நினைவுகள் சுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுகள் சுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 4 ஜூன், 2014

நாடக மேடை நினைவுகள்


                                       நாடகமேடை நினைவுகள்
                                       -------------------------------------.
( நினைவுகள் சுமை என்று போனபதிவில் எழுதியவன் இப்போது நினைவுகள்சுகம் என்று எழுதுகிறேன். What an irony.....!)

நான் பல நாடகங்களை எழுதி இயக்கி நடித்தும் இருக்கிறேன் என்பதை என் பழைய பதிவுகள் மூலம் தெரிவித்திருக்கிறேன் பார்க்க ;நான் போட்டநாடகங்கள் “என் பழைய எழுத்துக்களை நான் பார்த்துக் கொண்டிருந்தபோது திருச்சியில் குடியிருப்பில் மனமகிழ் மன்ற போட்டிக்கான துண்டுபிரசுரம் ஒன்று கண்ணில் பட்டது.


 ஏற்கனவே நான் போட்ட நாடகங்கள் குறித்து எழுதி இருந்தாலும் அவற்றில் வெளியிடாத சில நிகழ்வுகள் மனத்திரையில் வந்து போவதைத் தடுக்க முடிவதில்லை அந்தப் பதிவின் பின்னூட்டமாக திரு ஜீவி எழுதி இருப்பதை மீண்டும் படிக்கும் போது மனம் மகிழ்கிறது என்பதும் நிஜம் நாடகம் அரங்கேறியபோது கிடைத்தமகிழ்ச்சிக்கு குறைவில்லாமல் இருந்தது  . ஜீவி எழுதி இருந்தார்

ஜீவி said...
//நடிக்க வந்தவர்
மனதில் சிவாஜி, ஜெமினி என்ற நினைப்பு.//

//ONE HAS TO GIVE FIRST TO TAKE.!-
என்று எழுதியிருந்தேன்..//

1963
பிப்ரவரியில் அரங்கேறிய ஒரு நாடகத்திற்கு வசனத்தை எழுதியவருக்கும் இப்படி ஒரு சிவாஜி, ஜெமினி நினைப்பு இருந்திருந்தாலும் தப்பில்லை. ரொம்ப காலத்திற்குப் பின்னாடி வெளியான 'பாசமலர்' படத்தில் வரும் ஒரு காட்சிக்கான வசனத்தை உங்கள் நாடக வசனம் எனக்கு நினைவு படுத்தியது.

சிவாஜியும், ஜெமினியும் (முறையே தொழிற்சாலை முதலாளி, தொழிலாளி- (அட! இங்கே கூட அப்படித்தான்!) இருவரும் உணர்ச்சியுடன் வார்த்தையாடிப் பேசும் (மோதும்) ஒரு கட்டத்தில் ஜெமினி பேசுவதாக ஒரு வசனப் பகுதியும் இப்படியாக ஒரு ஆங்கில வார்த்தைத் தொடருடன் "Those days were gone Mr.Raju! TO DAY ALL FOR EACH AND EACH FOR ALL" என்று முடியும்!

ஆக, சினிமாவுக்கு போயிருந்தாலும் கலக்கித்தான் இருந்திருப்பீர்கள், போலிருக்கு!
நான் பார்த்த துண்டு பிரசுரம் அதே நாடகத்தை மீண்டும் அரங்கேற்ற இருந்ததை விளம்பரப் படுத்தியது

பெங்களூரில் முரசொலி சொர்ணம் எழுதி இருந்த விடை கொடு தாயே எனும் நாடகத்தை அப்போதைய கல்வி அமைச்சர் திருமதி கிரேஸ் டக்கர் தலைமையில் அரங்கேற்றினோம் .
திருமதி கிரேஸ் டக்கர் முன்னிலையில் 
 
பணியில் இருப்பவர்களை ஒருங்கிணைத்து ஒத்திகை எல்லாம் பார்த்து நாடகம் நடைபெற இருக்கும் ஒரு நாள் முன்னர் முக்கிய பாத்திரத்தில் நடிக்க இருந்தவர் நோய்வாய்ப்பட செய்வதறியாது திகைத்து நின்றோம் நான் அந்த நாடகத்தை இயக்கி வந்ததால் அந்தப் பாத்திரத்தில் நடிக்க முடியும் . இருந்தாலும் அந்த பாத்திரத்துக்கான உடல்வாகு இல்லாததால்  கதாநாயகியின் தந்தை வேடத்தில் கால் நொண்டியாக நான் நடிக்கவும் முக்கிய கதாபாத்திரத்துக்குக் குழுவில் இருந்த இன்னொருவரையும் போட்டு தயாரானோம் புதிய வேடத்தில் அவரும் புதுசாக ஒரு வேடத்தில் நானும் அன்று இரவு முழுவதும் ஒத்திகை செய்து தயாரானோம்
நாடகத்தில் கதாநாயகியாக நடிக்க ஒரு நடிகையும் இன்னொரு முக்கிய பாத்திரத்துக்காக இன்னொரு நடிகையும் தேவைப் பட்டனர். தமிழ் தெரிந்த தொழில் நடிகைகள்  நாடகத்தில் நடிக்க விருப்பமுள்ளவர்களைத் தேடிப்போகவேண்டும் எங்கெல்லாமோ விசாரித்து நடிகைகளைக் கண்டு பிடித்தோம் நாடகம் நன்றாயிருக்க ஒரு பாடலும் ஆடலும் வேண்டும் என்று குழுவினர் விரும்பினர் நாடகத்தில் இடைச் செருகலாக பாட்டையும் நடனத்தையும் வைத்துக் கொள்வதில் எனக்கு விருப்பமிருக்கவில்லை. இருந்தாலும் டிக்கட் விற்று பார்வையாளர்களைக் கொண்டு வர வேண்டி இருந்ததால் காம்ப்ரமைஸ்செய்ய வேண்டியதாயிற்று, ( அமெச்சூர் நாடகத்திலேயே அப்படி என்றால் தொழில் முறை சினிமாவில் ஒரு டான்ஸ் ஒரு ஃபைட். ஒரு குத்துப் பாட்டு என்று வருவதில் ஆச்சரியம் இல்லை. தொழில்முறை நடிகைகள் கூடவே அம்மா அல்லது யாராவது துணைக்கு என்று அழைத்து வருவார்கள். அவர்கள் போக வர போக்குவரத்துப்படி (ஆட்டோசார்ஜ்) டிஃபின் காஃபி என்று செலவுகள் எகிரும். ஆகவே நடிகைகளை ஒத்திகைக்கு நான்கு முறைக்குமேல் வரச் சொல்ல மாட்டோம். அந்த நான்கு ஒத்திகைக்குள் வசனம் மனப் பாடம் செய்து நடிக்கவும் வேண்டும் நமக்கு திக் திக் என்று இருக்கும். ஆனால் அவர்கள் அது பற்றிக் கவலைப் படவே மாட்டார்கள் கடைசி நாள் ஒத்திகையின் போது இசை சகிதம் நடக்க வேண்டும். நாடகத்தில் நடிப்பவர்களுக்கு இருக்கும் அதே பொறுப்பு, சொல்லப்போனால் கூடுதல் பொறுப்பு மேடை விஷயங்களை ஒருங்கிணைப்பவருக்கு உண்டு, வசனம் சரியாக மனப் பாடம் செய்யாதவர்களோ , அல்லது மேடையில் மறந்து போகிறவர்களுக்கென்றே ப்ராம்ப்டர் ஒரு வரப் பிரசாதி. மறக்கும் வசனத்தை எடுத்துக் கொடுக்க வேண்டி இருக்கும் . அதே நேரம் அவர் குரல் கேட்கக் கூடாது. இதற்காகவே வசனம் மறப்பதுபோல் இருந்தால் நடிகர் ப்ராம்ப்டர் இருக்குமிடம் நாச்சுரலாகத் தோன்றுவதுபோல் வந்து விட வேண்டும்
பாட்டும் டான்சும் வேண்டும் என்று குழுவினர் விரும்பினர், பாடவைக்கவும் ஆடவைக்கவும் தகுதி எனக்கிருக்கவில்லை. அதே சமயம் பாட்டும் டான்சும் வேண்டும் அப்போது பிரபலமாயிருந்த “காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப் பெண்ணு மணவிழா “என்றபாட்டை ரெகார்டில் ஒலிக்கவிட்டு நடிகையர் இருவரையும் இடைவேளையின் போது அவர்களுக்குத் தெரிந்தபடி ஆடச் சொன்னோம். இடை வேளையின் போது ஒருவர் ( பெயர் நினைவில்லை )உயிருள்ள தவளை மீன் போன்றவற்றை முழுங்கி வெளியில் உயிருடன் எடுப்பதாகவும் ஒரு நிகழ்ச்சி இருந்தது பெங்களூரில் பெயர் பெற்ற குப்பி தியேட்டரில் நிகழ்ச்சி நடந்தது.
 அந்த நாடகம் மேடையேற்றியதும் கற்றுக் கொண்ட பாடங்கள் ஏராளம்.நாடக உலகம் நிறையவே குழிகளும் குண்டுகளும் நிறைந்தது. மனசிலுறுதி இல்லாவிட்டால் கெட்டுப் போகும் வாய்ப்புகள்நிறையவே இருக்கும் .நாடகத்துக்கு தமிழ் அவ்வளவாகத் தெரியாத நடிகைகள்தான் கிடைத்தனர். நாடகம் ஒத்திகைக்கு வருபவர் வந்ததும் அனைவரையும் greet  செய்ய வேண்டுமென்றும் போகும்போது விடை பெற்றுப் போக வேண்டும் என்று ஒரு விதி செய்திருந்தோம். அதன் படி ஒரு நடிகை வரும்போது வணக்கம் சொல்வார் போகும் போது “எல்லோருக்கும் வரேனுங்க “என்று சொல்வாள். அப்படிச் சொல்வது சரியல்ல என்று புரிய வைப்பதற்குள் போதுமென்றாகி விட்டது. ஒரு நடிகை கூட வந்தவர் ஒரு முறை “பதம் பார்ப்பது என்றால் என்னங்க அர்த்தம்  வேறு ஒரு நாடகத்தில் அந்த வசனம் வருகிறது “என்று கேட்டாள். பதம் பார்ப்பது என்றால் சுவைப்பது என்னும் பொருள் உண்டு என்று தெரியப் படுத்தினேன் அதற்கு அவள் அந்த நடிகையைப் பதம் பார்க்கிறீர்களா என்று கேட்டாளே பார்க்கலாம்..! என் சப்த நாடியும் பயத்தால் நடுங்கியது. பிறகு அம்மாதிரி பேசுவது அநாகரிகம் என்று எடுத்துரைத்தேன்
திருச்சியில் “ஆராமுதா அசடா “என்னும் நாடகத்தை ஒருதடவை கிருஷ்ண கான சபாவுக்கும் மறுமுறை ஸ்ரீரங்கத்திலும் மேடை யேற்றினோம். அதில் நடித்த பலரும் சக அதிகாரிகள். தொழிற்சாகையில் பணி வாங்குவதை விட நாடகம் மேடை யேற்றுவது சிரமம் என்று புரிந்து கொண்டார்கள். ஒத்திகைக்காக நடிகையை வரவழைக்க அதிகாலையில் புறப்பட்டுப்போய் அவர்கள் வீட்டில் செய்தி சொல்ல என்னுடன் வந்த சக அதிகாரி , இந்தப் பிழைப்பே வேண்டாம் பாலு என்பார். ஆனால் நடிப்பது அவருக்கு விருப்பமானதாய் இருந்தது . என் மனசாட்சி சிறுகதையை நாடக வடிவில் எழுதி மேடை ஏற்றினோம். அதில் வரும் கதாநாயகன் impotent  என்று சித்தரிக்கப் பட்டு இருக்கும் அந்த வேஷத்தில் நடிக்க பலரும் தயங்கினர்.இருந்தாலும் நாடகத்தின் மேல் இருந்த காதலால்கத்திமேல் நடப்பது போன்ற பாத்திரத்தை வெகு சிறப்பாக நடித்தார் கதாநாயகன்
1963-ல் பெங்களூரில் மேடையேற்றிய வாழ்ந்தே தீருவேன் “என்னும் நாடகம் திருச்சியில் எனக்குப் பரிசு பெற்றுத் தந்தது
ஓ....! அந்த உலகமே தனி...! அதன் நினைவுகளும் சுகமே.      
     .              



                   







         





           
  .