படித்தது பகிர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படித்தது பகிர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 2 நவம்பர், 2012

சென்னையின் விற்பனைப் பெண்,(வாஷிங்டன் போஸ்ட் கண்மூலம் )



                     வாஷிங்டன்  போஸ்ட் கண்கள் வழியே
          சென்னையின் விற்பனைப் பெண்


மைலாப்பூரில் கபாலீஸ்வரர்  கோயிலில் தரிசனம் முடித்து அருகில் இருந்த கிரி ட்ரேடிங் ஸ்டோர்ஸுக்குப் போய் தத்வ போதாஎனும் புத்தகம் கிடைக்கிறதா என்று தேடிக்கொண்டிருந்தோம்.
பலரும் பலவிதமான ஒலி நாடாக்களும் குறுந்தகடுகளும் அபங்கிலிருந்து, அருணா சாய்ராமிலிருந்து, , பாம்பே ஜெயஸ்ரியிலிருந்து என ஆர்வத்துடன் தேடி வாங்குவது கண்டு சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறோம் என்ற மகிழ்ச்சி எங்களை ஆட்கொண்டது.
நான் இந்தப் புத்தகத்துக்காக எல்லா இடங்களிலும் தேடிக் கொண்டிருந்தபோது, என் மனைவி பாரதியார் பாடல்களையும் எம்.எஸ்ஸின் இசைத் தகடுகளையும் வாங்கிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது கல்லாப் பெட்டி அருகே நின்றிருந்த அந்தப் பெண்ணைக் கவனித்தேன். அவளும் ,( 17, 18 வயதிருக்கலாம், அருகில் இருக்கும் ஏதாவது கிராமத்தைச் சேர்ந்தவளாக இருக்கலாம் எட்டாவது வரை படித்திருக்கலாம் , கொஞ்சம் கருப்பு நிறத்தில் இருந்தாள்  ஏழ்மையின் காரணமாக இங்கு பணியில் இருக்கலாம் என என் எழுத்தாளனின் புத்தி என்னவெல்லாமோ கணிக்க ), எங்களையும் கவனித்துக் கொண்டிருந்தாள். நான் அவளை கவனிப்பதை விட்டு “ தத்துவ போதம்தேடுவதில் முனைந்தேன்.
சந்தியா வந்தனத்திலிருந்து சுவாமி விவேகாநந்தாவின் சிகாகோ பேச்சுகள் வரை ஏதேதோ புத்தகங்களை சுமார் நாற்பது நிமிடத்துக்கும் மேலாக பார்த்தேன், பிறகு அவளைப் பார்த்தேன். அவளும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். நான் அந்தப் புத்தகம் பற்றி அவளிடம் ஏதும் கேட்கவில்லை. அந்தப் பெண்ணுக்கு இந்தப் புத்தகம் பற்றித் தெரிந்திருக்காது என்ற எண்ணம்தான் காரணம்
சார் நான் உங்களுக்கு உதவட்டுமாஎன்று தமிழில் கேட்டாள்.
நான் தத்துவ போதா “ எனும் புத்தகம் தேடுகிறேன்.
சம்ஸ்கிருதமா அல்லது ஆங்கிலம் சம்ஸ்கிருதம் சேர்ந்ததா.?
ஓ... இவளுக்குத் தெரிக்றது. “ சம்ஸ்கிருதமும் ஆங்கிலமும் “
“ சின்மயா மிஷன், அல்லது இந்து பப்ளிகேஷன்ஸ் அல்லது ராமகிருஷ்ண மட  பிரசுரங்களில் எது வேண்டும்.?
“ எனக்குத் தெரியவில்லை. நான் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். உண்மையில் எனக்கு எதுவும் தெரியாது “
“ உங்களுக்குத் தமிழ் படிக்கத் தெரியுமா சார்.?
தெரியும். நான் ஒரு தமிழன்” ( பெரும்பாலான நேரங்களில் பெரும்பாலான இடங்களில் நான் அப்படி ஒப்புக் கொண்டிருக்க மாட்டேன் என என் உள்ளுணர்வு கூறியது.)
நான் அரை மணி நேரத்துக்கும் அதிகமாக தேடிய ஷெல்ஃப் லிருந்து ஓடிச் சென்று ஒரு புத்தகத்தை எடுத்து வந்து . இந்தப் புத்தகம் தமிழில் என். சிவராமன் எழுதி இந்து பப்ளிகேஷன்ஸ் பிரசுரித்தது..அருமையான புத்தகம் எளிதில் புரிந்து கொள்ளக் கூடியது. சம்ஸ்கிருத டெக்ஸ்டும் உள்ளே இருக்கிறது.
கடவுளே.! நான் எப்படி இந்தமாதிரி இப்பெண்ணை  தவறாக  ,குறைவாக எடை போட்டுவிட்டேன். நான் ஒரு என். ஆர் ஐ என்ற அகங்காரமா? இல்லை ஏழ்மையில் இருக்கும் இந்த கருத்த கிராமத்துப் பெண்ணுக்கு  தத்துவ போதம் பற்றி என்ன தெரிந்திருக்கும் என்ற அறியாமையா.?
நான் என் ஆணவத்தை ஒதுக்கி  தாழ்மையுடன் ,மேடம் ,நேற்றுவரை எனக்கு தத்துவ போதம் பற்றி ஏதும் தெரியாது. யார் எழுதியது என்றும் தெரியாது. நேற்று இந்தத் தலைப்பில் ஒரு பிரசங்கம் கேட்டேன் அதிலிருந்து என் ஆர்வம் கூடியது.
“ பாரதீய வித்தியா பவனில்  கோடா வெங்கடேஸ்வர சாஸ்திரியின் பிரசங்கம் கேட்டீர்களா.?
அட.. உனக்கு எப்படித் தெரிந்தது.?
அவர் தொடர்ந்து இந்த மாதிரி விஷயங்களில் தலைப்புகளில் பாடம் நடத்துகிறார். நகரத்தில் உள்ளவர்களில் மிகச் சிறந்தவர்.
“ உனக்கு இந்த மாதிரி விஷயங்களில் ஈடுபாடு அதிகமா.?
“ ஆமாம் சார். விவேகாநந்தா ராமகிருஷ்ண பரம ஹம்சா போன்றவர்களைப் படிப்பதில் விருப்பம் அதிலும் தத்துவ போதம் எனக்குமிகவும் பிடித்த சப்ஜெக்ட்.
“ நீ தத்துவ போதம் படித்திருக்கிறாயா.?
ஆம். சிவராமன் எழுதியதைப் படித்திருக்கிறேன். ஒரு முறை படிக்கக் கையில் எடுத்து விட்டால் கீழே வைக்க மனம் வராது.
அப்படி என்னதான் அப்புத்தகத்தில் இருக்கிறது.?
 “ சார் தத்துவ போதம் பற்றி ஏதும் தெரியாதது போல் தமாஷ் செய்கிறீர்கள்.
“ உண்மையில் என அறியாமையைத் தான் கூறுகிறேன்.
சற்று தூரத்தில் இருந்து என் மனைவி கவனித்துக் கொண்டிருந்தாள்.
:சார், என்னைப் பொறுத்தவரை இந்த புத்தகத்தை ஒரு முறை படித்தால் வேதாந்தத்தின் சாராம்சத்தை உணர்ந்து கொள்ளலாம். அகங்காரத்தை நீக்கி பணிவைக் கற்றுத்தரும்.
“ இந்தப் புத்தகம் ஒருவனுக்குப் பணிவைக் கற்றுத்தருமா.?
“ நிறைய நம்பிக்கைத் தேவைப்படும்  மனம் ஒன்றி லயித்துப் படித்தால் அது சாத்தியமாகும். “
அடுத்து என் மனைவியும் எங்கள் சம்பாஷணையில் கலந்து கொண்டு அந்தப் பெண்ணின் புத்தி சாதுர்யத்தையும் அறிவையும் கண்டு இவளை நீங்கள் ஏன் வாஷிங்டன் போஸ்ட் டுக்காக பேட்டி எடுக்கக் கூடாது.? எப்பவும் பாரிஸ் ஹில்டன் போன்றவர்களைத்தான் பேட்டி காண வேண்டுமா.?என்றாள். எனக்கும் நான் இந்தப் பெண்ணுக்குக் கடமை பட்டு இருப்பதாகத் தோன்ற பேட்டிக்கு எனக்கு கொஞ்ச்ம் நேரம் ஒதுக்க முடியுமா என்று கேட்டேன்.
“ மன்னிக்கணும் சார். முதலில் முதலாளி ஒப்புதல் தர வேண்டும். மேலும் இங்கு வரும் பலருக்கும் என் வழிகாட்டலும் சேவையும் தேவைப் படும்.
“ உன் பெயரென்ன.?
“ கலைவாணி.
என் மனைவிக்கு இந்தப் பெண்ணின் முதலாளியிடம் உள்ள மதிப்பும் வேலையில் இருந்த அக்கறையும் மிகவும் பிடித்துப் போய் நேராக முதலாளியிடம் சென்று அந்தப் பெண் கலைவாணி “ என்று துவங்கினாள்.
“ ஆம். நல்ல உழைப்பாளி
“ இவர் என் கணவர் விஸ்வநாத் “
“உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி சார்.
“ இவர் வாஷிங்டன் போஸ்ட் இல் சீனியர் ஜர்னலிஸ்ட்
முதலாளி எழுந்து நின்று “ வாஷிங்டன் போஸ்ட் இலா என்று கேட்டார்.
ஆம். நான் இந்தப் பெண்ணை பெட்டி காண விரும்புகிறேன். இவளுடைய பேச்சும் பணிவும் வேலையில் இருக்கும் அக்கறையும் என்னை மிகவும் ஈர்த்து விட்டது “
முதலாளி அவளைக் கூப்பிட்டார். “ கலைவாணி இவர்கள் அமெரிக்காவிலிருந்து இவ்வளவு தூரம் வந்திருக்கிறார்கள். உன்னுடன் சிறிது நேரம் பேச விரும்புகிறார்கள். உன்னால் முடியும்தானெ.?
அப்பொழுது மாலை நேரம் . 5.45 மணி ஆகி இருந்தது. சார் இப்போது நல்ல கூட்ட நேரம் . நிறைய வாடிக்கையாளர்களுக்கு என் உதவி தேபைப் படலாம் . இவர்கள் நாளைக்கு வர முடியுமென்றால்..........
சரி. நாங்கள் நாளை மீண்டும் வருகிறோம்
மறு நாள் டைம்ஸ் ஆஃப் இண்டியா, மெட்ராஸ் ப்ரெஸ் க்ளப் போன்ற இடங்களின் நிகழ்ச்சிகளை ஒதுக்கித் தள்ளி இந்தப் பெண்ணை பேட்டி காண வந்தேன்கூட்டம் அதிகமில்லாத நேரம் . நானும் என் மனைவியும் அவளைப் பற்றி தெரிந்து கொண்டது. கலைவாணி ஆற்காடு பக்கத்தில் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்தவள். அவளுக்கு ஐந்து சகோதரிகள். இவள்தான் மூத்தவள். தந்தை ஒரு குடிகாரன் இவர்களைத்தவிக்கவிட்டு சில வருஷங்களுக்கு முன் இறந்து போனான். தாயார் சித்தாளாகப் பணி புரிந்து இவர்களைக் காப்பாற்றிக் கொண்டிருந்தவள். இவர்களை நடுத்தெருவில் விட்டு இறந்து இரண்டு வருடங்களாகின்றன.
ஒன்பதாவது முடித்திருந்த கலைவாணி வேலை தேடி வந்தபோது ‘கிரி ட்ரேடிங் அவளுக்கு உதவ முன் வந்தது. தன்னுடைய ஐந்து சகோதரிகளையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்து தன் சொற்ப சம்பளத்தில் அவர்களைப் பராமரித்து வருகிறாள். சகோதரிகள் ஐந்து பேரும் சென்னை கார்பொரேஷன் பள்ளியில் படிக்கின்றனர்.
“ கலைவாணி தத்துவ போதம் பற்றிப் படிக்கும் இந்த ஆர்வம் உனக்கு எப்போது ஏற்பட்டது..?
“ சார், இங்கு நான் சேர்ந்தபோது வாடிக்கையாளர்களுக்கு உதவ வேண்டும் என்றால் நமக்கும் சிறிதாவது தெரிந்திருக்க வேண்டும் என்று எண்ணி சிறிய புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன். அப்படியே ரமணர், ராமகிருஷ்ணர், விவேகாநந்தர் போன்றோரைப் பற்றிப் படிக்க ஆரம்பித்து. பகவத் கீதை விவேக சூடாமணி என்று படிக்கப் போய் ...
உனக்கு இங்கே என்ன சம்பளம் ?
“மாதம் ரூ, 2500/-
“ இந்த சம்பளத்தில் ஐந்து சகோதரிகளையும் வைத்துக் கொண்டு சமாளிக்க முடிகிறதா.?
ரொம்பக் கஷ்டம் சார். ஆனால் முதலாளி நிறையவே உதவுகிறார்
“ வாழ்க்கையில் உன் லட்சியம் என்ன.?
“ என் சகோதரிகளை படிக்க வைக்க வேண்டும் படித்தால் அவர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கும் இல்லையா சார்.?
நான் உனக்கு மாதம் ரூ. 10,000/- தந்தால் உன் செலவுகளை சமாளிக்கப் போதுமாய் இருக்குமா.?
“ அது மிகவும் அதிகம் சார். ஆனால் என் முதலாளி ஒப்புதல் கொடுத்தால்தான் நான் பெற்றுக் கொள்வேன்.
நாங்கள் அவளை முதலாளியிடம் அழைத்துக்கொண்டு போய் “ இவளுடைய சகோதரிகளின் படிப்பு முடியும் வரை இவளுக்கு மாதம் ரூ.10000/- தர விரும்புகிறோம். என்றோம்
“ இவள் அதற்குத் தகுதி உள்ளவள்தான் சார்..நீங்கள் என்னை நம்பலாம். நான் மாதாமாதம் அந்தப் பணம் இவளுக்குச் சேரும்படி பார்த்துக் கொள்கிறேன். இல்லையென்றால் நீங்கள் இவள் பெயரில் ஒரு அக்கௌண்ட் ஓப்பென் செய்து அதில் பணம் நேராகவே செலுத்தலாம்
என் நண்பர் , டைம்ஸ் ஆஃப் இந்தியா வின் ரீஜினல் மானேஜராய் இருக்கும் ஜான் பால் என்னுடன் வந்தவர் “ நல்ல காரியம் செய்தாய்என்றார்.
என் மனைவி , “ மயிலைக் கற்பகாம்பாள் அருளால் கலைவாணி வேதாந்தத்தில் நல்ல தேர்ச்சி பெற்று அமெரிக்காவில் சொற்பொழிவுகள் நடத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை நாம் செய்யலாம்என்றாள்.
நாங்கள் ஆச்சரியத்தின் பிடியில் இருந்து விலகாமல் அங்கிருந்து அகன்றோம். இந்தியாவின் அகத்தே கலைவாணி மாதிரியான அணிகலன்கள் எவ்வளவு எவ்வளவோ காணலாம். அவர்கள் முன் என் ஆணவம் அழிக்கப் பெற்று துரும்பு போல் உணர்கிறேன். பணிவுடன் தலை சாய்க்கிறேன்.
( ஆயிரக் கணக்கான பாடப் ப்படாத , அறியப் படாத நாயகர்களும் நாயகிகளும் இந்தியாவின் மூலை முடுக்குகளிலெல்லாம் அணியப் படாத அணிகலன்களாக இருக்கக் கூடும். அவர்களை முன் நிறுத்தும் முயற்சியில் ஈடுபடல் அவசியம். ) 
----------------------------------------------------------------




   


  

சனி, 4 ஆகஸ்ட், 2012

பகர்வல்ல .பகிர்வே...

         
                                  பகர்வல்ல பகிர்வே
                                   --------------------------
 ( இம்முறை  எழுதுவது  அனைத்தும் எனக்கு வந்த பதிவுகளின் பகிர்வே. 
இரண்டாவதும் மூன்றாவதும் என் மகன் எனக்கு அனுப்பியவை.என் எழுத்துக்கள் 
அவனுக்கும் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது )


முதலில்  நாட்டு நடப்பு.
---------------------------------


அரசியல் என்றால் என்ன என்று சிறுவன் கேட்டான்.
அப்பாவும் விளக்கமாகக் கூறத் தொடங்கினார்.
நான் செலவுக்குப் பணம் ஈட்டி வருகிறேன் ஆகவே முதலாளி.
ஈட்டிய பணத்தை செலவு செய்யும் உன் தாய் அரசு
தாத்தா எல்லாவற்றையும் கவனிக்கிறார் யூனியன் எனலாம்
வீட்டு வேலைக்காரி தொழிலாளி என்று சொல்லலாம்
எல்லோரும் பாடுபடுவது உனக்காக, ஆக நீ பொதுஜனம்
உனக்கு அடுத்துப் பிறந்த குட்டிப் பாப்பா எதிர்காலம்

மகனே-இங்கு நடப்பதைப் புரிந்து கொண்டால் அரசியல்
என்ன என்று விளங்கும் ஓரளவு தெரிந்து கொள்வாய்.
புரிந்ததைக் கொஞ்சம் எனக்குக் கூறு என்று கேட்டார் தந்தை.
ஒரு இரவு அசைபோட அவகாசம் கேட்டான் தனையன்.

உறங்கச் சென்ற சிறுவன் தம்பியின் அழுகுரல் கேட்டு விழித்தான்.
ஒன்றுக்கும் இரண்டுக்கும் போய் முடை நாற்றத்தில் மிதந்தான் தம்பி
செய்வதறியாது பெற்றோரின் படுக்கையற்க்குச் சென்றான் இவன்.
ஆழ்ந்த உறக்கத்தில் தாய், அருகே தந்தை இல்லை.
தாயை எழுப்ப முயன்று தோற்ற தனையன் வேலைக்காரி
இருக்குமிடம் சென்று பார்த்தால் தந்தையின் பிடிப்பில்
கட்டுண்டு கிடப்பவளை பலகணி வழியே ரசிக்கும் தாத்தா.
இவன் வந்ததே தெரியாமல் அவரவர் பணியில் அவரவர்.
ஏதும் செய்ய இயலாமல் இவனும் மீண்டும் உறங்கப் போனான்.

மறுநாள் மகனிடம் தந்தை கேட்டார். அரசியல் பற்றி அறிந்தது கூற.
அறிந்தது புரிந்தது என்று மகனும் விளக்க முற்பட்டான்.
“முதலாளி தொழிலாளியைக் கசக்குகிறான். யூனியன் கண்டும்
காணாமல் இருக்கிறது அரசு உறக்கத்தில் இருக்கிறது.
பொதுஜனம் புறக்கணிக்கப் படுகிறது. எதிர்காலமோ
முடை நாற்றத்தில் மூழ்கிக் கிடக்கிறது.

தமிழா தமிழா..
--------------
தடுக்கி வீழ்ந்தால்மட்டும் அ.........ஆ 
சிரிக்கும்போது மட்டும் இ...........ஈ
சூடுபட்டால்மட்டும் உ........ஊ
அதட்டும்போது மட்டும் எ........ஏ
ஐயத்தின் போதுமட்டும்
ஆச்சரியப்படும்போது மட்டும் ஒ......ஓ
வக்கணையின் போதுமட்டும்
விக்கலின் போது மட்டும் 
என்று தமிழ் பேசி
மற்ற நேரம் வேற்றுமொழி பேசும்
தமிழர்களிடம் மறக்காமல் சொல்
உன் மொழி. 


அட்சர ராமயணம்
--------------------

அனந்தனே அசுரர்களை அழித்து அன்பர்களுக்கு அருள.
அயோத்தி அரசனாக அவதரித்தான்.
அப்போது அரிக்கு அரணாக அரசனின்
அம்சமாக அனுமனும் அவதரித்ததாக
அறிகிறோம். அன்று அஞ்சனை அவனிக்கு
அளித்த அன்பளிப்பு அல்லவா அனுமன்.?
அவனே அறிவழகன் அன்பழகன்.அன்பரை
அரவணைத்து அருளும் அருட்செல்வன்.

அயோத்தி அடலேறு அம்மிதிலை அரசவையில்
அரசனின் அரியவில்லை அடக்கி அன்பும்
அடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியை அடைந்தான்.

அரியணையில் அமரும் அருகதை
அண்ணனாகிய அனந்த ராமனுக்கே..
அப்படியிருக்க அந்தோ.! அசூயையால்
அயோத்தி அரசனுக்கும் அடங்காமல்
அநியாயமாக அவனை அரண்யத்துக்கு
அனுப்பினாள்.அங்கேயும் அபாயம்.!
அரக்கர்களின் அரசன் அன்னையின் அழகால்
அறிவிழந்து அபலையை அபகரித்தான்.

அத்தசமுகனின் அக்கிரமங்களுக்கு
அட்டூழியங்களுக்கு அளவேயில்லை.
அயோத்தி அண்ணல் அன்னை
அங்கிருந்து அகன்றதால் அடைந்த
அடைந்த அவதிக்கும் அளவில்லை.

அத்தருணத்தில் அனுமனும் அனைவரும்
அரியை அடிபணிந்து அவனையே
அடைக்கலமாக அடைந்தனர். அவர்களில்
அருகதையுள்ள அன்பனை அரியணையில்
அரசனாக அமர்த்தினர்.

அடுத்து அன்னைக்காக அவ்வானரர்
அனைவரும் அவனியில் அங்குமிங்கும்
அலைந்தனர், அலசினர். அனுமன்
அலட்சியமாக அடியெடுத்து அளந்து
அக்கரையை அடைந்தான்.அசோகமரத்தின்
அடியில் அரக்கிகள் அயர்ந்திருக்க
அன்னையை அடிபணிந்து அண்ணலின்
அடையாளமாக அக்கணையாழியை
அவளிடம் அளித்தான். அன்னை அனுபவித்த
அளவற்ற அவதிகள் அநேகமாக அணைந்தன.
அன்னையின் அன்பையும் அருளாசியையும்
அக்கணமே அடைந்த அனுமன் அடுத்து
அரக்கர்களை அலறடித்து அவர்களின்
அரண்களை அகந்தைகளை அடியோடு
அக்கினியால் அழித்த அனுமனின்
அட்டகாசம் அசாத்தியமான அதிசாகசம்.



அனந்தராமன் அலைகடலின் அதிபதியை
அடக்கி,அதிசயமான அணையை அமைத்து
அக்கரையை அடைந்தான்.அத்தசமுக
அரக்கனை அயனின் அஸ்திரத்தால் அமரில்
அழித்தான்.அக்கினியில் அயராமல் அர்ப்பணித்த
அன்னை அவள் அதியற்புதமாய் அண்ணலை
அடைந்தாள்..அன்னையுடன் அயோத்தி அடைந்து
அரியணையில் அமர்ந்து அருளினான் அண்ணல்.

அனந்தராமனின் அவதார அருங்கதை
அகரத்திலேயே அடுக்கடுக்காக அமைந்ததும்
அனுமன் அருளாலே. 
--------------------------------------------