புதன், 12 மே, 2021

கோவிட்டும் அது சார்ந்த எண்ண்ங்க ளூம்

  

இந்த கோவிட் பற்றி என்னநினைப்பதுஅரசு தடுப்பூசி போட்டுக்கொள்ளசொல்கிறது  ஊசி போட்டுக் கொண்டால்  தொற்று வராது என்னும்  நம்பிக்கைதானேஇன்னும்பலருக்கு கடவுளிடம்  பாரத்தைபோடுவதில்நம்பிக்கை நம்பிக்கையால் பயம் இல்லாமல் இருக்கிறார்களாஅறிந்தவர் அறியாதவர் என்றுபலரும் போய்விட்டார்கள் இற்ப்பு  தடுக்க முடியுமா தவிர்க்க முடியாததற்கு ஏன்  பயம்,.....   பயமெல்லாம்  நம்  கூட இருப்பவர் எப்படி  எதிர் கொள்வார்கள் என்பதுதான் அதுவும்சிச்சைக்காகும்செலவேகண்ணை கட்டுகிறது செலவு எல்லாம் செய்யும்நிலையில்  இருப்பவர்க்கு பரவாயில்லையாய்  இருக்கலாம் வரும்படி இல்லாதவர்  என்ன செய்வது  ஆயிரக் கணக்குக்கும்   லட்சக்கணக்குக்கும் எங்குபோவதுவருவாயே இல்லாத எம்போன்றோர் என்ன செய்வது மடிவதேமேல் எனத் தோன்றுகிறதுசெய்யும் செலவை ஈடு கட்ட முடியுமாநம்மை ஓரளவு பராமரிக்க  நாம் பெற்றதுகளை எதிர்பார்க்கலாம்ஆனால் அதற் காக அதிகம் பாரமேற்றுதல்சரியா எது எப்ப்;டியொ இந்த தொற்றுமனங்ககளில்நிறையவே மாற்றங்களை ஏற்படுத்தி  இருக்கிறது இந்த நம்பிக்கைகளை என்ன் வென்று சொல்ல  இருட்டில் நடப்பவன்;அவன் பயம் போக்க சீழ்க்கை  அடித்து செல்வதுபொல  எல்லா பாரமும் அவ்னுக்கே  என்பதுபோல் நினைக்கும் மக்களை என்னவென்று சொல்ல அவர் களுக்கு  நிச்சயம்  தெரியும் பாரம் சுமப்ப்;வன் அவனல்லநாம்தான்  சுமக்க வேண்டும் எத்தனை  எத்தனை பேர்இப்படி இருக்கிறர்கள்பதிவுக்ளில் தினமும் அவன் மேல் பாரம் பொடுபவர்களை காண்கிறோம் பயமே எல்லாவற்றுக்கும்காரணம்அவர்களுக்கு  தெரியாததாபறவைகள்ட்காரும்போது  மரத்தின் கிளைகளின்பலத்தை விட தம்  சிறகுகளையே  அதிகம் நம்புமாம்

இனி கோவிட்பற்றிய் சில சந்ச்தேகக்கள் ரெம்டெசிவ்ர் ஊசி என்ன  மருந்தா3000  ரூ பாய்க்கு   விற்கிற்தாமேதடுப்பூசி போட்டால்இவர்கள் செய்யும்  தொற்று  வரக்கூடாது அல்லவாநம்பிக்கை இருப்பப்வருக்கு  தொற்று வராதா  நான் மரணிக்க அஞ்சவில்லைநிறைவான வாழ்க்கைவாழ்ந்தாகி  விட்டது என் உயிர்பறவை ஓசைப்படாமல் யாருக்கும் இன்னல் தராமல்என்  உயிர்க்கூட்டை  விட்டு  பிரிய  வெண்டும்








 

18 கருத்துகள்:

  1. எல்லாம் நலமாகும் ஐயா இறையே துணை.

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. என் கேள்விகளுக்கு பதிலில்லையேதடுப்பூசியால்பலன் உண்டா

      நீக்கு
  3. அப்படியெல்லாம் அதைரியமாக நினைக்கவேண்டாம் ஜி.எம்.பி சார். நல்லதே எப்போதும் நடக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதிர்மறை எண்ணங்கள் தைரிய குறைவால் அல்லநம்பிக்கைகள் மட்டும்போதுமா

      நீக்கு
  4. மனதத் தளரவிடாமல் வருவதை எதிர்கொள்வோம் ஜி எம் பி ஸார்.  நல்லதே நடக்கும்.  இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டு விட்டீர்களா?  வீட்டை விட்டு எங்கும் வெளியில் செல்ல மாட்டீர்கள்.  வெளியாட்கள் யாரையும் உள்ளே அனுமதிக்காதீர்கள்.  வெளியிலிருந்து வரும் காய்கறி, பழங்கள், மளிகை உள்ளிட்ட பொருட்களை கவனமாகக் கையாளுங்கள்.  பத்திரமாக இருங்கள்.  .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இனைத்ததாலும் என்னால் வெளியே போகமுடியாதுநான் நம்புவதேபிறைரைத்தானேஅவர்களை தீண்டதகாதவர் போல் நடத்த முடியுமா

      நீக்கு
    2. //நம்புவதேபிறைரைத்தானேஅவர்களை தீண்டதகாதவர் போல் நடத்த முடியுமா//

      தவறான அணுகுமுறை, எண்ணம்.  

      உறவினர்களே இப்போது ஒருவர் வீட்டுக்கு மற்றவர் செலலவேண்டாம் என்றே அறிவுறுத்தப்படுகிறது.  அந்நிலையில் பிளம்பர், எலக்ட்ரீசியன் இன்னும் பிறரை அப்படி தற்காலிகமாக தடை போடுவதால் தவறில்லை.  நம்மைவிட அவர்கள் இன்னும் ஜாக்கிரதையாக இருக்கிறார்கள்.

      நீக்கு
    3. தகுந்த எச்சரிக்க்சையுடன் பழகுகிறேன்

      நீக்கு
  5. சார் ஏன் சார் கடைசில இப்படி சொல்லியிருக்கீங்க? அப்படி எல்லாம் எதுவும் நடக்காது சார். பத்திரமாக இருங்க சார் அது போதும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுகளுக்கு பதில்இல்லை ஆனால் ஆலோசனைகள் மாத்திரம் பல

      நீக்கு
  6. //பதிவுகளுக்கு பதில்இல்லை ஆனால் ஆலோசனைகள் மாத்திரம் பல//

    ஊசி போட்டுக்கொண்டால் தொற்று வராது என்று சொல்ல முடியாது.  வீர்யம் குறையலாம்.  தொற்று வரும் வாய்ப்பு குறையலாம்.  அதிலும் கோவிஷீல்டு விட கோவாக்சின் எபெக்டிவ் என்று சொல்கிறார்கள்.  எந்தத்தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் நூறு சதவிகிதம் நோயைத் தடுத்து நிறுத்த முடியும் என்று எங்குமே சொல்ல முடியாது.

    தனியார் மருத்துவமனைகள் கோவிடை வைத்து கல்லா கட்டுகின்றனர்தான்.  நாம் என்ன செய்ய முடியும், பாதுகாப்பாக இருந்தும் வர்கள் கையில் மாட்டாமலிருப்பதைவிட?  ஆயினும் சில மருத்துவமனைகளில் சாதாரண கட்டணமும் வாங்குகிறார்கள்.

    ரெமிடெசெவிர் ஊசி மருந்து ஆக்சிஜன் ஏற்றும் காலத்தைக் குறைக்க உதவும்.  அது போட்டாலும் 100% குணம் அடையமுடியும் என்று சொல்ல முடியாது.  சம்பந்தப்பட்டவரின் நோய் எதிர்ப்பு சக்தி, உடல், மன வலிமையைப் பொறுத்தது.   மேலும் அவருக்கு கிட்னி பாதிப்பு உள்ளிட்ட பெரிய சிரமங்கள் இல்லாதிருத்தல் ப்ளஸ்,  அப்புறம் வயசு.  அது 3000 அல்ல, 30000 வரை விற்கிறார்கள்.  சென்னையில், அரசு மருத்துவமனையில் அது 1586 ரூபாய்.  ஆறு குப்பிகள் தருவார்கள்.  இன்றைய நிலையில் அந்த ஊசியை வாங்க அரசு மருத்துவமனை கவுண்ட்டருக்குச் சென்றால் முன்பதிவு செய்து கொள்வார்கள்.  இரண்டு அல்லது மூன்று நாட்களில் அதிகபட்சம் ஆறு குப்பிகள் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊசி போட்டுக்கொண்டால் தொற்று வராது என்று சொல்ல முடியாது. வீர்யம் குறையலாம். தொற்று வரும் வாய்ப்பு குறையலாம்பின் ஏ ஊசி போடச் சொல்லி அத்தனை பேச்சு ரெமிடெசெவிர் வாங்கும் பொறுப்பு நோயாளிகளூடையதா

      நீக்கு
  7. செய்தித்தாளில் வந்த இரண்டு செய்திகள்...அதிலிருந்து சிறு பகுதி...
    1)  கொரோனா முதல் அலையால் நோய் எதிர்ப்பு சக்தி வந்துவிட்டது. அதனால் இரண்டாம் அலையை எதிர்கொள்ள முடியும் என, மக்கள் கருதுகின்றனர். ஆனால், அது தவறு. எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது எனக் கூறியவர்களில் 75 சதவீதம் பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கொரோனா வந்தால் உயிரிழப்பு ஏற்படுவது மிகமிகக் குறைவு.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


    2)  கொரோனா வைரஸ் பரவல் முடிந்துவிட்டதாக நினைத்து, பொருளாதாரத்துக்கான கதவுகளைத் திறந்துவிட்டனர். இதனால் கொரோனா வைரஸ் 2வது அலையில் சிக்கி மோசமான விளைவுகளைச் சந்தித்து வருகிறார்கள்.
    கொரோனாவிலிருந்து முழுமையாக ஒரு நாடு தப்பிக்க 70 முதல் 85 சதவீதம் தம் மக்களுக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டும். அதிகமான மக்களுக்கு தடுப்பூசி கிடைத்தாலே, கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்துவிடும். இது இந்தியா சாத்தியப்படுத்த வேண்டும்.
    இவ்வாறு அந்தோனி பாஸி கூறியுள்ளார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்தி தாள்களில் வருபவ முன்னுக்குப்[பின்முரணாயிருக்கிறதே

      நீக்கு
  8. இறைவன் துணை உண்டு..
    கவலை வேண்டாம் ஐயா...
    நல்லதே நடக்கும்.. நல்லதே நடக்கும்..

    பதிலளிநீக்கு
  9. நன் கவலைப்ப்டுவதில்லை மற்றவர்கள் என்னால் கவலைப்படக் கூடாது என்று நினைப்வன் நான் வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு