Tuesday, December 17, 2013

கவிதை எழுதலாமே


                   கவிதை எழுதலாமே
                   ------------------------------
 சில மாதங்களுக்கு முன் சில படங்களை வெளியிட்டுக் கவிதை எழுதலாமே என்று அழைப்பு விடுத்திருந்தேன். ஆனால் என் துரதிர்ஷ்டம் படங்கள் தெரிய வில்லை என்று பலரும் பின்னூட்டமிட்டிருந்தார்கள். அப்போது படங்களை வெளியிடும் நுணுக்கம் எனக்குத் தெரியவில்லை. இப்போது அதே படங்களை வெளியிடுகிறேன். மீண்டும் அழைப்பு விடுக்கிறேன். இது போட்டி ஏதுமில்லை. பொருள் கிடைத்து படமும் இருக்க எழுதுவது சிரமமிருக்காது. கவிதைப் பதிவுகளை எதிர்நோக்கி. எழுதுகிறவர்கள் என் பின்னூட்டத்தில் தெரியப் படுத்தினால் நலமாயிருக்கும்.

மரத்தில் மயில்
 
தோகைவிரித்த மயில்
பறக்கும்மயில்-1
பறக்கும் மயில்-2
பறக்கும் மயில்-3
பறக்கும் மயில்-4
படங்கள் தெரியாததால் கவிதைகள் ஏதும் வரவில்லை. பிறிதொரு பதிவில் நான் மயில் குறித்த கவிதை எழுதிப் பதிவிட்டிருந்தேன். அதையே இப்போது இங்கு மீண்டும் பகிர்கிறேன். 

                        சூரா உன் சதியா.?
                      --------------------------


தோகை விரித்துக் களிநடம் புரியும் கான மயிலினைக் கண்டதுண்டு.
செறுக்குடன் சிறு நடை பயிலும் மயிலினைக் கண்டதுண்டு.
கர்ண கொடூரமாய் அகவும் மயிலினைக் கண்டதுண்டு.
பறவை எனப் பெயர் இருப்பினும் அதிகம் பறக்காத மயிலே
உன் மீதேறியா ஞாலம் வலம் வந்தான் கந்தன்,ஏதும் அறியாப் பையன். !

மரமாய் மாறி அலைக்கழித்தவனை சக்திவேலால் இரு கூறாய்ப்
பிளந்து சூரா உன்னை ஆட்கொளவேண்டி பாலகன் மாயன் மருகன் 
உன்னை ஒரு பாதி சேவலாக்கி தன் கொடியில் அமர்த்தினான்
மறுபாதியுனை  வாகனமாக்கி மயில்வாகனன் ஆனான்.
முருகன் என்றால் அழகன் என்பர் அதற்கொப்ப அவன்
வாகனமாய் நீயும்  அழகு மயிலாய் நின்றாய்.. .
முருகனை அன்றொருநாள் அப்பாவியா எனக் கேட்டேன்.
என் எண்ணம் வலுக்கிறது. பறக்காத பறவையாகிய உன்னை வாகனமாக்கி
ஞாலம் வலம் வரத் துணிந்தவனை நேரம் பார்த்துத்
தோற்கடிக்கத் துணிந்தாயோ சூரா  பறந்து தூரம் கடக்க
இயலாதவன்,நீ சற்றே பறந்து காட்டி  அவனை ஏமாற்றிக்
காலை வாரி கனி இழக்கச் செய்தது என்ன நியாயம். ? .           
.
27 comments:

 1. அழகு மயில் அருமை..

  கண்கொள்ளாக்காட்சிகள்..!

  ReplyDelete
 2. 1) யாருக்காகக் காத்திருக்கிறது
  கற்றைத் தோகையோடு
  ஒற்றை மயில்..

  2) வந்து விட்ட நண்பனுக்கு
  வண்ணத் தோகை
  விரித்து வரவேற்பு.

  ReplyDelete
 3. 3,4,5)
  மறக்கவில்லை
  பறக்கும் கலை.
  நிமிர்ந்து பறப்பேன்
  திரும்பிப் பறப்பேன்
  விரைந்து பறப்பேன்...

  ReplyDelete

 4. @ இராஜராஜேஸ்வரி
  முதல் வருகைக்கு நன்றி . கவிதை, கவிதை தாருங்கள் மேடம்...!

  @ திண்டுக்கல் தனபாலன்.
  புது android-க்கு வாழ்த்துக்கள்டிடி

  @ ஸ்ரீராம்.
  வருகைக்கும் கவிதைப் பதிவுக்கும் நன்றி சார். நீங்கள் எழுதியதை உங்கள் வலையிலும் பதிக்கலாமே.அருமையான சிந்தனைப்பகிர்வு.

  ReplyDelete
 5. மயிலுக்கு இன்னொரு பெயர் ஒயிலா!

  ReplyDelete
 6. அன்றைய தமிழன்
  இறகைக் கேட்டான்..
  கொடுத்தாயா மயிலே!..

  இன்றைய தமிழன்
  இயற்கையை அழித்தான்!..
  பார்த்தாயா மயிலே!..

  இடமும் இல்லை!..
  இணையும் இல்லை..
  தவிக்கின்றாய் மயிலே..

  இருக்கும் போதே
  கொடுத்திருந்தால்
  துன்பம்ஏது சொல் மயிலே!..

  இப்படி நான் கேட்டதும்,
  மயில் சொன்னது!..

  ஆகா.. நல்ல உபதேசம்
  அழிவில் இருப்பது
  உன் தேசம்..

  இயற்கை என்றும்
  பிழைத்திருக்கும்..
  இயல்பாய் எங்கும்
  தழைத்திருக்கும்..

  மனிதா.. உன்னால் ஆகாதே..
  சொன்னால் காதும் கேட்காதே!..

  இயற்கையை இனியும்
  அழிக்காதே!..
  இதயம் இழந்து
  தவிக்காதே!..

  மயிலும் பறந்து சென்றதே!..
  வார்த்தைகள் பதிந்து நின்றதே!..

  ReplyDelete
 7. பறக்கும் மயில் படங்கள் அழகாக உள்ளன.

  ReplyDelete

 8. @ வே.நடனசபாபதி
  A THING OF BEAUTY IS A JOY FOR EVER.
  வருகைக்கு நன்றி ஐயா.

  @ துரை செல்வராஜு
  கவிதைக்கு நன்றி ஐயா. இது போதுமா என்று கேட்டிருக்கிறீர்கள். இது போதாது. இன்னும் பலரும் தங்கள் கவிதைகளைத் தர வேண்டும்.உங்கள் பதிவினிலும் பதித்திருந்தால் இன்னும் சிலர் அந்த மகிழ்ச்சியில் திளைக்கக் கூடும். மீண்டும் நன்றி.

  @ கோபு சார்
  /பறக்கும் மயில் படங்கள் அழகாக உள்ளன/ ரசனைக்கு நன்றி சார்.

  ReplyDelete
 9. கவிதை எல்லாம் எழுதத் தெரியாது. அனைத்துப் படங்களும், பின்னூட்டக் கவிதைகளும் அருமையாய் இருந்தன.

  ReplyDelete
 10. மயிலை இத்தனை வித்தியாசமாக
  இன்று தங்கள் பதிவின் மூலம்தான் பார்க்கிறேன்
  குறிப்பாக பறக்கும் மயில் 1 மிக மிக அற்புதம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. மயில் படங்கள் அழகு.
  ஸ்ரீராம், துரைசெல்வராஜ் கவிதைகள் அருமை.
  வேலனுக்கு காத்திருக்கிறது
  வடிவேலன் வரவை கண்டு
  தோகைவிரித்து ஆடுகிறது
  மகிழ்வாய்.
  ஸ்ரீராம் கவிதை பார்த்து வந்த பதில்.

  ReplyDelete
 12. ஆஹா, நன்றி கோமதி அரசு மேடம், என்னைக் குறிப்பிட்டதற்கு!

  நன்றி ஜி எம் பி ஸார்!

  ReplyDelete
 13. ஐயா வணக்கம்!
  இன்றுதான் உங்கள் வலைத்தளம் வருகிறேன்!
  ஆங்காங்கே உங்களின் இவ்வறிவித்தலைக் கண்டதும்
  என்னவெனப் பார்க்க வந்து அசந்துவிட்டேன் ஐயா!

  மிக அற்புதமான படங்கள் அதற்கு நீங்கள் தந்த
  அழகிய கவிவரிகள்! அதனோடு நண்பர்களின் இனிய கவிதைகளையும்
  மிகவே ரசித்தேன்! அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

  எனக்கும் மனதில் தோன்றிய வரிகளை இங்கு எழுதிவிடுகிறேன்!
  பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா!
  தொடர்வேன் இனியும்...

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. தோகை விரித்தொரு தூய அழகொடு
  தோன்றியதொரு மயிலே!
  வாகை மரத்தினில் வாழும் துணையின்றி
  வாடியதொரு மயிலே!
  சீதை உளம்மிகச் சேதமுற அழும்
  சேதி அறிந்த மயிலே!
  கோதை குறையதை ராமனிடம் சொல
  பாதையில் பறந்து விரைந்ததுவே!

  ReplyDelete
 16. ஆடும் மயிலே
  அகவும் மயிலே
  பாடும் குயில் நான்
  அழைக்கின்றேன் .....

  உன் தோகை விரித்தொரு
  ஆட்டமாடிடத்
  தோன்றும் அழகில்
  நான் வியக்கின்றேன் ...

  (ஆடும் மயிலே )
  காடும் அழகுறும்
  கவியும் அழகுறும்
  சுகம் தேடும் விழிகளில்
  மயிலிங்கே .......

  வாடும் மனத்தின்
  வாட்டம் தீர்த்திடும்
  வண்ணத் தோகையின்
  எழில் இங்கே ......!!

  (ஆடும் மயிலே )
  குமரன் என்ற
  அழகன் அமரக்
  குறைகள் போக்கும்
  மயிலே வா ............

  மழையும் பொழியும்
  கலையும் வளரும்
  தமிழன் வணங்கும்
  மயிலே வா .........

  (ஆடும் மயிலே )
  http://rupika-rupika.blogspot.com/2013/12/blog-post_4647.html

  ReplyDelete
 17. வணக்கம் ஐயா !
  தங்களின் அழைப்பின் பெயரால் இந்த அடியவளும் அன்போடு இட்ட பாடல் பகிர்வினைக் காணவும் அழைக்கின்றேன் .மிக்க நன்றி ஐயா பலரையும் ஊக்கப்படுத்தும் சிறந்த முயற்சியில்
  என்னையும் அழைத்துப் பாட வைத்தமைக்கு .

  ReplyDelete
 18. தோகை விரித்தாடும் கோல மயிலே
  நீ கண்டாயோ மழை முகிலே !!!
  அழகன் முருகன் மயிலே
  காண்போரை மயக்காதோ உன் ஒயிலே !!!
  தலையசைத்தாடி வரும் வண்ண மயிலே
  உனைக் கண்டதும் மனதில் பொங்குது மகிழ்வலையே !!!

  ReplyDelete
 19. விதம் விதமான கோணங்களில் மைல் படங்கள் அருமை

  ReplyDelete
 20. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
 21. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_19.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
 22. வணக்கம்
  ஐயா.

  படங்கள் மிகச்சிறப்பாக உள்ளது தங்களின் சிந்தனை வளர எனது வாழ்த்துக்கள்.ஐயா.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete

 23. @ கீதா சாம்பசிவம்
  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
  @ ரமணி
  வருகை தந்து பாராட்டியதற்கு நன்றி.
  @ கோமதி அரசு
  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. ஸ்ரீராமின் பாடல் வரிகள் உங்களை எழுத வைத்த வரிகளுக்கும் நன்றி
  @ ஸ்ரீராம்.
  உங்கள் கவிதை வரிகள் சிறப்பான சிந்தனைப் பகிர்வு என்றேன்.பார்ட்தீர்களா கோமதி அரசின் பின்னூட்டத்தை.
  @ இளமதி
  உங்கள் முதல் வருகைக்கு நன்றி. நாரைவிடு தூது படித்திருக்கிறேன் இது ஒரு அழகான மயில்விடு தூது. பாராட்டுக்கள்.
  @ அம்பாளடியாள்
  கவிதைகளில் மிளிரும் பதிவர்கள் பலர். நான் பார்த்து ரசித்த சில வலைத்தளங்களுக்குச் சென்று அழைப்பு விடுதிருந்தேன்.உடன் வந்து ஆடும் மயிலைக் குயிலாக அழைத்து மகிழ்ந்து பாடல் எழுதிப் பரவசமடைவதல்லாமல் என்னையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய உங்களுக்கு நன்றி.உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா.?முருக பக்தர் ஒருவர் இருக்கிறார். அமெரிக்காவில் மருத்துவராக. இதை படித்தால் நிச்சயம் மகிழ்வார். வருகைக்கு மிண்டும் நன்றி.
  @ தமிழ்முகில் பிரகாசம்
  உங்கள் முதல் வருகைக்கு நன்றி.உண்மைதான் தோகை மயிலின் களிநடம் உள்ளமதை மகிழ்விக்கச் செய்யும்.
  @ முரளிதரன்
  @ இராஜராஜேஸ்வரி
  @ திண்டுக்கல் தனபாலன்
  @ 2008rupan
  அனைவரது வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி.

  ReplyDelete
 24. அருமையான படங்கள்.

  பகிர்ந்து கொண்ட கவிதைகளும் அருமை. ஒவ்வொன்றையும் ரசித்தேன்.

  பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 25. அன்பின் இனிய பெரியீர்! வணக்கம்!
  மன்னிக்க! மறதி வயோதிகம் அவ்வப் போது வரும் முதுகு வலி போன்ற தொல்லைகள்! அதனால் ஏற்பட்ட தவறு,இது பொறுத்தருள்க!

  ReplyDelete

 26. வணக்கம்

  வண்ண மயில்படங்கள் எண்ணம் பறித்தன!
  மின்னும் அழகை விரித்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு


  ReplyDelete