வியாழன், 10 மார்ச், 2016

அம்பர்நாத் பயிற்சி பள்ளி முன்னாள் மாணவர் சந்திப்பு


                                   ATS AMBERNATH ALUMNI MEET
                                   -------------------------------------------------
முன்னைய பயிற்சி மாணவர் சந்திப்புஃபெப். 27-ம் தேதி காலை எட்டரை மணியிலிருந்து துவங்கும்  என்று நிகழ்ச்சி நிரல் கூறியது நானும் மனைவியும் போய்ச் சேரும்போது மணி ஒன்பது ஆகி இருந்தது போனவுடன் வருகைப்பதிவு செய்யச் சொன்னார்கள்பெயரைச் சொன்னவுடன்  ஒரு எண்ணைக் கொடுத்தார்கள் அந்த எண்ணை இன்னொரு கவுண்டரில் கொடுத்தபோது எங்கள்  பெயர் கொண்ட அடையாள அட்டையும் ஒரு ஹாண்ட் பாகும் கொடுத்தார்கள் அடுத்துக் காலை உணவாக இட்லி வடை பொங்கல் போன்றவை பஃப்ஃபே முறையில் எடுத்துக் கொண்டோம்  அதன் பின் சில புகைப்படங்களைக் க்லிக்கினேன் முதலில் அடையாளம் தெரிந்தவர்கள் . பிறகு வந்த கூட்டத்தின்  ஒரு பகுதி என்று 
  சந்திப்பு விழாவில் வழக்கம் போல் கடவுள் துதி குத்து விளக்கு ஏற்றல், வரவேற்புரை, பிரதம விருந்தினராக NTTF ன்  டைரெக்டர் திரு வேணுகோபால் அவர்களின் சின்ன உரை ( நீண்ட உரைகளைக் கேட்டு வெறுத்துபோன எனக்கு அது பெரிய ரிலீஃப் )   பின் பயிற்சிப் பள்ளியின்  anthem   என்று நிகழ்ச்சிகள் நடந்தேறின
 வெரைட்டி எண்டர்டெயின்மெண்ட்  என்று துவங்கும்  முன் முன்னாள் மாணவர்களில்  எண்பது வயதைத் தாண்டியவர்களுக்கு  கர்நாடகத்தின் வழக்கப்படி பேட்டா என்னும் தலைப் பாகை அணிவித்து கௌரவித்தனர் அவர்களின் துணைவியருக்கு ஷால் போர்த்தினர்.
Spastic society of Bangalore –லிருந்து  சிறார்களும்  சிறுமிகளும் விழாவில் அவர்களது  திறமைகளை காட்டினர்  வாய்ப்பாட்டு வாத்திய இசை நாட்டியம் என்று அசத்திவிட்டார்கள் ஒரு சிறுவன் பாட ஒரு சிறுவன் படம் வரைய என்று நெகிழ்த்தி விட்டார்கள் அந்த சொசைட்டிக்காக  நிதி வசூல் என்றதும் ஒரு மனதாக கூடி இருந்தோர் பணத்தை  அள்ளிக் கொடுத்தார்கள் அவ்விடத்திலேயே அந்த சிறுவன் வரைந்த படமும் விலை போயிற்று. இன்னும் மக்கள் மனதில் ஈரம் இருக்கிறது என்பது புலப்பட்டது சில நிமிடங்களில் ரூ 30,000/-க்கும் மேல் வசூலாயிற்று. என் மனைவியும் ரூ ஆயிரம் கொடுத்தாள்
 இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மதிய உணவுக்காக நேரம் அறிவிக்கப்பட்டது பஃப்ஃபே முறையில் உணவு. அனுமார் வால் போல் நீண்ட வரிசை. பூரி புலவ் நான் குருமா கட்லெட்  சாம்பார் ரசம் தயிர் சாதம்  என்று வகை வகை நினைவுக்கு வரவில்லை. இனிப்பாக பாசந்தி ஐஸ்க்ரீம்  பப்பட் சலாட்  வகையறா வகையறா எல்லோர் சுவைக்கு ஈடாக அமைந்திருந்த உணவு
உணவு முடிந்தபின் பிசினஸ் மீட் என்று பொறுப்பாளர்கள் கூடிப் பேசினர்  அதே நேரம் பெண்களுக்காக தம்போலா விளையாட்டு நடந்தது என் மனைவிக்கு அதிர்ஷ்டம் இருக்கவில்லை
 முடியும் நேரத்தில் தேனீர் இடைவேளையும் வர அவரவர்கள் அறிந்த நண்பர்களைத் தேடி உரையாடினர்  நாங்கள் தேனீர் முடிந்தவுடன் வீட்டுக்கு வந்து விட்டோம் இப்படியாக முதல் நாள் சந்திப்பு இனிதே நடந்தது                                  

  
                              
வருகைப்பதிவு
காலை உணவு
விழாமேடை
நிகழ்ச்சி நிரல் 
வருகை தந்தோரில் ஒரு பகுதி


நண்பர்கள்

சிலநண்பர்களுடன் நான் 



விழா பொறுப்பாளர்களில் சிலர்

கௌரவிக்கப்பட்ட மூத்தவர் ஒருவர் 

                                         மூத்தவர்களுக்கு மரியாதை (காணொளி)
ஸ்பாஸ்டிக்  சொசைட்டிஆஃப் பெங்களூருவின் வித்தகர்கள் சிலர் 
வாத்திய இசை
நடனமாடிய சிலர் 

பாடல் ஒலி கேட்டுக் கொண்டே படம் வரைபவர் 

ஆன் த ஸ்பாட்டில்  வரைந்த படம் 



அடுத்த நாள் 28-ம் தேதி நாங்கள் காலையிலேயே வந்து விட்டோம்காலை உணவாக ப்ரெட் ஜாம் ஆம்லெட் இட்லி வடை பூரி  இருந்தது மதிய உணவுக்குப் பின் என் பேரனின் பிறந்த நாளுக்குச் செல்லதிட்டம் அன்று பொதுவாக எந்த நிகழ்ச்சியும் வரையறுக்கப் படவில்லை அந்தநேரத்தை முகமறியா  பள்ளி முன்னாள் மாணவர்களை அறிமுகப்படுத்திக் கொள்ள உபயோகித்தோம்எங்களைப் பார்க்கவென்றே ஒரு அழையா விருந்தாளியும் கண்ணாடி தடுப்புக்கு வெளியே  வந்திருந்தார் புகைப்படம் என் மனைவி எடுத்தது என் ஹாண்டி காமிராவை எடுத்துவர மறந்து விட்டேன்
அந்தக் கூட்டத்தில் இருவர் ஒரே மாதிரி உடை உடுத்து அங்கும் இங்கும் உலவுவதைப் பார்த்து பரிச்சயப்பட்டோம் கொல்கத்தாவிலிருந்து வந்தவர்கள் எங்களுக்கு மிகவும் ஜூனியர்கள் ஒருவர் பெயரும் மற்றவர் பெயரும் கூட ஒரே மாதிரி ஒலித்தது இரட்டையர்கள் அதே பள்ளியில் பயின்றவர்கள் ஒருவர் டிபேஷ்  இன்னொருவர் தேபஷ்  (DIPESH DEBASH)
 சும்மா தமாஷுக்கு இருவரும் இரட்டையர்களை மணந்தார்களா என்று கேட்டோம் மிகவும்பலமாகச் சிரித்து இல்லை என்றனர்
 என் நண்பர் ஒருவரும் என் மகன் வீடு வழியே போக இருந்ததால் அவரையும் கூட்டிக் கொண்டு சீக்கிரமே கிளம்பி விட்டோம்  இடையே வந்திருந்தோரை குரூப் குரூப்பாகப் புகைப் படம் எடுத்தார்கள்

 ஒருவழியாய் இரண்டு நாள் ஆலும்னி மீட் முடித்துக் கொண்டோம்
ஆந்தயார் தெரிகிறதா
 
கொல்கத்தா இரட்டையர்கள்
 
மகன் வீட்டில் ஆலிலைக் கண்ணனா?
   
                            










செவ்வாய், 8 மார்ச், 2016

ஜீனியஸ் இராராவின் நினைவுகளில்


                                இராராவின் நினைவுகளில்
                                ------------------------------------------
                       ( சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள் )

மணிராஜ் எனும் வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வந்த  திருமதி இராஜராஜேஸ்வரி மறைந்த செய்தியை  அவரது வலைத்தளத்திலேயே அவரது மகன்களும் மகள்களும் வெளியிட்டிருந்தார்கள் தமிழ்வலை உலகில் 
தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்ட திருமதி இராராவின் மறைவு ஈடு செய்ய இயலாதது கோவில்கள் பற்றியும் அதன் விசேஷங்கள் பற்றியும் அழகான படங்களுடன் பதிவிடும் இராராஅவர்கள் என்னில் சில நினைவுகளைத் தூண்டிச் செல்கிறார் நான் பதிவெழுத ஆரம்பித்த சில நாட்களிலிருந்தே  என்பதிவுகளைப் படித்துக் கருத்திடுவார் அவரைச் சந்திக்க வேண்டும் என்ற என் ஆசை நிறைவேறாமலேயே போய் விட்டது 2011-ன் கடைசி நாட்களில், நான் படித்த பள்ளிக்கூடம் வாழ்ந்த இடங்கள் என்று பார்த்துவர நீலகிரிக்குச் சென்றிருந்தேன் திரும்பி வரும் போது கோவையில் ஐயா கந்தசாமியையும் சந்தித்தேன்  அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோதுதிருமதி கோவை வாசிதானே அவரைச் சந்திக்க முடியுமா, முகவரிகிடைக்குமா  என விசாரித்தேன் . அதற்கு அவர் பொதுவாக திருமதி இராரா யாரையும் சந்திக்க விரும்பமாட்டார் என்று கூறிவிட்டார்
ஒரு பதிவில் ஆஸ்திரேலியா பற்றி நிறைய எழுதி இருந்தார் அவர் கோவையில் இருந்து அத்தனைப் படங்களுடன் ஆஸ்திரேலியா பற்றி எப்படி எழுதுகிறீர்கள் என்று கேட்டேன் அதற்கு அவர் வாசம் கோவைதான்  என்றாலும்  மனம் ஆஸ்திரேலியாவில் அவருடைய  மகனிடம்தான் என்று எழுதினார்  
ஒருமுறை என் பதிவில் எங்கள் ஊருக்கு அருகே ஏதோ ஒரு ஊரில் குதிரை வாகனத்துடன் சுவாமி ஓட்ட உலா நடக்கும் அந்த ஊரின் பெயர் தெரியவில்லை என்று பூவனம் ஜீவி எழுதி இருந்தார் அந்த ஊரின்  பெயரைக் குறிப்பிட்டு இராரா பதிலெழுதினார் அதை அப்பாதுரையும் ஜீவியும் சிலாகித்து எழுதினது நினைவுக்கு வருகிறது
நான்  சுடோகு என்னும் கணக்குப் புதிர் ஒன்றை வெளியிட்டு வாசகர்களிடம் அதை சால்வ் செய்யக் கேட்டிருந்தேன்  மிகவும் கடினமான புதிர் அது அப்பாதுரையும் இராராவும் சரியாக சால்வ் செய்திருந்தார்கள் அதற்கு பதிலாக நான் அவர்களுக்கு ஜீனியஸ் என்னும்பட்டப் பெயர் கொடுத்தேன்
புதுகை வலைப் பதிவர் விழாவுக்கு வருகை தர  பெயர் கொடுத்திருந்தவர்களில் இராராவும் ஒருவர் . என் நீண்ட நாளைய விருப்பம் பூர்த்தியாகும் என்று எண்ணி இருந்தேன்  ஆனால் ஏனோ அவர்கள் வரவில்லை.  பல நாட்களாகப் பதிவோ பின்னூட்டமோ இல்லாதிருந்ததால் அவருக்கு நலம் விசாரித்து அஞ்சல் அனுப்பினேன் இரத்த அழுத்த நோய் காரணமாக மருத்துவ மனையில் இருந்து ஏழு மாதங்களுக்குப் பின் நலமாகி வந்திருப்பதாக பதில் எழுதினார் அதன் பின் அவ்வப்போது சில பதிவுகளும் வெளியிட்டார் ஒரு முறை சாட்டுக்கு அவரை அழைத்திருந்தேன் ஓரிரு கேள்விகளுக்கு மிகவும் சுருக்கமாகப் பதில் தந்தார் ஏனோ விரும்பவில்லை என்று விட்டு விட்டேன் அவருடைய புகைப்படத்தை திரு தி தமிழ் இளங்கோவின் பதிவில்தான் முதன் முதலாகப் பார்க்கிறேன்  என் மனைவிக்கும் காட்டினேன்  அவளுக்கு இராராவின் மீது தனி மரியாதை உண்டு.
 சில நினைவுகளை அசை போடுவது தவிர ஏதும் செய்ய இயலவில்லை. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்             

 


ஞாயிறு, 6 மார்ச், 2016

ATS AMBERNATH ALUMNI MEET



                        ATS AMBERNATH ALUMNI MEET
                        ---------------------------------------


இரண்டு மூன்று மாதங்களாக எதிர் பார்த்திருந்த அம்பர்நாத் அலும்னி சந்திப்பு ஃபெப்ருவரி 27 மற்றும் 28 தேதிகளில்  இனிதே நடந்து முடிந்தது. அம்பர்நாத் அலும்னி சந்திப்பில் கலந்து கொண்டவர்கள்  ஏறத்தாழ அனைவரும் எழுபது வயதுக்கு மேற்பட்டவர்களே அம்பர்நாத்தில் பயிற்சி பெற்றவர்கள் இந்தியா முழுவதும் ஏன் சிலர் வெளிநாடுகளிலும் கிதறிக் கிடக்கிறார்கள் கிட்டத்தட்ட 15 பேட்சுக்கும் மேல் இருக்கிறார்கள் அவரவர் பாட்ச் நண்பர்கள் தவிர ஏனையோரை நினைவில் வைத்திருப்பதே அசாத்தியம் சந்திப்புக்கு வந்திருந்தோர் எண்ணிக்கை  350 பேருக்கும் மேல் இருக்கும்  பலரும் தங்களதுமனைவியருடன் வந்திருந்தனர் அயல் நாடான அமெரிக்கா கனடா ஜெர்மனி போன்ற இடங்களிலிருந்தும் வந்திருந்தனர்   


எனக்கு அடிப்படையில் ஒரு சந்தேகம் இருந்தது அறிமுகம் கூட இல்லாத இத்தனை முதியவர்களையும் ஒருங்கிணைக்கும் சக்திதான் என்ன.? இந்தக் கேள்வியைப் பலரிடமும் கேட்டேன் பெரும்பாலும் பதில் கூறியவர்கள் இந்த சந்திப்பை அந்த பயிற்சிப்பள்ளிக்கே சமர்ப்பித்தனர்  ஒவ்வொருவரும் அவரது இப்போது இருக்கும் நிலைக்கு அந்தப் பள்ளியில் பயின்றதே காரணம்  என்கின்றனர். அதுதான் உண்மையுங்கூட. உலகம் தெரியாத வயதில் அந்தப் பயிற்சிப்பள்ளி அனைவரிடமும் ஒரு தன்னம்பிக்கையை வளர்த்திருக்கிறது எதையும் சாதிக்க முடியும் என்னும் நம்பிக்கை. அது அவரவர் வாழ்வில் நிதர்சன உண்மையாய் இருக்கிறது பயிற்சிக்காலத்துக்குப் பிறகு நான் ஒரு மினி இந்தியாவை அந்த சந்திப்பில் கண்டேன்


வலைப்பதிவர் சந்திப்புகளிலாவது அவரவர் வலைத் தளங்கள் மூலம் ஒருவர் பற்றிய சில கணிப்புகள் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சந்திக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கலாம்

 ஆனால் இங்கோ இந்தியாவின் பல கோடிகளிலிருந்து  நிறையவே பணம் செலவு செய்து கலந்து கொள்ளப் பதிவுக்கட்டணமும் செலுத்தி இரண்டு நாள் பொழுதைக் கூடிக் கழிக்கும் ஆர்வமே இருந்தது. வயதானோர் பலருக்கும் பயணம் செய்யவும் தன்னம்பிக்கையை வளர்க்கவும் இந்த சந்திப்பு வழிவகுத்தது எனலாம் மூன்று மாதம் முன்பே திட்டமிட்டுக் கலந்து கொள்ளப் பெயரும் பதிவுக் கட்டணமும் கொடுத்து டிக்கட்களையும் எடுத்தவர்களில் சிலர் திரும்பவராத இடத்துக்கு இந்த சந்திப்புக்கு முன்பே பயணப்பட்டு விட்டார்கள் என்பதும் உண்மை.
இந்த சந்திப்புக்காகவே பெங்களூரு சாப்டர் துவங்கப் பட்டதுஇந்த சாப்டரின் பொறுப்பை ஏற்று இந்த சந்திப்புக்கு வழிவகுத்த நண்பர்கள் இந்த வயதிலும் அயராது உழைத்து சந்திப்பு வெற்றிகரமாக நடக்கப் பேருதவியாய் இருந்தனர்



சந்திப்பு பெங்களூரில் பீன்யா மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெகு அருகே இருக்கும் PLATINUM CITY APARTMENT- ல் நடந்தது. வருகையை ஜனவரி 7-ம் தேதிக்கு முன்பே உறுதி செய்யும் விதமாக  பதிவுக் கட்டணம்  வசூலிக்கப் பட்டது தனி நபருக்கு ரூ 1500-ம் மனைவியோடு வருபவருக்கு ரூ 2500-ம் வசூலிக்கப்பட்டதுபெரும்பாலோருக்கு அவர்கள் சௌகரியப்படி தங்கும் இடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டது தங்குமிடமும்  அதே அபார்ட்மெண்ட் வளாகத்திலேயே இருந்தது சிங்கிள் ரூம் டபிள் ரூம் சாதாரணம்  குளிரூட்டப்பட்டது என்று தேவைக்கேற்ப வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது இரண்டு நாட்களுக்கும் காலை உணவு முதல் இரவு உணவு வரை ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது


ஆர்டிசான் ட்ரெயினிங் ஸ்கூல்  என்று அழைக்கப்பட்ட பயிற்சிப் பள்ளி அம்பர்நாத் என்னும் இடத்தில் 1950 களில்  மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முயற்சியால்  பாதுகாப்பு துறையின் கீழ் சுவிட்சர்லாந்து  ஓர்லிகன் கம்பனியினருடன்  கூட்டு முயற்சியாகத் துவங்கப் பட்டு சுமார் ஆயிரம் பேருக்கும் மேலாக பயிற்சி அளித்திருக்கிறது பொறி இயல் துறையில் பயிற்சி அளிக்கப்பட்டது அந்தப் பள்ளியில் பயிற்சி பெற்றோருக்கு நல்ல டிமாண்ட் இருந்தது அதில் பயிற்சி பெற்றோர் முதலில் ordinance factory  களில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர் எச் ஏ எல் –ல் போதிய பயிற்சி வசதிகள் இல்லாததாலும்  அம்பர்நாதில் இருக்கும் வசதிகளைப் பயன் படுத்தும்  முறையிலும் சிலரைப் பயிற்சிக்கு  அனுப்பினர் அம்மாதிரி அனுப்பப்பட்டவர்களின் முதல் பாட்சில் நானும் இருந்தேன்1957-1959 வரை இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்றேன்
 2010 –ம் ஆண்டு சென்னையில் நடை பெற்ற ஆலும்னி சந்திப்புக்கு நான் சென்றிருக்கிறேன்  அது பற்றி ஒரு பதிவிலும் குறிப்பிட்டிருக்கிறேன்
 இந்த மாதிரி சந்திப்புகள் புனே ஜபல்பூர் கொல்கத்தா கான்பூர் கோவை மும்பை போன்ற இடங்களில் இதற்கு  முன்  நடந்திருக்கிறது. முதன்  முதலாக இப்போது பெங்களூருவிலும்  நடந்தது சந்திப்பு பற்றிய பிற தகவல்கள் பின் வரும் பதிவில் தொடரும்


பெங்களூரு சாப்டர் கமிட்டி உறுப்பினர்கள்






வெள்ளி, 4 மார்ச், 2016

தொடரும் உரத்த சிந்தனைகள்


                                      தொடரும் உரத்த சிந்தனைகள்
                                       --------------------------------------------------
 சாதாரணமாக வயதானவர்கள் எல்லோரும் ' நான் போய்ச்சேர காத்திருக்கிறேன் ' என்று கூறுகிறார்கள் .what do you know about that ..place/living..?Do you expect to meet/see those who predeceased you..what else do you know about post-mortam status...As you are a man of deep thoughts , i am sure what you share on this subject will make for interesting read..
 (தொடர்ச்சி)



 போகுமிடம் பற்றி என்ன நினைக்கிறேன் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் போவது பற்றி நினைக்கும் அளவுக்குப் போகுமிடம் பற்றி யோசிப்பது/ யோசித்தது இல்லை. யாருக்குத் தெரியும் சொர்க்கம் என்றும் நரகம் என்றும் கூறிப் பயமுறுத்துகிறார்கள். சொர்க்கத்தில் எல்லா நலன்களும் இருக்கும் என்றும் நரகத்தில் எல்லா தண்டனைகளும் இருக்கும் என்று கூறுகிறார்கள் அதுவும் மினிட் டிடெயிலுடன் விவரிக்கிறார்கள் ஏதோ பார்த்து வந்து கதை சொல்வது போல்.  ஒரு கிருத்துவப் பாடல் கேட்ட நினைவு.
OH OH OH  EVERYBODY IS GONNA  BE SINGING HIS STORY
EVERY BODY IS GONNA BE SINGING HIS GLORY
EVERY BODY IS GONNA  HAVE A WONDERFUL TIME UP THERE
GOING  DOWN THE VALLEY  GOING ONE BY ONE
 YOU GOT TO BE REWARDED  FOR THE THINGS YOU’VE DONE
HOW YOU GONNA FEEL ABOUT THE THINGS YOU’LL SAY
 ON THAT JUDGEMENT DAY....OH OH OH ....
 .  இறந்தவர்களை எல்லாம் அழைத்து அவர்கள் செயலுக்கு ஏற்ப நியாயம் வழங்கப்படும் என்றும்  அவர்கள் நல்லதையே செய்ய வேண்டுமென்றும் அறிவுறுத்தும் விதமாக அமைந்த பாடல்  முழுவதும் நினைவுக்கு வரவில்லை. நோக்கம்  நல்லது தான்  இப்படிக் கூறினால்தான் பயம் வந்து நல்லது செய்வார்கள் என்று சொல்வதுபோல் இருக்கிறது  மனிதனின் நல் இயல்புகளில் நம்பிக்கை போய்  பயமுறுத்தியே அவனைப் பணிய வைக்க முடியும் என்று எண்ணம் வலுத்ததினாலேயே இத்தனை கதைகளும்  நம்பிக்கைகளும் நம் இந்து மதத்தில் இதையே வித்தியாசமாக  ஜீவாத்மா என்றும் பரமாத்மா என்றும் கூறி சுயமாக சிந்திக்க விடாமல் செய்கிறார்கள் சரி சுயமாக சிந்திக்கும் உனக்கு என்ன தோன்றுகிறது என்னும் கேள்வி நிச்சயம் வரும் என் அறிவு இது பற்றி சிந்தித்து முடிவெடுக்கும் அளவுக்கு வளரவில்லை என்பதே அப்பட்ட உண்மை.  நாம் கற்றது கடுகளவு. கல்லாதது உலகளவு என்பது நிதர்சனம்  இருந்தாலும் பதில் தேட முயற்சிப்பதில் தவறில்லையே ிஞ்ானியாகர்க்கியாகோ QED  போடைக்குடிந்தால் சி  எனக்குள் எழுந்த கேள்விகளும்  அதற்கு நான் சொன்ன சமாதானங்களும்  கூற முயற்சித்தேன்  விடியலுக்காகக் காத்திருக்கிறேன் என்னும்பதிவில்
          எப்பொருளையும் ஆக்கவோ அழிக்கவோ இயலாது.
          ஆக்கலும்  அழித்தலும் வெறும் தோற்றமே.,
           உண்மையோ முன்பிருந்த நிலையின் மாற்றமே.
           இது விஞ்ஞானம்  கூறும் தேற்றமே. 

இருளும் ஞாயிறும் விடியலும் 
மாற்றமிலா நிகழ்ச்சி போல் தோன்றினும்
நேற்று போல் இன்றில்லை, இன்று போல் 
நாளையில்லை,இது நாமறியும் உண்மையே. 

           விஞ்ஞானக் கூற்று உண்மையாயின்
            நேற்றிருந்த என் அப்பன் என்னானான்.?
            யாதாக மாறினான்.?உடலம் வெந்து 
            சாம்பலாயிருக்கலாம், இல்லை மண்ணில் 
            மக்கிக் காணாதிருக்கலாம்.ஆனால்,
           அப்பனாக எனக்குத் தெரிந்த அவன் 

            எங்கே என்னவாக மாறினான்,?

இன்று  நானாக அறியப்படும் நான் நாளை 
என்னாவேன், சாம்பலோ மண்ணோ  அல்லாமல்.
உயிரென்ற ஒன்று இருந்ததால்தானே 
என் அப்பன்  அப்பனாகவும், நான் 
நானாகவும் அறியப்படுகிறோம்.?


அந்த உயிரென்று அறியப்படுவது எங்கே உள்ளது.?
ஆன்மா என்றழைப்பின்  அதுவும் எங்கே  உள்ளது. ?
யுகயுகமாய் உலவி வந்த உயிர்களின் ஆன்மாக்கள் 
எண்ணிக்கையில் மாற்றம் இருக்கக் கூடாதே
விஞ்ஞானக் கூற்றுப்படி, விஞ்ஞானம்  விளங்க வில்லை

            ஊனென்றும் உயிரென்றும் ஆன்மா என்றும்
            ஆயிரம்தான் கூறினாலும், அதெல்லாம் ஒன்றின் 
            வியாபிப்பே என்று மெய்ஞானம் கூறுகிறது. 

அறிந்தவர்கள் என்று அறிந்தவர்கள் கூறும் 
மெய்ஞான சூக்குமம் வசப்படும் முன் நானும் 
மண்ணோடு மண்ணாய்  மக்கிப் போவேன். 
அறிய முற்படுவோர் நிலையும்  அதுதான்.அுவை ஹஷ்யங்கள்ான் 

            என்றோ எவனோ வரைந்து முடித்த வட்டத்தின் 
            தொடக்கப்புள்ளி தேடி ஏன் சோர்வுற வேண்டும்.?
            அறியாமை இருளில் இருப்பதே சுகம். 

அண்ட வெளியே இருட்டின் வியாபிப்பு 
அதில்  ஒளி  தருவதே ஞாயிறின் ஜொலிப்பு 
அறியாமையும் அவலங்களுமாய் இருண்டிருக்கும்
வாழ்வியலில் நம்பிக்கையே ஞாயிறின் ஒளி.


             ஹேஷ்யங்களும் கேள்விகளும் எனைத் துளைக்க 
             ஞாயிறின்  விடியலுக்காகக் காத்திருக்கிறேன்.

இருந்தாலும் எண்ணங்கள் சிறகசைப்பதை நிறுத்துவதில்லையே
 அம்மாதிரியான ஒரு சூழலில் எழுதியதும் இங்கு பொரந்தும் என்பதால் அது கீழே

அந்திசாயும் நேரம், அழகான மாலை வேளை
பகல் இறந்து இரவு உயிர்க்கும்போது,
வாழ்வின் மாலையில் மதி மயங்கி,
எண்ணச் சிறகுகள் என்னுள்ளே படபடக்க
எண்ணிப் பார்க்கிறேன், இதுகால் இருந்த இருப்பை.
       அன்றொரு நாள் எந்தையும் தாயும் மகிழ்ந்து குலவ,
       
விபத்தின் விளைவாய், எங்கிருந்தோ என்னைக்
       
கேளாது இங்கெவனோ தூக்கி எறிந்திட்டான்,
       
இன்னும் எங்கோ எனைக் கேளாது எறியப்படுவேனோ
கண்மூடி உறக்கம் விழித்தெழுந்தால்
நாளை என்பது நிஜமாகும்.
கடந்த காலம் ,வாழ்ந்த வாழ்க்கை
கடந்ததுதானே; மாற்றல் இயலுமோ.

        அந்த நாள் அக்குயவன் கை
         
ஆட்டத்தால் நேர்ந்த பிழைக்கு(பிழையா.?)
         
இந்த நாளில் ஏழையெனை
         
ஏனோ குறைகள் கூறுவரே.
         
நெஞ்சே, நீயும் எத்தனை நாள்
         
நெருப்பில் மூழ்கி நின்றிடுவாய்.
         
வஞ்ச உலகில் எல்லாம் ஒழித்திட்டு,
         
மறந்து நீக்கிச் சென்றிடவே
         
சித்தத்தில் நீயும் தயாரா, எண்ணுவாய் நீயே.

எண்ணி எண்ணி உன் குறைகள் மட்டும் ஏனோ
உன்னுகின்றாய். மண்ணில் நீயோர் ஒளிவட்டம்
மற்றவ் வட்டம் காண்போர் விழியின் வளைவே
வளைவெல்லாம் .என்றறிந்தவன் தானே நீ.?


       
வாழ்வின் விடியல்,பகல்,மாலை வரை வந்து
       
விட்டாய்,வென்றுவிட்டாய். வாழ்க்கை நிறைவேயன்றோ
       
நீ சென்ற பின்னே பழிக்கும்படியா இருப்பாய்

உன் உயிர்ப் பறவை இன்னும் இருக்கிறது
அறம் ,பொருள் ,இன்பம் கழித்தாயிற்று;
வீடு நோக்கிப் பறப்பதே மீதி.

    என்னுயிர்ப் பறவையே,
         
நான் கண்களை மூடிக் கொள்கிறேன்
         
நீ உன் சிறகசைப்பை துவக்கலாம்.
         
என் நெஞ்சுக்கூட்டை விட்டு
         
அழகாக வெளியேறிவிடு, யாரும் அறியாமல்.
        
மூ டிய கண்கள் விழித்து விட்டால்
         
இன்னும் இன்னும் எண்ணச் சிறகடிப்பாயே

(குயவன் = படைத்தவன் என்று பொருள் கொள்க
வீடு= தெரியாத போகுமிடம் என்று புரிந்து கொள்க)

கேள்வி கேட்டவருக்கே தெரியும்  எந்த பதிலும் ஹேஷ்யமாகத்தான் இருக்கும் என்று. அதுதான் உண்மை. தெரியாத ஒன்று பற்றி எண்ணி அசைபோடுவதில் தவறு இல்லையேநான் எது பற்றியும் சிந்திப்பது இல்லை என்று கூறிவிடலாம் ஆனால் அது உண்மையாக இருக்காதே பார்க்க என் தளத்தின் முகப்பில் எழுதி இருக்கும் வரிகளை

(உரத் சிந்தனைப் பதிவுகள் முற்றும் ) 











புதன், 2 மார்ச், 2016

அப்பாவின் நினைவுகளில் ......


                                    அப்பாவின் நினைவுகளில்
                                   ------------------------------------------

சென்ற ஆண்டு அப்பாவின் நினைவு நாளன்று(2-3 2015) ஒரு பதிவு எழுதி இருந்தேன்
(நெஞ்சம் மறப்பதில்லை)
அப்பாவுக்கு
முந்தைய பதிவுகளுக்கு
 சொடுக்கிப் படிக்கலாம் 
 அவற்றில் அவர் மறைந்த நாளின்  கனம் மிகுதியாக இருந்தது. அப்பாவின் நினைவுகள் மனதை கனக்க வைக்க மட்டுமா? இப்போதும் சில சில நினைவுகளைப் பகிர்கிறேன்
என் அப்பாஇப்புவியில் வாழ்ந்த நாட்கள் 49 வருடங்களேஅவர் வாழ்ந்த நாட்களைவிட எங்களைப் பிரிந்து சென்ற நாட்களே அதிகம் ( 59 வருடங்கள் ஆகிறது) அதற்குள் ஒரு முறை மணந்து ஆறு குழந்தைகளுக்குத் தகப்பனாகி மனைவியை இழந்து மறுமணம் செய்து அதிலும் ஏழு குழந்தைகளைப் பெற்று  இப்போதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத சாதனைகளாகத் தோன்றுகிறது அப்பா இறக்கும் போது எனக்கு 18 வயது. எனக்கு மூத்தவர்கள் மூன்று பேர் அதில் ஒரு சகோதரியும் அடக்கம்  எனக்குக் கீழே உயிருடன் ஐந்து பேர். அனைவரும் ஆண்மக்களே  அவ்வப்போது இது குறித்து எழுதி வந்திருக்கிறேன் அப்பாவைப் பற்றி எனக்குத் தெரிந்த வற்றை மட்டுமே எழுத முடியும்  வாழ்க்கையில் எந்த இன்பமும் ( பிள்ளைகள் பெறுவது தவிர) அனுபவிக்காதவர். வாழ்வின்  படிக்கட்டுகளில் முன்னேறி வந்தவர்  எங்களுக்கு துரை வீட்டுப் பிள்ளைகள் என்னும்  பெயர் வாங்கித் தந்தவர் ஏனோ செய்யாத குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டு பதவி இறக்கம் ஆனவர் ஆனால் மிகுந்த தெய்வ பக்தி மிக்கவர் எந்த வம்புக்கும்போகாதவர் நிச்சயம்  தவறு செய்ய இயலாதவர் என்னும்  எண்ணமே என்னுள் இருக்கிறது  நண்பனாகவே என்னை நடத்துவார் அவர் நினைவில் சில எண்ணப்பகிர்வுகள்
 அப்பாஒரு ஹீரோ
அப்போது எனக்கு ஏழோ எட்டோ வயதிருக்கும் நாங்கள் வாடகைக்கு குடியிருந்த வீட்டில் ஒரு முருங்கை மரம் இருந்தது. ஒரு நாள் அந்த வீட்டு சொந்தக்காரரின் உறவு என்று சொல்லிக் கொண்டு ஒருவர் வந்து முருங்கைக்காய்களைப் பறிக்க வந்தார் அது முறையல்ல என்று அப்பா தடுத்தார்  அவர் அதையும் மீறி தொடர்ந்து காய்களைப் பறிக்கவே  அப்பாவுக்கும் அவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு அப்பா அவரைப் புரட்டி எடுக்க அவர் துண்டைக் காணோம் துணியைக் காணோம்  என்று ஓடிய போது அப்பா ஒரு ஹீரோவாகத் தெரிந்தார்
அப்பா ஒரு நண்பன் . நாங்கள் நீலகிரி வெல்லிங்டனில் குடியிருந்தோம் வாரம் ஒரு முறை அங்கு தம்போலா எனப்படும் ஆட்டம் நடக்கும்  ஒரு ஆட்டம் ஆட நாலணா கொடுத்து டிக்கட் வாங்குவார் அது போல் நான்கு ஆட்டங்கள். ஒரு ரூபாய்ச் செலவு . எனக்கு அதில் விருப்பமிருக்கவில்லை. வேண்டாம் வெறும் லக் சார்ந்த விளையாட்டு என்பேன்  அவரும் அந்த விளையாட்டைத் துறந்து R M D C  என்னும்  குறுக்கெழுத்துப் போட்டிகளில் பங்கெடுக்கத் துவங்கினார் ஏதாவது அதிர்ஷ்டம் வந்து நிறைய வென்று  தனது கஷ்டங்கள் விடியாதா என்னும் ஆதங்கமே காரணம்  குறுக்கெழுத்துப் போட்டிகளில் கேட்கப்படும்  புதிர்களுக்கு என்னிடம் ஆலோசனைக் கேட்பார்
அப்பா காரியவாதி/ கெட்டிக்காரர் 
அவரது முதல் மனைவி ( என் தாயார் ) இறந்தபோது உறவு விடாதிருக்க என் அம்மாவின்  தங்கையை மண முடிக்க என் தாத்தா பாட்டி முயற்சி செய்தனர். அப்பாவுக்கு விருப்பமிருக்கவில்லை நயமாக மறுத்து தன் தங்கையை  தன் மச்சினனுக்கே மணமுடித்தார். உறவு விட்டுப்போக சாத்தியமிருக்கவில்லை. ஆனால் அதற்கும் மேல் சென்று காதலித்து மறுமணம் செய்தது உறவில் விர்சல் ஏற்படுத்தியது
 அப்பா ஒரு ரசிகர்
அப்பாவுக்கு என் எஸ் கிருஷ்ணனின் நகைச்சுவை மிகவும் பிடிக்கும்  அந்தக் காலத்தில் வந்த நல்லதம்பி திரைப்படத்தில் வரும் கிந்தனார் காலட் சேபம் விரும்பிக் கேட்பார் என் சின்ன அண்ணாவுக்கு அது மனப்பாடம்  அவனிடம் சொல்லக் கேட்டு ரசிப்பார்
கரகரவென சக்கரம் சுழல
கரும்புகையோடு வருகிற ரயிலே
கனதனவான்களை ஏற்றிடும் ரயிலே
ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே
மறையவரோடு பள்ளுப் பறையரை ஏற்றி மதபேதத்தை ஓழித்திட்ட ரயிலே...
என்னும் வரிகள் நினைவுக்கு வருகிறது
அப்பா ஒரு தேசியவாதி
காந்திஜி இறந்த அன்று இரவு ஊண் ஒழித்து வீட்டிலேயே ஒரு இழவு விழுந்தமாதிரி அழுதிருக்கிறார்
அப்பா ஒரு அப்பாவி
அப்பாவின் முதல் திருமணம் நிகழ்ந்தபோது  அவருக்கு காலணி கூடப்போடத்  (ஷூ)தெரிந்திருக்கவில்லை என்று என் மாமாக்கள் தமாஷ் செய்வார்கள் ( கால் மாற்றி போட்டு விடுவாராம் ) அதை அவர்கள் கூறுவது கேட்க எனக்குக் கோபம்  வரும்
அப்பாவின் முன் எச்சரிக்கை
எம் ஈ எஸ் சில் பணி புரிந்து வந்த அவர் வருடாவருடம் மெடிகல் செக் அப் செய்ய வேண்டும்  மிலிடரி ஆஸ்பிடலில்  சிறு நீர் டெஸ்ட் செய்ய என் சிறு நீரை எடுத்துக் கொடுப்பார் அவருக்கு டயாபெடீஸ்  இருந்ததை மறைக்கவே என்று எனக்கு அப்போது தெரியாது நோய் இருப்பது தெரிந்தால் ஏதாவது பிரச்சனை வரலாம் என்று பயந்திருக்கிறார்
 இப்போதும் நினைவுகள் மனம் கனக்க வைக்கிறது      
               
  
   
/