புதன், 27 ஜூன், 2012

                                நீ ங்கள்  சொன்னபடி செய்தால்  போச்சு
-------------------------------------------------------------   

      இன்றைக்கு நண்பர்கள் இருவரை டின்னருக்கு அழைத்திருக்கிறேன் .என்ன சமையல் செய்கிறாய் ?
      நீங்கள் சொன்னபடி செய்தால் போச்சு .

      அடை  அவியல்  செய்துவிடு .
      அவியலுக்கான  காய் கறிகள்  இல்லையே.

       அப்போது  வெஜிடபிள் புலாவ்  செய்கிறாயா?
       அவியலுக்கே  காய்கறிகள்  இல்லை  என்கிறேன்,வெஜிடபுள்  புலாவ்
எப்படி?

       வெங்காய  சாம்பாரும்  உருளைக் கிழங்கு  பொடிமாசும்  செய்கிறாயா?
       இரவு உணவில்  உருளைக் கிழங்கு  வாயு  உபத்திரவம்  தரும்.

       சோளே  பட்டுரா  செய்தால் நன்றாக  இருக்கும் இல்லையா?
        சோளே  பட்டுரா ரொம்ப ஹெவியாகி விடும்.

       அப்படியானால்  மாகி  நூடுல்ஸ் செய்கிறாயா?
        சேச்சே ! டின்னருக்கு  கூப்பிடுகிறீர்கள் . வயிறு நிறைய  வேண்டாமா.?

        சரி. இட்லி  சாம்பார்  செய்து விடு
       அதற்கு  முன்பே ப்ளான்  செய்திருக்க வேண்டும்.இட்லிக்கு மாவு அரைக்க  வேண்டாமா?

         அப்போ   ஓட்டலிலிருந்து  ஏதாவது  தருவிக்கலாமா.?
         வீட்டுக்கு வரச்சொல்லிக்  கூப்பிட்டு  ஓட்டலில் இருந்து தருவிப்பதா?
      \
         பின் என்னதான் செய்யப் போகிறாய்?
         நீங்கள் சொன்னபடி செய்தால் போச்சு.!
         ----------------------------------------------------------------

          

12 கருத்துகள்:

  1. மறுபடியும் மொதல்ல இருந்தா கைப்புள்ள ஓடிரு :)

    பதிலளிநீக்கு
  2. பரவாயில்லீங்க, சொன்னபடி செய்யற வீட்டுக்காரி வாச்சிருக்காங்க, கொடுத்து வச்சவங்க நீங்க.

    பதிலளிநீக்கு
  3. மனம் ஒன்றை விரும்பாத போது வலிந்து காரணங்கள் தேடும்.

    அதுவே மனதுக்கு மிக விருப்பமாகும்போது மலையையும் நகர்த்திவிடும்.

    பொருத்தமான காரணங்களுடன் நிராகரிக்க எத்தனை எத்தனை கேள்விகள்?

    வரலாற்றுச்சுவடுகளோடு கைப்புள்ளயின் ஓட்டம் சுகம்.

    பதிலளிநீக்கு
  4. கடைசியில் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அடையும், வெங்காய சாம்பாருமே மிஞ்சறது.

    அடைக்குக் கூட மாவு இருக்கணுமே.. இருக்கற மாதிரித் தெரியறது.

    இதான் அற்புதம்.

    'தனது சாஸ்சாகவும் இருக்கணும். அதுவும் தனது தேர்வாகத் தெரியாதபடி கணவன் வாயால் வெளிவரணும்' என்று நினைக்கற பெண்மனதை படம் பிடித்துக் காட்டி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. சமையல் மட்டுமா
    எல்லோருடைய வீட்டிலும்
    ஆண்கள் சொல்றபடி எல்லாம் நடப்பது மாதிரிதான்
    எல்லாமும்நடந்துகொண்டிருக்கிறது
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. படித்தேன். ரசித்தேன். மறுபடியும் ரசித்து படித்தேன். ரசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. எங்க வீட்டில் இப்படி எல்லாம் நடக்காது! :) இருக்கும் காய்களுக்கு ஏற்ப சமையல் திட்டம் தயார் செய்வேன். பல சமயங்களில் அது மாறி விடும்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீ.சா மேடம்.. சொன்னால் நம்ப மாட்டீர்கள். என்னைப் பொறுத்தவரையில், அடுப்பைப் பற்ற வைக்கும்போது அன்றைய சமையல் நடக்கும். நான் அதற்கு முன்னால் என்ன தீர்மானித்திருந்தாலும், பெரும்பாலான தடவைகள் மாறிவிடும். (இன்றைக்கு இதுதான் வாய்த்தது என்று எடுத்துக்கொள்வேன்)

      நீக்கு
    2. கீதாமேடம் நான் யாரையும் குறிப்பிட்டுச் சொ ல்லவில்லை. பொதுவாகப் பெண்களைப் பற்றி எழுதி இருந்தேன்

      நீக்கு
  8. அன்றைக்கு நீங்கள் என்ன சொன்னீர்கள், அவர்கள் என்ன செய்தார்கள் என்பதே எனக்குக் குழப்பமாக இருக்கிறது.

    நீங்கள் எழுதியுள்ளதைப் படித்தவுடன், கடுகு சார் (அகஸ்தியன்) அவரது கதைப் புத்தகம் ஒன்றில் 'கமலா' தன் கணவருடன் சமையலைப் பற்றிப் பேசுவதுபோல் எழுதியிருந்ததைப் படித்தது நினைவுக்கு வந்தது. ஒருவேளை அவர் தளத்திலும் இருக்கலாம். கிடைத்தால் லிங்க் தருகிறேன். (kadugu-agasthian.blogspot.com)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா மெடம் சமையல் பற்றி எழுதி இருந்தார்கள் அதைப்பார்த்தவிடன் என் பதிவு நினைவுக்கு வந்தது சுட்டி கொடுத்து படிக்கச்சொன்னேன் அவ்வளவுதான் கடுகு சார் என்ன எழுதி இருக்கிறார் படிக்கவில்லை. லிங்க் கொடுத்தால் தெரிந்து கொள்வேன்

      நீக்கு
  9. சமையல் பற்றி கீதாமேடம் எழுதீருந்தார்கள் அவர்களுக்கு என் பதிவின் சுட்டி கொடுத்தேன் பொதுவான பெண்களின் குணம் என்று தோன்றியது கடுகௌசார் எழுதியிருக்கிறாரா பார்த்ததில்லை லிங்க் கொடுத்தால் தெரிந்து கொள்வேன்

    பதிலளிநீக்கு