அடையாளங்கள்
ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம்
உண்டுமனிதருக்கே அடையாளம் இருக்கும்போது
அவன் படைத்தகடவுளருக்கு இல்லாதிருக்குமா
ஒருவரை ஒருவர் நினைவில் வைத்துக்கொள்ள உதவுவதே இந்த
அடையாளங்கள்தான் எனக்கு அவ்வப்போது ஒரு சந்தேகம் வரும்.பறவைகள் மற்றும் சில
விலங்குகள் என் கண்ணுக்கு ஒரே மாதிரி தெரிகிறது. அவை ஒன்றை ஒன்று எவ்வாறு
இனங்கண்டுகொள்கின்றன. ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் கருப்பினத்தோர் சட்டெனப்
பார்த்தால் ஒரே மாதிரி தெரிகிறார்கள். சுருட்டை முடி, கறுப்பு நிறம் பெரிய உதடுகள்
இன்னபிற features அவர்களை ஒரே மாதிரி
காட்டுகிறதோ என்னவோ.அதேபோல் நம் இந்தியாவிலும் சில பிராந்தியக் காரர்களுக்கு சில
தனித்தன்மைகள் உண்டு. நடை உடை பாவனைகளை வைத்து அடையாளம் காணலாம்சிலர் ஆங்கிலம்
பேசும்போது அவர்களை இன்னார் என்று தெரிந்து கொள்ள்முடியு ம்
இந்த
இயற்கை அடையாளங்கள் தவிர தங்களை வித்தியாசமாகக் காட்டி தங்கள் அடையாளத்தை பறை
சாற்றுவார்கள். வீணை வித்வான் ராஜேஷ் வைத்யா, வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவி
ஷங்கர். பாப் பாடகி உஷா உதுப், போன்றோர் இதற்கு எடுத்துக்காட்டு. நெற்றியில்
விபூதி அல்லது நாமம் உடலெங்கும் சந்தணத் தீட்டுகள் தலையில் வைக்கும் குல்லா,
அல்லது தலைக்கட்டு போன்றவை அவர்கள் சார்ந்திருக்கும் மதம் அல்லது ஜாதி அல்லது
பிரிவு போன்ற வற்றை அடையாளம் காட்டும் பிராம்மண குடும்பங்கள் சிலவற்றில்
பெரியோரிடம் தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளும்போது ”அபிவாதயே” சொல்லி ஆசிவாங்குவார்கள். தான் இன்ன குலத்தில் இன்ன கோத்திரத்தில் இன்ன
ரிஷியின் பரம்பரையில் வந்த இன்னாரின் பேரன் , இன்னாரின் புத்திரன் என்று
சொல்வதுபோல் அமைந்திருக்கும். ஊரின் பெயர் , தந்தையின் பெயர் போன்றவற்றின் முதல்
எழுத்தை இனிஷியலாக வைப்பார்கள். கேரளத்தில் இன்ன வீட்டைச் சார்ந்தவர் என்று
அறிமுகப் படுத்துவர்.
அற்புதமான தஞ்சாவூர்பாணி ஓவியங்கள்...சகல கலா வல்லவர் என நிச்சயம் உங்களைச் சொல்லலாம்...அடையாளம் குறித்துச் சொன்ன விசயம் எனக்கும் உடன்பாடானதே..
பதிலளிநீக்குஇப்போது எதையும் செய்ய முடிவ்தில்லை
நீக்குசார் நீங்கள் வரைந்திருக்கும் ஓவியங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கின்றன. உங்களுக்கு நல்ல திறமை சார்!
பதிலளிநீக்குதுளசிதரன்
பல ஓவியங்கள் கைவ்சம் இல்லை அன்பளிப்பாக கொடுக்கப்பட்டு விட்டது
நீக்குசார் உங்கள் திறமை பற்றி ஏற்கனவே தெரியும் நன்றாக வரைவீர்கள் என்று. இங்கு அனைத்தையும் தொகுத்தும் கொடுத்துருக்கீங்க. அத்தனையும் மிக அழகு!
பதிலளிநீக்குகீதா
பல ஓவியங்கள் மிஸ்ஸிங்
பதிலளிநீக்கு