திங்கள், 16 ஜூலை, 2012

பொழுது போக, பொழுது போக்க...


                                    பொழுது போக, பொழுது போக்க.
                                     --------------------------------------------
                                                 ஒரு சின்னக் கதை.
                                                  --------------------------


வென்னீர் போட்டாச்சா.? எப்பக் குளிச்சு எப்ப நான் ரெடியாகிறது.
‘மொதல்ல நீங்க டவல் தேடி எடுத்து, பாத்ரூம் போங்க. எனக்கு ரெண்டு கைதானே இருக்கு. எழுந்ததிலிருந்து ஒரே ஓட்டம்தான். குழந்தைகளுக்கு டிபன் ரெடி செய்யணும். ஸ்கூல் பஸ் வரதுக்குள்ள அவங்களும் ரெடியாக வேண்டாமா. எங்கிட்ட உங்க அவசரத்தைக் காட்டுங்க, ஏதோ கவர்னர் உத்தியோகத்துக்குப் போற மாதிரி. ....
‘என்ன, விட்டா பேசிட்டே போறே. கெய்சர் கெட்டுப்போனதால உங்கிட்ட வென்னீருக்கு நிக்க வேண்டி இருக்கு. சரி, சரி, டிபன் ரெடி பண்ணு. ‘

காலையில் பிள்ளைகளுக்கு வேண்டியதைச் செய்து, அவர்களைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவதற்குள்போதும் போதும் என்றாகி விடும் மங்களத்துக்கு. இப்போது கணவனும் காலையில் தொந்தரவு தருகிறார். அவருக்கும் செய்ய வேண்டும். ஒரு வழியாக தேவைகளைப் பூர்த்தி செய்து, ,அப்பாடாஎன்று பெருமூச்சுடன் சோபாவில் சாய்ந்தாள்.

அவள் கணவன் முன் வந்து, ‘இதப் பார்.இந்த டை சரியா இருக்கா....இந்தப் பேண்டுக்கு இந்த ஷர்ட் மேட்ச் ஆகிறதாஎன்று கேட்டுக்கொண்டு நின்றான்.

எல்லாம் சரியாத்தான் இருக்கு. உங்களுக்கு யாரும் பொண்ணு கொடுக்க வேண்டாம். ‘
‘என் கன்சல்டிங் அறையை சுத்தம் செய்து வைத்தாயா.?நாலு பேர் வந்து போற இடம்.
‘எல்லாம் சுத்தம் செய்தாச்சு.உங்கள் மேசை மேல் இன்றைய பேப்பர் வைத்திருக்கிறேன். நீங்க சொல்ற நாலு பேர் வந்து போகிற நேரம் போக மீதி நேரம் வரி விடாமல் படியுங்கள். கூடவே ஒரு பொருளும் வைத்திருக்கிறேன், உங்கள் உபயோகத்துக்கு.

இவ்வளவு களேபரத்துக்கும் பிற்கு டாக்டர் சுந்தரேசன், வீட்டின் முன் இருக்கும் தன் கன்சல்டிங் அறையில் உட்கார்ந்தான். மேசையின் மேல் இருந்த புதிய பொருளைப் பார்த்ததும் தன் மனைவியின் தீர்க்க தரிசனத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை. அங்கே இருந்தது ஒரு ஈ ஓட்டும் FLY SWATTER.!.

                                                                      ஐடியா எப்படி.?
                                                                        -----------------------     


அந்த வருஷம் வானம் பொய்த்து மழை இல்லாமல் இருந்தது. ஓரிரு தூறல் போட்டு மழை பெய்யலாம் என்ற அறிகுறி தென்பட்டது. நிலம் திருத்த வேண்டும் அந்த விவசாயிக்கு உடல் முடியாமல் போய் சோர்ந்திருந்தான். இருக்கும் மகனோ நக்சலைட் என்னும் சந்தேகத்தில் பொலீசால் கைது செய்யப்பட்டுக் காவலில் இருந்தான். விவசாயி தன் கஷ்டங்களைக் கூறி மகனிடம் ஒரு பாட்டம் அழுதான். மறுநாள் மகனிடம் இருந்து தந்தைக்குஒரு கடிதம் வந்தது அதில் ‘ அப்பா, நீங்கள் நிலத்தை ஒன்றும் செய்யாதீர்கள். நம் நிலத்தில் ஓரிடத்தில் நான் துப்பாக்கி மற்றும் குண்டுகளைப் புதைத்து வைத்திருக்கிறேன். நீங்கள் ஏதாவது செய்யப் போய் எனக்கு பிரச்சனை ஆகலாம் “ என்று எழுதி இருந்தான்.

அதற்குப் பிறகு இரண்டு நாட்கள் அவனுடைய நிலம் முழுவதும் ஆழ வெட்டப் பட்டது, நிலத்தில் ஏதும் கிடைக்கப் பெறாமல் போலீசார் ஏமாந்தனர்.. மகனின் புத்தி சாதுரியம் எண்ணி விவசாயி மகிழ்ந்தான்.



இனி சில எளிய கேள்விகள். விடைகள் கடைசியில்.

1.) ஒன்றிலிருந்து ஒன்பதுக்குள் மூன்று எண்கள் கூட்டினாலும் பெருக்கினாலும்     ஒரே விடை வரும். அந்த மூன்று எண்கள் என்ன.?
2.) நூறிலிருந்து எத்தனை முறை 25-ஐ கழிக்கலாம்.?
3.) ஒரு கடிகாரத்தில் இரண்டு மணி அடிக்க இரண்டு வினாடிகளானால் மூன்று மணி அடிக்க எவ்வளவு நேரமாகும்.?
4.) 10,9,8,7,6,5,4,3,2,1 இப்பொழுது நேரத்தைச் சொல்லுங்கள்.
5 ) ஒரு எண் மூன்று முறை உபயோகிக்கப்பட்டு அதன் கூட்டுத்தொகை 60- ஆனால் அந்த எண் என்ன.?
6.) ஒருவனுக்கு 10-மகன்கள். ஒவ்வொரு மகனுக்கும் ஒரு சகோதரி. அவனுக்கு எத்தனை குழந்தைகள்.?
7.)எத்தனை மாதங்களில் 28- நாட்கள் இருக்கின்றன. ?
8.) எந்த மாதத்தில் ஒருவன் குறைவாக உண்கிறான்.?
9.) 100- க்கும் 1000-துக்கும் என்ன வித்தியாசம்.?
10.) பல்லிருக்கும். வாயில்லை அது எது.?



கேள்விக்குப் பதில்.

1.) 1,2,3.
2.) ஒரே முறை ஒரு முறை கழித்தபின் நூறு இருக்காது.
3.) நான்கு வினாடிகள். மணி அடிக்கும் இடைவெளி 2 வினாடிகள்.
4.) டென் டு ஒன்
5.) ஐந்து 55+ 5= 60.
6.) 11. ஏனென்றால் ஒரே பெண் பத்து மகன்களுடைய சகோதரியுமாவாள்.
7.) எல்லா மாதங்களிலும்.
8.)ஃபெப்ருவரி. அந்த மாதம் குறைந்த நாட்களுடையது.
9.) ஒரு பூஜ்யம்.
10) தலைவாரும் சீப்



இனி ஒரு ஜோக்.( எழுத்தாளன் பற்றியது. )
----------------------------------------------------------------------------
ஒரு எழுத்தாளன் மற்ற ஒரு எழுத்தாளர் பற்றி. அவருக்கு எழுதுவதற்கு விஷயம் எங்கிருந்து கிடைக்கிறதோ தெரியாது. ஆனால் அவரது காதுகளை ஒரு பெரிய தொகைக்கு இன்ஷுர் செய்திருக்கிறார். “

ஒரு நேர்காணலில்.
--------------------------------- 

உங்களுக்கு இந்த லைனில் எவ்வளவு வருட  அனுபவம்.?
‘ 55- வருடங்கள். ‘
‘உங்கள் வயதென்ன.?
“ 47 “
‘ 47 வயதுக்காரருக்கு 55- வருட அனுபவம் .எப்படி.?
‘ ஓவர்டைம். “

கடைசியாக ஒன்று.
 ------------------------------

தொலைபேசியில்  டையல் செய்தபோது மறுமுனையிலிருந்து ‘ ராங் நம்பர் ‘என்று பதில் வந்தது.
“ உண்மையாகவா “ என்றேன்.
“ இதற்கு முன் உங்களிடம் பொய் பேசி இருக்கிறேனா என்று உடனே பதில் வந்தது.
-----------------------------------------------      .




       
      .           




12 கருத்துகள்:

  1. 10 கேள்விக‌ளில் நான் தாண்டிய‌து பாதி கிண‌று தான். க‌டைசி ஐந்து ம‌ட்டும்.
    2nd Joke is good. :D

    பதிலளிநீக்கு
  2. ஐயையோ, தலையைப்பிய்த்து முடி எல்லாம் போய்விட்டதே?

    பதிலளிநீக்கு
  3. நல்ல கதை சார்...
    கேள்வி-பதில் + ஜோக்ஸ் அருமை...

    பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. கதை நல்லா இருக்கு அந்த டாக்டர் ஈ ஓட்டுர டாக்டரோ?

    பதிலளிநீக்கு
  5. புது ஃபார்மேட். புது காம்பினேஷன். கலக்கறீங்க பாலு சார்.

    புதிர்களுக்கு விடையை ஒரு ரெண்டு நாளைக்குத் தள்ளிப் போட்டிருக்கலாம். ஒரு கண்ணை மூடி ஒரு கண்ணால் நைஸாகப் பார்த்து பத்துக்கும் கரெக்ட்டா பதில் தெரியும் என்று என்னைப் போன்றவர்கள் சொல்ல மாட்டார்களா?

    ஒரு இளைஞனின் சுறுசுறுப்புக்கு சமமான உங்கள் சுறுசுறுப்பு பொறாமைப்பட வைக்கிறது. மாமியிடம் த்ருஷ்டி சுற்றச் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  6. ஈ ஓட்டும் FLY SWATTER.!.

    ஐடியா எப்படி.?

    சூப்பர் !!!

    பதிலளிநீக்கு
  7. பொழுதை பயனுள்ளதாக்க எனப் போட்டிருக்கலாம்
    கதையும் புதிரும் நகைச்சுவைத் துணுக்குகளும் அருமை
    இதை வைத்து பேரக்குழந்தைகளுக்கு இரண்டு நாள்
    தண்ணி காட்டிவிடுவோம்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. “ நல்லாத்தான் சொன்னார் முல்லா நசுருதீன் “ வாசகம் ஞாபகம் வந்தது.

    பதிலளிநீக்கு
  9. தன் மனைவியின் தீர்க்க தரிசனத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை. அங்கே இருந்தது ஒரு ஈ ஓட்டும் FLY SWATTER.!.//

    மனைவி ஆலோசனை சொல்வதில் மந்திரி அல்லவா!

    எல்லாமே படித்து சிரிக்கலாம்.
    அருமை.

    பதிலளிநீக்கு
  10. ஐயா, 'நான் ஈ' படம் பாருங்கள்,ஈயின் திருவிளையாடல்கள்(?) அருமை. வினா விடை : இப்பெல்லாம் படிச்சாலும் ஏறமாட்டேங்குது, எப்பவோ ஏறுனதும் எங்கேயோ காணாமப் பூடுச்சு. நகைச்சுவை உணர்வு மட்டும் அப்படியே உள்ளது. உங்கள் பணி தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  11. @ வாசன்.
    @ டாக்டர் கந்தசாமி,
    @ திண்டுக்கல் தனபாலன்,
    @ லக்ஷ்மி,
    @ கரந்தை ஜெயக்குமார்,
    @ சுந்தர்ஜி,
    @ இராஜராஜேஸ்வரி,
    @ ரமணி,
    @ தி. தமிழ் இளங்கோ,
    @ கொமதி அரசு,
    @ உமேஷ் ஸ்ரீநிவாசன்.
    எழுதுவதற்கு விஷயங்கள் எங்கிருந்தெல்லாமோ கிடைக்கிறது. அப்படிச் சில பதிவுகள் பகிர்வுகளாக அமைகிறது. வருகை தந்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு