நீ ங்கள் சொன்னபடி செய்தால் போச்சு
-------------------------------------------------------------
இன்றைக்கு நண்பர்கள் இருவரை டின்னருக்கு அழைத்திருக்கிறேன் .என்ன சமையல் செய்கிறாய் ?
நீங்கள் சொன்னபடி செய்தால் போச்சு .
அடை அவியல் செய்துவிடு .
அவியலுக்கான காய் கறிகள் இல்லையே.
அப்போது வெஜிடபிள் புலாவ் செய்கிறாயா?
அவியலுக்கே காய்கறிகள் இல்லை என்கிறேன்,வெஜிடபுள் புலாவ்
எப்படி?
வெங்காய சாம்பாரும் உருளைக் கிழங்கு பொடிமாசும் செய்கிறாயா?
இரவு உணவில் உருளைக் கிழங்கு வாயு உபத்திரவம் தரும்.
சோளே பட்டுரா செய்தால் நன்றாக இருக்கும் இல்லையா?
சோளே பட்டுரா ரொம்ப ஹெவியாகி விடும்.
அப்படியானால் மாகி நூடுல்ஸ் செய்கிறாயா?
சேச்சே ! டின்னருக்கு கூப்பிடுகிறீர்கள் . வயிறு நிறைய வேண்டாமா.?
சரி. இட்லி சாம்பார் செய்து விடு
அதற்கு முன்பே ப்ளான் செய்திருக்க வேண்டும்.இட்லிக்கு மாவு அரைக்க வேண்டாமா?
அப்போ ஓட்டலிலிருந்து ஏதாவது தருவிக்கலாமா.?
வீட்டுக்கு வரச்சொல்லிக் கூப்பிட்டு ஓட்டலில் இருந்து தருவிப்பதா?
\
பின் என்னதான் செய்யப் போகிறாய்?
நீங்கள் சொன்னபடி செய்தால் போச்சு.!
----------------------------------------------------------------