திங்கள், 15 பிப்ரவரி, 2016

வலைப் பதிவர் மைய அமைப்பு சில கருத்துப்பகிர்வுகள்


                           வலைப் பதிவர் மைய அமைப்பு  சில கருத்துப் பகிர்வுகள்                                               --------------------------------------------------------------------------------------
வலைப் பதிவர்களுக்கான ஒரு மைய அமைப்பு தேவை என்று புலவர் ஐயா கூறிவருவதை ரமணி சார் அவர் பதிவில் குறிப்பிட்டிருந்தார் மூன்று நான்கு பதிவர் சந்திப்புகள்  நடந்து முடிந்தபின்னும் அடுத்த சந்திப்புக்கான நிலைமை என்னவென்று தெரியவில்லை.  இந்தத் தேக்க நிலை ஒரு மையஅமைப்பு இருந்தால் இருந்திருக்காது எந்த பதிவர் சந்திப்பும் தானாக நடப்பதில்லை. சிலர் முன் நின்று முயற்சி செய்ததனாலேயே நிகழ்ந்தது இம்மாதிரி பதிவர் சந்திப்புகளை நடத்த நிறையவே உழைக்க வேண்டும் நடத்த தேவையான பணமும் வேண்டும் சந்திப்பு நடத்த யாரிடமும் கையேந்தும் நிலை வரக் கூடாது எதையும் துல்லியமாக திட்டமிடவேண்டும்  ஒருவர் முன் நின்று நடத்த முன் வரும்போது எல்லாப் புகழும் அல்லது எல்லா வசவுகளும் அவருக்கே சேரும் என்று அப்படித் தனிப்பட்ட முறையிலிருப்பது சரியல்ல  
எதையும் கொண்டு நடத்திச் செல்ல ஒரு அமைப்பு இருந்தால.சில பிரச்சனைகளைத் தவிர்க்கலாம் . ஆனால் பதிவுலகில் யாரும் யாருடைய ஆலோசனைகளையும் கேட்க விரும்புவதில்லை.  பதிவர் சந்திப்பு நடக்கிறதா முடிந்தால் சென்றோமா  வந்தோமா என்கிற நிலையில்தான் பலரும் இருக்கிறார்கள் நடந்து முடிந்த பதிவர் சந்திப்புகளின் அனுபவங்கள் இதை இன்னும் நல்ல முறையில் எப்படி எடுத்துச் செல்வது  என்பதற்கு அடி கோலவேண்டும்  நடந்து முடிந்த சந்திப்புகளில் அபிப்பிராய பேதம் இல்லை என்று கூற முடியாது
இம்மாதிரியான நிலையில் எண்ணங்களைப் பகிரவும் யோசிக்க வேண்டி இருக்கிறது இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாமே என்று கூறினால் :” வா நீயே வந்து நடத்திக் காட்டு” என்பது போல் பேசப்படுகிறது ஆகவே ஒரு மைய அமைப்பின் முக்கியத்துவம் தெரிய வருகிறது
 ” பதிவுலகை மேன்மேலும்  முன்னெடுத்துச் செல்ல இனிச் செய்ய வேண்டுவது என்ன என்று ஒரு அமர்வு உட்கார்ந்து கருத்துப் பகிர்வுகள் நடந்தால் அது ஒரு ஆக்கப் பூர்வமான முயற்சியாக அமையும்  என்பது திண்ணம்”

 என்ன எங்கேயோ படித்ததுபோல் இருக்கிறதா? கூடவே இதுவும் நினைவுக்கு வந்தால்
// ஓர் // // அமர்வு // // உடகார்ந்து // // கருத்துப் பகிர்தல்கள் // 

1) //
ஓர் // அல்ல பல கூட வைத்துக் கொள்வோம்...

2) //
அமர்வு // எங்கே ? எப்போது...? யார் தல...? சே தலைமை...?

3) //
உடகார்ந்து // நின்று கொண்டே இருந்தாலும் பரவாயில்லை...

4) //
கருத்துப் பகிர்தல்கள் // பகிர்ந்து தானே...? செய்து விடுவோம்...

கருத்துப் பகிர ஏன் பலரும் தயங்குகிறார்கள் என்பதும் விளங்கும்

வலை உலகில் புகழ்ந்து பேசுவதே நட்பை வளர்க்கும் என்பது போல் ஒரு கருத்து இருக்கிறது தவறு என்று தெரிந்தால் சுட்டிக்காட்டுவதும் நட்பை பாதிக்கக் கூடாது என்பதே என் கருத்து. வலையுலகை பொறுத்தவரை நட்பு என்பதை விட அறிமுகங்கள் என்பதே சரியாய் இருக்கிறது என்பது என் கருத்து.  பதிவுலகில் பலரும் தொட்டாவாடிகளாக இருக்கிறார்களோ என்னும் சந்தேகம் எனக்குண்டு.  இருந்தாலும் என் கருத்துக்களைப் பகிர நான் தயங்குவது இல்லைஆனால் அது நான் எண்ணிய விதத்தில் போய்ச் சேருகிறதா என்பதும் பெரிய கேள்விக்குறிதான் 
இப்போது மையக் கருத்துக்கு வருவோம் . வலை உலகுக்கு  தமிழ் வலை உலகுக்கு  ஒரு மைய அமைப்பு தேவை  அதில் ஒரு தலைவர் ஒரு உபதலைவர் ஒரு காரியதரிசி ஒரு உப காரியதரிசி ஒரு பொருளாளர் என்று சிலர் இருப்பது அவசியம்  பதிவர்கள் அதிகம்  வசிக்கும் சென்னையில் இருந்து இந்த மையம்செயல் பட்டால் பல அனுகூலங்கள் உண்டு பதிவர்கள் இந்த மைய அமைப்பில் உறுப்பினர் ஆகலாம் ஒவ்வொரு பதிவரும் ஒரு கட்டணம் செலுத்தி உறுப்பினர் ஆகலாம்இது மைய அமைப்பின் கார்பஸ் நிதியைத் துவக்க உதவும் எந்த அமைப்பும் பணம் இல்லாமல் செயல்பட முடியாது
 இதல்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சாப்டர் இயங்கலாம் பதிவர் சந்திப்பு என்று வரும்போது எந்த மாவட்டத்தில் அது நடந்தாலும் பதிவர்கள் கலந்து கொள்ள உரிமை உண்டு அப்படிப்பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளும் வலைப்பதிவர்கள் கலந்து கொள்ள ஒரு குறிப்பிட்ட தொகையை முன்னாலேயே  செலுத்த வேண்டும்  இப்படி செலுத்த வேண்டிய தொகை என்ன என்பதை  மையக் குழுவும் மாவட்டக் குழுவும் செலவாகப் போகும் கணிப்புக்கு ஏற்ப  தீர்மானிக்கலாம் பதிவர் மாநாட்டில்  செலவு போக மீதம் பணம் இருந்தால் அது மையக் குழுவின் கார்ப்பஸ் ஃபண்டில் சேர்த்து விட வேண்டும் வசூலிக்கப்படும் தொகையிலிருந்தே செலவுகள் ஏற்கப்பட வேண்டும் இந்தமாதிரியான வரவு செலவுகள் சரியாகத் தணிக்கை செய்யப்படவேண்டும் 
இந்த எண்ணங்களை வெகுவாக சர்க்குலேட் செய்து  பதிவர்களின் அபிப்பிராயங்களைக் கோரலாம்
நான் முன்பே சொன்னது போல் கருத்துச் சொன்னவர்களை கூட்டி ஒரு அமர்வு நடத்தி முடிவெடுக்கலாம்அல்லது எழுதிக் கேட்டுப் பின் முடிவெடுக்கலாம்   எந்த முடிவானாலும் அவை செயல் படுத்தப்படும் முன்பு பதிவர்களின் ஒப்புதலைக் கேட்கலாம் இப்படியான அமர்வு மாவட்டப்பதிவர்கள் பலரையும் கொண்டிருக்கவேண்டும்  முக்கியமாக இதுவரை சந்திப்பு நடத்தியவர்களின்  பங்கெடுப்பு அவசியம் இருக்கவேண்டும்
புதுகை சந்திப்பில் பணம் நிறையவே வீணாகி  நடத்தியவர்கள் கையைக்கடித்தது  என்று அறிகிறேன்  யாரும் பதிவர் சந்திப்பை நடத்தி நஷ்டப்படக் கூடாது ஏறத் தாழ முன்னூறு பதிவர்கள் வருவதாக வாக்களித்து  நூற்றுக்கும் குறைவாகவே வந்தால் விரயம் ஏற்படத்தானே செய்யும் வருபவர்கள் ஒரு தொகை செலுத்தி பெயர்களைப் பதிவு செய்து கொண்டால்  அவர்களுக்கு ஒரு கமிட்மென்ட் இருக்கும் 
பதிவர்களும் தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே எதையும் செய்ய ஒரு கன்சென்சஸ் தேவை அல்லவா
 ( இது என்னுடைய எழுநூறாவது பதிவு உருப்படியாக இருக்கிறது என்று நம்புகிறேன் )              
  
                                                                      
                                                                                                                                            
               
  
   
/



சனி, 13 பிப்ரவரி, 2016

தொடர் பயணம் நாகர் கோவில் -2


                               தொடர் பயணம் நாகர் கோவில் -2
                                --------------------------------------------------
சுற்றுலாவின் கடைசி நாள் நாகர் கோவிலிலிருந்து திருச்செந்தூர் செல்லத் திட்டம். காலையில் எழுந்ததும் ஒரு புறம் மகிழ்ச்சி, ஒரு புறம் இன்றுடன் சுற்றுலா முடியப் போவது எண்ணி சற்றே வருத்தம் காலையில் காஃபி குடித்து பின் திருச் செந்தூர் நோக்கிப் புறப்பட்டோம் சற்றே நீண்ட பயணம் முதலில் செந்தூர் சென்றதும் காலை உணவு உண்டு பின் சுவாமி தரிசனம்செய்யக் குறை ஏதும் இல்லை. ஆங்காங்குதான் அதற்கான ஆட்கள் இருக்கிறார்களே சிறப்பு தரிசனம் என்று ஆளுக்கு ரூபாய் நூறு என்றும் அழைத்துச் செல்ல அவருக்கு ரூபாய் நானூறு என்று மொத்தமாக ரூபாய் 1500-/ கை மாறியது அதிக சிரமம் இல்லாமல் முருகனை அருகில் இருந்து கண்டோம்  அங்கிருந்து பஞ்ச லிங்க தரிசனம்  நான் சில முறை செந்தூர் சென்றிருந்தாலும் இந்த பஞ்ச லிங்க தரிசனம் இதுவே முதல் தடவை  குனிந்து பணிவாகச் செல்ல என்றே இருந்த வழி.  அங்கே ஒருவர் தெய்வத்தின் முன்னால்  நின்று கொண்டு கதறி அழுது கொண்டிருந்தார்  அவருக்கு என்ன குறையோ  மனம் விட்டுக் குறைகளைக் கூறி மனப் பாரத்தைக் குறைத்துக் கொண்டிருந்தார் அதில் ஒரு மன சமாதானம் பாரம் குறைக்க இதுவும் வழிதான்  சக மனிதனிடம் சொல்லிக் குறை பட்டுக் கொண்டால்  நிம்மதி கிடைப்பதில்லைஅவனும் காது கொடுத்துக் கேட்பது சந்தேகம்  கடவுளிடம்  கொட்டித் தீர்த்தால் ஒரு நிம்மதி.
திருச்செந்தூர் கோவில் முகப்பு 
தரிசனம் முடிந்து வெளியே வரும்போது முருகனின் படம் தருகிறார்கள் ஆனால் அதுவும் ரூபாய் பத்து கொடுப்பவருக்கு மட்டுமே  என் மனைவிக்குக் கிடைத்தது எனக்கில்லை வெளியே பிரசாதமாகப் பஞ்சாமிர்தம் வாங்கிக் கொள்கிறார்கள்   நாங்கள் முன்பு சென்றிருந்த போது கோவிலின் பின்புறம் வள்ளிக்குகை பார்த்திருக்கிறோம்  அது பற்றி நான் சொன்னபோது சுற்றிப் போய்ப் பார்க்க யாரும்  ஆவல் காட்ட வில்லை.  செந்தூர்க் கடலோரத்தில் சிறிது நேரம் செலவழித்தோம் கடல் அலைகள் வந்து போகுமிடம் சிலர் கரையோரத்தில் பள்ளம் பறிக்கிறார்கள் அந்தப் பள்ளத்தில் சிப்பிகள் வந்து விழ வாய்ப்புண்டாம்
கடலில் குளித்தபின் நல்ல நீரில் நீராட என்றே அங்கே  நாழிக் கிணறு என்று இருக்கிறது அதற்கும் ஏகப்பட்ட கூட்டம் எங்களில் யாரும் கடலில் குளிக்க வில்லையாதலால்  நாழிக்கிணறை  நாட வேண்டிய அவசியமிருக்கவில்லை. அங்கே என்ன எதிர்பார்க்கலாம் என்று கூறியதே அனைவருக்கும் போதுமானதாக இருந்தது. 


நாழிக் கிணறு காண ஆவலில்லாமல் ( போகும் வழியில் )


செந்தூர்க் கோவில் முன் 
       
  
சுற்றுலா இனிதே முடிந்த மகிழ்ச்சியா
   
                                            செந்தூர்க் கடலோரம்  ஒரு காணொளி


                                            திருச்செந்தூர் கடல் ஒரு காட்சி


மேய்ப்பனுக்கு நன்றி  காணொளி

/உஷ் …! அப்பாடா …! ஒருவழியாய் தொடர் பயணமும் சுற்றுலாவும் முடிவுக்கு வருகிறது.  26-ம் தேதி காலை கன்னியாகுமரி பெங்களூரு எக்ஸ்பிரெசில் ஊர் திரும்புவோம்  25-ம் தேதி இரவு உணவு முடிந்தபின் குழுவில் இருந்தவர்களுக்கு  எப்படியாவது என் மச்சினன் மேய்ப்பனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்னும் எண்ணம் எழுந்தது.  ஒவ்வொருவரிடமும் பயணம் பற்றிய அவர்களது கருத்தை ஒரு சிறிய தாளில் எழுதக் கேட்டார்கள்  அவற்றைச் சுருட்டி ஒரு மாலைபோல் செய்தார்கள் பெண்கள் எல்லோரும் சுடிதார் உடையில் ஒரு அறையில்அனைவரையும் வரச் சொன்னார்கள்பிறகு மச்சினனுக்கு அந்த மாலையை இட்டு அதில் எழுதி இருந்த வாசகங்களைப் படித்துக் காட்ட அவன் மகிழ்ச்சியில் திண்டாடிப்போனான் எனக்கும் என்னாலும் ஒரு நெடிய பயணத்தை மேற்கொண்டு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருந்தது ஊக்கமளித்தது
 மறுநாள் காலை பத்து மணி அளவில் ரயில் ஏறி மறுநாள் 27-ம் தேதி ஊர்வந்து சேர்ந்தோம்  இப்பதிவுகளின் மூலம் மீண்டுமொருமுறை பயணப்பட்ட உணர்வுடன்முடிக்கிறேன்
சுடிதார் உடையில் பெண்கள்
உடுப்பி கிருஷ்ணா ஹோட்டலில் ஒரு படம் நூறு யானைகளுக்கும் மேல் அணிவகுப்பு 
ஒரு அலங்கார மீன்தொட்டி

                                   ( முற்றும் )



             

வியாழன், 11 பிப்ரவரி, 2016

தொடர் பயணம் -நாகர் கோவில் -1


               தொடர் பயணம் -நாகர் கோவில் -1
               ---------------------------------------------------ப்
 24-ம் தேதி அதிகாலையில் சுமார் மூன்று மணி அளவில் நாகர் கோவில் போய்ச் சேர்ந்தோம் ஊர் புதியது என்பதாலும் ஹோட்டலில் அறைகள் காலை ஏழு மணியிலிருந்தே முன்  பதிவு செய்திருந்ததாலும் ரயில் ப்லாட்ஃபாரத்திலேயே காலை ஆறரை மணிவரை இருக்க முடிவு செய்யப்பட்டது நாங்கள் போகுமுன்பே ஹோட்டலில் இருந்து நாங்கள் வருவதை உறுதிசெய்யச் சொல்லி தொலைபேசியில் செய்தி வந்தது. நாகர் கோவிலில் வடசேரி என்று நினைக்கிறேன்   ஹோட்டல் உடுப்பி இண்டர்னேஷனலில் அறைகள் முன் பதிவாகி இருந்தன. சௌகரியங்கள் பொருந்திய ஹோட்டல் முதல் வேலையாகக் காலைக்கடன்களைக் கழித்துக் குளித்து காலை உணவு அருந்தி நேரே சுசீந்திரம் சென்று பின் அங்கிருந்து கன்னியா குமரி செல்லத் திட்டமிட்டோம்
 சுசீந்திரத்தில் பிரதிஷ்டை ஆகி இருக்கும் தெய்வம்.  சிவன் விஷ்ணு பிரம்மா மூவரும்  சேர்ந்திருக்கும்  தாணுமாலயன்  என்று அழைக்கப்படுகிறார் கோவில் உள்ளே மேல் சட்டை அணியக் கூடாது. ஒரு பெரிய விஸ்வரூப ஆஞ்சநேயர் இருக்கிறார் .நவக் கிரகங்கள் மேலே விதானத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறதுஅங்கிருக்கும் துவார பாலகர் சிலையில் ஒரு காதில் ஒரு குச்சியைச் செலுத்தி இன்னொரு காதில் வருமாறு அதிசய சிற்பவேலை இருக்கிறது சில தூண்களில் தட்டினால் இசை ஓசை வருமாறு அமைத்திருக்கப்பட்டிருக்கிறது
தாணுமாலயன் கோவில் முன்பு 
சுசீந்திரம் கோவில் கோபுரம் 
வெயில் அதிகமாகும் முன்பே கன்னியாகுமரி செல்ல வேண்டி சுசீந்திரத்தில் இருந்து புறப்பட்டோம் விவேகாநந்தர் பாறை மற்றும்  ஐயன் திருவள்ளுவர் சிலையையும்  காண நினைத்தோம்  கடல் கொந்தளிப்பால் திருவள்ளுவர் சிலை இருக்கும் இடத்துக்கு போட் செல்லாது என்றனர் விவேகாநந்தர் பாறைக்குச் சென்று வர ஒருவருக்கு ரூபாய் 34/- போட்டுக்காக வசூலிக்கிறார்கள் இருக்கும் வரிசையையும் கூட்டத்தையும்  பார்த்தால் காத்திருக்கவே இரண்டு மணி ஆகும் போலிருந்தது. சிறப்பு வரிசையில் சென்றால் ஆளுக்கு ரூபாய் 169 /- என்று கட்டணம் வசூலிக்கிறார்கள்.

 வேறுவழியின்றி. நேரத்துக்காக அந்த வரிசையில் சென்றோம் விவேகாநந்தர் பாறைக்கு ஒரு போட் ரைட்

விவேகாநந்தர் நினைவிடம் பாறை


  முன்பு நாங்கள் சென்றிருந்தபோது லைஃப் ஜாக்கெட் ஏதும் தரவில்லை. மேலும் பாறையின் மேலேற கட்டணம் ஏதும் வசுலிக்கப்பட்டதில்லை. இம்முறை லைஃப் ஜாக்கெட்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் அதை எப்படி உபயோகிப்பது என்று எவரும் கூறவில்லை. மேலும்பாறைமீதேற ஆளுக்கு  ரூபாய் 20/- வசூலிக்கிறார்கள் நானும்  என்மனைவியும் அவளது சகோதரியும் மாமியும் மேலே போகாமல் கீழேயே மற்றவருக்காகக் காத்திருந்தோம் நாங்கள் ஏற்கனவே மும்முறை சென்றிருந்த இடம்தானே
 விவேகாநந்தர் பாறைக்குச் சென்றுவரும்போது கன்னியாகுமரிக் கோவிலுக்கும் சென்றோம் கன்னியா குமரியை முக்கடலும் சங்கமிக்கும் இடம் என்கிறார்கள் வங்காள விரிகுடா இந்து மகா சமுத்திரம் அரபிக்கடல் முன்பு போயிருந்தபோது கண்ட  இந்திரா காந்தி பாயிண்ட் என்னும்  வாசகங்கள் இப்போது காண வில்லை. கன்னியா குமரி கோவில் ஒரு சுற்றுலாத் தலமாகி இருக்கிறதே தவிர கோவிலின் களை ஏதும் இல்லை

.
 கன்னியாகுமரியில் மதிய உணவு முடித்து விட்டு பத்மநாபபுரம் அரண்மனைக்குப் போனோம் வெளியில் இருந்து பார்ப்பதற்கு அரண்மனைப்போலத் தோற்றம் ஏதுமில்லாத  கேரள பாணியில் அமைந்துள்ள  ஒரு விசாலமான மர வேலைப்பாடுகள் நிறைந்த இடம் ஒரு முறை மாடிக்கு ஏறினால் இறங்காமலேயே நிறைய இடங்களைப் பார்த்து விடலாம் பூராப்பூரா மர வேலைப் பாடுகள் நிரம்பிய கட்டிடம்  ஆங்காங்கே பணியாளர்கள் இருந்து அவற்றின் சிறப்புகள் பற்றி ஒரு மோனோடனஸ்  விதத்தில் பேசுகிறார்கள் ஒரு சங்கிலியில் இருக்கும்  குதிரை வீரன் சிற்பம் தொங்கவிடப்பட்டிருக்கிறது அதை எந்த திசையில் திருப்பினாலும்  பழைய நிலைக்கே வரும் என்றார்கள்  காண விரும்பி செய்து காட்டக் கேட்டேன்  அதைத் தொடக் கூடாது என்று கூறி விட்டார்கள் கட்டிடம் முழுதும் மரத்தால் ஆனது  தூண்கள் படிகள் beams  எல்லாமே மரத்தால் ஆனது. எல்லாமே முன்னூறு வருடங்களுக்கு முந்தையது என்கிறார்கள் சுமார் ஆயிரம் பேர் அமர்ந்து உண்ணக்கூடிய  ஹாலும் உள்ளது கேரள சரித்திரம் தெரிந்திருந்தால்  சிறப்பாக இருந்திருக்கும்  ஏறும் படிகள் எல்லாமே உயரமானவை. நல்ல காலம் மிக அதிகப் படிகள் ஏற  வேண்டாம்  
/
சங்கிலியில் குதிரை வீரன் 
பத்மநாப புரம் அரண்மனை ஒரு தோற்றம்( வெளியில் இருந்து) 
 அரண்மனை காண அனுமதிக்கு ரூ 35/- ஒருநபருக்கு வசூலிக்கிறார்கள் வாகனப் பார்க்கிங்குக்கு  ரூ 85 /- வசூலிக்கிறார்கள் புகைப்படம் எடுக்கக் கூடாது. என் ஹாண்டி காமைக் கொண்டு போய் படம் எடுக்க ரூ 2000/- கேட்டார்கள் மறுத்து விட்டேன் லாக்கரில் வைத்துப் போனேன்  பதிவிட்டிருக்கும் குதிரை வீரன் படம் புத்தகத்தில்  இருந்தது அரண்மனை பற்றிய செய்திகள் கொண்ட புத்தகம் ரூ 120/- ஆக அரண்மனை  நிறையவே சம்பாதித்துக் கொடுக்கிறதுஅந்தக் காலத்தில் மின்சாரம்  இல்லாத காலத்தில் இத்தனை பெரிய அரண்மனையில் எண்ணை விளக்குகளுடன் எப்படி வாழ்ந்தார்களோ என்னும்  சிந்தனை மனதில் ஓடாமல் இல்லை.  வெளியில் வந்த பிறகும் எதையோ பார்க்காமல் போகிறோம்  என்றே தோன்றியது
அங்கிருந்து காமராஜரால் கட்டப்பட்ட தொட்டி[ப்பாலம் என்னும் இடத்துக்குப் போனோம் அந்த இடம் சுற்றுலாவில் எப்படி முக்கியத்துவம்  பெற்றது என்பது தெரியவில்லை. போகாமலேயே கூட இருந்திருக்கலாம்
தொட்டிப்பாலம் அருகே ஒரு அறிவிப்பு
  
தொட்டிப்பாலம் 
அங்கிருந்து திற்பரப்பு அருவிக்குச் சென்றோம் . முன் போல் இருந்தால் நானே அருவியில் நீராடி இருப்பேன் இப்போது கீழே இறங்கவே தயக்கமாக இருந்ததால் மேலிருந்தே கண்டு ரசித்தேன்  ரம்மியமான சூழ்நிலை. அழகான இடம்  பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது ஒரு சிறிய காணொளி

திற்பரப்பு அருவி -ஒரு காட்சி 
அருவியின் பின்னணியில் 
நாகராஜா கோவில்
ஹோட்டல் லாப்பியில்
அதன் பின் நாகராஜா கோவிலுக்குப் போகும் போது நன்கு இருட்டி விட்டது/ வெளிச்சம் இருந்தாலாவது கோவிலின் அமைப்பைப் பார்த்துக் கொண்டிருக்கலாம் செருப்பு வைக்க இடம் தேடுவதை விட வேனிலேயே வைத்துப் போகலாம் என்று தீர்மானிக்கப்பட்டது வேனிலிருந்து கோவில் போவதற்குள் சாலையில் பொடிக்கற்கள் காலை நன்கு பதம் பார்த்து விட்டன எனக்கு என்னவோ பாம்புகளுக்கு கடவுள் அந்தஸ்து கொடுத்து வணங்குவது மனம் ஒப்பவில்லை. ஆனால் அங்கிருந்தவர்களில் நான் மிகச் சிறிய மைனாரிடி/மறு நாள் ஆயில்ய நட்சத்திரம் என்றும் கூட்டம் சொல்லி மாளாதுஎன்றும் பேசிக் கொண்டனர் போனதற்கு இரு படங்கள் வெளியிலிருந்து எடுத்தேன்
நாகராஜா கோவில் முகப்பு


நாளெல்லாம் பயணித்ததில்  உடல் நான் இருக்கிறேன்  என்று கெஞ்ச ஆரம்பித்தது ஒரு வழியாய் அறைக்கு வந்தோம் . நாளை  பயணத்தின் கடைசி நாள் திருச் செந்தூர் சென்று வரத் திட்டம்
 ( தொடரும் )

















     
  

  
/




/



  

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

தொடர் பயணம் இராமேஸ்வரம் -3


                           தொடர் பயணம் இராமேஸ்வரம் -3
                            ----------------------------------------------------
 இராமேஸ்வரத்தில் மூன்றாம் நாள் வெகுவாக ஒரு சுற்றுலாவாகவே இருந்தது காலையிலேயே கிளம்பி இராமநாதபுரத்தில் இருந்ததேவிப்பட்டினம் திருப்புல்லாணி உத்தரகோச மங்கை ஆகிய இடங்களுக்குச் செல்லத் திட்டம் இட்டிருந்தோம்
 போகும் வழியே இந்திராகாந்தி பாலம் மேல் என்பதாலும் அதன் ஊடாகவே தெரியும் பாம்பன் பாலத்தையும் காண  வண்டி நிறுத்தப்பட்டது     
பாம்பன் பாலம் 

இந்திராகாந்தி பாலத்தில் இருந்து பாம்பன் பாலம் ஒரு பார்வை

பம்பன் பாலத்தூண்களில் அமர்ந்து மீன் பிடிப்பவர்கள்
பாலத்தைக் கடந்தபின் காலை உணவுக்காக ஒரு ஹோட்டலில் இறங்கினோம் சுவையான காலை உணவாகவே இருந்தது அங்கு சுவற்றில் ஒரு அறிவிப்பு கண்டேன் சுலை மானி என்று ஏதோ எழுதி இருந்தது. அப்படி என்றால் என்ன என்று கேட்டபோது அங்கு வளைகுடா நாடுகளில் இருந்து பலரும் வருவார்கள் என்றும் அது கறுப்புத் தேனீரைக் குறிக்கும் அரபிச் சொல் என்று சொன்னார்கள் கில்லர்ஜி கவனிக்க. மேலும் நம்மூர் சுக்குக் காஃபியும்  இருந்தது எங்களில் பலர் அதைச் சுவைத்தனர்  அதன் சுவையை எங்களுள் ஒருத்தி ருசிப்பது காணொளியில்  காணலாம்                             
காலை உணவு


சுக்குக்காப்பியின் சுவை காணொளியில்  தெரிகிறதா.?
அங்கிருந்து நேராக தேவிப்பட்டினம் போனோம்அங்கு ராமர் பிரதிஷ்டை செய்த நவபாஷாண  நவக் கிரகங்கள் நீரில் இருக்கின்றன. கடந்தமுறை நாங்கள் வந்திருந்தபோது படகில் கடலுக்குள் சென்று கடல் தர்ப்பை கொண்டு வந்து  பூசை செய்ய வேண்டும் என்று சொன்னார்கள் இம்முறை கடல் தர்ப்பை பற்றிய பேச்சே காணோம் இம்முறை நவபாஷாண நவக்கிரகங்களில் சில  நீரில் மூழ்கி இருந்தன.
நவபாஷாணக் கோவில் பற்றிய அறிவிப்பு

நவ பாஷாணக் கோவில்  காணொளி



நவபாஷாணக் குளம் 


 அங்கிருந்து உத்தரகோசமங்கையில் இருக்கும் மரகத நடராஜர் கோவிலுக்குச் சென்றோம்  இதை ஆதிசிதம்பரத்தோடு ஒப்பிடுகிறார்கள் ஐந்தரை அடி உயர மரகதச் சிலைநடராஜர் ஆடும் இடம் இரத்தினசபை எனப்படுகிறது மார்கழி மாதம்  திருவாதிரையின் போது மட்டும்  மேனி எங்கும் பூசியுள்ள சந்தணக்காப்பு  அகற்றப்பட்டு அபிஷேகம் நடை பெறும் இறைவன் பெயர் மங்களேசுவரன்அம்பிகை மங்களேசுவரி சிவாலயங்களில் உபயோகப்படுத்தப் படாத பகிஷ்கரிக்கப்படும்  தாழம்பூ இங்கு இறைவனுக்கு அணிவிக்கப் படுகிறது தாழம்பூ பெற்ற சாபமிங்கு நிவர்த்தி யானதாகக் கதைஇறைவன் பார்வதி தேவிக்கு வேதாகமங்களின் ரகசியத்தை உபதேசித்ததால் இப்பெயர் பெற்றது என்கிறார்கள் உத்தரம் என்றால் உபதேசம் கோசம் என்றால் ரகசியம்  மங்கை தேவி பார்வதியைக் குறிக்கும்.

உத்தரகோசமங்கை திருக் கோபுரம்
கோவில் பற்றிய அறிவிப்புப் பலகைகள்
தரிசனம்  முடித்தபின் திருப்புல்லாணிக்குப் புறப்பட்டோம்அங்கு ஆதிஜகன்னாத பெருமாளைக் காணச் சென்றோம் இராமேசுவர வழிபாட்டுக்குப் பின்   யாத்திரிகர்கள் திருப்புல்லாணி அல்லது தர்ப்பசயனத்துக்கு (ஆதிசேது) போகவேண்டும் என்பது ஐதீகம்இது ஆழ்வார்களால் மங்களாசாசனம்  செய்யப்பட்ட திவ்ய தேசங்களுள் ஒன்று. இந்த இடத்தில் இராமபிரான் தர்ப்பைப்புல் மேல் சயனித்திருந்ததாகவும்  கடலரசன் வர தாமதித்ததால் அவன் மேல் கோபம் கொண்டு  அவன் கர்வத்தை அடக்கி பிறகு அவன் உதவியுடன் சேது அணையைக் கட்டினார் என்று கதை உண்டு.
ஆதிஜெகன்னாதர் ஆலயம்  திருப்புல்லாணி
. அங்கிருந்து வில்லூண்டி தீர்த்தம் என்னும்  இடத்துக்குப் போனோம்  இதுவரை நான் போகாத இடம் இது. சீதையின் தாகத்தைத் தீர்க்க இராமபிரான் கடலின் ஓரத்தில் தன் வில்லை ஊன்றி நீர் வரவழைத்ததால் இப்பெயர் என்கிறது அங்குள்ள அறிவிப்புப் பலகை. கடலின் ஆழத்தில் இருந்து வரும் நீர் குடிக்க ஏதுவாக உப்புக்கரிப்பு இல்லாமல் இருக்கிறது
கடலோரம் வில்லுண்டி தீர்த்தம்
 
வில்லூண்டி தீர்த்தம் பற்றிய அறிவிப்புப் பலகை.

 
வில்லூண்டி தீர்த்த நீர்

.

இராமேசுவரம் திரும்பும் வழியில் திரு அப்துல் கலாமுக்கான சமாதி இடத்துக்கும் போனோம் 
திரு அப்துல் கலாம் சமாதிவேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன
சமாதி அருகே நிறுவப்பட்ட உயர் கோபுர மின் விளக்கு 
 இவ்வாறு இராமேஸ்வரத்தில் மூன்று  நாட்கள் கழிந்தோடின. அடுத்த நாள் நன்கு ஓய்வு எடுத்துக் கொண்டோம் மாலையில் நாகர் கோவிலுக்கு ரயில் டிக்கெட் முன் பதிவாகி இருந்தது. நாகர் கோவிலில் அதிகாலை மூன்று மணி அளவில் ரயில் போய்ச் சேரும் என்றும் ரயில் நிலையத்திலேயே ஆறுமணிவரை இருந்து பின் தங்கும் இடத்துக்குப் போவோம் என்று மச்சினன் கூறினான்  ( தொடரும் )