Saturday, December 10, 2011

அம்மா..

                                            அம்மா
                                            ----------

( ஒரு திருமணத்துக்காக நாங்கள் எல்லோரும் குடும்பத்துடன் சென்னை 
   சென்றிருந்தோம். என் முதல் பேரன் தான் வரவில்லை என்றும் தனியாக
   சில நாட்கள் இருக்க விருப்பம் என்று கூறினான். நாங்கள் திரும்பி வந்த 
   போது அவன் தாயின் பிரிவை ஆங்கிலத்தில் எழுத்தில் வடித்திருந்தான்.
  அதன் தமிழாக்கமே இது.)


         
                தளைகளும் கட்டுப்பாடும் அற்ற தனிமையில்
நானிருந்தபோது விடுதலை உணர்விருந்தது.
ஆனால் நீ இல்லாதது வெறுமை உணர்த்தியது
அன்புடன் உன அதட்டலும்,அதிகாரமும் இல்லாதிருந்தது
என்னுள் ஏக்கத்தை ஏற்படுத்தியது.

உன் உதிரத்தின் உயிராய் தொப்புள் கொடி
உறவாய் உதித்தவன் நான்.காலங் கடந்து
உணர்கிறேனோஅம்மா, நீயின்றி நானில்லை என்று ?. 

என்னுள் மாற்றங்கள் நிகழ்கிறது நான் அறிவேன்
அவை நல்லதோ அல்லதோ நானும் அறியேன் -ஆனால்
அறிகிறேன் அம்மா, என் அன்பு என்றும் மாறாதது.

விடியலில் என்னை எழுப்பும் ஆதவன் நீ
அந்தியில் என்னை உறக்கும் நிலவும் நீ
என் எண்ணத்தில் உன்னை நிறுத்தி
நீயில்லா வெறுமையை விரட்டினேன்.

இனிமையின் இருப்பு நீ,பூரணத்தின் பொலிவு நீ
என்னுள் என்னை மிளிரச் செய்பவள் நீ
எல்லாம் எனக்கு நீயே அம்மா
உலகில் சிறந்தவள் நீயே அன்றோ.!
-------------------------------------------------------



                       

22 comments:

  1. சிந்தையையும் செயலையும் தாய்மையில் செலுத்தினாலன்றி இப்படி ஒரு கவிதை சாத்தியம் இல்லை அய்யா

    அசத்தலான அம்மா கவிதை.
    பாராட்டுக்கள் உங்கள் பேரனுக்கு.

    ReplyDelete
  2. எவ்வளவு அழகாக அம்மா பாசத்தை சொல்லி இருக்கார். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. உங்கள் பேரன் தமிழிலும் இலக்கியம் படைப்பதை காண ஆவலுடன் உள்ளேன்

    ReplyDelete
  4. அன்புடன் உன அதட்டலும்,அதிகாரமும் இல்லாதிருந்தது
    என்னுள் ஏக்கத்தை ஏற்படுத்தியது.

    எக்ஸலெண்ட்!

    அதன் ஆங்கில வடிவத்தையும் போட்டிருக்கலாமே.

    ReplyDelete
  5. Superb gmb sir. பறக்கத் துடிக்கிற பருவத்தின் பாச வேர். ஆங்கில ஆக்கத்தையும் படிக்க ஆவலாக இருக்கிறது.

    ReplyDelete
  6. இனிமையின் இருப்பு நீ,பூரணத்தின் பொலிவு நீ
    என்னுள் என்னை மிளிரச் செய்பவள் நீ

    ஆழ்ந்த அற்புதமான வரிகள்..

    பகிர்ந்த தங்களுக்கும், எழுதிய வாரிசுக்கும் வாழ்த்துகள் ஐயா..

    ReplyDelete
  7. உள்ளத்தில் உள்ளதை மிக அழகாகவும்
    மிக நேர்த்தியாகவும் சொல்லியுள்ளது
    மிக மிக அழகு
    வாழையடி வாழையின் சிறப்பு புரிகிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 1

    ReplyDelete
  8. அன்புடன் உன அதட்டலும்,அதிகாரமும் இல்லாதிருந்தது
    என்னுள் ஏக்கத்தை ஏற்படுத்தியது.

    அருமையான வரிகள்.

    தங்கள் வாரிசுக்கு வாழ்த்துக்கள். vgk

    ReplyDelete
  9. very true lines. Heart felt wishes to your grand son

    ReplyDelete
  10. A small poem about my mom :)by Vibhu Manohar on Sunday, December 4, 2011 at 9:11am
    When i was home alone , I was happy thinking about the freedom

    but with out you it was actually boredom.



    The fights we have, and the love we share

    I missed it all and wanted nothing but care.



    Time passed!!

    Oh! i never knew , it was cause i was thinking only about you.



    Things have changed and so have i , don't know whether its good or bad.

    but , my love was always you mom.



    You where the sun rays that woke me up,

    and the moon that put me to sleep.



    Like that i convinced my self that you where there within myself.



    You are the one and the only one ,

    who is so complete and so damn sweet.

    You are mine

    and you make me shine.



    mom you r d best!!



    LOVE YOU MOM!! // I am posting my grandson"s original version as desired by some friends

    ReplyDelete
  11. தாய் – சேய் என்பது அற்புதமான பிணைப்பு!

    அருமையான பகிர்வுக்கு நன்றி சார்!

    ReplyDelete
  12. மென்மையான கவிதை.. அழகான தமிழாக்கம். புலியின் பேரக்குட்டியல்லவா? அதான் 8x 2x 2=32 அடியாய்ப் பாய்ந்திருக்கிறது!

    ReplyDelete
  13. அழகான கவிதை
    அம்மாவின் பாசம்
    வரிகளில்
    மிளிர்கிறது
    பகிர்வுக்கு
    நன்றி ஐயா

    ReplyDelete
  14. ஒண்ணாங் க்ளாஸ்.

    உங்க பேரன் தொடர்ந்து எழுதினால் பெரிய இடம் காலியாய்க் காத்திருக்கிறது பாலு சார்.

    ReplyDelete
  15. Superb..The beauty of many things,we realize only in its absence..kudos

    ReplyDelete
  16. Really I enjoyed both tamil and english version. No substitute for mother in the world. It touches my heart with pain. Convey my feelings to your grandson sir. Thank you very much. A creator behind the grandson. Please ask him to write poems. My wishes to him also.

    ReplyDelete
  17. இங்கு வந்துள்ள பின்னூட்டங்களை என் பேரனுக்குப் படித்துக் காட்டுவேன். மகிழ்ச்சியடைவான் என்பது நிச்சயம். ஊக்கமளிக்கும் கருத்திட்ட அனைவருக்கும் என் இதயங் கனிந்த நன்றி.

    ReplyDelete
  18. The Tamil translation can't be any better! A great tribute by your grandson to his mom.

    ReplyDelete
  19. இனிமையின் இருப்பு நீ,பூரணத்தின் பொலிவு நீ
    என்னுள் என்னை மிளிரச் செய்பவள் நீ
    எல்லாம் எனக்கு நீயே அம்மா
    உலகில் சிறந்தவள் நீயே அன்றோ.!//

    தாய்மையின் சிறப்பைக் கூறும் கவிதை அருமை. அம்மா இல்லாமல் நாம் இல்லை.
    அதை உணர்ந்தவர்கள் உயர்ந்தவர்கள்.

    ReplyDelete
  20. வார்த்தைகள் வெடித்து வந்திருக்கின்றன. அருமை.பின்னரும் ஏதாவது கவிதைகள் எழுதியிருக்கிறார உங்கள் பேரன்?

    ReplyDelete
  21. உள்ளத்து உணர்வு வார்த்தைகளில் வெளிவந்துள்ளது

    ReplyDelete