத்தனை களேபரங்களிலும் ஆண்டவன் மேல் பாரம் போட்டு விட்டு மருகும்நம்பிக்கை புரியாத புதிர்தானே

      நீக்கு
  2. நம்பிக்கை மேம்பட :

    5.இல்வாழ்க்கை சிறக்க
    23.ஈகை அவசியம்... அதற்கு

    47.தெரிந்துசெயல்வகை,
    68.வினைசெயல்வகை,
    76.பொருள்செயல்வகை,
    ஆகிய வகைகளை அறிய வேண்டும்...

    89.உட்பகை மறந்து,
    103.குடிசெயல்வகை அமைந்தால்,
    133.ஊடல் உவகை மிகும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படியும் இந்த இரண்டாம் அலையை நீந்திக் கடந்திவிடுவோம் என்பது நம்பிக்கையா அல்லது பேராசையா என்று கூட எண்ணத் தோன்றுகிறது..

      நீக்கு
    2. எப்படியும் நம்பிக்கை வள்ர்க்கும் பின்னூட்டம் நன்று

      நீக்கு
    3. யாதோ ரமணி எப்படியும் இந்த இரண்டாம் அலையை நீந்திக் கடந்திவிடுவோம் என்பது நம்பிக்கையா அல்லது பயமா நம்பிக்கை பயம் போக்குகிற்தா

      நீக்கு
  3. கரந்தையார் ஒரு வரியில் சொல்லிவிட்டார்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
  4. நம்பிக்கைதான் வாழ்க்கை. அதில்தானே எல்லாமே.

    தடுப்பூசி நல்லது பாதுகாப்புதான் என்றாலும் அதற்கு 100 சவிகிதம் எந்த மருத்துவ உலகும் உத்தரவாதம் கொடுக்கவில்லையே சார். எனவே நாம் போட்டுக் கொண்டாலும் அதே கட்டுப்பாடுகளுடன் தான் இருக்க வேண்டும்.

    எல்லாம் அவன்பார்த்து

    //கொள்வான் என்று அவன் மீது பாரம் போடுவ்தும் நம்பிக்க்கையின் பால்ஏதும் செய்யாமல்இருக்கிறோமா//

    உன் கட்மையைச் செய் என்று கீதையும், ஆங்கில வாசகம் do your duty leave the rest to God என்றுதானே சொல்கிறது. எனவே நாம் நம் கடமைகளைச் செய்யத்தானே வேண்டும் நம்பிக்கையோடு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பிக்கை மட்டும் பாது காப்பாகடவுள்மேல் பாரம் ஏற்றுவதுசரியா

      நீக்கு
  5. நம்பிக்கைதான் நம் வாழ்க்கையின் அடிப்படை. அது இல்லை என்றால் நம்மால் எதுவும் செய்ய இயலாதே.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பிக்கையின் பால்தான்எல்லாம்நடக்கிறதா

      நீக்கு