Monday, August 8, 2011

தணிக்கை ஏன்.?

 தணிக்கை ஏன்.?
---------------------

ஊழலுக்கெதிரான லோக்பால் மசோதா குறித்து அனுதினமும்
ஊடகங்களில் செய்திகள் அலசப்படுகின்றன.சாதாரணமானவரின்
கருத்துக்கள் எப்படியாவது உலகுக்கு உணர்த்தப்பட வேண்டும்
என்றால்நாம் நினைப்பது பத்திரிகைகளிலோ தொலைக்காட்சி
யிலோ வரவேண்டும். வலையுலக எழுத்தும் ஒரு கருவியாக
இருந்தாலும், பத்திரிகைகளில் கருத்து வெளியிட ஆசிரியருக்கு
கடிதம் எழுதிப் பார்க்கலாமே என்ற ஆவலால் உந்தப்பட்டு
THE  HINDU பத்திரிகைக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். அது
இந்த மாதம் 6-ம் தேதி வெளியாயிற்று. பத்திரிகையில் என் கடிதம்
வெளிவந்த செய்தி மகிழ்ச்சி அளித்தாலும் அதனைக் கண்டபோது
மகிழ்ச்சி பாதியாகக் குறைந்து சற்றே கோபம் தலைதூக்கியது.
கருத்துக்களைத் தெரிவிக்க கடிதம் எழுதுகிறோம். .அதில் கத்திரி
போட இவர்களுக்கென்ன உரிமை.?வாக்கியப் பிழையோ எழுத்துப்
பிழையோ இருந்தால் திருத்தலாம். எழுதியவற்றில் ஓரிரு
வாக்கியங்களை எடுக்கக் காரணம் என்ன.?இது இது இப்படி இப்படி
இருக்கிறது ,இன்னாரது செயல்கள் சில திருப்தி தருவதில்லை
என்று எழுதுவது குற்றமா.?நாகரிகமான மொழியில் நமக்குத்
தோன்றிய கருத்துக்களை வெளியிடத்தானே பத்திரிகைக்கு
எழுதுகிறோம். அப்படியானால் பத்திரிகையில் பிரசுரிக்க
இவர்களது தணிக்கைக்கு உட்பட வேண்டுமா.?நான் எழுதியதில்
நீக்கப்பட்ட முதல் வாக்கியம் இது
.
While due appreciation has to be given to the civil society members,
for awakening the conscience of the government to fight corruption
and present a Lok pal bill  their" holier than thou "attitude deserves
chiding.

பிரசுரிக்கப்பட்டது இது.

To say the lok pal bill presented by the government , is designed to protect the
corrupt and punish those who raise their voice against corruption is to take the
common man for granted. There may be some deficiencies ,but that has to be
ironed out by discussion and educating the public about where and what these
are.This is a government which has brought in the RTI the RTE and the rural
employment guarantee scheme and can not be just brushed aside.

நீக்கப்பட்ட கடைசி வாக்கியம் இது.

and to question their intention is deplorable. On the surface of it ,if the
prime minister brought under the ambit of the bill, they will be satisfied ,
or so it looks.To lead common man with jargon and jingoism, and to
take him for granted is not good either for the government or the
Anna led civil society.

இதைக் கண்டதும் என் மனதில் தோன்றியது

நாட்டு நடப்புகளை உணர்வில் வடித்து
பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதினேன்.
பிரசுரம் செய்தனர். படித்ததும்
சிந்தையில் தோன்றியது சிறகு
திருத்தப்பட்ட கிளி ஒன்று.
நல்ல வேளை இக்கிளிக்கு
உயிர் இன்னும் இருந்தது.
--------------------------------------------    

13 comments:

 1. இப்போதெல்லாம் எந்த பத்திரிக்கையாயினும்
  செய்தி சொல்லுகிற பத்திரிக்கைகளாக இல்லை
  செய்தியில் தன்னுடைய கருத்தைத் திணித்துச்
  சொல்லுகிற பத்திரிக்கைகளாகத்தான் இருக்கின்றன
  எனவே தான் சுயமான கருத்துக்களை சொல்ல விரும்புகிற
  எல்லோருமே இப்போது இந்த வலை உலகையே
  பெரிதாகக் கொண்டு கருத்துக்களை வெளியிட்டு
  வருகிறார்கள்.இதனை அனைவரும் அறிய
  ஆதாரத்துடன் வெளியிட்டமைக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. ஐயா, ஐயப்பன் சீஸன், குற்றால சீஸன் மாதிரி இப்போது அண்ணா ஹஜாரே சீஸன். For the media, Anna Hazare is the golden goose!

  ஆகஸ்ட் 16 முதல் உண்ணாவிரதம் இருந்தால், பாராளுமன்றத்தொடர் முடிந்து விடும். பிறகு, மீண்டும் குளிர்காலக் கூட்டத்தொடர் நேரத்தில் ’மீண்டும் உண்ணாவிரதம்,’ என்று பூச்சாண்டி காட்டலாம். அதை வைத்துக் கொண்டு டி.ஆர்.பிக்கு அலையும் தொலைக்காட்சிகளும், சர்க்குலேஷனுக்கு ஆலாய்ப் பறக்கிற செய்தித்தாள்களும் திரும்ப ஒரு ரவுண்டு வருவார்கள்! இதெல்லாம் இவர்களது வியாபார சூட்சமம்.

  என்ன நடந்தாலும், ஜன் லோக்பால் பில் பாராளுமன்றத்தில் இப்போதைக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு எந்த சட்டபூர்வமான வழியும் இல்லை என்பதை அறியாதவர்கள் அல்ல இந்த சிவில் சொஸைட்டிக்காரர்கள். இருந்தாலும், எதையோ சொல்லி ஜனங்களை உசுப்பேற்றி விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

  இதை சந்தேகித்து வினா எழுப்புகிறவர்களுக்கு அழிச்சாட்டியமாய்ப் பட்டமும் கட்டி விடுகிறார்கள் என்பது வேடிக்கையிலும் வேடிக்கை!

  ReplyDelete
 3. கடிதத்தை நானும் படித்தேன்.

  இந்தச் சூழலில் ஒரு வித்தியாசமான பார்வையாகத்தான் இருந்தது. இந்த வாக்கியத்தை எடிட் செய்யாமல் விட்டிருந்தால் எனக்கு அந்த உணர்வு வந்திருக்காதென்றே தோன்றுகிறது.

  ஆயினும் எழுத்துக்கும் எழுத்தாளனுக்கும் ஒரு மரியாதை தரவேண்டும் என்கிற கருத்தில் மாற்றில்லை.

  வாழ்த்துக்கள்.

  மறுபடியும் படித்துப் பார்த்தேன். அந்தக் கடிதத்தில் தெரிந்த வித்தியாசமான பார்வை பாராட்டிற்குரியதே..

  ReplyDelete
 4. குறைந்த பட்சம் பிரசுரித்தார்களே? :)

  ReplyDelete
 5. சிந்தையில் தோன்றியது சிறகு
  திருத்தப்பட்ட கிளி ஒன்று.
  நல்ல வேளை இக்கிளிக்கு
  உயிர் இன்னும் இருந்தது.//

  வித்தியாசமான சிந்தனை.

  ReplyDelete
 6. நாம் எழுதுவதை எதுவாக இருந்தாலும் அநேகமாக கத்தரித்து விடுவார்கள். அவர்களாகவே சிலவற்றை சேர்ப்பார்கள். முழுவதுமாக நாம் சொல்வதை அப்படியே திருத்தம் ஏதும் இன்றி, கத்தரி போடாமல், வெளியிடவே மாட்டார்கள். ஓரளவாவது பிரசுரிக்கப்படுவதை எண்ணி மகிழ வேண்டிய நிலையில் தான் நாம் உள்ளோம். என்ன செய்ய?

  ReplyDelete
 7. படித்ததும்
  சிந்தையில் தோன்றியது சிறகு
  திருத்தப்பட்ட கிளி ஒன்று.
  நல்ல வேளை இக்கிளிக்கு
  உயிர் இன்னும் இருந்தது.


  ..... well-said!

  ReplyDelete
 8. பத்திரிகைகள் தாங்கள் எந்த நிலையைச் சார்ந்திருக்கிறார்களோ அதற்கு ஒத்த கருத்துடைய கடிதங்களை மட்டும் வெளியிடுவது வழக்கமாக நடைபெறுவதுதான். கண்டனத்துக்குரியது.

  ReplyDelete
 9. ஐயா!
  கண்டணம் தெரிவித்து
  எழுதுங்கள்!இதுதான் பத்திரிக்கை
  த(க)ருமம்!
  இருக்கவே இருக்கு வலை பின்
  எதற்கு கவலை
  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 10. கடுமையான கண்டனங்களை தெரிவிக்க வேண்டும்.

  உபயோகமான பதிவு, வாழ்த்துக்கள்.
  http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html
  நம்ம கடை பக்கமும் கொஞ்சம் வந்து போகலாமே!!!!!

  ReplyDelete
 11. பணம் பண்ண பத்திரிகை என்றானபின் அங்கு எப்படி தருமம் கடைபிடிக்க முடியும்? பத்திரிகைகளின் தருமம் மீறப்பட்ட நிலையை அறியத் தந்தைமைக்கு நன்றி ஐயா..

  ReplyDelete
 12. இதுபோன்று நானும் நினைத்த நாள்கள் உண்டு ஐயா.

  ReplyDelete
 13. நான் ஆசிரியருக்கு கடிதம் எழுதுவதையே நிறுத்தி விட்டேன்

  ReplyDelete