Friday, October 14, 2011

புதிய பதிவு அல்ல...

  
கண்டவனெல்லாம்......(ஒரு சிறு கதை )
------------------------------------------------


 பஸ்ஸுக்குக் காத்திருந்து காத்திருந்து அலுத்து விட்டது ஹரிக்கு.  
."போக்குவரத்து  துறைஎன்றால்  தமிழ்நாடுதான்  ஹேமா . விடியற்காலைமுதல்    நள்ளிரவு  வரை  பஸ்கள்  கிடைக்கும் . ஐந்து  நிமிடத்துக்கு  மேல்  காக்க  வேண்டாம் .  சே | இந்த  பெங்களூரில்  இது  மிகவும்  மோசம் " ஹரிக்கு  அலுப்பு . "தவிர்க்க  முடியாததை அனுபவிக்கத்தானே  வேண்டும்  .இல்லையென்றால்  ஆட்டோவுக்கு  செலவு செய்ய  உங்களுக்கு  மனசு  வராதே " ஹேமா  ஹரியின் வீக்   பாயின்டைசற்றே  குத்தினாள்


        "அப்பாடா  அதோ  பஸ்  வருகிறது . சாமர்த்தியமாக  ஏறி இடம்  பிடித்துக்கொள் .  லேடிஸ்  சீட்  காலியாகவே  இருக்கும் " ஹேமாவை  முன்னுக்கு  அனுப்பி  ஹரி  அடித்து  பிடித்து  பஸ்ஸில்  ஏறி , முண்டியடித்து  முன்னுக்குப் போனால் , அங்கே  லேடீஸ்  சீட்டில் , ஹேமாவுக்குப் பக்கத்தில்  ஒரு  அழகான  வாலிபன்  ஸ்டைலாக  உட்க்கார்ந்து  இருந்தான் . ஹரிக்குப் பொறுக்கவில்லை . ஆத்திரம்  ஆத்திரமாக  வந்தது .  "சே | என்ன அக்க்ரமம் .தடிமாடு  மாதிரி  ஒருத்தன்  அவள்  பக்கத்தில்  உட்கார்ந்து  இருக்கிறான் . அதுவும்  லேடீஸ்  சீட்டில்.  அவன்தான்  அப்படியென்றால்  இவளுக்கு  எங்கே  போச்சு  விவஸ்தை ? நாக்கைப்  பிடுங்கற  மாதிரி  நாலு வார்த்தை  கேட்க்க  கூடாது ? இதே மாதிரி   எவ்வளவு  நேரம்  பொறுத்துக்கொள்வது ? இதுக்கு  ஒரு  முடிவு  கட்டித்தான்  தீரவேண்டும் "                                
 இதற்குள்  பஸ்  அடுத்த ஸ்டாப்பில்  நிற்க . "ஹேமா. வா  இங்கேயே  இறங்கிக்கொள்ளலாம் " ஹேமா என்ன ஏது  என்று  கேட்பதற்குள்  ஹரி  பஸ்ஸை  விட்டிறங்கி , போய்க்கொண்டிருந்த  ஆட்டோவைக்கூப்பிட்டார் 

.
 " இன்றைக்கு  மழைதான்  வரப்போகிறது . ஆட்டோவுக்கு செலவு  செய்ய  மனசு  எப்படி  வந்தது ?"


” கண்டவனெல்லாம்  என் பெண்டாட்டி  பக்கத்தில்  உட்க்காருவது  எனக்குப் பிடிக்கலை .நீயும்  பேசாமல்  இருந்தது  அதைவிடப்  பிடிக்கலை "



” உங்களுக்கு  என்ன ஆச்சு ? நம்ம பேரன் வயசு  அவனுக்கு .அவன் மேல் பொறாமையா ?"
 ஹேமாப்பாட்டி  தன  புருஷனை  அன்புடன்  கடிந்து  கொண்டாள்.

-------------------- ---------------------------------------------------------





12 comments:

  1. தன் உடன் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டவளுடன்/கொண்டவனுடன் ஏன் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆணோ பெண்ணோ நம்பிக்கை இல்லாமல் சந்தேகம் வருகிறது

    ReplyDelete
  2. ஆனாலும், ஒரு மனிதர் இவ்வளவு பொசஸிவா இருக்கலாமா?
    பாட்டி பாராட்டுக்குரியவர்! :-)

    ReplyDelete
  3. ஓகோ.. அப்புசாமி-- சீதாப்பாட்டி கதையோ?..

    ReplyDelete
  4. ”புதிய பதிவு அல்ல...”
    என்பது தலைப்பு.

    “புதிய தம்பதி அல்ல”
    மிகவும் பழைய ஜோடிகள்
    என்பது கடைசி வரிவரை
    சஸ்பென்ஸ் ஆக இருந்தது.

    பாராட்டுக்கள், ஐயா!
    Old is Gold!

    ReplyDelete
  5. நல்ல சுவாரசியம் எவ்வளவு வயதானாலும் பொசசிவ்னெஸ் கூடவே இருக்கும் போல?

    ReplyDelete
  6. இது ரொம்ப வித்தியாசமாய்.... ரசனையாக இருந்தது.. வயது ஒரு போதும் அன்பு குறைவதற்கும் தன்னவள் என்ற உரிமை குறைவதற்கும் காரணமாகாது என்பது புரிகிறது.

    ReplyDelete
  7. எவ்வளவு வயதானாலும் சில விஷயங்கள் மாறாது....நல்ல கதை.

    ReplyDelete
  8. ஹேமாப்பாட்டி தன புருஷனை அன்புடன் கடிந்து கொண்டாள்./

    வயது ஆக ஆக உரிமைப்பிணைப்பு அதிகம் ஆகும் அனுபவப் பகிர்வு.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. கதை சொல்லிச் சென்ற விதமும்
    முடிவும் மிக மிக அருமை
    சிறுகதையிலும் நீங்கள் கவனம் செலுத்தலாம்
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. ஐம்பதிலும் ஆசை வரும்.
    ஆசை மட்டுமல்ல .
    ரசிக்க வைத்த சிறுகதை.

    ReplyDelete