ஈ-யின் பெயர் வந்த கதை.
----------------------------------
பாடம் என்று படிக்கச் சொன்னால் குழந்தைகள் பின் வாங்குவார்கள். அதையே கதையாகவோ, பாடலாகவோ சொன்னால் ஆர்வத்தோடு கற்கிறார்கள். இதை நான் என் ஏழு வயது பேரனுக்குச் சொன்னபோது ஆர்வமுடன் கேட்டான். கேட்டதை புரிந்தும் கொண்டான். ஒரு பொருளுக்கும் இன்னொரு பொருளுக்கும் உள்ள தொடர்பு பற்றியது இக்கதை. ஒரு ஈ தன் பெயர் அறியும் முயற்சிதான் பாடல். இதன் மூலம் தொடர்புகள் புரிந்து கொள்ள்ப்படுகின்றன. முதலில் தன் பெயர் அறிய அது ஒரு கன்றிடம் கேட்க அது தெரியாமல் தன் தாயைக் காட்ட ஒன்றின் தொடர்பு அறியும் விதமாக போகும் கதை இனி அப்பாடல்.
----------------------------------
சில நாட்களுக்கு முன் திரு. ஹரணி அவர்கள் புதிய ஆத்திசூடி படித்தபோது
குழந்தைகளுக்கு என்று புதியதாய் ஏதும் எழுத முடியாவிட்டாலும், இருக்கும் பழையதே பலருக்கும் தெரியுமா என்ற சந்தேகம் வந்தது. தெரிந்தவர்கள் தாவிச் சென்று விடுவார்கள். தெரியாதவர்கள் படிக்கலாமே.
கொழு கொழு கன்றே என் பெயரென்ன,?( எனக்குத் தெரியாது. என் தாயிடம் கேள்)
கொழுகொழு கன்றே,கன்றின் தாயே என் பெயரென்ன.?(என்னை மேய்க்கும் இடையனைக் கேள்.)கொழுகொழுகன்றே,கன்றின் தாயே, தாயை மேய்க்கும் இடையா என்பெயரென்ன.?( இப்படியே தொடர்புகள் கூறும் விதமாக
கொழு கொழு கன்றே,
கன்றின் தாயே,
தாயை மேய்க்கும் இடையா,
இடையன் கைக் கோலே,
கோலிருக்கும் மரமே,
மரத்திலுள்ள கொக்கே,
கொக்கு வாழும் குளமே,
குளத்தில் இருக்கும் மீனே,
மீனைப் பிடிக்கும் வலையா ,
வலையன் கைச் சட்டியே,
சட்டி செய்யும் குயவா,
குயவன் கை மண்ணே,
மண்ணில் விளையும் புல்லே,
புல்லை தின்னும் குதிரையே—என் பெயரென்ன. ?
உன் பெயரா.? ஈஈஈஈஈஈஈஈஈ- என்றதாம் குதிரை.
தன் பெயர் அறிந்த மகிழ்வில் பறந்ததாம் ஈ.
---------------------------------------
அருமை ஐயா!!
பதிலளிநீக்குஅருமையான பதிவு.
பதிலளிநீக்குநன்றி ஐயா.
அருமையான பதிவு. நாமும் குழந்தையாக இருக்கும் போது கேள்விப்பட்டிருக்கோம்.
பதிலளிநீக்குநானும் சிறு வயதில் பாடி மகிழ்ந்த பாடல்
பதிலளிநீக்குஎல்லாம் மறந்து தொலைந்துவிட்டது
மிக அழகாக அதை ஒருபதிவாக்கித்
தந்தமைக்கு வாழ்த்துக்கள்
த.ம 2
இதுபோல பாடல் எனக்கு யாரும் சொல்லி தர வில்லையே
பதிலளிநீக்குபுதிய அறிமுகம் நன்றி ஐயா.
என்னை என் குழந்தைப் பருவத்திற்கு அழைத்துச் சென்ற உங்களுக்கு என் அன்பான நன்றிகள். இது போல சரக்குகள் ஏராளம் என்னிடம் வைத்திருப்பதால் தான், மழலைகளுடன் மழலையாகவே ஒட்டி உறவாட முடிகிறது. குறிப்பாக பேரன் பேத்தி என்னை விட்டு எங்கும் அகல விரும்ப மாட்டார்கள். vgk
பதிலளிநீக்கு@குடிமகன்.
பதிலளிநீக்கு@ரத்னவேல்,
@நண்டு@நொரண்டு,
@லக்ஷ்மி,
@ரமணி,
@சிவா,
@கோபு அனைவரின் வருகைக்கு மனமார்ந்த நன்றி.
என்ன அருமையான பாட்டு இது?என் அம்மா எனக்கு சாதம் ஊட்டும்போது சொல்லும் கதை இது. நினைவூட்டியதற்கு ஒரு நன்றியும், தாமதத்துக்கு ஒரு வருத்தமும் பாலு சார்.
பதிலளிநீக்குமலர்ந்த நினைவுகள்.
பதிலளிநீக்குஉங்கள் பேரனுக்குக் கதை,பாட்டுச் சொல்லித்தர நீங்கள் உள்ளது அவனுக்குப் பலம். என் பையனுக்கு தாத்தா,பாட்டி சரித்திரமாகிப் போனது அவன் பலவீனம்?
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்குபார்த்தேன், நிறையக் கதைகள் என்னிடம் உள்ளன! அவற்றை எல்லாம் தொகுத்து வெளியிட ஆவல்! பார்க்கலாம்.
பதிலளிநீக்கு