ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

pirivin vaattam

ஓடிக்களைத்து ஊணுக்கலைந்து தேடிச்சோறு நிதம் தின்று
  வாடி அலையும்நிந்தன் கொழுநன் பாடிப்பகரும் அல்லைக்கேளடி !
ஊரடங்கி பேயாடும் நேரம் போரடித்து வளைய வரும் வேலை
சாகடித்து கொல்லாமல் கொல்லும்--உன் பிரிவு  
நோகடிக்குதே எண்ண எண்ண !
வந்து நோக்கின் நீஇட்ட மஞ்சமில்லை !நானிட்ட பஞ்சணையில்
வீழ்ந்து பட்டால் நித்திரை இல்லை !
சோர்ந்து பட்ட உடலுக்கு உயிரூட்ட காப்பி இல்லை  டி இல்லை சோறில்லை !
மாறுபட்ட சுழ்நிலையில்  வாழ்ந்து வரும் எனைக்காண நீயுமில்லை !
என்செய்வேன் ? சொல்லடி !

4 கருத்துகள்:

  1. அய்.
    சூப்பர் அய்யா.
    கவிதையை படிச்சிட்டு அம்மா என்ன சொன்னாங்க ?

    பதிலளிநீக்கு
  2. பிரிவின் வாட்டம் அழகிய கவிதையாகி இருக்கிறது.பிரிவின் வாட்டம் நன்றாகவே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. வந்து நோக்கின் நீஇட்ட மஞ்சமில்லை !நானிட்ட பஞ்சணையில்
    வீழ்ந்து பட்டால் நித்திரை இல்லை !//

    வீட்டம்மாவத்தான சொல்றீங்க :))

    கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  4. ஐயகோ ... பிரிவு தந்த வேதனை ... வாழ்வின் சோதனை .. >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு